🌸 06 🌸
தன் உடலின் காயங்கள்.. தன்னை காப்பாற்றிய இளங்கோ மீது நம்பிக்கை கொள்வதா வேண்டாமா என்ற குழப்பத்தை அபிக்குள் ஏற்படுத்தியது.
ஆனால் அபியின் உள்ளுணர்வு இளங்கோ மீது நம்பிக்கை இழக்கவில்லை.
“ரம்யா.. என் wife..” என சொன்ன இளங்கோ.. “எக்ஸ் wife..” என அழுத்தமாக மாற்றி சொன்ன போது அவன் கண்களில் தெரிந்த வலியை அபியால் புரிந்து கொள்ள முடிந்தது.
இளங்கோவிடம் மேலும் அதுகுறித்து பேசி அறிந்து கொள்ளலாமா என எண்ணிய அபி.. அது இளங்கோவின் மனதை மேலும் வருத்துவதாக அமைந்து விடக்கூடாது என்று அமைதியாக இருந்தாள்.
தனக்கு தீங்கிழைத்தது இளங்கோ அல்ல என உறுதியான எண்ணம் அபியின் மனதில் தோன்றியது. ஆனால் இளங்கோ முகத்தில் இருந்த யோசனை.. அவன் எதையோ சொல்ல தயங்குவதை அபிக்கு உணர்த்தியது.
தனக்கு நேர்ந்த விபத்து குறித்து சொல்ல இளங்கோ நினைக்கிறான் போல.. தனக்கு நினைவு இல்லாததால் எதை எதை சொல்வது.. எதை எதை தவிர்ப்பது என யோசிக்கிறான் போல என நினைத்தாள் அபி.
தான் செய்தது சரியா தவறா என புரியவில்லை என்றாலும்.. இப்போது அதை சரி செய்வது எப்படி என்ற எண்ணத்தில் இருந்த இளங்கோ.. அதில் முதல் அடியாக.. தனக்கும் அபிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அவளிடம் சொல்லிவிட நினைத்தான்.
இளங்கோ.. “நா.. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் அபி..” என தொடங்க.. தன் குடும்பம் குறித்தோ.. அந்த விபத்து குறித்தோ.. ஏதோ சொல்லப் போகிறான் என ஆவலாக அவன் முகம் நோக்கினாள் அபி.
“நான் உன்னோட பேமிலி ப்ரெண்ட் இல்லை அபி..” என இளங்கோ சொல்ல அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள் அபி.
“நா.. நான்.. அதுவந்து அபி.. உன் பேர் என்ன.. நீ யாரு.. என்ன.. எதுவுமே எனக்கு தெரியாது..” என சொன்னான் இளங்கோ.
அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அபி இளங்கோவை பார்க்க.. ஆம் என தலையசைத்த இளங்கோ.. “எனக்கு உன்னை பத்தி எதுவுமே தெரியாது.. நான் ரோட்டுல நடந்து போய்ட்டு இருக்கும் போது நீ என்மேல மோதின..
ஏதோ பயம் தெரிஞ்சுது உன் முகத்துல.. உடம்பு லாம் நடுங்குச்சு.. ஆனா நான் என்ன ஏதுனு உன்கிட்ட கேட்கிறதுக்கு முன்னாடி.. நீ.. நீ அங்கிருந்து ஓடின.. அ.. அப்ப தான் ஆக்சிடெண்ட் ஆச்சு..
உன்ன ஹாஸ்பிட்டல்ல கொண்டு சேர்த்தேன்.. நீ ஏதோ ஆபத்துல இருந்து தப்பிச்சு வந்திருக்க.. திரும்பவும் அதில மாட்டிக்க கூடாதுனுன்ற எண்ணத்துல தான் நீ எனக்கு ரிலேட்டிவ் வீட்டுக்கு நானே இன்பார்ம் பண்ணிக்கிறேன்னு லாம் பொய் சொன்னேன்..
நீ கண் முழிச்சதும் உன்னை பத்தி.. உன் பிரச்சனை பத்தி சொல்லுவ.. அதை சால்வ் பண்றதுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன்.. ஆனா..” என நிறுத்தினான்.
இளங்கோவுடன் அபியை பார்த்த விஸ்வநாதன்.. ரம்யாவை தங்களுடன் சேர்த்துக் கொள்வது எப்படி என்ற யோசனையுடன் வீட்டுக்கு சென்றார்.
சுசீலாவிடம் தன் யோசனையை சொல்ல.. அவருக்கும் மகிழ்ச்சி.
“ஆனா.. அவர் ரொம்ப நல்ல மனிசன்.. அந்தப் பொண்ணு யாரு என்னனு தெரியாம.. நாம பாட்டுக்கு போய் தப்பா பேசி சண்டை போட்டா சரியா வருமா..” என தயக்கத்துடன் கேட்டார் சுசீலா.
