💞 20 💞
தங்கள் முதல் சந்திப்பு ஒரு கனவு போல.. அழகான கவிதை போல நிகழாமல் இயல்பாக நடந்து முடிந்து விட்டதே என எண்ணிக் கொண்டிருந்தாள் மானசி.
ஆனாலும் உண்மையிலே.. தீபக்கை பிடித்திருக்கிறதா.. இல்லையா.. என்பது மானசிக்கு புரியவில்லை.
ஒழுங்கா பார்த்ததே பத்து நிமிஷம் தான் இருக்கும்.. ஒரு வார்த்தை கூட பேசலை.. இதுல பிடிச்சிருக்கா பிடிக்கலையானு கேட்டா.. என்னனு சொல்றது என மனதுக்குள் சலித்துக் கொண்டாள் மானசி.
தன் தந்தையின் செயல் அதிர்ச்சியே என்றாலும் தன் மனதுக்கு பிடித்த பெண்ணே வாழ்க்கை துணையாக அமையப் போகும் மகிழ்ச்சியில் தீபக்கின் மனம் நிறைந்திருந்தது.
“நாளைக்கு உன்னை பார்க்க வர்றேன் செல்லம்..” என மனதுக்குள் மானசியை எண்ணி புன்னகையோடு சொன்ன தீபக்.. “கடவுளே.. ப்ளீஸ் நாளைக்கு அவளுக்கு எக்ஸாம் இருக்கணும்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என பாவமாக வேண்டிக் கொண்டான்.
சந்தோஷமாக இருந்த வாசுதேவனின் மனதில் குழப்பம் வந்த காரணத்தை அறிந்து கொள்ள எண்ணிய யசோதா அவரிடம் பேச்சு கொடுத்தார்.
“சின்ன பையனா இருக்கும் போது பார்த்தது.. இத்தனை வருஷம் கழிச்சு உதயாவை பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நம்ம எல்லாரையும் ஞாபகம் வச்சு எவ்ளோ நல்லா பேசினான்ல..” என யசோதா சொல்ல.. வெறுமனே “ம்..” என்றார் வாசுதேவன்.
“அண்ணனும் அண்ணியும் நல்ல குணத்தோட வளர்த்திருக்காங்க உதயாவை.. என்னதான் ப்ரெண்ட்னாலும் டைவர்ஸ் ஆகி குழந்தையோட இருக்கிற பொண்ணை முழுமனசோட ஏத்துக்கிறானே..” என பெருமிதமாக பேசினார் யசோதா.
“எப்டி எல்லாரலயும் ஏத்துக்க முடியுது.. என்னோட உதயா எதுக்காக யாரோ ஒருத்தனோட குழந்தைக்கு அப்பாவா இருக்கணும்.. என்னால இதை ஏத்துக்க முடியலை.. நான் ஏத்துக்க மாட்டேன்.. நிச்சயமா ஏத்துக்க மாட்டேன்.. உதயா கிட்டயே நான் இதை பத்தி பேசுறேன்.. அவன் மனசை மாத்துவேன்.. நானே நல்ல பொண்ணா பார்த்து அவனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்..” என மனதுக்குள் உறுதி பூண்டார் வாசுதேவன்.
அடுத்த நாள் தனது தேர்வை எழுதி முடித்துவிட்டு.. கல்லூரியில் இருந்து வெளியே வந்த மானசி.. “ச்சே கல்யாணம் பேச வர்றவங்க நேத்து தான் வரணுமா.. இன்னைக்கு வந்திருக்க கூடாதா.. நேத்து முழுக்க அவனை பிடிச்சிருக்கா பிடிக்கலையானு யோசிச்சு..படிக்கவேயில்லை..
இதுவரைக்கும் அரியரே இல்லாம க்ளீயர் பண்ணிட்டு.. இப்ப கடைசி எக்ஸாம்ல அரியர் வச்சிடுவேனோனு பயமா இருக்கு.. கடவுளே ப்ளீஸ்.. அரியர் இல்லாம க்ளீயர் பண்ணிடனும்..” என புலம்பியபடியே பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.
“கவலைப்படாத செல்லம்.. அரியர் லாம் வைக்காம க்ளீயர் பண்ணிடுவ..” என்ற குரல் கேட்டு மானசி திடுக்கிட்டு திரும்பி பார்க்க.. புன்னகையோடு தீபக் நின்றிருந்தான்.
“இப்டி தனியா புலம்புறது தான் பழக்கமோ..” என தீபக் கேட்க.. அவனை அந்த நேரத்தில் எதிர்பார்த்திராததாலும்.. தான் புலம்பியதில் எதையெல்லாம் கேட்டானோ என்ற எண்ணத்திலும் திகைத்து விழித்தாள் மானசி.
“அ.. அது வந்து..” என என்ன பேசுவது என புரியாமல் மானசி தடுமாற.. “ஒரு காபி.. குடிச்சிட்டே பேசலாமா..” என தீபக் கேட்க.. சரியென்பது போல தலையாட்டினாள் மானசி.
காபி ஷாப்பில் சென்று அமர்ந்ததும்.. “நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே..” என தீபக் கேட்க.. “எ.. என்ன கேட்டீங்க..” என கேட்டாள் மானசி.
“பார்க்கும் போதெல்லாம் தனியா புலம்புறீயே.. அதுதான் பழக்கமானு கேட்டேன்..” என்றான் தீபக்.
