WatTruyen.Top

வரம் நீயடி..

💞 23 💞

jamunaguru

மானசியின் மனதை அறிந்து கொள்ளும் வண்ணம் பேசாமல்.. அவள் அறிந்திராத அறியக்கூடாத விஷயங்களை பேசி.. இல்லை உளறிக்கொட்டி அவளை வருத்தப்பட வைத்துவிட்டதை எண்ணி வருந்தியபடியே வீட்டுக்கு வந்தான் தீபக்.

“என்னடா என்னாச்சு.. மானசி என்ன சொன்னா..” என ஆவலாக கேட்டார் யசோதா.

“எல்லாம் சொதப்பிடுச்சு ம்மா..” என பாவமாக சொன்ன தீபக்.. மத்த விஷயங்களையும் சொன்னான்.

“டேய் என்னடா இப்டி பண்ணி வச்சிருக்க.. மானசி பாவம் டா..” என யசோதா தீபக்கிடம் சொல்லிக் கொண்டிருக்க.. அப்போது வீட்டுக்குள் வந்த வாசுதேவன் இருவரையும் முறைத்து பார்த்தார்.

என்னவென புரியாமல் யசோதாவும் தீபக்கும் விழிக்க.. “அந்த குடும்பத்துக்கும் நமக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை..” என்றார் வாசுதேவன்.

“எ.. என்ன சொல்றீங்க..” என யசோதா.. கேட்க.. தீபக்கை பார்த்த வாசுதேவன்.. “இந்த கல்யாணம் நடக்காது.. அந்த குடும்பத்துக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..” என அழுத்தமாக சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அஞ்சலி சொன்ன பிறகே மானசியின் விருப்பம் குறித்து யோசிக்காமல் பேசிவிட்டோமே என எண்ணினான் உதயா.

“சாரிடா.. நா.. நான் இதைப்பத்தி யோசிக்கலை.. நான் மாமா கிட்ட திரும்ப பேசி பார்க்கிறேன்..” என உதயா சொல்ல.. ஓடிவந்து அவன் மடியில் முகம் புதைத்து அழுதாள் மானசி.

“அழாத டா.. நான் தான் மாமா கிட்ட பேசுறேன்னு சொல்றேன்ல..” என அவள் தலையை வருடினான் உதயா.

“உதய் மாமா கிட்ட பேசுவான் டா.. மாமா புரிஞ்சுப்பாங்க..” என ரவிச்சந்திரன் ஆறுதலாக சொன்னார்.

“அழாத டா.. உதி பேசுனா அண்ணன் கேட்பாங்க..” என சமாதானம் சொன்னார் சாரதா.

யாருடைய பேச்சையும் காதில் வாங்காமல் மானசி அழுது கொண்டேயிருந்தாள்.

தான் அந்த வீட்டுக்கு வந்தது முதல் தனக்கு ஒரு தங்கை போல.. தோழி போல.. குழந்தைத்தனமாக நடந்து கொண்ட மானசியின் அழுகை.. அஞ்சலியை தன் வாழ்வை பற்றி கூட எண்ணவிடாமல் செய்தது.

“மானசி நீ அழாத.. உதிக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கலைனா உங்க மாமா தீபக்கும் உனக்கும் கல்யாணம் பண்ண சம்மதிச்சிடுவாங்க..” என அஞ்சலி மானசியின் அருகில் அமர்ந்து தன் சமாதானத்தை சொன்னாள்.

இவ வேற புரிஞ்சுக்காம.. என சலிப்பாக முறைத்தபடி உதயா அஞ்சலியை பார்த்தான்.

மெல்ல நிமிர்ந்து அஞ்சலியை பார்த்த மானசி.. “அண்ணி நானே எல்லார் மேலயும் கோபத்துல இருக்கேன்.. நீங்க சம்மந்தமே இல்லாம பேசி திட்டு வாங்காதீங்க.. சொல்லிட்டேன்..” என மிரட்டலாக சொன்னாள்.

அவள் பேசுவதே புரியாதவள் போல திகைத்து விழித்தாள் அஞ்சலி. அந்த களேபரத்திலும் மானசியின் அந்த கோபமும் அஞ்சலியின் திகைத்த முகமும் உதயாவுக்கு சிரிப்பை வரவழைத்தது.

அவன் சிரிப்பை கவனித்த மானசி.. அவன் காலில் ஓங்கி குத்தினாள். “ஆ.. குட்டி சாத்தான்..” என அவள் தலையில் கொட்டினான் உதயா.

“நீ எதுக்கு அழுத.. என்ன நடந்துச்சு..” என அஞ்சலி மானசியிடம் வினவினாள் அண்ணன் தங்கையின் சண்டையை நிறுத்தியபடி.

“எல்லாரும் என்கிட்ட மறைச்சிட்டீங்கல்ல..” என மானசி எல்லாரையும் கைகாட்டி சொல்ல.. எதை சொல்கிறாள் என புரியாமல் விழித்தனர் அனைவரும்.

“உனக்கு கூட சொல்லணும்னு தோணலைல..” என உதயாவை பார்த்து சொன்னாள் மானசி.

“என்னத்தை மறைச்சோம்.. அத முதல்ல சொல்லு..” என உதயா கேட்க.. இந்திரா போட்டோவை கைகாட்டினாள் மானசி. இவளுக்கு எப்படி தெரிந்தது.. யார் சொன்னது.. என அதிர்ச்சியுடன் அவளை பார்த்தனர் எல்லோரும்.

