❤❤ 20 ❤❤
அதிதியின் மனம் தன்பால் சாய தொடங்கி விட்டதை உணர்ந்த கிருபா மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில் தான்.. அதிதி வீட்டுக்கு எதிரில் நரேஷ் நிற்பதை சொன்னாள்.
அதிதி பயத்தில் நடுங்க.. இந்த நேரத்தில் தன்னால் அவளருகில் இருக்க முடியவில்லையே.. என்ன செய்வது.. அவன் என்ன செய்ய நினைக்கிறான்.. எதுவும் புரியாமல் எதையும் யோசிக்கவும் முடியாமல் தடுமாறினான் கிருபா.
அதிதியிடம் பேசத்தான் முயற்சிக்கிறான். அவன் இன்னும் அதிதியை பார்க்கவில்லை என்பது தற்போது சிறு ஆறுதல்.. என கிருபா எண்ணிக் கொண்டிருந்த வேளையில் ஆனந்தனின் குரல் கேட்டது.
ஆனந்தன் அதிதியை உறங்குமாறு கூறிவிட்டு செல்ல.. அதைக் கேட்டதும்.. அதிதியின் அறையில் வெளிச்சமில்லை எனில் அவள் உறங்கி விட்டதாக எண்ணி நரேஷ் கிளம்பி விடுவானா என யோசித்த கிருபா அதிதியிடம் லைட்டை ஆப் பண்ணிய பிறகு நரேஷை கவனிக்க சொன்னான்.
தனக்கும் அதிதிக்கும் என்ன சம்பந்தம் என்பதை அறிய நினைக்கிறான் நரேஷ். அதிதியிடம் பேசுவதை திருமணம் வரை தள்ளிப்போடலாம் என எண்ணியவன்.. அதற்கு முன்னரே பேச நினைக்கிறான்.
அதிதி மொத்தமாக விலகி விடுவாளோ என்ற பயமாக கூட இருக்கலாம்.. ஆனாலும் தன் திருமணத்துக்கு இடையூறு வரும் வகையில் எதுவும் செய்ய மாட்டான்.. இரண்டு நாள்.. இரண்டே நாட்கள் தான்.. அதுவரை கொஞ்சம் சமாளித்து விட்டால் போதும்.. அதுவரை.. அதுவரை.. என தவித்தபடி காத்திருந்தான் கிருபா.
கிருபா எண்ணியது போலவே நரேஷ் கிளம்பிவிட்டதாக அதிதி சொல்ல.. நிம்மதியடைந்தாலும்.. இரண்டு நாட்கள் கவனமாக இருக்க சொல்லவிட்டு போனை வைத்தான் கிருபா.
இரண்டு நாட்கள்.. இரண்டு நாட்கள் எப்படி நகரப்போகிறது.. அந்த நரேஷின் போனை எடுத்தாக வேண்டும்.. இல்லையெனில்.. கிருபாவால் நடக்க இருப்பதை நினைத்து பார்க்க கூட முடியவில்லை.
அதிதியை பார்க்க முடியவில்லையே.. என்ன செய்வது.. வீட்டை விட்டு வெளியே வந்தால் தான் சந்திக்க முடியும்.. அதே நேரம் இங்கும் திருமணத்துக்கு இரண்டே நாட்கள் தான் இருக்கிறது.. எப்படி.. எப்படி.. அதிதியிடம் பேசுவது என யோசித்துக் கொண்டிருந்தான் நரேஷ்.
அதற்கு முன்னர் அதிதியை பார்த்து பேசிவிடுவது நல்லது.. என்ன செய்வது.. எப்படி பேசுவது.. அதிதி.. ப்ளீஸ் பேசு.. நான் உனக்கு எல்லாத்தையும் புரிய வைக்கிறேன்.. நாம சந்தோஷமா இருக்கலாம்.. ஏன் புரிஞ்சுக்க மாட்டிக்குற.. என புலம்பிக் கொண்டிருந்தான் நரேஷ்.
அன்று காலை ஏழு மணிக்கு மேலாகியும் அதிதி அறையில் இருந்து வெளியே வராமலிருக்க.. "என்னாச்சு இவளுக்கு.. எப்பவும் இப்டி பண்ண மாட்டாளே.." என புலம்பியபடியே சமையலை கவனித்துக் கொண்டிருந்தார் ஜானகி.
"நைட்டெல்லாம் போன் பேசிட்டு இருந்திருப்பா.. மெதுவா எழுந்திருக்கட்டும் அண்ணி.. இப்ப என்ன அவசரம்.." என்றார் மைதிலி.
ஆனந்தனும் ஜானகியும் அதிதி கிருபாவின் நிச்சயத்துக்கு உறவினர்களை அழைக்க கிளம்பினர்.
அதிதியை எழுப்பிவிட்ட பின்னர் கிளம்பலாம் என அவள் அறைக்கு வந்தார் ஜானகி.
"அதிதி.. எழுந்திரு.. மணி என்னாகுது பாரு.. இன்னும் என்ன தூக்கம்.." என்ற ஜானகி அப்போதுதான் அதிதிக்கு காய்ச்சலாக இருப்பதை கவனித்தார்.
"அதிதி என்னடா.. இப்டி காய்ச்சல் அடிக்குது.." என ஜானகி பதறினார்.
அப்போதுதான் கண்விழித்த அதிதி.. "ஒ.. ஒன்னுமில்லை மா.. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.." என மெல்ல சொன்னாள்.
"வா.. எதுக்கும் டாக்டர் கிட்ட போய்ட்டு வந்துடலாம்.. நாளை மறுநாள் பங்ஷன் இருக்கு.. இப்ப போய்.. திடீர்னு ஏன் இப்டி காய்ச்சல் வந்துச்சு.." என பதற்றமானார் ஜானகி.
