🌸 18 🌸
இளங்கோவின் பெருந்தன்மையை எண்ணி பூரிப்புடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அபி.
அப்போது.. “அர்ச்சனா..” என அவள் தோழி ரஞ்சனி அழைக்க.. தன் குடும்பத்தினர் பற்றி அறிந்து கொள்ளலாம் என முதலில் மகிழ்ந்தாள் அர்ச்சனா.
ஆனால் இளங்கோ அருகில் வந்து கொண்டிருப்பதை பார்த்ததும்.. “நா.. நான் அர்ச்சனா இல்லை அபி..” என்றாள்.
ரஞ்சனி குழம்பி நிற்க.. “யார் அபி அவங்க.. என்ன கேட்டாங்க..” என்றபடி அங்கே வந்தான் இளங்கோ.
“ஒ.. ஒன்னுமில்லை.. வாங்க கிளம்பலாம்..” என படபடத்தாள் அபி.
“அபி.. என்னாச்சு..” என நிதானமாக கேட்டவன்.. “உங்களுக்கு அபியை தெரியுமா..” என ரஞ்சனியிடம் கேட்டான்.
“தெ.. தெரியாது.. எனக்கு அவங்கள தெரியாது..” என அவசரமாக பதிலளித்தாள் அபி.
“உனக்கு தெரியாது.. ஆனா அவங்களுக்கு உன்னை தெரிஞ்சிருக்கலாம் இல்ல..” என அபியிடம் மென்குரலில் சொன்னான் இளங்கோ.
அவள் அர்ச்சனா தான்.. ஆனால் அவள் ஏதோ நெருக்கடியில் இருக்கிறாள் என புரிந்து கொண்ட ரஞ்சனி.. “என் ப்ரெண்ட் மாதிரியே இருந்துச்சு.. ஆனா என் ப்ரெண்ட் இல்லை இவங்க..” என்றாள்.
பார்வையிலே அவளுக்கு நன்றி தெரிவித்தாள் அர்ச்சனா. ஆனால் இளங்கோவின் மனதில் ஏதோ தோன்ற.. ரஞ்சனியிடம் மேலும் பேசி அறிந்து கொள்ள விரும்பினான்.
அவன் பேச்சை தொடரும் முன்னரே.. “அ.. அத்தை காத்திட்டு இருப்பாங்க.. நாம கிளம்பலாமா..”என அவசரமாக கேட்டாள் அபி.
ஏன் இத்தனை அவசரம்.. என குழம்பிப் போனான் இளங்கோ. அபியிடம் இருந்த படபடப்பும்.. நிதானம் இன்மையும் ஏன் என யோசிக்க தொடங்கினான்.
“அவளை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கையில் அதை ஏன் தடுக்க வேண்டும்..” என்ற கேள்வி இளங்கோவின் மனதில் எழுந்தது. ஏதோ சரியில்லை என அவன் மனம் சொல்லியது.
“இதுக்கு மேலயும் நான் இளா கிட்ட மறைக்கிறது தப்பு.. நா.. நான் சொல்லிடணும்..எல்லாத்தையும் சொல்லிடணும்..” என மனதில் நினைத்தாலும் அவளுக்கு அப்போது இருந்த பதற்றத்தில்.. அதை சொல்லும் திடம் வரவில்லை.
“நல்ல வேளை ரஞ்சி புரிஞ்சுக்கிட்டா.. ஆனா அவ எப்டியும் வீட்டில யாருக்காவது தகவல் சொல்லிடுவா.. அதுக்குள்ள இளா கிட்ட சொல்லிடணும்.. சொல்லிடணும்.. இளா கிட்ட எல்லாத்தையும் சொல்லிடணும்.. என் மனசில இளா மட்டும் தான் இருக்காரு.. அதை சொல்லிடணும்.. நான் அபி இல்லை அர்ச்சனானு சொல்லிடணும்..” என தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள் அபி.
தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தவள் வீடு திரும்பும் பாதை வேறாக மாறிப்போனதை கவனிக்கவில்லை.
இளங்கோவை முதன்முதலாக சந்தித்த இடம்.. விபத்து நேர்ந்த அந்த தெரு.. மனதின் உணர்ச்சிகள் முகத்தில் பிரதிபலிக்க அமர்ந்திருந்த அபி.. இளங்கோ தன்னை கவனிப்பதை உணரவேயில்லை.
கோவிலில் அவள் நடந்து கொண்ட விதம் உறுத்த.. அதை உறுதிப்படுத்திக் கொள்ளவே அந்த பாதையில் அழைத்து வந்ததுமின்றி.. அவளின் முகத்தை ஆழ்ந்து கவனித்தும் கொண்டிருந்தான் இளங்கோ.
அபி எதையோ மறைக்கிறாள் என்ற தன் எண்ணம் உறுதியானது இளங்கோவுக்கு.
இருவரும் தங்கள் நேசத்தை பகிர்ந்து கொண்டு.. சந்தோஷமாக வருவார்கள் என எண்ணி காத்திருந்த மைதிலிக்கு.. இருவரும் ஆளுக்கொரு யோசனையில் ஆழ்ந்து வருவதை பார்க்க வருத்தமாக இருந்தது.
அவர் எதையும் கேட்கும் முன்னரே.. “உன் பேர் என்ன..” என இளங்கோ அபியை பார்த்து கேட்டான்.