“நீ ஏன் என்கிட்ட சொல்லலை.. அம்மா மாதிரி பாசம் காட்டாம.. உன்னை பெரியம்மா பையன்னு நினைச்சிடுவேன்னு பயந்துட்டு சொல்லலையா நீ..” என உதயாவை பார்த்து கலங்கிய கண்களுடன் மானசி கேட்க உதயாவுக்கும் கண்கள் கலங்கியது.

“லூசு.. நான் அப்டி நினைப்பேனா..” என அவளை அணைத்துக் கொண்டான் உதயா.

“நீ அப்டித்தான் நினைச்சிருக்க.. அதான் நீயும் என்கிட்ட மறைச்சிட்ட..” என அழுதாள் மானசி.

“அப்டிலாம் இல்லைடா..” என உதயாவும் கண்ணீருடன் சொன்னான்.

அவர்கள் இருவரின் பாச பிணைப்பில் இடையூறு செய்ய மனமின்றி மற்றவர்கள் அமைதியாக நின்றிருந்தனர்.

சற்று நேரத்துக்கு பின்.. “உனக்கு இதை யார் சொன்னது..” என உதயா மானசியிடம் கேட்டான்.

“தீபக்..” என்ற மானசி.. “சொல்லலை.. உளறிட்டான்..” என்றாள்.

“உனக்கு தீபக்கை பிடிச்சிருக்கா.. சொல்லு..” என ஆவலாக கேட்ட உதயா மானசியை பார்த்தான்.

“நீ மாமா கிட்ட போய் பேசமாட்டன்னா நான் உண்மையை சொல்றேன்..” என்றாள் மானசி.

“என்ன பேசுற நீ.. உனக்கு பிடிச்சிருந்தா நான் போய் பேசுறேன்.. மாமா கண்டிப்பா..” என உதயா சொல்ல.. “ஏத்துக்க மாட்டாங்க..” என்றாள் மானசி.

“உதி பேசினா சரியாகிடும் டா..” என சாரதா சொல்ல.. “சரியாகாது மா.. எதுவும் சரியாகாது.. எத்தனை வருஷம் ஆச்சு..இப்ப வரைக்கும் உங்ககிட்ட பேசக்கூட மனசு வரலைல.. அப்புறம் எப்டி..” என கேட்டாள் மானசி.

“நடக்கும்.. எங்க கல்யாணம் நடக்கலைனா நீ ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் நடக்கும்..” என்றாள் அஞ்சலி.

“சும்மா நடக்காது.. கல்யாணம் வேண்டாம்னு அதையே பேசாதீங்க அண்ணி.. உங்களால அண்ணனை பிரிஞ்சு ஒரு நாளாவது இருக்க முடியுமா..” என மானசி அஞ்சலியை பார்த்து கேட்டாள்.

“உதியை பிரிவதா..” என தவிப்புடன் அஞ்சலி பார்க்க.. “அதைத்தான் நீ திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க முட்டாள்..” என அவள் மனமே அவளுக்கு உணர்த்தியது.

“முடியாது அண்ணி.. உங்களாலயும் முடியாது.. உங்களையும் விபுவையும் விட்டுக் கொடுக்க.. அண்ணனால மட்டுமில்ல.. எங்களாலயும் முடியாது..” என மானசி தெளிவாக எடுத்துரைத்தாள்.

எல்லாம் அஞ்சலிக்கும் புரிந்த போதிலும்.. மானசி விரும்பிய வாழ்க்கை அமைய தான் தடையாக இருக்கிறோமே என்ற எண்ணம் மனதை வாட்டியது.

“நீ ஆசைப்பட்டது என்னால தட்டிப்போகுதே..” என வருத்தமாக அஞ்சலி சொன்னாள்.

“அண்ணி நாங்க என்ன பத்து வருஷமா லவ் பண்ணிட்டு இருந்தோமா.. நேத்து கல்யாண பேச்சு எடுத்தாங்க.. என்ன முடிவு எடுக்கிறதுனு குழம்பிட்டு தான் இருந்தேன்.. இன்னைக்கு தீபக் கிட்ட பேசும் போது.. அப்பா அம்மா கேட்டா பிடிச்சிருக்குனு சொல்லலாம்னு நினைச்சேன்.. ஆனா அதுக்குள்ள அவங்களே வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. அவ்ளோதான்.. இதுல நான் வருத்தப்பட எதுவுமே இல்லை அண்ணி..” என மானசி மன உறுதியுடன் பேசினாள்.

மானசி உறுதியாக தான் இருக்கிறாள் என்ற போதிலும்.. அவள் ஆசையை நிறைவேற்ற முடியாத ஏக்கம் எல்லோருள்ளும் இருந்தது.

“மாமா கிட்ட நான் பேசி புரிய வைக்கிறேன் டா..” என உதயா மீண்டும் தொடங்க.. மறுத்தாள் மானசி.

“நீ மட்டுமில்லை.. யாருமே பேசக்கூடாது.. பேச வேண்டாம்..” என அழுத்தமாக அவள் சொல்ல.. ஏன் என காரணம் புரியாமல் விழித்தனர் அனைவரும்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top