WatTruyen.Top

காற்றினில் உன் வாசம்..

🌸 08 🌸

jamunaguru

“நீ இங்க இருக்க வேண்டாம் அபி..” என இளங்கோ சொல்ல.. தன் முடிவும் அதுதான் என்ற போதிலும் மனதில் வலியுடன் அவனை பார்த்தாள் அபி.

“கண்டிப்பா அந்த இடத்தில உனக்கு எந்த பிரச்சனையும் வராது.. நீ பாதுகாப்பா இருக்கலாம்.. உன்னோட டேப்லெட்ஸ் எல்லாம் எடுத்துக்கோ.. டிரெஸ் மத்த எல்லாம் நாம போகும் போது வாங்கிக்கலாம்..” என்றான் இளங்கோ.

மறுத்து பேசும் இடத்தில் தான் இல்லை என்பதை உணர்ந்து அபி அமைதியாக இருந்தாள்.

அப்போது போன் வர.. “ஆங்.. அந்த அபார்ட்மெண்ட் தான் வாங்க.. ப்ளாட் நம்பர்..” என பேசியபடியே நகர்ந்தான் இளங்கோ.

இளங்கோ சொன்ன அதே முடிவை தானே நானும் எடுத்தேன்.. ஆனால் அதை இளங்கோவே சொன்னது ஏன் மனம் வலிக்கிறது என யோசித்தாள் அபி. அவளால் அப்போது அறிந்து கொள்ள முடியவில்லை.

“சார்.. எதையெல்லாம் பேக் பண்ணனும்..” என இளங்கோவிடம் கேட்டபடி ஒருவர் வந்தார். அவருடன் மேலும் சிலரும் வந்தனர்.

“நான் சொல்றேன் வாங்க..” என அவர்களை அழைத்துச் சென்றான் இளங்கோ.

வந்தவர்கள் பீரோ கட்டில் என ஒரு சில பொருட்களை எடுத்துச் சென்றனர்.

“அவ்ளோ தானா சார்..” என வந்திருந்தவர் கேட்க.. சுற்றிலும் பார்த்த இளங்கோ.. “அபி.. ஒரு நிமிஷம் எழுந்துக்கோ..” என அபியிடம் சொல்லிவிட்டு.. “இந்த சோபாவையும் எடுத்துட்டு போயிடுங்க..” என்றான்.

“நான் சொன்ன அட்ரஸ்ல இதெல்லாம் கொடுத்துடுங்க..” என இளங்கோ சொன்னதும் சரியென தலையசைத்துவிட்டு கிளம்பினார்.

முதலில் வீட்டை காலி பண்ணுகிறானோ.. என எண்ணிய அபி.. ஒரு சில பொருட்களை மட்டுமே எடுத்து செல்வதை கவனித்த பின்.. என்ன நடக்கிறது என குழம்பிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் கிளம்பியதும் தன் வீடு சுத்தமானது போல உணர்ந்தான் இளங்கோ. இப்போது இருக்கும் எல்லா பொருளும் தன் சுயசம்பாத்தியம்.. என்ற எண்ணத்துடன் நிம்மதியும் பெருமிதமாக வீட்டை பார்த்தான் இளங்கோ.

திருமணம் நடந்த போது.. எல்லாம் இருந்தாலும் எங்க பொண்ணுக்கு நாங்க பண்றதை பண்ணுவோம்னு விஸ்வநாதனும் சுசீலாவும் வாங்கிக் கொடுத்த பொருட்களை தான் அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தான் இளங்கோ.

“வீட்டை காலி பண்றீங்களா.. என்னால தான.. நா.. நான்..” என அபி தடுமாற.. மெலிதாக புன்னகைத்தான் இளங்கோ.

“உன்னால எதுவும் இல்லை.. நீ தேவை இல்லாம யோசிக்காத.. நான் டாக்சிக்கு சொல்லிடுறேன்.. வந்ததும் கிளம்பலாம்..” என்ற இளங்கோ போனில் பேச தொடங்கினான்.

இளங்கோ போன் பேசி முடித்ததும் அபி அவனிடம்.. “அ.. அது.. உங்க wifeக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை..” என தயங்கி தயங்கி கேட்டாள்.

வெற்று புன்னகை சிந்திய இளங்கோ.. பூச்சாடியின் அடியில் மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதத்தை எடுத்து அபியிடம் நீட்டினான்.

புரியாமலே அதை கையில் வாங்கிய அபி அதை வாசிக்க தொடங்கினாள்.

“அத்தான்.. நான் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே சஞ்சய்யை விரும்புனேன்.. அவன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இன்னைக்கு அவன் என்னை பார்க்க வந்தான்.. அவனுக்கு நல்ல வேலை கிடைச்சிடுச்சு.. அவன் என்னை சந்தோஷமா பார்த்துப்பான்.. நான் அவன்கூடவே வாழப்போறேன் அத்தான்.. என்னை மன்னிச்சிடுங்க..”

