WatTruyen.Top

காற்றினில் உன் வாசம்..

🌸 17 🌸

jamunaguru

இளங்கோவின் பிறந்தநாள் நாளை என்பது உள்ளுக்குள் சந்தோஷம் தர மலர்ந்த முகத்துடன் மைதிலியுடன் அபியாக கிளம்பினாள் அர்ச்சனா.

இளங்கோவிடம் தன் காதலையும் சொல்லிவிட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தாள்.

எதிர்பாராமல் மைதிலியும் அபியும் வந்து நிற்க.. உள்ளுக்குள் ஊற்றெடுத்த சந்தோஷத்துடன்.. “எ.. என்னம்மா போன் கூட பண்ணலை.. திடீர்னு வந்து நிக்கிறீங்க இரண்டு பேரும்..” என கேட்டான் இளங்கோ.

“நாளைக்கு உன் பிறந்தநாள் இல்லையா.. அதான்..” என மைதிலி சொல்ல.. “நாளைக்கா..” என விழித்தான் இளங்கோ.

அபியும் புன்னகையோடு அவனை பார்த்துக் கொண்டிருக்க.. மைதிலியிடம் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்து விட்டான்.

இரவு உணவு முடிந்ததும் அபி படுத்த பின்னர்.. இளங்கோவிடம் பேச வந்தார் மைதிலி. தன் பிறந்தநாள் என பொய்யுரைத்து அபியை இங்கே அழைத்து வந்தது ஏன் என்ற காரணத்தை மைதிலி சொல்ல வருவார் என எதிர்பார்த்து காத்திருந்தான் இளங்கோ.

“கண்ணா.. உனக்கும் அபியை பிடிச்சிருக்கு தானே..” என கேட்டார் மைதிலி. ஆம் என தலையசைத்தான் இளங்கோ.

“அப்புறம் ஏன்டா அவகிட்ட சொல்ல மாட்டிக்குற.. அவளா சொல்ல வந்தாலும் விலகி விலகி போற..” என கேட்டார் மைதிலி.

“அம்மா.. அவளுக்கு எதுவும் நியாபகம் இல்லையே..”

“அதனால என்னடா.. ஞாபகம் வரும் போது வரட்டும்.. அவ உன்கிட்ட சொல்ல முடியாம மனசுக்குள்ளே வச்சிட்டு தவிக்கிறத பார்க்க முடியலைடா.. கஷ்டமா இருக்கு.. கலகலப்பா இருந்த பொண்ணு.. எப்டி மாறிட்டானு பாரு..” என்றார் மைதிலி.

“சரிம்மா.. நான் அவகிட்ட மனசுவிட்டு பேசுறேன்..” என்றான் இளங்கோ.

இளங்கோவின் அருகில் இருக்கிறோம்.. அவனிடம் அவன் பிறந்த நாளிலே காதலை சொல்லப்போகிறோம் என மகிழ்ந்திருந்த அபி.. இரவு பன்னிரண்டு மணிக்கு அவனுக்கு வாழ்த்த வேண்டும் என்பதை மறந்து உறங்கி விட்டிருந்தாள்.

“உன் பிறந்த நாள் பரிசா என் காதலை கொடுக்கலாம்னு நினைக்கிறேன். நீ ஏத்துப்ப தான..” என தனக்குள்ளே பேசியபடி மகிழ்ச்சியுடன் அந்த விடியலை எதிர்கொண்டாள் அபி.

இளங்கோ கிளம்பி அறையில் இருந்து வெளிவரும் முன்னரே தயாராகி அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருந்தாள் அபி.

மைதிலி எதையும் கவனிக்காதவர் போல காலை சமையலை கவனித்தார். இளங்கோ அறைக்கதவை திறந்ததும் ஓடிச்சென்று.. “பிறந்தநாள் வாழ்த்துக்கள்..” என கையை நீட்டினாள் அபி.

புன்னகையோடு அவள் கைகுலுக்கி நன்றி தெரிவித்தான் இளங்கோ.

மைதிலி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான் இளங்கோ.

“கண்ணா.. கோவிலுக்கு போய் உன் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்துடு..” என மைதிலி சொல்ல.. இளங்கோ சரியென தலையசைத்தான்.

“அபி நீயும் கோவிலுக்கு போய்ட்டு வா மா..” என மைதிலி சொல்ல.. “நீங்க வரலையா அத்தை..” என கேட்டாள் அபி.

“நான் வரலைடா.. நீங்க இரண்டு பேரும் போய்ட்டு வாங்க..” என அவர்களை வழியனுப்பி வைத்தார் மைதிலி.

இருவரும் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பி வர வேண்டும் என வேண்டிக் கொண்டார் மைதிலி.

கோவிலுக்கு சென்று இளங்கோ பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு வந்தனர் இளங்கோவும் அபியும்.