"ஒன்னுமில்லை மா.. லேசா தான்.. கொஞ்ச நேரம் தூங்குனா சரியாகிடும்.." என அதிதி சோர்வுடன் சொன்னாள்.
ஆனந்தனும் ஜானகியும் எவ்வளவோ வற்புறுத்தியும் அதிதி மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என மறுத்துவிட்டாள்.
அவள் மனமெல்லாம் பயம்.. கிருபா இரண்டு நாள் கவனமாக இருக்க சொன்னதில் காரணம் இருக்கும் என எண்ணியபடியே நிம்மதியாக தான் உறங்கிப் போனாள்.
ஆனால் அந்த கனவு.. கனவா அது.. அப்படியே நிஜம் போலவே..
தன் உடல் மீது ஊர்ந்த அந்த பார்வைகள்.. ச்சை.. தன்னையே வெறுக்குமளவு அந்த பார்வைகளை நினைக்கவே உடலெல்லாம் கூசியது.
அதிலும் நரேஷின் சிரிப்பு.. "நான் சொன்னதுக்கு சம்மதம் சொல்லியிருந்தா உனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா..
உன்னை இந்த ஊரே தப்பானவளா தான் பார்க்கும்.. இப்ப கூட நீ சரினு சொன்னா.. உன்னை நானே.." கேவலமான அவன் பேச்சு.. பார்வை.. உடம்பெல்லாம் தீப்பற்றி எரிவது போலிருந்தது அதிதிக்கு.
அது கனவாக இருக்கலாம்.. ஆனால் அதுதானே நடக்கும்.. அந்த வீடியோ வெளியே வந்தால்.. அதையே எண்ணி எண்ணி கண்ணீர் சிந்தியபடி இருந்தவளின் உடல் நெருப்பாக சுட தொடங்கியது.
ஜானகி அழைத்தும் மருத்துவமனைக்கு கூட வர மறுத்ததுக்கும் அதுவே காரணம்.. எங்கே நிஜமாகவே அந்த மாதிரியான பார்வைகளை சந்திக்க நேருமோ என்ற பயம் தான்.
ஆனந்தனும் ஜானகியும் அதிதியை நினைத்து வருந்த.. மைதிலி தான் அதிதியை தான் கவனித்துக் கொள்வதாக கூறி.. அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை நினைவூட்டினார்.
"அதிதி இந்த கசாயத்தை குடி.. சரியாகிடும்.. இல்லைனா சாயந்திரம் டாக்டர் கிட்ட போய்ட்டு வரணும்.. அப்பவும் வரலை.. வேண்டாம்னு சொல்லக்கூடாது.." என கண்டிப்புடனே அதிதியை கசாயத்தை குடிக்க வைத்தார் மைதிலி.
அதிதியின் முகத்தில் சோர்வையும் மீறி தெரிந்த பயத்தை கண்டு கொண்டார் மைதிலி. ஆனால் அதற்கு அவர் நினைத்த காரணம் தான் வேறு.
அதிதிக்கு கிருபாவை பிடித்திருந்தாலும்.. முழுதாக ஒரு மாதம் கூட ஆகவில்லை.. அதற்குள் நிச்சயம்.. திருமணம்.. அதன்பின் குடும்ப பொறுப்புகள்.. அப்பா அம்மா என சிறுகூட்டுக்குள்ளே வாழ்ந்து பழகியவளுக்கு இதெல்லாம் எப்படி என்ற மலைப்பும்.. அப்பா அம்மாவை பிரிய போகிறோம் என்ற கவலையும் வாட்டுவதாக எண்ணிக் கொண்டார் மைதிலி.
கசாயத்தை குடித்துவிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்த அதிதியின் காய்ச்சல் சற்று குறைந்திருந்தது.
ஓய்வுக்கு பின் எழுந்தவளிடம்.. அவள் பயத்துக்கு கவலைக்கு தான் கற்பித்துக் கொண்ட காரணம்.. குறித்து பேச தொடங்கினார் மைதிலி.
"அதிதி.. எல்லாருக்கும் இருக்கிற பயம் தான்டா உனக்கும்.. அம்மா அப்பா அவ்ளோதான் உலகம்னு இவ்ளோ நாள் வாழ்ந்தாச்சு..
இப்ப தீடீர்னு இன்னொரு வீடு.. புது மனுசங்க.. அவங்கலாம் எப்டி பழகுவாங்களோனு பயம் வர்றது இயல்பு தான்..
அம்மா ஏதாவது வேலை சொன்னா மாட்டேன்னு ஈசியா சொல்லலாம்.. அந்த வீட்டில அப்டி எதுவும் சொல்ல முடியாதேனு ஏதேதோ தோணும்..
ஆனா அது நம்ம குடும்பம்னு வாழ ஆரம்பிச்ச பிறகு.. இப்ப பெருசா தோணுற விஷயமெல்லாம் ஒன்னுமில்லைனு புரியும்டா..
உனக்கு கிருபாவை பிடிச்சிருக்கு.. கிருபாவுக்கு உன்னை பிடிச்சிருக்கு.. அதுபோதும்.. வாழ்க்கை முழுக்க நீங்க சந்தோஷமா இருக்கிறதுக்கு.. அதனால கண்டதையும் நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காம இரு.." என மைதிலி தான் எண்ணியதை எல்லாம் பேசி முடித்தார்.
"அத்தை எதையோ நினைச்சிட்டு பேசுறாங்க.. ஆனா என் மனசுல உள்ள பயம்.. ப்ச்.." என சலிப்புடன் எண்ணிக் கொண்ட அதிதியின் கண்களில் நிறைந்தான் கிருபா.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top