ரம்யா எழுதியிருந்த கடிதம். அதை வாசித்த அபி.. அதிர்ச்சியுடன் விழிகளை விரித்தாள்.

“நா.. நான் அவங்க அப்பா அம்மா பேசினதை கேட்டப்ப.. என்னை பார்த்துட்டு.. தப்பா ஏதோ புரிஞ்சுட்டு பேசுறாங்கனு நினைச்சேன்..

ஆனா தப்பெல்லாம் அவங்க பொண்ணு மேல தானே இருக்கு..” என்ற அபியால் இளங்கோவின் வலியை புரிந்து கொள்ள முடிந்தது.

“எதுவும் தெரியாம மத்தவங்க பேசும் போது வலிச்சத விட.. எல்லாம் தெரிஞ்சவங்க புதுப்புது பழி சொல்லும் போது.. முடியலை..” என வலியுடன் சொன்ன இளங்கோவின் குரல் அபியை மேலும் வருத்தியது.

தலையை லேசாக தாழ்த்தியபடி தன் கவலையில் மூழ்கியிருந்தவனை வெறித்தபடியே நின்றிருந்த அபிக்கு.. இளங்கோவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும்.. அவன் கவலைக்கு தான் மருந்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

மெல்ல மெல்ல இளங்கோவை நெருங்கினாள் அபி. இளங்கோவும் அவள் நெருங்கிக் கொண்டிருப்பதை கவனிக்கவில்லை.

அந்த நேரத்தில் இளங்கோவின் அலைபேசி அலற.. உடல் அதிர அப்படியே நின்றாள் அபி. போனை எடுத்து பேசிய இளங்கோ.. “டாக்சி வந்துடுச்சு அபி.. கிளம்பலாம்..” என்றான்.

தனக்கு தோன்றிய எண்ணங்களுக்கு காரணம் புரியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்த அபி.. எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

சில நிமிடங்களுக்கு பிறகே தாங்கள் எங்கோ செல்கிறோம்.. எங்கே.. என விழித்த அபி.. இளங்கோவிடம்.. “எ.. எங்க போறோம் இப்ப..” என கேட்டாள்.

“அம்மாவை பார்க்க..” என்ற இளங்கோவின் கண்கள் சந்தோஷத்தில் ஒளிர்வதை ரசித்தாள் அபி.

“அம்மா கூடவே நீ தங்கிக்கோ அபி.. அம்மா உன்னை நல்லா பார்த்துப்பாங்க..” என இளங்கோ சொல்ல.. அவன் வார்த்தைகளில் நம்பிக்கை இருந்தாலும் அவனை பிரிவதை எண்ணி அபியின் மனம் வாடியது.

ஏன் தான் எதையோ தொலைத்தது போல உணர்கிறோம் என புரியாமல் தவித்துக் கொண்டிருந்த அபி.. இளங்கோ தன் அம்மாவை பற்றி பேசிய எதையும் காதிலே வாங்கவில்லை.

“அபி.. என்னாச்சு..” என இளங்கோ கேட்ட பின்னரே.. நிகழ்வுக்கு வந்தாள் அபி.

“ஒ.. ஒன்னுமில்லை..” என சமாளிப்பாக சொன்ன அபி.. “அ.. அம்மா பேர் என்ன..” என கேட்டாள்.

“மைதிலி..” என மெல்லிய புன்னகையோடு சொன்னான் இளங்கோ.

“மை.. மைதிலி அத்தை..” என முணுமுணுத்த அபி.. “எ.. எனக்கு இ.. இந்த பேரில யாரையோ தெரியும்..” என உற்சாகமாக சொன்னாள்.

“மைதிலி அத்தை.. கண்ணன் மாமா.. அம்மா.. அம்மா.. அ.. அப்புறம்..” என தீவிரமாக யோசித்தாள் அபி.

“அபி.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..” என்றான் இளங்கோ.

“எனக்கு.. இவ்ளோதான் நியாபகம் வருது..” என சொன்னாள் அபி.

“ம்.. கொஞ்ச கொஞ்சமா தான் நினைவு வரும்னு டாக்டர் சொன்னாங்க.. அதுக்காக நீ ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத.. அது நல்லதில்லை..” என இளங்கோ சொல்ல.. சரியென தலையசைத்தாள் அபி.

அதே நேரம்.. அபிக்கு ஆக்சிடெண்ட் நடந்த அந்த இடத்தில் இருந்து சில தெரு தள்ளி இருந்த அந்த வீட்டின் முன் நின்றிருந்தனர்.. கண்ணன்.. அவர் மனைவி மைதிலி.. அபியாக மாறிப்போன அர்ச்சனாவின் தாய் வேணி.

அந்த வீட்டின் கதவை திறந்தான் திலீப்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top