💞 06 💞
தன் அப்பா அம்மாவுடன் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்த உதயா.. அப்போது தான் அறை வாயிலில் நின்றிருந்த அஞ்சலியை பார்த்தான்.
மானசி கூட அறியாத விஷயத்தை கேட்டு விட்டாளோ.. அல்லது இப்போது சொல்ல வேண்டாம் என நினைத்த தன் காதலையே அறிந்து கொண்டாளோ.. அல்லது தன் அப்பா அம்மா தங்கை என எல்லோரையும் போல தன் நேசத்தை அஞ்சுவே உணர்ந்து கொண்டாளோ.. என புரிந்து கொள்ள முடியாத தவிப்புடன் அவளை பார்த்தான் உதயா.
கலங்கியிருந்த கண்களை துடைத்துக் கொண்டிருந்த சாரதா.. அஞ்சலி உதயாவிடம் பேச எண்ணி வந்திருப்பதை உணர்ந்து கொண்டார்.
தன் கண்ணீரும் அதற்கான காரணமும் அஞ்சலிக்கு தெரிய வேண்டாம் என்ற எண்ணத்தோடு.. “விபு தூங்கிட்டானா டா.. நான் அவனை போய் பார்த்துட்டு வர்றேன்..” என ஏதோ பேசியபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
ரவிச்சந்திரனும் உதயாவுக்கும் அஞ்சலிக்கும் தனிமை தந்து வெளியேறினார்.
தன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்ற.. அஞ்சலியிடம் எப்படி விளக்குவது என புரியாமல் விழித்தான் உதயா.
மெல்ல அறைக்குள் வந்த அஞ்சலி.. உதயாவின் அருகில் அமர்ந்தாள். எதுவும் பேசாமல் சில நொடிகள் மௌனம் காத்தவள் அழத்தொடங்கினாள்.
உதயா தான் பதறி விட்டான் எதற்கு அழுகிறாள் எனவும் புரியாமல்.. எப்படி சமாதானம் செய்வது என்பதும் விளங்காமல் விழித்தான்.
“அஞ்சு.. ப்ளீஸ் அழாத.. அஞ்சு.. சொன்னா கேளு.. அழாத மா..” என உதயா சொல்ல.. மெல்ல தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு பேசினாள் அஞ்சலி.
“உதி.. என்னால உங்க எல்லாருக்கும் கஷ்டம் இல்ல.. அவன் உன் சட்டையை பிடிச்சப்ப.. எனக்கு எவ்ளோ கோபம் வந்துச்சு தெரியுமா.. அம்மா கூட அதை நினைச்சு தான் அழுறாங்க இல்ல.. என்னால தான உங்க எல்லாருக்கும் கஷ்டம்..” என தன்போக்கில் புலம்பிக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
அவள் பேச்சில் இருந்து.. அவள் இன்னும் தன் நேசத்தை புரிந்து கொள்ளவில்லை.. என்பதும் அப்பா அம்மாவுடன் பேசிய எதையும் அவள் கேட்கவில்லை என்பதும் தெளிவாக புரிந்தது உதயாவுக்கு.
இதற்கு சிரிப்பதா.. அழுவதா.. என புரியாமல் அஞ்சலியை பார்த்தான் உதயா.
“உதி.. நா.. நான் வேணா வேற எங்கையாவது போயிடவா.. என்னை அவன் சந்தோஷமா இருக்க விடவே மாட்டான்.. எ.. என்னால உங்களுக்கு கஷ்டம் வேண்டாம்.. உதி.. உங்களுக்கு நான் பாரமா இருக்கிறது போதாதுனு கஷ்டமும் கொடுக்கிறேன்..” என அஞ்சலி பேசிக் கொண்டே செல்ல.. உதயா அவள் பேச்சில் குறுக்கிட்டான்.
“அஞ்சு.. நீ இங்க இருக்கிறது யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லை.. எல்லாரும் சந்தோஷமா தான் இருக்காங்க.. நீ யாருக்கும் பாரம் இல்லை சரியா..” என்றான் உதயா.
புரிந்தது போல தலையை ஆட்டினாலும்.. “உதி.. அவன் திரும்பவும் வந்து பிரச்சனை பண்ணுவான்.. அம்மா கூட அழுதுட்டாங்க.. எல்லாம் அவனால தான.. வேண்டாம் உதி.. நான்.. வேற எங்கையாவது..” என சொல்லிக் கொண்டிருந்தவள்.. “வேற எங்க போவேன் உதி.. நான்.. எனக்கு யார் இருக்கா..” என அழுதாள்.
சில நொடிகள் திணறிய உதயா “அஞ்சு.. அம்மா அழலாம் இல்லை.. உனக்கு நாங்க எல்லாரும் இருக்கும் போது.. நீ எங்கையோ எதுக்கு போகணும்.. வேண்டாம்.. அழக்கூடாது சரியா..” என அவள் கண்ணீரை துடைத்தான்.
