WatTruyen.Top

காற்றினில் உன் வாசம்..

🌸 19 🌸

jamunaguru

அபி என அவள் பொய்யுரைத்தாலும்.. அவள் தன் தோழி அர்ச்சனா என்பதை உறுதியாக அறிந்திருந்தாள் ரஞ்சனி.

தோழிகள் எல்லோரும் அர்ச்சனா வீட்டுக்கு சென்றிருந்த போது திலீப் செய்த பிரச்சனை ரஞ்சனி அறிந்ததே. ஆனால் அது ஏதோ குடும்ப பிரச்சனை என எண்ணியவளுக்கு.. அதன்பிறகே திலீப் அர்ச்சனா மீது கொண்டுள்ள காதலால் வந்த பிரச்சனை என்பது தெரியவந்தது.

திலீப் தேவையில்லாமல் அர்ச்சனாவை கஷ்டப்படுத்தியது அறிந்து ரஞ்சனிக்கு அவன் மீது கோபம் வந்தது.

ஆனால் அர்ச்சனா காணாமல் போன பிறகு.. தன் தவறை உணர்ந்து வேறு எந்த நினைவும் இன்றி வீதிவீதியாக அவன் அர்ச்சனாவை தேடி அலைந்ததை நேரில் கண்டபின் அவன் மீது ரஞ்சனிக்கு பரிதாபம் தான் தோன்றியது.

அர்ச்சனாவை இளங்கோவுடன் சந்தித்ததை பற்றி திலீப்புக்கு தான் முதலில் தகவல் கொடுத்தாள் ரஞ்சனி. ஆனால் ரஞ்சனியிடமே.. தன் பெயர் அபி என அவள் மாற்றி சொன்னதை அறிந்ததும்.. திலீப் மனம் நொந்தான்.

“இதான் அவங்க வீடு.. நான் கோவில்ல இருந்தே அவங்கள பாலோ பண்ணிட்டு வந்தேன்.. வாங்க போய் பேசலாம்.. அர்ச்சனா கண்டிப்பா உண்மையை சொல்லிடுவா..” என ரஞ்சனி திலீப்பிடம் சொன்னாள்.

“வே.. வேண்டாம்.. நா.. நான் வரலை.. அச்சு என்கிட்ட பேசமாட்டா.. கோபமா இருப்பா.. அத என்னால தாங்க முடியாது.. உன்கிட்ட சொன்ன மாதிரி நான் அச்சு இல்லைனு எதாவது சொல்லிட்டானா.. நா.. நான்.. என்னால முடியாது..” என மனம் வருந்தி பேசினான் திலீப்.

அவனை சமாதானம் செய்யும் வழியறியாது திணறிய ரஞ்சனி.. “சரி.. நீங்க வரவேண்டாம்.. அர்ச்சனாவோட அம்மாவுக்கு போன் பண்ணுங்க..” என ரஞ்சனி சொல்ல.. முகம் மலர அவர்களுக்கு தகவல் சொல்லி வரவழைத்தான் திலீப்.

தான் நினைவு வந்ததை மறைத்தது இளங்கோவுக்கு அத்தனை கோபத்தை ஏற்படுத்தும் என்பதை அறியாத அபி.. அவன் பாராமுகம் கண்டு திகைத்து நின்றாள்.

அவனுக்கு தன் மனதில் உள்ள நேசத்தை வெளிப்படுத்தினாலாவது.. எல்லாம் சரி ஆகிவிடாதா என அபி நினைக்கையிலே.. அவள் குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர்.

“என்னடா.. நீ.. இங்கதான் இருக்கனு எங்களுக்கு தகவல் சொல்லியிருக்க கூடாதா..” என கேட்டார் கண்ணன்.

“அ.. அது..” என அபி விளக்க தொடங்க.. “அபி.. அவங்கள உள்ளே கூட்டிட்டு வந்து பேசு ம்மா..” என்ற மைதிலி தானும் அவர்களை வீட்டுக்குள் அழைத்தார்.

“எனக்கு அப்பவே தெரியும் அதான் பாலோ பண்ணிட்டு வந்தேன்..” என ரஞ்சனி புன்னகையோடு சொல்ல அவளை நன்றியுடன் அணைத்துக் கொண்ட அர்ச்சனா வீட்டுக்குள் அழைத்தாள்.

“அச்சு.. முக்கியமான ஆளை நீ கூப்பிடலையே..” என ரஞ்சனி சொன்னதும்.. “தி.. திலீப் அத்தான்..” என்றாள் அர்ச்சனா.

“எ.. எங்க..” என கேட்ட அர்ச்சனா வீட்டுக்கு வெளியே பார்த்தாள். தலையை குனிந்தபடி அங்கே நின்றிருந்தான் திலீப்.

“அத்தான்.. ஏன் இங்க நின்னுட்டு இருக்க.. உள்ள வா..” என அவன் கரம்பற்றி இயல்பாக அழைத்து வந்தாள் அர்ச்சனா.

