❤❤ 19 ❤❤
அதிதியையும் கிருபாவையும் கடையில் சந்தித்தது முதலே கிருபா யாராக இருக்கும்.. அதிதிக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என்பதையே யோசித்துக் கொண்டிருந்தான் நரேஷ்.
அதிதிக்கு சொந்தக்காரனா.. ஆனால் அதிதி அவனை பற்றி எதுவும் தன்னிடம் சொன்னதேயில்லையே.. அதிதி எப்போதும் தன் மாமா அத்தை பற்றி தான் அதிகமாக பேசுவாள்.. அவர்களுக்கு ஒரு மகள் மட்டும் தான்..
அந்த சின்ன குழந்தை யாரு.. அதிதியை அத்தைனு கூப்பிட்டா.. அவனையும் எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு.. ஆனா எங்க பார்த்திருக்கேன்னு ஞாபகமே வரமாட்டிக்குதே..
அவன் போகலாம்னு அதட்டலா சொல்றான்.. அதிதியும் எதுவும் பேசாம அவன் இழுத்த இழுப்புக்கு போறா.. சரியில்லை.. ஏதோ சரியில்லை.. அதிதி நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்.. நான் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..
முதல்ல உன்கிட்ட நான் பேசணும்.. பேசியே ஆகணும்.. நீ நம்பர் மாத்திருக்கலாம்.. ஆனா அட்ரெஸ்ஸ மாத்தலைல.. வர்றேன்.. உன் வீட்டுக்கே வர்றேன்.. என முடிவெடுத்தான் நரேஷ்.
முன்பு அதிதியின் காதலை பெறுவதற்காக அவள் மீது அதீத அன்பிருப்பதாக காட்டிக் கொண்ட வேளையில்.. நரேஷ் இதுபோல அவள் வீட்டுக்கு எதிரில் நின்றிருந்தான்.
ஜன்னலருகில் வந்த அதிதியும் நரேஷ் அங்கே நிற்பதை கவனித்து விட்டு.. அவனுக்கு போன் பண்ணினாள்.
"ஏன் இங்க நின்னுட்டு இருக்க.."
"சும்மா தான் அதிதி.. உன்னை பார்க்கணும் போல இருந்துச்சு.. அதான் வந்தேன்..
ரொம்ப லேட்டாகிடுச்சா.. இந்த டைம்ல வீட்டுக்கு வந்தா நல்லா இருக்காதேனு இங்கே நிக்கிறேன்.."
"அப்ப போன் பண்ணிருக்கலாம்ல.."
"நீ கண்டிப்பா ஜன்னல் கிட்ட வருவன்னு தோணுச்சு.. அதான் போன் பண்ணலை.." என காதல் வசனம் பேசிய நினைவில் தான் இப்போதும் அதிதி வீட்டின் எதிரில் நின்று அவள் அறையின் ஜன்னலை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதிதியின் மாமா குடும்பத்தினர் வந்தால்.. அதிதியின் அறையில் ஸ்ருதியோ மைதிலியோ அவளுடன் சேர்ந்து படுப்பது வழக்கம்.
அப்படி மைதிலி அதிதியின் அறைக்கு வந்த போது அதிதி கையில் போனுடன் எதுவும் பேசாமல் சிரிப்புடன் நின்று கொண்டிருப்பதை கண்டார்.
நிச்சயமாக அவள் கிருபாவுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறாள் என நினைத்த மைதிலி அவளுக்கு இடையூறின்றி அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
அதன்பிறகே அதிதி நரேஷ் நின்று கொண்டிருப்பதை கவனித்தாள். பதற்றமும் பயமும் அவளை ஆட்டுவிக்க.. கிருபாவுடன் போனில் பேசிக் கொண்டிருப்பதையே மறந்து போனாள்.
கிருபாவின் குரல் செவிகளை எட்டியபின்பே அதிதிக்கு கொஞ்சம் தைரியமாக இருந்தது.
கிருபாவிடம் நரேஷ் வீட்டுக்கு எதிரில் நிற்பதை சொன்னாள் அதிதி.
அதிதியின் குரலே அவள் பயத்தை காட்ட.. அவளருகில் தான் இல்லையே.. என்ற தவிப்பும்.. நரேஷ் என்ன செய்வானோ என்ற பதற்றமும் கிருபாவை தெளிவாக யோசிக்க விடாமல் தடுமாற செய்தது.
"அதிதி பயப்படாத.. பயப்படாம இரு.. அவன் உன்னை பார்க்கலைல.." என கேட்டான் கிருபா.
"இ.. இல்லை பார்த்திருக்க மாட்டான்.." என அதிதி சொல்ல.. "அப்டினா எந்த பிரச்சனையும் இல்லை.. நீ தைரியமா இரு.." என்றான் கிருபா.
கிருபாவின் அருகில் இல்லையென்ற போதும் அவன் தனக்காக இருக்கிறான் என்பதே அதிதியின் மனதுக்கு பலம் தந்தது.
"அதிதி.. லேட்டாகுதுடா.. தூங்கு.. மாப்பிள்ளை கிட்ட காலையில பேசிக்கலாம்.." என குரல் கொடுத்தபடி நகர்ந்தார் ஆனந்தன்.