“இல்லை உதி.. நான் பார்த்தேன்.. அம்மா அழுதாங்க.. நான் பார்க்க கூடாதுனு கண்ணை துடைச்சிட்டே போனாங்க..” என அஞ்சலி அதையே மீண்டும் சொல்ல.. வேறு என்ன சொல்லி சமாளிப்பது என சில நொடிகள் யோசித்தான் உதயா.
“அம்மா அவன் பிரச்சனை பண்ணதுக்கு அழலை அஞ்சு.. உன்னை நினைச்சு தான் கண் கலங்குனாங்க.. இத்தனை பேர் இருக்கும் போதே அவங்க உன்கிட்ட இப்டிலாம் நடந்துக்கிறாங்கன்னா.. அந்த வீட்டில உன்னை எவ்ளோ கஷ்டப்படுத்தினாங்களோனு பேசிட்டு இருக்கும் போது கண்கலங்கிட்டாங்க..” என சமாதானமாக சொன்னான் உதயா.
அதை ஏற்றுக் கொண்டவள் போல சற்று நேரம் அமைதியாக இருந்தாள் அஞ்சலி.
“உதி.. நா.. நான்..” என தயக்கத்துடன் தொடங்கினாள் அஞ்சலி.
“சொல்லு அஞ்சு.. என்ன..” என பரிவுடன் கேட்டான் உதயா.
“நான் வேலைக்கு போகவா..” என அஞ்சலி கேட்க.. “ஏன் அஞ்சு..” என கேட்டான் உதயா.
“ஹாஸ்பிட்டல்ல அன்னைக்கு என்னை பார்த்ததுல இருந்து எனக்கும் விபுவுக்கும் எல்லா செலவும் நீதான் பண்ற.. எனக்கு உறுத்தலா இருக்கு உதி..” என்றாள் அஞ்சலி.
“அவ்ளோ கூட நான் சம்பாதிக்க மாட்டேன்னு நினைச்சீயா அஞ்சு..” என கேலியாக கேட்டான் உதயா.
அவன் கேட்ட விதத்தில் சிரிப்பு வந்தாலும்.. “அதில்லை உதி..”என தயக்கத்துடன் சொன்னாள் அஞ்சலி.
“அஞ்சு.. நீ எவ்ளோ வீக்கா இருக்க பாரு.. ஒழுங்கா சாப்பிடு.. விபுவோட சந்தோஷமா இரு.. மத்ததெல்லாம் அப்புறம் யோசிக்கலாம் சரியா..” என்றான் உதயா.
முழுதாக மனம் சமாதானம் அடையாத போதிலும் புன்னகையோடு தலையசைத்தாள் அஞ்சலி.
அஞ்சலி சென்றதும் ஆர்வமாக அறைக்குள் வந்த சாரதா.. “உதி.. அஞ்சலி என்ன சொன்னா.. அவளுக்கு சம்மதம் தான..” என கேட்டார்.
நடந்ததை சுருக்கமாக சொன்ன உதயா.. “அம்மா அவ அந்த கஷ்டத்தை எல்லாம் மறந்து வெளியே வர்றதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்.. அதுவரைக்கும் பொறுமையா இருக்கலாம்..” என்றான்.
அவன் சொல்வதும் சரிதான் என புரிந்து கொண்டார் சாரதா. உதயா அஞ்சலி மீது கொண்டுள்ள நேசத்தை அறிந்தாலும் சாரதா ரவிச்சந்திரன் மானசி மூவரும் எப்போதும் போலவே நடந்து கொண்டனர்.
உதயாவின் மனதில் உள்ள காதலை உணராத போதிலும்.. அஞ்சலி ஒவ்வொன்றுக்கும் உதயாவை தான் நாடினாள்.
“உதி.. விபுவுக்கு தடுப்பூசி போட போகணும்..”
“உதி.. விபுவுக்கு காய்ச்சலா இருக்கு.. ஹாஸ்பிட்டல் போகணும்..”
“உதி.. இங்க பாரேன்.. விபு தூக்கத்துல சிரிக்கிறான்.. அப்டினா கடவுள் விளையாட்டு காட்டுறார்னு அம்மா சொன்னாங்க..” என எல்லாத்தையும் பகிர உதி உதி மட்டும் தான் அஞ்சலிக்கு.
வேலைக்கு போக வேண்டாம் என உதயா மறுப்பு தெரிவித்து விட்டாலும் சில நேரங்களில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும் அஞ்சலிக்கு.
எல்லா சுமையையும் உதயா மீது வைக்கிறோமோ என்ற குற்றவுணர்வை குறைப்பதற்காக சாரதா மறுத்தும் கேளாமல் வீட்டு வேலையை தன்னால் இயன்ற அளவு செய்ய தொடங்கினாள் அஞ்சலி.
அன்று அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த உதயாவிடம் வந்த அஞ்சலி.. “உதி.. இன்னைக்கு என்னை பேங்க்..க்கு கூட்டிட்டு போறீயா..” என கேட்டாள்.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top