💞 16 💞
எப்போதும் வேலை முடித்து சீக்கிரமாக வீடு திரும்பும் உதயா அன்று வீடு திரும்ப வெகுநேரம் ஆயிற்று.
விபுவும் உறங்கிவிட.. ஏதேதோ எண்ணியபடி இருந்தாள் அஞ்சலி. உதி.. விபு.. அம்மா அப்பா.. மானசி.. என எத்தனை நிறைவாக இனிமையாக இருக்கிறது இந்த வாழ்க்கை.. இந்த சந்தோஷத்தை பார்க்க தன் அப்பா அம்மாவுக்கு கொடுத்து வைக்கவில்லையே.. என எண்ணிய அஞ்சலிக்கு.. தன் அப்பா அம்மா வாழ்ந்த அந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என தோன்றியது.
இந்த நிம்மதியான மனநிலையில் விபுவுடன் அங்கே செல்ல வேண்டும் என எண்ணினாள் அஞ்சலி. உதிகிட்ட சொல்லணும்.. என அஞ்சலி எண்ணிக் கொண்டிருக்கையிலே உதயாவும் வேலை முடித்து வந்திருந்தான்.
“விபு தூங்கிட்டானா..” என கேட்டபடியே தொட்டிலை பார்த்தான் உதயா.
“ம்.. இன்னைக்கு பகல்ல தூங்கவே இல்லை.. அதான் சீக்கிரமே தூங்கிட்டான்..” என்றாள் அஞ்சலி.
சோர்வாக கட்டிலில் அஞ்சலியின் அருகில் அமர்ந்தான் உதயா.
“உதி..”
“ம்.. என்ன அஞ்சு..”
“அ.. அது.. அப்பா அம்மாவோட வீட்டுக்கு போகணும் போல இருக்கு உதி..” என்றாள் அஞ்சலி.
புன்னகையோடு அவளை பார்த்த உதயா.. “ம்.. போகலாம் அஞ்சு..” என்றான்.
“நிஜமாவா.. எப்ப..” என உற்சாகமாக கேட்டாள் அஞ்சலி.
“ம்.. நாளைக்கு போகலாம்.. எனக்கு லீவு தான்..” என உதயா சொன்னான்.
“விபுவையும் கூட்டிட்டு போகணும் உதி..” என்றாள் அஞ்சலி.
“ம்.. கண்டிப்பா கூட்டிட்டு போகலாம்.. பசிக்குது அஞ்சு.. சாப்பாடு எடுத்து வை..” என உதயா சொல்ல.. “சாரி உதி..” என எழுந்தாள் அஞ்சலி.
சில நொடிகள் தாமதித்தவள்.. “தேங்க்ஸ் உதி..” என அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்துவிட்டு ஓடினாள். புன்னகையோடு உதயாவும் சாப்பிட எழுந்து சென்றான்.
“அம்மா ப்ளீஸ் மா.. அப்பா கிட்ட மறுபடியும் பேச்சு கொடுத்து பாருங்க..” என்றான் தீபக்.
“தீபு..நீதான் பார்த்தல்ல.. காதே கேட்காத மாதிரி தான அப்பா நடந்துக்கிட்டாங்க..” என்றார் யசோதா.
“சொந்தம்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. நீங்களே எல்லாம் பேசி முடிச்சிடுவீங்க.. பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு.. ஆனா இங்க என்னன்னா ஆயிரத்தெட்டு பிரச்சனை..” என சலித்துக் கொண்டான் தீபக்.
“உதயா பத்தி பேசும் போது கொஞ்சம் சந்தோஷப்படுற மாதிரி தெரிஞ்சுச்சு.. ஆனா உடனே முகமே மாறிடுச்சு.. நான் என்னடா பண்றது..” என பாவமாக கேட்டார் யசோதா.
“நீங்க தான் ஒத்துக்க மாட்டீங்க.. அவ மனசுலயாவது இடம்பிடிக்கலாம்னு நினைச்சா.. அவ அதுக்கு மேல..” என தீபக் சொல்ல.. “மானசியை பார்க்க போனீயா டா..” என ஆர்வமாக கேட்டார் யசோதா.
“ம்.. ஆனா பேசத்தான் முடியலை..” என்றான் தீபக்.
“ஏன்டா.. என்னாச்சு..” என கேட்டார் யசோதா.
“அவள பார்க்கலாம்னு காலேஜ்க்கு போனேன்.. எக்ஸாம் டைம்.. அவளுக்கு அன்னைக்கு எக்ஸாம் இல்லை..
சரி வீட்டை விட்டு வெளியே வருவானு பார்த்தா.. வெளியில எட்டிக்கூட பார்க்கலை அவ..” என தீபக் உருக்கமாக சொல்லிக் கொண்டிருக்க.. “வீட்டுக்கு போனீயா தீபு.. அவங்க வீடு எப்டி இருந்துச்சு..” என ஆவலாக கேட்டார் யசோதா.
