WatTruyen.Top

வரம் நீயடி..

💞 17 💞

jamunaguru

உதயாவின் அம்மா இந்திராவின் நினைவு நாள். இந்திரா புகைப்படத்திற்கு மாலை அணிவித்து.. அவருக்கு பிடித்த உணவுகளை படைத்திருந்தார் சாரதா.

“இவங்க யாரு..” என அஞ்சலி மானசியிடம் கேட்டாள்.

“அம்மாவோட அக்கா..” என்றாள் மானசி.

“எப்டி இறந்தாங்க.. அவங்களுக்கு குழந்தைங்க லாம் இல்லையா.. அவங்க ஹஸ்பண்ட் எங்க இருக்காங்க..” என அஞ்சலி தன் மனதில் எழுந்த கேள்விகளை எல்லாம் மானசியிடம் கேட்டாள்.

“அண்ணி.. எனக்கு தெரிஞ்சதெல்லாம்.. அவங்க அம்மாவோட அக்கா.. பேர் இந்திரா.. வருஷா வருஷம் அவங்க நினைவு நாள்ல இப்டி தான் அவங்க போட்டோவுக்கு மாலை போட்டு கும்பிடுவாங்க.. வேற எதாவது தெரியணும்னா அம்மா அப்பா  கிட்டயோ இல்லை அண்ணன் கிட்டயோ கேளுங்க..” என்றாள் மானசி.

“விபு செல்லம்.. நாம இன்னைக்கு தாத்தா பாட்டி வீட்டுக்கு போக போறோம்.. ஆமா.. போலாமா.. அழுக்கு பையனா இருக்க.. முதல்ல குளி.. அப்புறம் போகலாம்..” என உதயா பேச.. அவன் பேசுவதெல்லாம் புரிந்தவன் போல கண்களை உருட்டி சிரித்துக் கொண்டிருந்தான் விபு.

மானசியிடம் அறிந்து கொள்ள முடியாத பதிலை அறிய விரும்பிய அஞ்சலி சாரதாவை தேட அவர் ஏதோ வேலையாக இருந்ததால் உதயாவிடம் வந்தாள்.

“உதி..”

“என்ன அஞ்சு..” என விபுவை கொஞ்சியபடியே கேட்டான் உதயா.

“அ.. அது.. அவங்க உங்க பெரியம்மா.. அவங்களுக்கு குழந்தைங்க லாம் இல்லையா.. அவங்க எப்டி இறந்தாங்க..” என கேட்டாள் அஞ்சலி.

விபுவை படுக்க வைத்துவிட்டு.. அஞ்சலியின் கேள்விகளுக்கு பதில் சொன்னான் உதயா.

“பெரியம்மா இல்லை அம்மா.. அவங்க பையன் நான் இருக்கேன்..” என உதயா சொல்ல.. அவன் பாசத்தில் சொல்வதாகவே எண்ணிக் கொண்டாள் அஞ்சலி.

“அவங்க உன்மேல ரொம்ப பாசமா இருப்பாங்களா உதி.. மானசிக்கு அவங்கள பத்தி எதுவுமே தெரியலை.. உனக்கு அவங்கள ஞாபகம் இருக்கா உதி..” என கேட்டாள் அஞ்சலி.

“எனக்கும் ஞாபகம் இல்லை.. ஆனா அப்பா அம்மா அவங்கள பத்தி அடிக்கடி பேசுவாங்க.. மானசிக்கு அவங்கள பத்தி எதுவும் தெரியாது..” என்றான் உதயா.

அஞ்சலி மேலும் ஏதோ கேட்க தொடங்கும் முன்.. “அஞ்சு.. விபுவை குளிப்பாட்டு.. கிளம்பலாம்.. இப்ப கிளம்பினா சரியா இருக்கும்.. டாக்சில போகலாம்..” என உதயா சொல்ல.. உற்சாகத்துடன் தலையாட்டினாள் அஞ்சலி.

