💞 24 💞
உதயா வாசுதேவனிடம் பேசுவதாக கூறியும்.. மானசி பிடிவாதமாக மறுத்தாள். ஏன் என காரணம் அறியாமல் எல்லோரும் விழித்தனர்.
“ஏன்டா இப்டி சொல்ற.. எதுக்கு பேச வேண்டாம்..” என சாரதாவும் ரவிச்சந்திரனும் கேட்டனர்.
அந்த நேரத்தில் யசோதா.. உதயாவுக்கு போன் பண்ணினார். தீபக் சொன்ன விஷயமே மனதை உறுத்திக் கொண்டிருக்க.. வாசுதேவனும் பெரிய அதிர்ச்சியை தர.. என்ன நடந்திருக்கும் என புரியாமல் உதயாவிடமே கேட்டு தெளிவு பெற எண்ணி போன் பண்ணினார் யசோதா.
“யசோதா அத்தை தான்..” என்ற உதயா போனை அட்டெண் பண்ணி லவுட் ஸ்பீக்கர் ஆன் செய்தான்.
“உதயா.. என்ன நடந்துச்சு.. திடீர்னு மாமா வந்து அந்த குடும்பத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லைனு ஏதேதோ சொல்றாங்க..” என பதற்றமாக கேட்டார் யசோதா.
உதயாவும் வாசுதேவன் வந்து பேசிச் சென்ற விஷயங்களை சொன்னான்.
“என்ன சொல்றதுனே தெரியலை உதயா.. நேத்து பேசிட்டு வந்ததுல இருந்து அவர் முகமே சரியில்லை.. இப்டி பண்ணுவாருனு நினைக்கவேயில்லை நான்..” என வருத்தத்துடன் பேசினார் யசோதா.
சில நொடிகள் மௌனத்தின் பின்னர்.. “தீபு வேற மானசி கிட்ட.. மானசி எதுவும் சொன்னாளா ப்பா..” என உதயாவிடம் கேட்டார் யசோதா.
“ம்.. சொன்னா அத்தை.. நாங்க எல்லாரும் மறைச்சிட்டோம்னு கோபம் அவளுக்கு அவ்ளோதான்..” என்றான் உதயா.
“மானசிக்கு தீபக்கை பிடிச்சிருக்கா.. அவ என்ன சொன்னா.. அவளுக்கு விருப்பம் இருந்தா.. நீ ஒரு தடவை மாமா கிட்ட பேசிப்பாரு..” என யசோதாவும் மானசிக்கு தன் மகனை பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில் பேசினார்.
“நான் பேசுறேன்னு தான் சொல்றேன்.. ஆனா அவதான் வேண்டாம்னு சொல்றா.. நீங்களே அவகிட்ட ஏன்னு கேளுங்க..” என்ற உதயா போனை மானசியிடம் நீட்டினான்.
“அத்தை..” என தயக்கத்துடன் சொன்னாள் மானசி.
“மானசி ஏன்மா பேச வேண்டாம்னு சொல்ற.. உனக்கு தீபக்கை பிடிச்சிருக்கு தான..” என கேட்டார் யசோதா.
“அத்தை அண்ணி இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து எங்க குடும்பத்தில அவங்களும் ஒருத்தங்க.. எங்க அண்ணன் மனசில அவங்க இருக்காங்கனு தெரிஞ்ச பிறகு அவங்கள தவிர வேற யாரையும் அண்ணியா ஏத்துக்க என்னால முடியாது.
மாமாவோட பிடிவாதம் பத்தி உங்களுக்கு நான் சொல்லி தான் தெரியணுமா அத்தை.. மாமா ஏற்கனவே அப்பா அம்மா கூட பேசமாட்டாங்க.. அண்ணியை ஏத்துக்க மாட்டாங்கனா என்னையும் ஏத்துக்க வேண்டாம்.
யாரும் மாமா கிட்ட பேச வேண்டாம்.. இந்த கல்யாணம் நடந்தாலும் நடக்கலைனாலும் எனக்கு எதுவுமில்லை..” என தெளிவாக தன் மனதை எடுத்துரைத்தாள் மானசி.
அவள் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்த தீபக்கின் மனம் தான் உடைந்து போனது.
எல்லோருக்கும் மானசியின் பக்குவமான பேச்சு பெருமிதம் தந்தாலும்.. அவள் ஆசைப்பட்டதை நிறைவேற்ற முடியாத ஏக்கமும் உள்ளுக்குள் இருந்தது.
யசோதாவிடம் பேசி முடித்துவிட்டு மானசி போனை கட் பண்ண.. எல்லோரும் அவளை வருத்தத்துடன் பார்த்தனர்.
“எதுக்கு எல்லாரும் இப்டி இருக்கீங்க..” என மானசி கேட்டாள்.
“மாமா கிட்ட..” என உதயா தொடங்க.. “அண்ணா போதும்.. பிடிச்சிருக்கு வேணும்னு நானே ஸ்ட்ராங்கா முடிவு பண்ணலை.. அப்புறம் ஏன் எல்லாரும் இவ்ளோ பீல் பண்றீங்க..
இப்பத்தான் எக்ஸாம் முடிஞ்சுது.. இன்னும் கொஞ்ச நாளாவது இந்த கல்யாண பேச்செல்லாம் விடுங்க..” என மானசி சொன்னாள்.
அவள் முடிவை.. அவள் மனதை எல்லோரும் புரிந்து கொண்டனர்.. ஏற்றுக் கொண்டனர்.
