❤❤ 18 ❤❤
நரேஷிடம் தன் கோபத்தை காட்ட முடியவில்லையே.. எல்லாம் கிருபாவால் தான்.. எதற்காக எதுவும் பேச விடாமல் அப்படி இழுத்துக் கொண்டு வரவேண்டும் என கிருபா மீது கோபத்தில் இருந்தாள் அதிதி.
தான் நரேஷிடம் பேசியது கிருபாவுக்கு பிடிக்கவில்லை போல.. ஆனால் நான் கோபமாக தானே பேச நினைத்தேன்.. அவன் மீது எனக்கு எந்த உணர்வும் இல்லை என்பதை முதலில் அவருக்கு புரியவைக்க வேண்டும்.. என நினைத்தாள் அதிதி.
ஆனால் அவர் என்னை புரிந்து கொள்வாரா.. நீ தப்பு பண்ணவ தானேனு சொல்லிக் காட்டுவாரா.. நான் பண்ண தப்புக்கு தண்டனையா காலம் முழுக்க இதெல்லாம் அனுபவிக்கணுமா.. என எதைஎதையோ எண்ணி கவலை கொண்டாள் அதிதி.
கிருபா மீதிருந்த கோபம் எதிர்காலம் குறித்த கவலையாக மாறியிருக்க.. ஆனாலும் அதிதியின் மனதில் கிருபா அப்படி தான் செய்த தவறை மீண்டும் மீண்டும் சொல்லிக் காட்டுபவர் இல்லை.. என்ற நம்பிக்கையும் அதிதியின் மனதின் ஓரத்தில் இருந்தது.
நரேஷுக்கு தங்கள் திருமணம் குறித்த விவரம் எதுவும் இப்போது தெரிவது சரியல்ல என்ற எண்ணத்தில் தான் கிருபா அதிதியை நரேஷிடம் பேச விடாமல் இழுத்து வந்தான்.
இப்போது நரேஷ் என்ன மாதிரி நடந்து கொள்வான் என்பதை கிருபாவால் கணிக்க முடியவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் தான்.. அந்த போனை எடுத்து விட்டால் போதும்.. பிரச்சனை இல்லை என எண்ணினான் கிருபா.
ஆனால் அதிதி அந்த நரேஷ் முன்னால் தான் நடந்து கொண்ட விதத்தை எப்படி புரிந்து கொண்டாளோ என்ற தவிப்பில் அவளுக்கு தன் நிலையை புரிய வைக்கும் எண்ணத்துடன் போன் பண்ணினான் கிருபா.
கிருபாவின் போன் வந்ததும் முதலில் முகம் மலர்ந்த அதிதியின் முகம் அடுத்த நொடியே வாடிப்போனது.
“அவன் கிட்ட பேச நினைச்சதுக்கு திட்டுவாரோ.. திட்டினாலும் பரவாயில்லை.. நரேஷ் மீது எனக்கு எந்தவித உணர்வும் இல்லை என்பதை புரிய வைக்க வேண்டும்..” என எண்ணியபடியே போனை அட்டெண் செய்தாள் அதிதி.
அதிதி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாளோ.. அதை அவள் தன்னிடம் வெளிப்படையாக பேசினால்.. அதற்கான விளக்கத்தை கொடுத்து விடலாம்.. மனதுக்குள்ளே வைத்து வருந்தினால் என்ன செய்வது என தனக்குள்ளே தவித்தபடி.. “ஹலோ.. அதிதி..” என்றான் கிருபா.
“சாரி.. நான் இன்னைக்கு திடீர்னு அவனை பார்த்ததும் பர்ஸ்ட் பயந்துட்டேன்.. அவன் என் புது நம்பரை கேட்டான்.. நான் கொடுக்கலை..
அவன் என்னை எவ்ளோ மட்டமா நினைச்சிருந்தா என்கிட்ட வந்து பேசுவான்.. அந்த கோபத்துல தான் அவனை திட்ட நினைச்சேன்..
ஆனா நீங்க..” என அதிதி சொல்கையில்.. “அதிதி நான்..” என கிருபா குறுக்கிட்டான்.
ஆனால் தான் சொல்ல நினைத்ததை சொல்லி முடித்துவிடும் வேகத்தில் கிருபாவின் குறுக்கிடலை பொருட்படுத்தாமல் அதிதி மேலும் பேசினாள்.
“சாரி.. நான் உங்களை குறை சொல்லலை.. நான் அவன்கிட்ட பேசுறது பிடிக்காம தானே நீங்க அப்டி நடந்துக்கிட்டீங்க.. எனக்கு புரியுது.. நான் கோபமா தான் பேச நினைச்சேன்.. எனக்கு அவன்மேல எந்த பீலிங்சும் இல்லை.. நீ.. நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க..” என தவிப்புடன் பேசி முடித்தவள்.. கிருபா தன்னை புரிந்து கொண்டான் என்பதை அவன் வார்த்தைகளின் மூலம் அறிய காத்திருந்தாள்.
அதிதி தன் செயலை வேறுவிதமாக தான் புரிந்து கொண்டிருப்பாள் அதை அவள் தன்னிடம் மனந்திறந்து பேசுவாளா என தவித்துக் கொண்டிருந்த கிருபாவுக்கு அதிதியின் செய்கை வியப்பாக இருந்தது.