“அவ யாரா இருந்தா நமக்கு என்ன சுசீலா.. நம்ம பொண்ணு நம்மளோட இருந்தா போதும் நமக்கு..” என்றார் விஸ்வநாதன்.
“அதுவும் சரிதாங்க..” என்ற சுசீலா.. “நம்ம ரம்யா.. ஏதோ லெட்டர் எழுதி வச்சிட்டு போனாளே ங்க..” என சொன்னார்.
“அதுவும் அவன் செட்டப்புனு சொல்லிடுவோம்.. நம்ம பொண்ணு மேல எந்த தப்பும் இல்லை.. அவன் தான் கண்ட கண்ட பொண்ணுங்களோட தொடர்பு வச்சிருந்தான்.. அதை நம்ம பொண்ணு தட்டிக் கேட்டதால.. அவளை அடிச்சு துரத்திட்டு.. அவ வேறொருத்தன் கூட ஓடி போய்ட்டான்னு கதை கட்டி விட்டுட்டான்னு சொல்லுவோம்.. எல்லாம் சரியா வரும்..” என்றார் விஸ்வநாதன் விளக்கமாக.
“ம்.. சரிங்க.. அப்டியே செய்யலாம்.. அந்த மங்களம் காதுக்கு இந்த விஷயம் போற மாதிரி பார்த்துக்கணும். “ என்றார் சுசீலா.
“ம்.. அப்புறம் ரம்யாவை கூட்டிட்டு வந்து.. நாமளே அந்த பையனுக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்.. யாரும் நம்ம பொண்ணை குறை சொல்ல மாட்டாங்க..” என்றார் விஸ்வநாதன்.
இளங்கோ சொன்னதை எல்லாம் கேட்ட பிறகு அவன் தனக்கு எந்த கெடுதலும் நினைக்கவில்லை.. என்பதை தெளிவாக அபி புரிந்து கொண்டாள்.
“நா.. நான் பண்ணது சரியா தப்பானு லாம் புரியலை அபி.. ஆனா இனிமே இதை எப்டி சரி பண்றதுனு தான் யோசிக்கணும்..
நேத்து ஆக்சிடெண்ட் பத்தி விசாரிக்க வந்த கான்ஸ்டபிள் கிட்டயும்.. ஹாஸ்பிட்டல்ல சொன்ன அதே பொய்யை தான் சொல்லி வச்சிருக்கேன்.. இருந்தாலும் பரவாயில்லை..
நாம போலிஸ் ஸ்டேஷன் போகலாம்.. நான் நடந்த எல்லாத்தையும் சொல்றேன்.. உனக்கு வேண்டியவங்க கண்டிப்பா உன்னை தேடுவாங்கல்ல.. அப்டி வந்தா நமக்கு இன்பார்ம் பண்ண சொல்வோம்.. நீ.. நீ.. அதுவரைக்கும் பாதுகாப்பா என்கூடவே இருக்கலாம்..” என சொன்ன இளங்கோ அபியை பார்த்தான்.
அபி மௌனமாக இருக்க.. அதற்கு தானே ஒரு அர்த்தம் கற்பித்துக் கொண்ட இளங்கோ.. “எ.. என்கூட தனியா இருக்க யோசிக்கிறீயா அபி.. நான் உன்னை நல்லா ஹாஸ்டல்ல சேர்த்து விடவா..” என கேட்டான்.
வேண்டாம் என தலையசைத்தாள் அபி.. அவள் தன்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தோ என்னவோ.. இளங்கோவின் மனதில் பெரும் நிம்மதி தோன்றியது.
“நாம நாளைக்கு போலீஸ் ஸ்டேஷன் போலாம் அபி..” என இளங்கோ சொல்ல.. அதற்கும் வேண்டாம் என தலையசைத்தாள் அபி.
ஏன் என புரியாமல் விழித்த இளங்கோ.. “ஏன் அபி..” என கேட்டான்.
“அ.. அது..” என தயங்கிய அபி.. தான் அணிந்திருந்த டாப்பின் கைப்பகுதியை விலக்கி.. காட்டினாள்.
சில நொடிகள் தயங்கிய இளங்கோ.. அவள் உடை விலகிய இடத்தை பார்க்க.. சிகரெட் சூட்டு புண்கள்.. “இ.. இது சிகரெட்ல சூடு வைச்ச மாதிரி தெரியுது..” என இளங்கோ சொல்ல.. ஆம் என தலையசைத்தாள் அபி.
“நீங்க சொன்னது சரிதான்.. நா.. நான் யார்கிட்டயோ இருந்து தப்பிச்சு தான் வந்திருக்கேன்..” என்றாள் அபி.
சரி இப்போது என்ன செய்வது என்ற கேள்வியுடன் இளங்கோ அபியை பார்த்தான்.
“நா.. நான் எங்கையும் போகலை.. இங்கையே இருந்திடவா..” என கேட்டாள் அபி.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top