தன்னால் தான் பிரச்சனையோ.. தான் தான் தடையோ என எண்ணி தவித்துக் கொண்டிருந்த அஞ்சலி.. உறக்கத்தில் இருந்த விபுவின் முகத்தை பார்த்தபடியே பேசத் தொடங்கினாள்.
“விபு.. அம்மாவுக்கு கஷ்டமா இருக்கு.. உதி இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது தான்.. ஆ.. ஆனா அதுக்காக மானசி கஷ்டப்படணுமா.. அவளுக்கும் தீபக்கை பிடிச்சிருக்கு.. ஆனா எனக்காக.. நமக்காக வேண்டாம்னு சொல்றா.. கஷ்டமா இருக்கு விபு.. அம்மா ஏன் எல்லாருக்கும் பாரமாவே இருக்கேன்.. எல்லோருக்கும் கஷ்டத்தையே கொடுக்கிறேன்..” என கண்ணீர் வழிய பேசிக் கொண்டிருந்தாள்.
“அண்ணி..” என்ற மானசி அஞ்சலியின் கண்ணீரை துடைத்தாள்.
குழந்தை போல அவள் மடியிலே படுத்து அழுதாள் அஞ்சலி.
“அண்ணி.. நீங்க இப்டி எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்னு நினைக்கிறது தான் எனக்கு கஷ்டமா இருக்கு.. அழாதீங்க அண்ணி ப்ளீஸ்..” என்றாள் மானசி.
“உனக்கும் தீபக்கை பிடிச்சிருக்கு தானே.. என்னால.. என்னால..” என அஞ்சலி தடுமாற.. “அண்ணி உங்களால இல்லை.. மாமா தான் காரணம்.. மாமா தான் ஏத்துக்கணும்.. மாமா அண்ணன் மேல வச்சிருக்க பாசம் மட்டும் தான் காரணம் நீங்க இல்லை.. நீங்க எதுக்கும் காரணம் இல்லை..” என்றாள் மானசி.
“நல்லா சொல்லு அப்பவாச்சு அவளுக்கு புரியட்டும்..” என்றவாறு உதயா அறைக்குள் வந்தான்.
எல்லாம் புரிந்தாலும் மனதார ஏற்றுக் கொள்ள முடியவில்லையே.. என இருவரையும் கண்ணீருடன் பார்த்தாள் அஞ்சலி.
அவள் கண்ணீரை துடைத்த மானசி.. “அண்ணி எதை நினைச்சும் மனசை வருத்திக்காதீங்க.. நீங்க சந்தோஷமா இருந்தா தான் நாங்க எல்லாரும் சந்தோஷமா இருப்போம்.. இனி நீங்க அழக்கூடாது.. அப்டி அழுதீங்கனா நானும் விபுவும் உங்ககூட பேச மாட்டோம்..” என செல்லமாக மிரட்ட.. லேசாக புன்னகைத்தாள் அஞ்சலி.
“ம்.. அது.. சிரிச்சிட்டே இருக்கணும் சரியா..” என சொன்ன மானசியும் புன்னகையோடு அறையில் இருந்து வெளியேற.. அஞ்சலியின் அருகில் அமர்ந்தான் உதயா.
“அஞ்சு.. விபுவுக்காக இல்லாம நம்ம இரண்டு பேருக்கும் நடுவில பாசம் இருந்தா தான் நாம சேர்ந்து வாழ்றதுல அர்த்தம் இருக்குனு சொன்ன.. ஆனா.. இப்ப எந்த அர்த்தமும் இல்லலனு தோணுது..” என உதயா சொல்ல அதிர்ந்தாள் அஞ்சலி.
“ஏன் உதி இப்டிலாம் பேசுற..” என கேட்டாள் அஞ்சலி.
“ஆமா அஞ்சு.. சின்னதா பிரச்சனை வந்தாக்கூட வேண்டாம்னு பேசுற.. அப்ப..”
“அப்டிலாம் இல்லை உதி.. எனக்கு.. எ.. என்னால நீ இல்லாம இருக்க முடியாது உதி.. விபுவுக்காக மட்டுமில்லை உதி.. வாழ்க்கை முழுக்க இதே பாசத்தோட எனக்கு நீ வேணும் உதி..” என்ற அஞ்சலி உதயாவை அணைத்துக் கொண்டாள்.
“நீயும் என்னை புரிஞ்சுக்கலைல உதி..” என அஞ்சலி கேட்க.. புன்னகையோடு அவளை அணைத்துக் கொண்ட உதயா.. “எனக்கு எல்லாம் புரியுது.. நீயும் புரிஞ்சுக்கோ..” என்றான்.
புரியாமல் அஞ்சலி உதயாவின் முகம் பார்க்க.. “இவ்ளோ பாசத்தை வச்சிட்டு ஏன் எப்பவும் வேண்டாம் வேண்டாம்னு பேசிட்டு இருக்க.. என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..” என்றான் உதயா.
“மானசி..” என அஞ்சலி தொடங்க.. “அவளுக்கு தீபக்கை பிடிச்சிருக்குனு தெரிஞ்ச பிறகு நான் அப்டியே விட்டுடுவேனா.. நான் பார்த்துக்கிறேன்..” என உதயா சொல்ல.. நிம்மதியுடன் அவனை அணைத்துக் கொண்டாள் அஞ்சலி.
அடுத்த நாள்.. உதயா வேலைக்கு சென்றிருக்க.. சாரதாவும் ரவிச்சந்திரனும் உதயா அஞ்சலியின் திருமண விஷயமாக அருகில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தனர்.
அழைப்பு மணி ஒலிக்க அஞ்சலி கதவை திறந்தாள். அங்கே தீபக் நின்றிருந்தான்.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top