WatTruyen.Top

வரம் நீயடி..

💞 21 💞

jamunaguru

அலுவலக வேலையில் கவனத்தை பதித்திருந்த போதிலும் உதயாவின் மனதில் அஞ்சலி தான் நிறைந்திருந்தாள் குறிப்பாக அன்று காலையில் நடந்த நிகழ்வுகள்.

விபுவுடன் விளையாடிக் கொண்டிருந்ததில் செய்ய வேண்டிய வேலைகள் தாமதமாகி விட.. அலுவலகத்திற்கு வேகமாக கிளம்பிக் கொண்டிருந்தான் உதயா.

அயர்ன் பண்ணிய சட்டையை அஞ்சலி கொண்டு வந்து நீட்ட.. அதை வாங்காமல்.. “அஞ்சு இங்க ஒரு பென் டிரைவ் வச்சிருந்தேன் பார்த்தீயா..” என கேட்டபடி தேடிக்கொண்டிருந்தான் உதயா.

“இல்லை..” என்ற அஞ்சலி.. சட்டையின் பட்டன்களை கழட்டிவிட்டு.. “நீ ஷர்ட்ட போடு உதி.. நான் தேடி பார்க்கிறேன்..” என்றாள்.

சட்டையை அணிந்து கொண்டு.. மற்றவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். உதயா தேடிக் கொண்டிருந்த பென் ட்ரைவ்வை விபுவின் கழுத்தருகில் இருந்து எடுத்துக் கொடுத்தாள் அஞ்சலி.

“என்ன உதி இது..” என அஞ்சலி கேட்க.. “என்ன..” என புரியாமல் உதயா பார்த்தான்.

சட்டையின் பட்டன்களை மாற்றி மாட்டியிருந்தான் உதயா. அசடுவழிய சிரித்தபடி.. “அவசரத்துல..” என உதயா சொல்ல.. செல்லமாக முறைத்தபடி பட்டன்களை கழட்டிவிட்டு ஒழுங்காக மாட்டிவிட தொடங்கினாள் அஞ்சலி.

“இவ்ளோ வேலையை வச்சுக்கிட்டு உன்னை யாரு விபு கூட விளையாட சொன்னது.. அப்புறம் லேட்டாகுது.. லேட்டாகுதுனு அவசரப்படுற..இனிமே காலையில எழுந்ததும் விளையாடுங்க.. அப்புறம் இருக்கு இரண்டு பேருக்கும்..” என அஞ்சலி உதயாவையும் விபுவையும் சேர்த்து செல்லமாக திட்ட.. விபு புன்னகைத்தான்.

“நாங்க அப்டித்தான் விளையாடுவோம்.. உன் பேச்செல்லாம் கேட்க மாட்டோம்.. என்ன விபு..” என உதயா சொல்ல அதற்கும் புன்னகைத்தான் விபு.

“அம்மா பேச்சை கேட்க மாட்டியா நீ.. அப்புறம் உதை விழும்..” என அஞ்சலி செல்லமாக விபுவை மிரட்டினாலும்.. அவன் சிரிப்பில் அவளுக்கும் சிரிப்பு வந்தது.

“என் செல்லம்..” என விபுவை கொஞ்சலாக அஞ்சலி பார்க்க.. அவள் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்தான் உதயா.

அவன் எண்ணம் உணர்ந்து விழிகளை தாழ்த்தியபடி நின்றிருந்தாள் அஞ்சலி. உதயா அவள் முகத்தை நிமிர்த்திய போதும் அவள் விழிகள் அவன் விழிகளை சந்திக்கவில்லை.

அடுத்து நிகழப்போகும் அவன் இதழ் தீண்டலை எண்ணி.. உள்ளம் படபடக்க நின்றிருந்தாள் அஞ்சலி. வெட்கமும் தயக்கமுமாக அஞ்சலி மெல்ல தன் பார்வையை உதயா மீது வைத்தாள்.

உதயா தன்னை நெருங்குவதை உணர்ந்து விழிகளை மூடிக்கொண்டு.. அவன் இதழ் தீண்டலுக்கு ஏங்கினாள் அஞ்சலி.

கடந்த சில நொடிகளும் யுகம் போல தோன்ற.. உதயா தன்னை நெருங்கவில்லை என்பதை உணர்ந்து விழிகளை திறந்தாள் அஞ்சலி.

தன் இதழ் தீண்டலுக்கு அவள் ஏங்குவது உணர்ந்தும் அவள் எண்ணத்தை நிறைவேற்றாமல் இதழ்களில் குறுநகையுடன் அவளை ரசித்துக் கொண்டிருந்தான் உதயா.

ஒரு நொடி முகம் வாட தலையை தாழ்த்தினாள் அஞ்சலி. அவளை சமாதானம் செய்ய எண்ணி உதயா நெருங்கும் முன்னரே.. அவன் சட்டையின் காலரை பற்றி.. தன்னை நோக்கி இழுத்து.. அவன் இதழ்களில் தன் முத்தத்தை பதித்தாள் அஞ்சலி.

இதழ்களை பிரித்துக் கொள்ள விரும்பாமல் மேலும் நெருங்கிக் கொண்டிருந்த இருவரும். “உதி.. கிளம்பிட்டீயா..” என்ற சாரதாவின் குரல் கேட்டு விலகினர்.

