💞 10 💞
விபு உறங்கிவிட்டதை பார்த்த அஞ்சலி.. அவன் மென்விரல்களை பற்றி முத்தமிட்டாள்.
அழைப்பு மணி ஒலிக்க.. உதயா தான் தலைவலி என சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்டானோ.. என எண்ணியபடியே கதவை திறந்தாள் அஞ்சலி.
அங்கே சம்பத்தின் அப்பா பத்மநாபன் நின்று கொண்டிருந்தார். அவர் தனக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை என்றாலும் அவரை கண்டதும் வரவேற்க தோன்றவில்லை அஞ்சலிக்கு.
அஞ்சலியின் மனதை புரிந்து கொண்டவர் போல.. “நா.. நான் தெரிஞ்சவங்களோட காசிக்கு போறேன் மா.. அந்த கங்கைல போய் முழுகினாலும் உனக்கு நாங்க பண்ண பாவம் தீராது தான்..
அவங்க பண்றதெல்லாம் சகிச்சிட்டு இங்க இருக்க முடியலை என்னால.. அதான்.. போறதுக்கு முன்னாடி என் பேரனை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் மா.. பார்க்கலாமா..” என கேட்டார் பத்மநாபன்.
“உள்ள வாங்க..” என அழைத்த அஞ்சலி.. உறங்கிக் கொண்டிருந்த விபுவை அவர் கையில் கொடுத்தாள்.
பாசமாக கையில் வாங்கிக் கொண்டவர்.. சில நிமிடங்களில்.. “தூக்கம் கலைஞ்சிட போகுது மா.. படுக்க வச்சிடு..” என விபுவை அஞ்சலியிடமே கொடுத்தார்.
“சாப்பிட்டு போங்க..” என்ற அஞ்சலி அவருக்கு சாப்பாடு வைத்து கொடுத்தாள். முதலில் வேண்டாம் என மறுத்தவர்.. பின் சாப்பிட்டார்.
“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத மா.. உனக்காக இல்லைனாலும் இந்த பிள்ளைக்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ மா.. நீயும் பிள்ளையும் எப்பவும் நல்லா இருப்பீங்க..” என்ற பத்மநாபன் கிளம்பிச் சென்றார்.
அவர் சொல்லிச் சென்ற இன்னொரு திருமணம் குறித்து ஆழ்ந்து யோசிக்க தோன்றவில்லை அஞ்சலிக்கு. ஆனால் அவளையும் யோசிக்க வைத்தது அவள் அக்கா காவ்யாவின் பேச்சு.
பத்மநாபன் கிளம்பிச் சென்ற சில நிமிடங்களில் அஞ்சலியின் அக்கா காவ்யாவிடம் இருந்து அஞ்சலிக்கு அழைப்பு வந்தது.
நெடுநாட்களுக்கு பிறகான அழைப்பு என்பதால் உற்சாகத்துடன் விபு பற்றி சொன்னாள் அஞ்சலி. காவ்யாவும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
இங்கே அஞ்சலிக்கு ஏற்பட்ட எந்த துன்பங்களும் தெரியாத காவ்யா.. சம்பத் வீட்டில் உள்ளவர்கள் குறித்து விசாரித்தாள்.
நடந்ததை சுருக்கமாக சொன்ன அஞ்சலி.. “அவங்களுக்கு நம்ம வீடும் பணமும் மட்டும் தான் தேவை.. இதுக்கு மேலயும் சகிச்சிட்டு இருக்கிறதுல அர்த்தமில்லைனு தான்.. அவன்கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிட்டேன்..” என்றாள்.
சில நொடிகள் மௌனமாக இருந்த காவ்யா.. “சாரி அஞ்சலி நான் எவ்ளோ செல்பிஷ்ஷா இருந்துருக்கேன்னு இப்பத்தான் புரியுது.. என்னை மன்னிச்சிடு..” என உண்மையாக வருந்தினாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை விடு.. நீ எப்டி இருக்க..” என பேச்சை மாற்ற முயற்சித்தாள் அஞ்சலி.
ஆனால் காவ்யா.. “இப்ப நீ எங்க இருக்க.. பச்சப்பிள்ளையும் வச்சிட்டு.. நீ என்ன பண்ற..” என அக்கறையோடு விசாரித்தாள் காவ்யா.
உதயாவை சந்தித்ததை பற்றி சொன்னாள் அஞ்சலி. “உதயா.. ஓ.. உன்னோட ஸ்கூல் ப்ரெண்ட் இல்ல..” என கேட்டாள் காவ்யா.
“உதியோட அம்மா அப்பா தங்கச்சி எல்லாருமே என்மேல பாசமா இருக்காங்க.. நம்ம அப்பா அம்மா இருந்திருந்தா இவ்ளோ சந்தோஷமா இருந்திருப்பேனோனு அடிக்கடி தோணும்.. உதி மட்டும் அன்னைக்கு வரலைனா விபுவை வச்சிட்டு நான் தனியா என்ன பண்ணிருப்பேனோ தெரியலை..” என உதயாவை பற்றியும் அவன் குடும்பத்தில் தானும் விபுவும் ஓர் அங்கமாகி விட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தாள் அஞ்சலி.
“உதயாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா அஞ்சலி..” என விசாரித்தாள் காவ்யா.
“இன்னும் இல்லை..” என்ற அஞ்சலி.. காவ்யாவிடம் வேறு ஏதோ பேசத் தொடங்கினாள்.