“ரொம்ப முக்கியம்..” என சலித்துக் கொண்ட தீபக்.. “உதயா அத்தான் கூட காலேஜ்க்கு போறா.. சுத்தி யார் வர்றா என்னனு கூட பார்க்க மாட்டிக்குறா.. அவ்ளோ ஆர்வமா அத்தான் கிட்ட என்ன பேசினாளோ தெரியலை..
காலேஜ்ல இருந்து வீட்டுக்கு போகும் போது மாமா கூட அதே மாதிரி.. ம்.. நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான் போல.. வீடு காலேஜ் அவ்ளோதான் அவ உலகம் போல..” என்றான்.
“பொம்பள பிள்ளைங்க அப்டித்தான்டா இருப்பாங்க.. சரி விடு.. அப்பாவுக்கு இந்திரா அண்ணி மேல ரொம்ப பாசம்.. உதயா மேலயும் அதே பாசம்.. எங்க அவனுக்கு கஷ்டம் வந்துடுமோனு நினைச்சு.. கோபத்துல பேசாம இருந்து.. இப்ப உடனே எல்லாத்தையும் மறக்கணும்னா கஷ்டம் தானடா..” என பேசிக் கொண்டிருந்த யசோதா.. அப்போதுதான் அங்கே நின்றிருந்த வாசுதேவனை கவனித்தார்.
“எதெல்லாம் கேட்டாருனு தெரியலையே.. இப்ப எப்டி சமாளிக்கிறது..” என மனதுக்குள் எண்ணிய யசோதா.. “அது வந்து..” என தடுமாறினார்.
வாசுதேவன் தீபக்கை பார்க்க.. அவர் பார்வையே எல்லாத்தலயும் கேட்டு விட்டார் என்பதை உணர்த்த.. சில நொடிகள் தயங்கியவன்.. “எனக்கு மானசியை பிடிச்சிருக்கு ப்பா..” என்றான்.
அமைதியாக இருவரையும் பார்த்தபடி நின்றிருந்தார் வாசுதேவன் மனதுக்குள் எதையோ தீவிரமாக யோசித்தபடி.
“நாளைக்கு உதயா வீட்டுக்கு போறோம். இந்துவையும் கிளம்பச் சொல்லு..” என்றார் வாசுதேவன்.
“அவ எதுக்கு.. அவளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும்..” என்றார் யசோதா.
“ஒருநாள் லீவு போட்டா ஒன்னும் ஆகிடாது..” என்றார் வாசுதேவன்.
“அ.. அப்டியே மானசியை நம்ம தீபுவுக்கு பேசி முடிச்சிடலாமா..” என கேட்டார் யசோதா.
“உதயாவை பார்க்கணும் எனக்கு.. மத்ததெல்லாம் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது..” என்றார் வாசுதேவன்.
“என்னமா இது.. என்ன நடக்குது இங்க.. இந்துவையும் ஸ்கூலுக்கு லீவு போட சொல்றாங்க அப்பா..” என யசோதாவிடம் கேட்டான் தீபக்.
“தெரியலை டா.. ஆனா நீ ரொம்ப கற்பனை பண்ணிக்காத.. இப்பக்கூட பாரு ரவி அண்ணன் பேரையோ சாரதா அண்ணி பேரையோக் கூட சொல்லலை.. உதயா வீட்டுக்கு போகணுமாம்..” என சிரித்தார் யசோதா.
யசோதா தன் மகள் இந்துவை அழைத்து மாமா வீட்டுக்கு போறோம் என சொல்ல.. “நிஜமாவா ம்மா.. அப்ப ஸ்பெஷல் கிளாஸ் கட்.. அந்த பிசிக்ஸ் டீச்சர் கிட்ட இருந்து நான் தப்பிச்சேன்..” என உற்சாகமாக குதித்தாள் இந்து.
தீபக் தான் என்ன நடக்க போகிறதோ என தவித்துக் கொண்டிருந்தான். நாளைக்கே ஏன் கிளம்ப சொல்றாரு என யோசித்த யசோதாவுக்கு அப்போது தான் நினைவு வந்தது அது இந்திராவின் நினைவு நாள் என்பது.
வாசுதேவன் மனதில் என்ன நினைக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை. ஆனால் அவர் தெளிவாக இருந்தார்.. இந்த உறவு காலம் முழுக்க தொடரப் போகிறதா.. இல்லை இத்துடன் முடியப்போகிறதா என நாளைய தினம் முடிவாகிவிடும் என்பதில்.
சாரதா ரவிச்சந்திரனிடம் அஞ்சலியின் அப்பா அம்மா வீட்டுக்கு போய் வருவதாக சொன்னான்.
“உதி.. நாளைக்கு..” என சாரதா தயங்க.. “ஞாபகம் இருக்கு ம்மா..” என்றான் உதயா.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top