WatTruyen.Top

காற்றினில் உன் வாசம்..

🌸 09 🌸

jamunaguru

கண்ணன்.. மைதிலி.. வேணி மூவரும் அழைப்பு மணியை அழைத்துவிட்டு காத்திருக்க.. திலீப் கதவை திறந்தான்.

எதுவும் பேசாமல் கண்ணீருடன் வேகமாக வீடு முழுக்க தன் மகள் அர்ச்சனாவை தேடினார் வேணி.

அவருடன் அர்ச்சனாவை தேடிய மைதிலி வந்து கண்ணனிடம்.. “அச்சுவை காணும்..” என கண்ணீருடன் சொன்னார்.

“என்னடா பண்ண.. அச்சுவை என்ன பண்ண.. சொல்லுடா.. சொல்லு..” என தன் மகன் திலீப்பை அடித்தார் கண்ணன்.

“நா.. நான் எதுவும் பண்ணலை ப்பா.. அச்சு என்னை விட்டு போய்ட்டா ப்பா.. அவ என்னை விட்டு போய்ட்டா ப்பா..” என மண்டியிட்டு அழுதான் திலீப்.

அர்ச்சனா எங்கே போயிருப்பாள்.. அவளை எப்படி தேடுவது.. என கலங்கி நின்றனர் அனைவரும்.

விஸ்வநாதன் சுசீலா இருவரும் தங்கள் திட்டப்படியே.. இளங்கோ மீது பழி சொல்லிவிட்டு.. காதலனுடன் ஓடிப்போன தங்கள் மகள் ரம்யாவை.. வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

தோழி வீட்டில் தங்கி இருந்தவளை காப்பாற்றி தாங்களே அழைத்து வந்தது போல நாடகமாடினர் உறவினர்கள் முன்னிலையில்.

அவர்கள் சொல்வதையும் நம்பிக்கொண்டு தலையாட்ட.. உறவினர்கள் இருந்தனர் அவர்களுக்கு.

ரம்யாவின் அத்தை மங்களம் புரளி பேச துருவி துருவி விசாரித்த போதிலும் விஸ்வநாதனும் சுசீலாவும் தங்கள் பொய் மூட்டைகளை கொட்டி சமாளித்தனர்.

சீக்கிரமே ரம்யாவின் விருப்பப்படி சஞ்சய்யுடன் திருமணம் செய்யவும் முடிவு செய்தனர்.

விஸ்வநாதன் சுசீலா இல்லாத பழியை சுமத்தியதற்காக மட்டுமின்றி.. வேறு யாரும் அபியை தவறாக பேசிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவளை தன் தாயிடம் அழைத்து வந்தான் இளங்கோ.

மைதிலியை கண்ட பின்னர்.. அபியின் மனதில் இருந்த காரணம் புரியாத அந்த சிறு கலக்கமும் நீங்கியது.

அந்த சிறு கிராமத்தில் இருந்த ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தார் மைதிலி. நெடுங்காலமாக அந்த பள்ளியில் ஆசிரியப் பணி புரிந்ததால் மைதிலி மீது அந்த கிராமத்து மக்கள் நன்மதிப்பு கொண்டிருந்தனர்.

ஏற்கனவே அபியை பற்றி இளங்கோ மைதிலியிடம் சொல்லி இருந்ததால் அவர் அவளிடம் எதுவும் கேட்டு சங்கடத்துக்கு ஆளாக்கவில்லை.

அபியின் அத்தை என்ற அழைப்பையும் இயல்பாக ஏற்றுக் கொண்டார் மைதிலி.

அபியும் தான் வேறு எங்கோ இருக்கிறோம் என்ற உணர்வின்றி இயல்பாக ஒன்றிப்போனாள். இளங்கோ அங்கேயே தங்கியிருந்ததும் ஒரு காரணம்.

சில தினங்கள் கடந்திருந்த நிலையில்.. அன்று தன் தாயின் மடியில் தலைவைத்து படுத்திருந்தான் இளங்கோ. மைதிலியும் தன் மகனின் தலையை வருடிக் கொண்டிருந்தார்.

“எல்லாத்தையும் மறந்துடு கண்ணா..” என்றார் மைதிலி.

“எப்டி ம்மா முடியும்.. நான் எந்த தப்புமே பண்ணலையே ம்மா.. ஆனா எனக்கு ஏன் இந்த தண்டனை..” என கண்களை மூடி படுத்திருந்த இளங்கோ கேட்டான்.

“தண்டனை இல்லை கண்ணா.. நம்மை சுத்தி இருந்த கெட்டது விலகி போயிடுச்சு.. அவ்ளோதான்..” என்றார் மைதிலி.

“முகத்துக்கு முன்னால ஒன்னும் பின்னால ஒன்னும் பேசுறாங்க ம்மா.. அதைக்கூட தாங்கிப்பேன் ம்மா.. ஆனா எல்லாம் தெரிஞ்சவங்களே வேற மாதிரி பேசினத தான் ம்மா தாங்க முடியலை..” என்றான் இளங்கோ வலியுடன்.