சில நிமிட பேச்சுக்கு பின்.. “இவ்ளோ நாள் நீ எப்டி இருக்க.. என்ன பண்றனு கவலைப்படாம இருந்துட்டு.. இப்ப நான் இதெல்லாம் சொல்றதுக்கு கூட எனக்கு தயக்கமா இருக்கு அஞ்சலி..” என்ற காவ்யா.. அஞ்சலியின் மறுமணம் குறித்த பேச்சை எடுத்தாள்.
“நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ அஞ்சலி..” என காவ்யா சொல்ல மறுத்து பேச முயன்றாள் அஞ்சலி.
“இப்ப இதைப்பத்தி யோசிக்கும் போது வேண்டாம்னு தான் தோணும் அஞ்சலி.. என் பிள்ளைக்கு நான் மட்டும் போதும்னு உனக்கு தோணலாம்.
ஆனா ப்ராக்ட்டிக்கலா யோசி.. விபு கைக்குழந்தை.. அவனையும் பார்த்துக்கிட்டு நீ வேலைக்கு போய் சம்பாதிச்சு.. அதெல்லாம் கஷ்டம் டா..” என அஞ்சலிக்கு புரியவைக்க முயன்றாள் காவ்யா.
“நான் வேலைக்கு போய்ட்டா கூட உதியோட அம்மா விபுவை நல்லா பார்த்துப்பாங்க.. உதி தான் என்னை கொஞ்ச நாள் கழிச்சு வேலைக்கு போக சொன்னான்.. அவங்ககூட இருக்கிற வரைக்கும் நான் அதையெல்லாம் யோசிச்சு கவலைப்பட வேண்டியது இல்லை..
ஆனா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டு அவனும் சம்பத் மாதிரியே இருந்துட்டா.. அவன் என்னை ஏத்துக்கலாம்.. விபுவையும் ஏத்துப்பான்னு என்ன நிச்சயம்.. வேண்டாம்..” என்றாள் அஞ்சலி.
“வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு உதயாவையே நீ கல்யாணம் பண்ணிக்கோ..” என்றாள் காவ்யா.
வேலைக்கு சென்றாலாவது மாறுதலாக இருக்கும் என எண்ணிய உதயாவின் மனம் அஞ்சலியையும் விபுவையுமே சுற்றி வந்தது.
அப்போது சாரதா உதயாவுக்கு போன் பண்ணினார். “உதி.. அஞ்சலி கிட்ட பேசினீயா.. என்ன சொன்னா..” என ஆவலோடு கேட்டார் சாரதா.
“இல்லை மா.. நான் இன்னும் பேசலை.. என்னால பேச முடியலை..” என்றான் உதயா.
“போச்சா.. சொதப்பிட்டானா.. என்ன ண்ணா..” என்ற மானசியின் குரலும் உதயாவுக்கு கேட்டது. அவளை அமைதியாக இருக்க சொன்ன சாரதா.. “உதி.. என்னாச்சு.. ஏன் அஞ்சலி கிட்ட நீ பேசலை..” என கேட்டார்.
“எனக்கு பயமா இருக்கு ம்மா..” என்றான் உதயா.
“என்ன உதி இது.. அஞ்சலி வேண்டாம்னு சொல்லிடுவானு பயப்படுறீயா..”
“அப்டி இல்லை ம்மா.. அஞ்சலி நான் வேண்டாம்னு முடிவு பண்ணினா கூட தாங்கிப்பேன்.. ஆனா அதுக்கு பிறகு அவளால நம்ம வீட்டில இயல்பா இருக்க முடியாதே ம்மா.. அவ நம்ம வீட்டை விட்டு போய்ட்டா.. அவளுக்கும் விபுவுக்கும் வேற யார் இருக்கா.. அவங்க கஷ்டப்படுவாங்க மா.. வேண்டாம்..” என்றான் உதயா.
அவன் சொல்வதும் சரிதானோ என சில நொடிகள் யோசித்த சாரதா.. “உதி.. அஞ்சலி பாசத்துக்கு ஏங்குறா.. அவ மேல நாம எவ்ளோ பாசம் வச்சிருக்கோம்னு அவளுக்கு தெரியும்.. அப்டியே அவ நம்ம வீட்டை விட்டு போறதுனு முடிவு பண்ணாக்கூட அவளுக்கும் விபுவுக்கும் எந்த கஷ்டமும் வராம நாம பார்த்துக்கலாம்.. அவ புரிஞ்சுப்பானு தான் எனக்கு தோணுது..” என்றார்.
தன் அம்மாவின் பேச்சு மனதுக்கு தெம்பூட்டினாலும் தயக்கத்துடனே வீட்டுக்கு வந்தான் உதயா.
விபுவின் அருகில் உட்கார்ந்து இருந்த அஞ்சலி..உதயா வந்ததை கவனித்தாலும் பேசாமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
“என்ன யோசிச்சிட்டு இருக்க அஞ்சு..” என உதயா கேட்டான்.
அவன் கேள்விக்கு பதில் தெரியாதவள் போல விழித்த அஞ்சலி.. விபுவை பார்த்தாள்.. ஏதோ மகிழ்ச்சியை கொண்டாடுபவன் போல புன்னகைத்துக் கொண்டிருந்தான் விபு.
“அ.. அது.. விபு எப்ப வளர்ந்து என்னை அம்மானு கூப்பிடுவான்னு இருக்கு..” என்றாள் அஞ்சலி.
சில நொடிகள் மௌனமாக இருந்த உதயா.. “விபு அப்பானு என்னை கூப்பிடணும்னு நான் ஆசைப்படுறேன் அஞ்சு..” என்றான்.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top