“பார்க்கும் போதெல்லாமா.. வேற எப்ப பார்த்தீங்க..” என கேட்டாள் மானசி.
“நல்ல சான்ஸ்.. சூப்பர் சான்ஸ்.. இந்த அண்ணன் இப்டி சொதப்பிட்டானே..” என தீபக் சொல்ல.. எப்போது என யோசித்த மானசிக்கு நினைவு வந்தது.
“அப்டி தனியா புலம்பிட்டே வர்றதை பார்த்ததுமே பிடிச்சு போச்சு..” என புன்னகையோடு சொன்னான் தீபக்.
“பார்த்ததுமே எப்டி பிடிக்கும்.. எனக்கெல்லாம் எதுவுமே தோணலை..” என பாவமாக மானசி சொல்ல தீபக் சிரித்து விட்டான்.
“உனக்கு தோணாதது கூட பெரிய விஷயமில்லை.. நீ என்னை ஒரு நிமிஷம் கூட முழுசா பார்க்கலையே..” என தீபக் சொன்னான்.
“அ.. அது.. நா.. நான் அன்னைக்கு வேற ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்..” என்றான்.
“ம்.. அன்னைக்கு மட்டுமா.. காலேஜ்க்கு கூட பார்க்க வந்தேன்..” என தீபக் சலிப்புடன் சொல்ல.. “என்ன காலேஜ்க்கு பார்க்க வந்தீங்களா..” என அதிர்ச்சியுடன் கேட்டாள் மானசி.
“இவ்ளோ ஷாக் லாம் வேண்டாம்.. அன்னைக்கு எக்ஸாம் இல்லை.. நீ காலேஜ்க்கு வரலை..” என பாவமாக தீபக் சொன்ன விதம் மானசிக்கு சிரிப்பை வரவழைத்தது.
“வீட்டை விட்டு வெளியே வர்றது.. அட்லீஸ்ட் வெளியே எட்டி பார்க்கிறது கூட கிடையாதா..” என தீபக் கேட்க.. “வீட்டுக்கும் வந்தீங்களா..” என மானசி விழிகள் விரித்து கேட்டாள்.
“ம்.. ஆனா என்ன பிரயோஜனம்.. ஒரு பார்வை பார்க்கிறதுக்கே.. கல்யாண பேச்செடுக்கிற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியிருக்கு..” என தீபக் சொல்ல.. என்ன பேசுவதென புரியாமல் விழிகளை தாழ்த்திக் கொண்டாள் மானசி.
அவளை ரசித்தபடியே தீபக் வேறு விஷயங்களை பேச.. மானசியும் சற்று இயல்பாக உரையாடினாள்.
மானசியின் பேச்சு.. அப்பா அம்மா அண்ணன் அண்ணி விபு மட்டுமே நிறைந்திருக்க.. அவளின் அந்த சிறு உலகத்தில் தானும் ஓர் அங்கமாக வேண்டும் என்ற அவா எழுந்தது தீபக் மனதில்.
தீபக்கை தனக்கு பிடித்திருக்கிறது என்பதை மெல்ல உணர தொடங்கினாள் மானசி.
பேசிக் கொண்டே இருவரும் பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க தொடங்கினர்.
“நீங்க என்னை பிடிச்சிருனு சொன்னதும் உங்க வீட்டில ஒத்துக்கிட்டாங்களா..” என இரு குடும்பத்துக்கும் உள்ள உறவு பற்றி முழுதாக அறியாமல் வினவினாள் மானசி.
“அம்மா எதுவும் சொல்லலை.. சொந்தம்ன்றதே அம்மா அத்தை கிட்ட பேசுனத பார்த்த பிறகு தான் தெரிஞ்சுது.. சந்தோஷமா இருந்துச்சு.. ஆனா அதுக்கு பிறகு தான ஒவ்வொரு பிரச்சனையா தெரிய வந்துச்சு..” என்றான் தீபக்.
“பிரச்சனையா.. என்ன பிரச்சனை..” என கேட்டாள் மானசி.
“அப்பா அத்தை மாமா கூட பேச மாட்டாங்கல்ல..” என தீபக் சொல்ல.. முந்தைய நாளின் நிகழ்வுகளை மானசியின் மனம் அலசியது.
வாசுதேவன் தன் அப்பா அம்மாவிடம் பேசவேயில்லை என்பதையும்.. தன் அண்ணன் உதயாவிடம் மட்டுமே மலர்ந்த முகத்துடன் பேசியதையும் நினைத்து பார்த்தாள் மானசி.
அப்பா அம்மா பகை அண்ணன் உறவா.. இது என்ன கதை என யோசித்த மானசி.. “ஆனா மாமா அண்ணன் கிட்ட நல்லா பாசமா பேசுனாங்களே..” என தீபக்கிடம் கேட்டாள்.
“இந்திரா அத்தை மேல இருந்த பாசம் மொத்தமும் இப்ப இந்திரா அத்தை பையன் மேல இருக்கு..” என தீபக் யோசிக்காமல் பேசிவிட.. “எ.. என்ன சொன்னீங்க..” என அதிர்ச்சியுடன் கேட்டாள் மானசி.
உதயா அஞ்சலியை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என எண்ணிய வாசுதேவன்.. உதயாவை நேரில் சந்தித்து பேச அவன் அலுவலகத்திற்கே வந்தார்.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top