மறைந்த தன் கணவரின் புகைப்படத்தை பார்த்தபடியே.. “அப்பா எப்பவும் சொல்றது தான் கண்ணா.. நாம எப்டி இருந்தாலும் இந்த உலகம் நம்மள பத்தி எதையாவது பேசிட்டு தான் இருக்கும்..

நாம நம்ம மனசாட்சிக்கு உண்மையா இருந்தா போதும்.. இன்னைக்கு நம்மள பத்தி பேசுறவங்க நாளைக்கே வேற ஒருத்தங்கள பத்தி பேசுவாங்க..

அதனால மத்தவங்க பேசுறத காதில வாங்கிக்கணும்னு அவசியமில்லை கண்ணா..” என்றார் மைதிலி.

முழுதாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு கடந்து செல்லும் பலம் தனக்கு இருக்கிறதா என இளங்கோவுக்கு புரியவில்லை. ஆனால் தாய் மடியும்.. அவர் வார்த்தைகளும் பெரும் ஆறுதலாக இருந்தது அவனுக்கு.

தாய் மகனின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த அபிக்கு இளங்கோவின்

வலி தன்னுடையதாக தோன்றியது.

அவன் அருமை புரியாத ஜென்மங்களை தன் மனதுக்குள் திட்டி தீர்த்தாள் அபி.

“என்ன பொண்ணு அவ.. இளங்கோவை விட வேறொருத்தன் நல்லா பாத்துக்க முடியுமா.. அவ அப்பா அம்மா ச்சே.. என்னென்ன லாம் பேசுறாங்க..

இளங்கோவுடன் வாழ அவங்க பொண்ணுக்கு தான் தகுதியில்லை.. மைதிலி அத்தை மாதிரி பாசமா ஒரு மாமியாரும்.. இளங்கோ மாதிரி அன்பான புருஷனும் கிடைச்சா போதாதா..

அதுக்கு மேல வேற என்ன வேணும் ஒரு பொண்ணுக்கு.. நானா இருந்தா காலம் முழுக்க..” என தனக்குள்ளே பேசிக் கொண்டே போனவள்.. சட்டென திகைத்தாள்.

ஏன் தனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது என அவளுக்கே புரியவில்லை.

இளங்கோ அங்கிருந்து கிளம்பிய சில தினங்களிலே அபியின் குழப்பம் மேலும் அதிகமானது. அபி வீட்டில் தனியாக இருக்க வேண்டாம் என அவளையும் தன்னுடன் பள்ளிக்கு அழைத்துச் சென்றார் மைதிலி.

குழந்தைகள்.. படிப்பு.. கூச்சல்.. விளையாட்டு சத்தம்.. என அந்த இனிமையான சூழலை விட இளங்கோ அருகில் இல்லை என்பதில் தான் அபியின் மனம் உழன்றது.

பள்ளியின் மரத்தடியில் அமர்ந்து எதையோ வெறித்துக் கொண்டிருந்த அபியின் அருகில் வந்தார் மைதிலி.

“அபி.. என்னடா.. என்னாச்சு.. ஏன் டல்லாவே இருக்க..” என பரிவுடன் கேட்டார் மைதிலி.

“ஒ.. ஒன்னுமில்லை அத்தை..” என்றாள் அபி.

குழந்தைகளின் விளையாட்டு.. குதூகலம்.. அபிக்கு மாற்றம் தரும் என எண்ணிய மைதிலி.. அவளை எப்படி இயல்பாக்குவது என புரியவில்லை.

“நீ வீட்டுக்கு போறீயா ம்மா..” என கேட்டார் மைதிலி.

“ம்.. சரி அத்தை..” என்றவள் மைதிலியிடம் வீட்டு சாவியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

அபியின் மனமெல்லாம் இளங்கோவையே சுற்றிக் கொண்டிருக்க.. வீடு வந்து சேர்ந்தவள் வீடு திறந்து கிடக்க.. என்ன செய்வது என புரியாமல் விழித்தாள்.

“என்ன இது.. வீடு திறந்து கிடக்கு.. அ.. அத்தை ஸ்கூல்ல தானே இருக்காங்க.. சாவியும் என்கிட்ட இருக்கு.. அப்புறம் எப்டி..” என பதறியவள்.. கதவில் இருந்த இன்னொரு சாவியை கவனிக்க தவறிவிட்டாள்.

“ஒ.. ஒருவேளை.. தி.. திருடன்.. அய்யோ.. இப்ப என்ன பண்றது..” என பதறியவள் சுற்றி பார்த்தாள். உதவிக்கு அழைக்க யாருமில்லை என்பதை உணர்ந்தாள் அபி.

தானே திருடனை பிடிக்கும் எண்ணத்துடன் வீட்டின் அருகில் கிடந்த விறகு கட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு அடிமேல் அடி எடுத்து வைத்து.. வீட்டுக்குள் நுழைந்தாள் அபி.

அங்கே..

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top