“கொஞ்ச நேரம் இங்க உட்காரலாம் அபி..” என இளங்கோ சொல்ல சரியென தலையசைத்தாள் அபி.

“உன் மனசில இருக்கிற சொல்லு அச்சு.. சொல்லிடு.. இதான் கரெக்ட் டைம் சொல்லிடு அச்சு..” என மனதுக்குள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் அபி.

இருவரும் புன்னகையை பரிமாறியபடியே அமரப்போகும் நேரத்தில் இருவர் வந்து இளங்கோவின் காலில் விழுந்தனர்.

அவர்கள் தன்னைவிட வயதில் பெரியவர்கள் என்பதை மட்டுமே அறிந்த இளங்கோ.. பதற்றத்துடன்.. “எழுந்திருங்க.. யார் நீங்க.. எதுக்கு என் கால்ல விழுறீங்க..” என்றான்.

விஸ்வநாதன் சுசீலா தான் அந்த இருவரும்..

“எங்களை மன்னிச்சிடுங்க..” என கண்ணீருடன் இருவரும் சொன்னார்கள்.

“என்னாச்சு.. ஏன் இப்டி இருக்கீங்க..” என அவர்கள் இருந்த நிலையை பார்த்து கேட்டான் இளங்கோ.

“எல்லாம் உங்களுக்கு பண்ண பாவம் தான்..” என கண்ணீர் சிந்தினார் சுசீலா.

“என்னாச்சு..” என மீண்டும் இளங்கோ கேட்டான்.

“அவன் வேலை கிடைச்சிடுச்சு.. அவ்ளோ சம்பளம்.. அது இதுனு சொன்னதெல்லாம் அப்டியே நம்பி என் பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சோம்..

ஆனா அவன் எல்லா சொத்தும் என் பொண்ணு பேர்ல இருக்கிறது தெரிஞ்சு.. அ.. அதுக்காக மட்டும் தான் என் பொண்ணை கல்யாணம் பண்ணிருக்கான்..

அவன் திட்டம் தெரிஞ்சு நாங்க கேட்டதும்.. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி.. என் பொண்ணை வச்சே.. எங்களை வீட்டை விட்டு துரத்திட்டான்..”என்றார் விஸ்வநாதன்.

“சொத்து மட்டும் என் பொண்ணு பேர்ல இல்லைனா அவளையும் அடிச்சு துரத்திடுவானோனு பயந்து.. அவகிட்ட தனியா பேசி பார்த்தோம்.. நான் நல்லா இருக்கணும்னு நினைச்சா எங்கையாவது போயிடுங்கனு சொல்லிட்டா..” என கண்ணீர் விட்டார் சுசீலா.

“சரி அழாதீங்க..” என்றான் இளங்கோ.

“நல்லா சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு ப்பா.. இந்த கோவில்ல கொடுக்கிற பிரசாதம் மட்டும் தான் சாப்பாடு.. இந்த ஊரை விட்டே போயிடலாமானு யோசிச்சிட்டு இருக்கோம்..” என்றார் விஸ்வநாதன்.

“உங்களை பார்த்ததும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னு தோணுச்சு.. பண்ணின பாவத்தில கொஞ்சமாவது கழியாதானு தான்..” என சுசீலா சொன்னார்.

யாருக்கோ போன் செய்த இளங்கோ.. சில நிமிடங்கள் பேசிவிட்டு.. “எனக்கு தெரிஞ்ச ஒரு ஆசிரமத்தில குழந்தைங்கள பார்த்துக்க ஆள் தேவைப்படுறாங்க.. சாப்பாடு தங்குற இடத்துக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.. நான் அவங்ககிட்ட பேசிட்டேன்.. நீங்க வேற எங்கையோ போக வேண்டாம்.. அங்க போங்க..” என சொல்ல.. விஸ்வநாதனும் சுசீலாவும் நன்றியுடன் தலையசைத்தனர்.

“கொஞ்சம் வெயிட் பண்ணு அபி.. நான் இப்ப வந்துடுறேன்..” என்ற இளங்கோ அவர்களுக்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டு வந்தான்.

“உனக்கு கெடுதல் பண்ணவங்களுக்கு கூட நல்லது பண்றீயே.. உன்னால எப்டி முடியுது..” என இளங்கோவை பார்த்தபடியே அபி நினைத்தாள்.

அப்போது “அர்ச்சனா..” என்ற குரல் கேட்டு திரும்பினாள் அபி. அர்ச்சனாவின் தோழி ரஞ்சனி நின்றிருந்தாள்.

அம்மா அத்தை மாமா திலீப் அத்தான் குறித்து ரஞ்சனிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.. என அர்ச்சனாவின் மனம் சொல்ல.. அவள் முகம் மலர்ந்தது.

ஆனால் இளங்கோ நெருங்கி வந்து கொண்டிருப்பதை பார்த்ததும்.. “நா.. நான் அர்ச்சனா இல்லை.. என் பேர் அபி..” என்றாள்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top