WatTruyen.Top

வரம் நீயடி..

💞 09 💞

jamunaguru

அஞ்சலியின் பிரச்சனைகள் தீர்ந்து அவள் இப்போது நிம்மதியாக இருக்கிறாள். இனி தன் காதலை வெளிப்படுத்தலாம் என எண்ணினான் உதயா.

ஆனால் தன்னுடைய காதலை அஞ்சலி ஏற்றுக்கொள்ளா விட்டால் கூட பரவாயில்லை.. தான் காதலை சொன்ன பிறகு.. தன்மேல் உள்ள வருத்தத்தில் தன் உதவி வேண்டாம் என எண்ணி வீட்டை விட்டு சென்றுவிட்டால் என்ன செய்வது என தவிப்பாக இருந்தது உதயாவுக்கு.

விபுவை பற்றி நினைக்காமல் கூட இருக்க முடியவில்லையே.. பிரிவு நேர்ந்தால்.. நினைக்கவே வலித்தது உதயாவுக்கு.

தன் மனதை அஞ்சலியிடம் வெளிப்படுத்தி தான் ஆக வேண்டும்.. ஆனால் எப்படி.. என தனக்குள்ளே குழம்பிக் கொண்டிருந்தான் உதயா.

நெருங்கிய உறவினர் வீட்டு திருமணத்திற்கு இரண்டு நாட்கள் செல்வதாக கூறினார் ரவிச்சந்திரன்.

“ரொம்ப குளோஸ் ரிலேட்டிவா ப்பா.. ஆனா எனக்கு வேலை இருக்கு.. லீவு கிடைக்கிறது கஷ்டம்..” என்றான் உதயா.

“பரவாயில்லை உதி.. அஞ்சலியும் விபுவும் அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ண வேண்டாம்.. நீயும் அவங்களுக்கு துணையா இங்கே இரு.. நான் அப்பா மானசி மட்டும் போய்ட்டு வர்றோம்..” என்றார் சாரதா.

“அண்ணா.. சீக்கிரமே உன் லவ்வ அண்ணி கிட்ட சொல்லிடு.. சூப்பர் சான்ஸ்..” என உதயாவின் காதுக்குள் ரகசியம் பேசினாள் மானசி.

அதுதான் தங்கள் எண்ணமும் என்பது போல அர்த்தத்துடன் புன்னகைத்தனர் ரவிச்சந்திரனும் சாரதாவும்.அதிகாலையில் கிளம்புவதாக இருந்தனர் ரவிச்சந்திரன் சாரதா மானசி மூவரும்.

இரவு முழுவதும் உதயாவுக்கு அஞ்சலி தன் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நேரும் பின்விளைவுகள் குறித்த எண்ணங்கள் தான் மனதை ஆக்கிரமித்தன.

அஞ்சலிக்கு தன் மீது ப்ரியம் இருக்கிறது என்பது உதயாவும் நன்கு அறிந்ததே. ஆனால் அஞ்சலி சந்தித்த பிரச்சனைகள் அவளை இன்னொரு திருமணம் குறித்து யோசிக்க விடாது.

அஞ்சலியை மருத்துவமனையில் அந்த நிலையில் பார்த்த போது உதவ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் தோன்றியது. ஆனால் இப்போது அஞ்சலியும் விபுவும் தனக்கு சொந்தமானவர்கள் என்ற எண்ணம் மனதில் ஆழப்பதிந்து விட்டது என்பதை அஞ்சலி புரிந்து கொள்வாளா..

தான் உதவியதே இதுபோலொரு எண்ணத்தில் தான் என்று விலகிச் சென்றால்.. அவளுக்கு உதவ யார் இருக்கிறார்கள்..

அஞ்சலி வேலைக்கு போய் சம்பாதித்துக் கொள்வாள்.. என்றாலும் விபுவை யார் பார்த்து கொள்வார்கள்.. அஞ்சுவும் விபுவும் கஷ்டப்பட நானே காரணமாக அமைவதா என நடக்காததை நடந்திடுமோ என எண்ணி குழம்பி உறக்கத்தை தொலைத்திருந்தான் உதயா.

அதிகாலையில் ஊருக்கு கிளம்பிய சாரதா ரவிச்சந்திரன் மானசி மூவரும் உதயா நல்ல உறக்கத்தில் இருந்ததால் அஞ்சலியிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினர்.

இரவில் வெகுநேரம் விழித்ததால் தாமதமாக எழுந்த உதயாவுக்கு தலைவலிப்பது போலிருந்தது. சாரதா ஊருக்கு சென்றது நினைவில்லாமல்.. “அம்மா..” என அழைத்தான்.

“உதி எழுந்துட்டீயா.. நானே எழுப்பலாம்னு நினைச்சேன்..” என்றபடி அஞ்சலி தான் புன்னகையோடு வந்தாள்.