அஞ்சலி விபுவை குளிப்பாட்டி முடிக்க.. உதயா அவனுக்கு உடை அணிவித்தான். அஞ்சலியும் உதயாவும் விபுவுடன் அஞ்சலியின் அப்பா அம்மா வீட்டுக்கு கிளம்பினர்.

“பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க..” என வழியனுப்பி வைத்தனர் ரவிச்சந்திரனும் சாரதாவும். வேடிக்கை பார்த்தபடி பயணத்தில் உற்சாகத்துடன் இருந்த விபு.. வீட்டுக்கு வந்து சேர்ந்த போது உறங்கியிருந்தான்.

நெடுநாட்களாக பழங்காததால் வீடு புழுதி படிந்திருந்தது. அப்போதைக்கு ஒரு அறையை மட்டும் அஞ்சலி சுத்தம் செய்துவிட்டு.. விபுவை படுக்க வைத்தாள்.

“கல்யாணம் ஆனதுக்கு பிறகு இங்க வரவேயில்லை உதி.. வரவும் தோணலை.. இப்பத்தான் மனசில நிம்மதியோட இங்க வரணும்னு தோணுச்சு..” என அஞ்சலி சொல்ல புன்னகைத்தான் உதயா.

“உதி.. இதுதான் என் ரூம்..” என புன்னகையோடு அஞ்சலி சொன்னாள்.

“ஞாபகம் இருக்கு அஞ்சு.. ஸ்கூல் படிக்கும் போது உன் பிறந்தநாளுக்கு வந்திருக்கேன்ல.. உனக்கு பிடிக்கும்னு அம்மா பால் கொழுக்கட்டை பண்ணிருந்தாங்கல்ல..” என உதயா சொல்ல.. “ம்.. எனக்கு அம்மா பண்ற பால் கொழுக்கட்டை ரொம்ப பிடிக்கும் உதி..” என்றாள் அஞ்சலி.

இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்தபடி மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

வாசுதேவன் குடும்பத்தினருடன் உதயா வீட்டுக்கு வந்தார். மானசி தான் கதவை திறந்தாள். வாசுதேவனை கண்டதும் யாரென கேட்க நினைத்தவள்.. யசோதாவை கண்டதும்.. “அத்தை வாங்க..” என வரவேற்றாள்.

“அம்மா யசோதா அத்தை வந்திருக்காங்க.. வாங்க..” என தன் அப்பா அம்மாவையும் அழைத்தாள் மானசி.

மாலை போட்டு வைக்கப்பட்டிருந்த இந்திராவின் புகைப்படத்தில் தன் பார்வையை வைத்திருந்தார் வாசுதேவன்.

அதை கவனித்த மானசி.. “என்ன அங்கிள்.. அப்டி பார்க்கிறீங்க..” என கேட்டவள்.. “அவங்க எங்க அம்மாவோட அக்கா..” என பதிலையும் அவளே சொல்லிக் கொண்டிருக்க.. சாரதாவும் ரவிச்சந்திரனும் அறையில் இருந்து வந்தனர்.

பல வருடங்கள் கடந்தபின் வாசுதேவன் வந்திருப்பது மகிழ்ச்சியை தந்தது சாரதாவுக்கும் ரவிச்சந்திரனுக்கும்.

இருவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று பேச.. வாசுதேவன்.. “உதயாவை பார்க்கணும்..” என்றார்.

“உதி வெளியே போயிருக்கான்.. இப்ப வந்திடுவான்..” என அவருக்கு பதில் சொன்ன சாரதா ரவிச்சந்திரனிடம்.. “உதிக்கு போன் பண்ணி பாருங்க..” என்றார்.

உதயாவுக்கு போன் செய்துவிட்டு.. “வந்துட்டு இருக்கான்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவான்..” என்றார் ரவிச்சந்திரன்.