தன் செயல் தனக்கே அதிர்ச்சி தர.. திகைத்து விழித்த அஞ்சலி.. வெட்கமும் புன்னகையுமாக அறையில் இருந்து வெளியேறினாள்.

ஏற்கனவே வெட்கத்தில் தவித்துக் கொண்டிருந்த அஞ்சலியை மேலும் சிவக்க வைக்கும் விஷயத்தை சாரதாவும் ரவிச்சந்திரனும் சாப்பிட அமர்ந்த உதயாவிடம் பேச தொடங்கினர்.

“உதய்.. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நல்ல நாளா இருக்கு.. அன்னைக்கே கோவில்ல.. அஞ்சலிக்கும் உனக்கும் சிம்பிளா கல்யாணம் பண்ணிடலாம்.. நீ என்னப்பா சொல்ற..” என கேட்டார் ரவிச்சந்திரன்.

அஞ்சலியின் வெட்கத்தை ஓரக்கண்ணால் ரசித்தபடியே.. “ம்.. சரிப்பா..” என்றான் உதயா.

“வேற யாரையும் இன்வைட் பண்ணலைனாலும் பரவாயில்லை.. மாமா வீட்டில மட்டுமாவது நீயே நேரில போய் சொல்லிட்டு வந்துடு உதி..” என சாரதா சொல்ல சரியென தலையசைத்தான் உதயா.

“மானசி கிட்ட பேசுனீங்களா ம்மா.. அவளுக்கு தீபக்கை பிடிச்சிருக்கா..” என கேட்டான் உதயா.

“இல்லை உதி இன்னும் பேசலை.. அவளுக்கு இன்னைக்கு தான் லாஸ்ட் எக்ஸாம்.. அது முடிச்சிட்டு வரட்டும்.. அப்புறம் பேசலாம்..” என சாரதா சொன்னார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு தன்னறைக்குள் சென்ற உதயா.. “அஞ்சு அந்த பென் ட்ரைவ்வை எங்க வச்ச..” என கேட்க.. எது என யோசித்தபடியே அவன் அறைக்கு விரைந்தாள் அஞ்சலி.

“எந்த பென் ட்ரைவ் உதி..”என கேட்டபடியே அறைக்குள் வந்த அஞ்சலியின் கன்னத்தில் கரம் வைத்து விழிகளை காதலுடன் பார்த்தான் உதயா.

“இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணனுமா அஞ்சு..” என ஏக்கத்துடன் உதயா கேட்க.. அவன் குரலில் இருந்த ஏக்கத்தை தன் விழிகளில் பிரதிபலித்தாள் அஞ்சலி. அவர்கள் இருவரின் காதலின் சாட்சியான விபு புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

அஞ்சலியின் வெட்கம்.. தவிப்பு.. காதல் நிறைந்த பார்வை.. இதழ் தீண்டல்.. எல்லாம் மனதை நிறைத்திருக்க.. அவளுக்கு போன் செய்தான் உதயா.

“அஞ்சு..” என்ற உதயாவின் குரலே இனம்புரியாத உணர்வுகளை தோற்றுவிக்க.. “ம்..” என்றாள் அஞ்சலி.

“கிடைக்குமா..” என உதயா கேட்க.. “எ.. என்னது..” என புரியாமல் விழித்தாள் அஞ்சலி.

“காலையில கொடுத்தீயே.. அது மறுபடியும் கிடைக்குமா..” என உதயா புன்னகையோடு கேட்டான்.

சில நொடிகளில் அவன் கேட்பது புரிந்துவிட.. வார்த்தையின்றி வெட்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாள் அஞ்சலி.

“உதயா உங்களை பார்க்க யாரோ வந்திருக்காங்க..” என யாரோ சொல்ல.. “ஆங்.. இதோ வர்றேன்..” என்றான் உதயா.

“நான் சீக்கிரமே வீட்டுக்கு வந்திடுறேன் அஞ்சு..” என சொல்லிவிட்டு உதயா போனை வைத்தான். அவன் வரவுக்கு தன் மனம் ஏங்குவதை அஞ்சலியால் உணர முடிந்தது.

எப்போதிருந்து என்பதை அறிந்துகொள்ள முடியாமல் தன் மனம் உதயாவுடன் ஒன்றாகி விட்டதை உணர்ந்து மகிழ்ந்தாள் அஞ்சலி.

அலுவலகத்திற்கு தன்னை காண வந்தது யாராக இருக்கும் என்ற யோசனையுடன் வந்த உதயா.. வாசுதேவனை கண்டதும்.. முகம் மலர்ந்தான்.

“மாமா.. எதுக்காக இங்க வந்தீங்க.. வீட்டுக்கே வந்திருக்கலாமே..” என்றான் உதயா.

“நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..” என்றார் வாசுதேவன்.

“ம்.. சொல்லுங்க மாமா..” என்றான் உதயா.

“எனக்கு.. நீ.. அந்தப் பொண்ணு அஞ்சலியை கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பமில்லை..” என நேரடியாக தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்தினார் வாசுதேவன்.

மானசியின் விருப்பம் குறித்து அறிந்து கொள்ள வந்திருப்பார் என எண்ணிய உதயாவுக்கு அவர் பேச்சு அதிர்ச்சியாக தான் இருந்தது.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top