அவன் குரலில் இருந்த கோபம் உள்ளுக்குள் ஏதோ செய்ய.. “அ.. அர்ச்சனா..” என்றாள் லேசான தடுமாற்றத்துடன்.
இளங்கோ தன் மனதை வெளிப்படுத்தாத காரணம் அவளுக்கு நினைவில்லை என்பது தானே.. அப்படியானால் இப்போது அந்த தடையும் நீங்கி விட்டதே என்ற மகிழ்ச்சியுடன் மைதிலி.. “அபி.. உனக்கு ஞாபகம் வந்துடுச்சா டா..” என கேட்டார்.
ஆம் என தலையசைத்தவள் கோபத்துடன் நின்றிருந்த இளங்கோவை பார்த்தாள். அவளுக்கு நினைவு வந்ததும் தன் காதலை சொல்லி அவள் குடும்பத்தினர் சம்மதத்துடன் அவளை தனக்கு சொந்தமாக்கி கொள்ள எண்ணியவனுக்கு இது பெரும் வலியாக இருந்தது.
அவள் மறைத்ததை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அபியை பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இருந்த மைதிலி.. அவளிடம்.. “அப்ப உன் பேர் அர்ச்சனாவா.. அப்பா அம்மா.. எல்லாரையும் ஞாபகம் வந்துடுச்சா டா..” என கேட்டார்.
இளங்கோவை தயக்கத்துடன் பார்த்தவள்.. அவனை சந்திக்கும் வரை தன் வாழ்வில் நடந்தவற்றை சொன்னாள்.
“இதெல்லாம் உனக்கு ஞாபகம் வந்தது எப்ப..” என கேட்டான் இளங்கோ. அவன் குரலில் இருந்தது வலியா.. கோபமா.. என அர்ச்சனாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நினைவு வந்தும் அதை மறைத்தாளா.. திலீப் மீதிருந்த பயத்தினாலா.. என புரியாத மைதிலி.. “முன்னாடியே உனக்கு ஞாபகம் வந்துடுச்சா..” என கேட்க தலையசைத்தாள் அபி.
“அப்டினா ஏன்டா அப்பவே சொல்லலை.. உங்க வீட்டில எல்லாரும் உன்னை பத்தின தகவல் கிடைக்காம தவிச்சிட்டு இருப்பாங்கல்ல..” என்றார் மைதிலி கனிவுடன்.
“கட்டின பொண்டாட்டியை ஒழுங்கா பார்த்துக்க தெரியாத இந்த முட்டாளை எவ்ளோ வேணும்னாலும் ஏமாத்தலாம்னு நினைச்சிருப்பா..” கோபத்துடன் ஒலித்தது இளங்கோவின் குரல்.
“கண்ணா.. என்ன பேச்சு இதெல்லாம்..” என கண்டித்தார் மைதிலி.
“இ.. இல்லை.. இல்லை.. நா.. நான் உங்களை ஏமாத்தணும்னு நினைக்கலை..” என பதறிய அபி.. “அ.. அத்தை நீங்களாவது சொல்லுங்க.. நா.. நான் அப்டிலாம் நினைக்கலை அத்தை..” என்றாள் மைதிலியின் கையை பிடித்தபடி.
அபியின் நிலை புரிந்தாலும்.. தன் மகனுக்கும் இப்போது சமாதானம் சொல்ல முடியாதவராக.. இருவருக்கும் இடையில் தவித்தார் மைதிலி.
கண்ணீருடன் அபி இளங்கோவை பார்த்துக் கொண்டிருக்க.. அவனோ அவள் முகம் கூட பார்க்க விரும்பாதவனாக திரும்பி நின்றிருந்தான்.
தன் மனதில் அவன் மீதிருக்கும் நேசம் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பதை சொன்னால் தான் அவனுக்கு புரியும் என எண்ணினாள் அபி.
ஆனால் அவள் பேச தொடங்கும் முன்னரே.. “அச்சு..” என்ற வேணியின் குரல் கேட்டு திரும்பினாள்.
அங்கே வேணி.. கண்ணன்.. மைதிலி மூவரும் நின்றிருந்தனர்.
“அம்மா..” என ஓடிச்சென்று கண்ணீருடன் அவரை கட்டிக் கொண்டாள்.
“என்கிட்ட நீ மறைக்கலாம்.. ஆனா இவங்க கிட்ட உன்னால பொய் சொல்ல முடியாதுனு தான்.. உங்களை பாலோ பண்ணிட்டு வந்தேன்.. அம்மாவுக்கு போன் பண்ணதும் அவங்களும் வந்துட்டாங்க..” என்றாள் ரஞ்சனி புன்னகையுடன்.
அவர்கள் யாரென புரிந்து கொண்ட மைதிலி.. “அபி அவங்களை உள்ளே கூப்பிடு மா..” என்றார்.
அபியும் சரியென தலையசைத்து விட்டு.. அவர்களை உள்ளே அழைத்து வந்தாள்.
ஆனால் வாசலிலே நின்றிருந்த ரஞ்சனி.. “அச்சு.. முக்கியமான ஆளை கூப்பிடலையே நீ..” என்றாள்.
“தி.. திலீப் அத்தான்..” என அர்ச்சனாவின் உதடுகள் உச்சரித்தன.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top