யசோதா மட்டும் சாரதாவிடமும் ரவிச்சந்திரனிடமும் இயல்பாக பேசிக் கொண்டிருந்தார். அஞ்சலி செய்த கைவினை பொருட்களை காட்டி.. “இதெல்லாம் நீங்க பண்ணதா..” என மானசியிடம் கேட்டாள் இந்து.

“இல்லை.. எங்க அண்ணி பண்ணது.. இன்னும் இருக்கு வா காட்டுறேன்..” என அவளை தன்னறைக்கு அழைத்துச் சென்றுவிட.. தீபக் தான் பாவமாக விழித்துக் கொண்டிருந்தான்.

உதயாவும் அஞ்சலியும் வீட்டுக்கு வந்தனர். உதயா டாக்சிக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்க.. அஞ்சலியை விபுவுடன் நின்று கொண்டிருந்தாள்.

“அம்மாடி..” என அஞ்சலியை அழைத்தபடி.. சம்பத் வீட்டில் வேலை செய்த பங்கஜம் நின்றிருந்தார்.

“எப்டி இருக்கம்மா.. உன் பையனா ம்மா..” என ஆசையாக விபுவை பார்த்தார்.

“ம்.. ஆமா..” என்ற அஞ்சலி அவரிடம் விபுவை கொடுத்தாள்.

“நீங்க என்ன ம்மா இங்க..” என கேட்டாள் அஞ்சலி.

“என் பொண்ணு இங்கதான் மா வேலை பார்க்கிறா.. அவளை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்..” என்றார்.

சாரதா ரவிச்சந்திரனிடம் யசோதா மட்டுமே இயல்பாக பேசினார். தீபக் அவ்வப்போது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தபடி மானசியின் பார்வை தன்மீது விழாதா என தவித்தபடி இருந்தான்.

மானசி கொடுத்த வளையல்களை யசோதாவிடம் காட்டி மகிழ்ந்து கொண்டிருந்தாள் இந்து.

வாசுதேவன் மட்டும் யாருடனும் பேசாமல் ஒதுங்கியே இருப்பது சற்று வருத்தமாக இருந்தாலும்.. உதயாவை காண விரும்புகிறார் என்பது புரிந்தது. சாரதா ரவிச்சந்திரனிடம் தன் பார்வையாலே மீண்டும் உதயாவுக்கு போன் செய்ய சொன்னார்.

அஞ்சலி பங்கஜத்துடன் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க.. உதயாவும் அவர்களின் பேச்சில் கலந்து கொண்டிருந்தான்.

ரவிச்சந்திரன் மீண்டும் போன் செய்ய.. “ஆங்.. வந்துட்டோம் ப்பா.. இரண்டு நிமிஷம்..” என சொன்ன உதயா அஞ்சலியை பார்க்க.. “நீ போ உதி.. நான் வர்றேன்..” என்றாள்.

சரியென்ற உதயாவும் வீட்டுக்குள் வந்தான். முதலில் யாரென புரியாமல் சாராதாவை பார்த்தான் உதயா.

“இந்திரா அக்காவோட அண்ணன்..” என சாரதா சொல்ல.. “வாசு மாமாவா..” என உற்சாகமாக வாசுதேவனை பார்த்தான் உதயா.

“பழைய போட்டோவில பார்த்தது.. அதான் சட்டுனு ஞாபகம் வரலை..” என்ற உதயா.. “எப்டி இருக்கீங்க மாமா..” என விசாரித்தபடி அவரருகில் அமர்ந்தான்.

அதுவரை அமைதியாக இருந்தவர் உதயாவை கண்டதும் மகிழ்ச்சியுடன் தன் குடும்பத்தினரை உதயாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். உதயாவும் எல்லோரிடமும் இயல்பாக உரையாடினான்.

“அ.. அது.. மானசியை கல்யாண வீட்டில பார்த்ததும் தீபக்கு பிடிச்சு போச்சு.. அ.. அதான்” என வாசுதேவனே கல்யாண பேச்சை எடுக்க.. எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top