இரவில் மனதில் நடந்த போராட்டம் நினைவுக்கு வர.. “அஞ்சு.. என்னை விட்டு போய்ட மாட்டல்ல..” என தவிப்புடன் அஞ்சலியை பார்த்தான் உதயா.

“நல்லா தூங்கிட்டு இருந்த.. அதான் அப்பாவும் அம்மாவும் உன்னை எழுப்ப வேண்டாம்னு சொல்லாம கிளம்பிட்டாங்க..” என்ற அஞ்சலி.. “நைட் ஒழுங்கா தூங்கலையா உதி.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு..” என அக்கறையோடு விசாரித்தாள்.

“ம்.. ரொம்ப தலைவலி அஞ்சு..” என்றான் உதயா.

உடனே தைலம் எடுத்து வந்த அஞ்சலி உதயா மறுத்தும் அவளே தேய்த்து விட்டாள்.

“இந்த அன்பும் அக்கறையும் காலம் முழுக்க வேணும் அஞ்சு எனக்கு..”என மனதில் நினைத்த உதயா அதை அஞ்சலியிடம் சொல்லிவிடும் எண்ணத்துடன்.. “அஞ்சு..” என அழைத்தான்.

“என்ன உதி..” என கேட்ட அஞ்சலியின் கவனத்தை விபு தன் அழுகையால் திசைமாற்றினான். இருந்தும் அஞ்சலி உதயாவை பார்க்க.. “ஆ.. ஆபிஸ்க்கு போகணும்.. நான் ரெடியாகிட்டு வர்றேன்.. நீ விபுவை பாரு..” என்றவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

சில நிமிடங்களில் அலுவலகத்திற்கு கிளம்பி வந்த உதயாவை சாப்பிட அழைத்தாள் அஞ்சலி.

“வேண்டாம் அஞ்சு.. லேட்டாகிடுச்சு.. நான் கிளம்புறேன்..” என்றவனை.. “அதெல்லாம் முடியாது.. நீ சாப்பிட்டு தான் கிளம்பணும்..” என வற்புறுத்தி சாப்பிட வைத்தாள் அஞ்சலி.

சாப்பிடும்போது “தலைவலிக்குதுனு சொன்னல்ல உதி.. லீவு போடலாம்ல இன்னைக்கு..” என்றாள் அஞ்சலி.

“அ.. அது இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு அஞ்சு.. நான் சீக்கிரம் வந்துடுறேன்..” என்றான் உதயா.

கையை காலை ஆட்டிக் கொண்டு புன்னகைத்த விபுவை சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்த உதயா.. அதே எண்ணங்களில் உழல்வதற்கு கொஞ்சம் மாறுதலாக இருக்கும் என எண்ணி வேலைக்கு கிளம்பினான்.

உதயாவின் தவிப்பை துளியும் அறியாத அஞ்சலி.. “விபு செல்லம் என்ன பண்றீங்க..” என செல்லம் கொஞ்சியபடி விபுவுடன் பேசத் தொடங்கினாள்.

ஏனோ அன்று தனியாக இருப்பது போல உணர்ந்தாள் அஞ்சலி.

“விபுவும் அம்மாவும் மட்டும் தான் இன்னைக்கு வீட்டில இருக்கோம்.. தாத்தா பாட்டி மானசி சித்தி.. இல்லை மானசி அத்தை.. எல்லோரும் ஊருக்கு போயிட்டாங்க.. உதியும் வேலைக்கு போயாச்சு..” என கொஞ்சலாக பேசிக் கொண்டிருந்த அஞ்சலியின் மனம் வேறு எங்கோ சென்றது.

“உதி மட்டும் அன்னைக்கு ஹாஸ்பிட்டல் வரலைனா.. நீயும் நானும் எங்க எப்டி கஷ்டப்பட்டிருப்போமோ.. தெரியலை விபு..

எப்டியோ அந்த குடும்பத்து கிட்ட இருந்து நாம தப்பிச்சிட்டோம்.. அதுபோதும்.. இனி அம்மா மட்டும் தான் உனக்கு.. அம்மா வேலைக்கு போய் சம்பாதிச்சு.. நீ ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி கொடுப்பேன்..” என தன்போக்கில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள் அஞ்சலி.

விபு உறங்கி விட்டதை கவனித்த அஞ்சலி.. மெல்ல அவன் பூ விரல்களில் முத்தமிட்டாள்.

அப்போது அழைப்பு மணி ஒலிக்க.. “இந்த நேரத்தில யாரு.. உதி தான் தலைவலிக்குதுனு சீக்கிரமே வந்துட்டானோ..” என மனதுக்குள் எண்ணியபடியே கதவை திறந்தாள் அஞ்சலி.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top