"ஆ.. ஆங்.. சரிப்பா.." என தயக்கத்துடன் பதிலளித்தாள் அதிதி.
கிருபாவுடன் பேசுவது தான் தனக்கு தைரியம் தருகிறது என புரியாமல் அப்பா தூங்க சொல்கிறாரே.. அவன் வேறு வீட்டுக்கு எதிரில் நின்று கொண்டிருக்கிறானே.. என்ன செய்வானோ.. என எண்ணி பயந்தாள் அதிதி.
"அதிதி.. ரூம்ல லைட்ட ஆப் பண்ணு.. ஆப் பண்ணிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு அவன் என்ன பண்றானு பாரு.." என்றான் கிருபா.
"ம்.. சரி.." என்ற அதிதியும் கிருபா சொன்னதை போல லைட்டை ஆப் பண்ணினாள்.
சில நிமிடங்கள் கழித்து பயத்துடனே ஜன்னல் அருகில் நின்று பார்த்தாள்.
எரிச்சலுடன் தன் காலை தரையில் உதைத்துக் கொண்ட நரேஷ்.. அங்கிருந்து கிளம்புவதை பார்த்த பின்னரே அதிதியின் மனதில் நிம்மதி பரவியது.
அதிதி என்ன சொல்ல போகிறாளோ.. என கிருபாவும் தவித்துக் கொண்டிருந்தான்.
"அ.. அவன் கிளம்பிட்டான்.." என அதிதி கிருபாவிடம் சொன்னாள்.
"ம்.. சரி அதிதி.. இன்னும் இரண்டு நாள் கொஞ்சம் கவனமா இரு.. எங்கையும் தனியா போகாத.. அவன் உன்கிட்ட பேச ட்ரை பண்றான்.. அது நடக்க கூடாது.." என கிருபா சொன்னான்.
"சா.. சாரி.. நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்.." என வருத்தத்துடன் சொன்னாள் அதிதி.
"அதெல்லாம் ஒன்னுமில்லை அதிதி.. நீ தைரியமா இரு.. அது போதும்.." என்ற கிருபா போனை வைத்தான்.
அவனுக்காக காத்திருந்து.. அவன் குரல் கேட்டு அகமகிழ்ந்து.. அவனுடன் செலவிடும் நேரங்களே சொர்க்கம் என நினைத்து.. அவன் மீது அன்பு நம்பிக்கை காதல் கொண்டிருந்தாள் அதிதி.
ஆனால் இப்போது அவனை பார்த்தாலே பயந்து நடுங்கும் நிலையில் இருக்கிறாள். நம்பக் கூடாதவனை நம்பினால் இப்படித்தான் என தன்னைத்தானே நொந்து கொண்டாள் அதிதி.
இந்த நிலையில் கிருபா மட்டும் தன் வாழ்வில் வரவில்லை எனில் என்ன நேர்ந்திருக்குமோ.. இத்தனைக்கு பிறகும் கிருபாவால் தன்னை எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது என்பது அதிதிக்கு புரியவேயில்லை.
இரண்டு நாள் கவனமா நடந்துக்கோனு எதுக்கு சொன்னாரு.. இரண்டு நாள்ல என்ன மாறிடும்..
இரண்டு நாள் கழிச்சு எங்க நிச்சயதார்த்தம்.. ஒருவேளை அதுக்கு பிறகு அவன் தொந்தரவு பண்ண மாட்டான்னு நினைக்கிறாரா.. அப்டினா கடையில வச்சு பார்த்தப்பவே கல்யாணம் ஆகப்போற விஷயத்தை சொல்லி இருக்கலாமே..
எவ்வளவு யோசித்தும் கிருபா எதற்காக இதையெல்லாம் செய்கிறான் என்பது அதிதிக்கு புரியவில்லை.
ஆனால் கிருபா சொன்னால் அதற்கு ஏதாவது சரியான காரணம் இருக்கும்.. என்ற நம்பிக்கை அதிதி மனதில் ஆழமாக இருந்தது.
அது ஒரு கடை வீதி..
பேப்பர் படித்தபடி.. டீ குடித்தபடி.. பைக்கருகில் நின்றபடி.. எதையோ விவாதித்தபடி.. போனில் மூழ்கியபடி.. அங்கங்கே பலர் நின்று கொண்டிருந்தனர்.. பெரும்பாலானோர் ஆண்கள்..
அதிதி அந்த வீதியில் நடந்து சென்றாள். பல கண்கள்.. கிசுகிசுப்பான குரல்கள் அவளை பின்தொடர்ந்தன.
எ.. எதற்கு எல்லோரும் என்னையே பார்க்கிறார்கள்.. என தனக்குள்ளே தவித்தவளின் கைகள் அனிச்சையாக ஆடையை சரி பார்த்தது. ஆடை நேர்த்தியாக தான் இருந்தது.
ஆனாலும் அந்த கண்கள் அவளை விட்டு அகலவே இல்லை.
அப்போது அதிதியின் முன் வந்து நின்றான் அவன்..
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top