திலீப் மனதில் இருந்த பெரும் பாரம் அகன்றது. ஆனாலும் அவள் முகம் பார்க்கவே தயங்கினான்.

“நீங்க அபி கூட பேசிட்டு இருங்க.. நான் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்..” என்ற மைதிலி அங்கிருந்து நகர்ந்தார். நடப்பதை எல்லாம் எந்த உணர்ச்சியும் இன்றி பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.

அவன் உணர்ச்சியற்ற முகத்தை பார்த்ததும் தான்.. சற்று முன்பு தன்னை ஏமாற்றியதாக அவன் சொன்ன பழியும்.. அவன் கோபமும் அர்ச்சனாவின் மனதில் வந்தது.

அவன் கோபத்தை எப்படி சரி செய்வது என உள்ளுக்குள் தவித்தவளின் கவனத்தை திசை திருப்பினார் அவள் அன்னை.

“அச்சு.. அவங்க ஏன்டா.. உன்னை அபினு கூப்பிடுறாங்க..” என கேட்டார் வேணி.

“ஆமா.. கோவில்ல கூட என்கிட்ட அபினு சொன்னீயே ஏன்..” என ரஞ்சனியும் கேட்டாள்.

“அ.. அது.. அன்னைக்கு நைட்ல அந்த வீட்டில இருந்து ஓடி வந்தப்ப.. ஒரு சின்ன ஆக்சிடெண்ட்..” என அர்ச்சனா சொல்ல.. “எ.. என்னடா சொல்ற..” என பதறினர் எல்லோரும்.

தன்னால் தான் அச்சுவுக்கு இந்த கஷ்டம் என குற்ற உணர்வில் மனம் நொந்து கொண்டிருந்தான் திலீப்.

“ஒ.. ஒன்னுமில்லை.. சின்ன ஆக்சிடெண்ட் தான்.. லேசா தலலயில அடிபட்டதுல எதுவும் ஞாபகம் இல்லை.. அவர்தான் என்னை காப்பாத்துனாரு..” என இளங்கோவை காட்டி சொன்னாள் அர்ச்சனா.

எல்லோரும் இளங்கோவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். வெற்று புன்னகையோடு அதை ஏற்றுக் கொண்டான் இளங்கோ.

மைதிலி எல்லோருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவரும் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருந்த திலீப்.. தன்னை ஏமாற்றி விட்டதாக எண்ணி கோபத்தில் இளங்கோ.. இளங்கோவின் கோபத்தை எப்படி சரி செய்வது என்ற குழப்பத்தில் அர்ச்சனா.. மூவரை தவிர மற்ற எல்லோரும் இயல்பாக இருந்தனர்.

திலீப் வந்ததில் இருந்தே எதுவும் பேசாமல் இருக்க.. அர்ச்சனாவும் அதை உணராமல் இருந்தாள்.

அதை கவனித்த ரஞ்சனி.. “அச்சு.. திலீப் அத்தானை கொஞ்சம் பாரு.. அவர் முன்ன மாதிரி இல்லை.. ரொம்ப மாறிட்டாரு.. உன்னை எப்டிலாம் தேடி அலைஞ்சாருனு நானே நேரில பார்த்திருக்கேன்.. அவர்கிட்ட கொஞ்சம் பேசு.. அவர் பாவம்..” என்றாள் அர்ச்சனாவின் காதில்.

இளங்கோவை பற்றிய எண்ணத்திலே மூழ்கியிருந்தவளின் கவனம் அப்போதுதான் திலீப் மீது மாறியது.

அவன் மீது எந்த கோபமும் வருத்தமும் இல்லாத அர்ச்சனாவும் இயல்பாக.. “அத்தான்.. நீ ஏன் வந்ததுல இருந்து அமைதியா இருக்க..” என கேட்டாள்.அவள் முன் மண்டியிட்ட திலீப்.. அவள் கைகளை பற்றிக் கொண்டு கண்ணீர் சிந்தினான்.

“என்னை மன்னிச்சிடு அச்சு.. நான் இனி உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன்.. எ.. என்னால தான எல்லாம்.. நா.. நான் ஏன் அப்டிலாம் நடந்துக்கிட்டேன்னு எனக்கு தெரியலை அச்சு.. எங்க நீ.. நீ என்னை விட்டு போயிடுவீயோனு பயந்துட்டேன் அச்சு.. நான் பண்ணது தப்பு தான் அச்சு.. சாரி அச்சு..” என கண்ணீருடன் சொன்னான் திலீப்.

“அழாத அத்தான்.. எனக்கு உன்மேல எந்த கோபமும் இல்லை..” என ஆறுதலாக அவன் தலையை வருடினாள் அர்ச்சனா.

உணர்ச்சியற்று பார்த்துக் கொண்டிருந்த இளங்கோவை பார்க்கையில் மனம் வலிக்க.. ஏதோ முடிவு செய்தவளாய்.. “நம்ம வீட்டுக்கு போலாம் அத்தான்..” என்றாள் தன் மடியில் தலை வைத்திருந்த திலீப்பின் கேசத்தை வருடியபடி.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top