தான் தப்பாக எண்ணி விடக்கூடாது என அதிதி நினைக்கிறாள் எனில்.. அவள் மனதில் தான் இடம்பிடிக்க தொடங்கி விட்டேனா.. என்ற எண்ணமே மகிழ்ச்சி தர பேச்சற்று போனான் கிருபா.
கிருபாவின் மௌனத்தை கோபம் என புரிந்து கொண்ட அதிதி.. “நா.. நான் கோபமா தான்.. திட்ட தான் நினைச்சேன்.. நீ.. நீங்க.. தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க..” என மேலும் தன்னிலையை விளக்கினாள்.
“நான் சரியா தான் புரிஞ்சுக்கிட்டேன்..” என்ற கிருபாவின் குரலில் லேசாக சிரிப்பும் இருந்தது.
அதிதிக்கு அவன் என்ன நினைக்கிறான் என்பதே புரியவில்லை.
“உன் கோபத்தை காட்டுறதுக்கான நேரம் இது இல்லை.. அதனால தான் நான் உன்னை பேசவிடாம கூட்டிட்டு வந்தேன்.. வேற ஒன்னுமில்லை..” என தன் செய்கைக்கான காரணத்தை விளக்கினான் கிருபா.
கோபத்தை காட்டும் நேரம் இது இல்லை என்றால்.. என மனதில் எழுந்த கேள்வியை விட.. கிருபா தன்னை தவறாக நினைக்கவில்லை.. என்பது அதிதிக்கு பெரும் நிம்மதி தந்தது.
தான் செய்த தவறை குத்திக்காட்டும் எண்ணம் கிருபாவுக்கு இல்லை.. தன்னை கிருபா புரிந்து கொண்டான்.. அதிதியின் மனமெல்லாம் மகிழ்ச்சியால் நிறைந்தது.
எங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களோனு ரொம்ப பயந்துட்டேன்.. என்ற வார்த்தைகள் அதிதியின் மௌனத்தில் மகிழ்ச்சியில் ஒளிந்து கொண்டிருந்தது.
நான் என்ன நினைக்கிறேன்றது உனக்கு அவ்ளோ முக்கியமா அதிதி.. ஏன்.. என்ற கேள்வி மகிழ்ச்சியில் திளைத்திருந்த போதும் கிருபாவின் மனதில் எழுந்தது.
ஆனால் இருவருமே எதுவும் பேசவில்லை. மௌனத்திலே சில நிமிடங்கள் கரைந்தது.
தன்னறையின் ஜன்னல் அருகில் நின்றபடி.. ஜன்னல் திரையை லேசாக விலக்கியபடி தெருவை பார்த்த அதிதியின் விழிகளில் அச்சம் பரவியது.
நரேஷ்.. அதிதியின் அறையை பார்த்தபடி அவள் வீட்டின் எதிரில் தன் பைக்கில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.
ஜன்னலில் இருந்து விலகி நின்று கொண்ட அதிதியின் உடல் பயத்தில் நடுங்க தொடங்கியது.
அ.. அவன் எதுக்கு இங்க வந்திருக்கான்.. என்னை பார்க்கிறதுக்கா தான் இருக்கும்.. என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டானா.. ஏன் இப்டி பண்றான்.. அதான் ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்க போறானே.. அவளை போய் பார்க்க வேண்டியது தானே.. என தனக்குள்ளே எண்ணிக் கொண்டிருந்தவள் எதிர்முனையில் அவள் குரலுக்காக கிருபா காத்திருப்பதை உணரவில்லை.
“அதிதி.. என்னாச்சு.. ஏன் அமைதியா இருக்க..” என்ற கிருபாவின் குரல் முதலில் அவள் செவிகளை எட்டவில்லை.
“ஹலோ அதிதி.. லைன்ல இருக்கீயா.. ஹலோ..” என மீண்டும் கிருபா கேட்ட பின்பே மனதில் பலம் வந்தவளாக.. அதிதி.. “ந.. நரேஷ்.. வீ.. வீட்டுக்கு எதிர்ல நின்னுட்டு இருக்கான்..” என்றாள்.
“எ.. என்ன சொல்ற அதிதி..” என கேட்டான் கிருபா.
“அ.. அவன் எதிர்ல நின்னுட்டு இருக்கான்.. எ.. எனக்கு பயமா இருக்கு..” என்றாள் அதிதி பதற்றமாக.
“பயப்படாத அதிதி.. ஒன்னுமில்லை.. ரிலாக்ஸ்.. அவன் உன்னை பார்த்தானா..” என கேட்டான் கிருபா.
“இ.. இல்லை.. நா.. நான் லைட்டா தான் ஸ்கீரினை விலக்கினேன்.. அவன் நிக்கிறத பார்த்ததும் தள்ளி நின்னுட்டேன்.. பார்த்திருக்க மாட்டான்..” என்றாள் அதிதி.
நரேஷ் என்ன எண்ணத்துடன் இதை செய்கிறான் என புரிந்து கொள்ள முடியாமல் சற்று திணறினான் கிருபா.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top