💞 07 💞
அன்று அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த உதயாவிடம் வந்த அஞ்சலி.. “உதி.. இன்னைக்கு என்னை பேங்க்..க்கு கூட்டிட்டு போறீயா..” என கேட்டாள்.
விபுவுக்கும் அஞ்சலிக்குமான செலவை திருப்பி தர எண்ணி தான்.. அஞ்சலி பேங்கிற்கு அழைக்கிறாள் என நினைத்த உதயா.. தன் அன்பை தான் புரிந்து கொள்ளவில்லை.. தன் உதவியையும் ஏற்க மறுக்கிறாளே.. இன்னும் யாரோவாக நினைக்கிறாளே என எண்ணி வருந்தினான்.
“ஏன் அஞ்சு.. இப்டி பண்ற.. உன்னையும் விபுவையும் இந்தக் குடும்பமா தான் நான் பார்க்கிறேன்.. ஆனா நீ ஏன் அதை ஏத்துக்க மாட்டிக்குற.. இப்ப எதுக்கு உனக்கு பணம்.. உனக்கு என்ன தேவை சொல்லு.. நான் வாங்கி தர்றேன்.. இல்லை பணமா வேணுமா.. இந்தா என்னோட கார்டு.. இதை நீயே வச்சுக்கோ..” என கார்டை எடுத்து நீட்டினான் உதயா.
எதுவும் பேசாமல் புன்னகைத்த அஞ்சலி.. உதயா நீட்டிய கார்டை வாங்கினாள்.. “ஓகே.. பேங்க்..க்கு போக வேண்டாம்ல..” என கேட்டான் உதயா.
“போகணும்.. இதுக்காக கட்டாயம் போகணும்..” என உதயாவின் கார்டை காட்டி சொன்னாள் அஞ்சலி.
புரியாமல் உதயா விழிக்க.. தன் போனில் இருந்த மெசேஜை காட்டினாள் அஞ்சலி. அந்த மெசேஜ் ஏடிஎம்மில் பணம் எடுத்ததை கூறியது.
“இதில என்ன இருக்கு அஞ்சு..”என புரியாமலே கேட்டான் உதயா.
“என்னோட கார்டு சம்பத் கிட்ட தான் இருக்கு.. அக்கவுண்ட்ல பணத்தை அவங்க விட்டு வச்சிருக்கிறதே பெரிய விஷயம் தான்.. அது என் அப்பா அம்மாவோட பணம்.. அதை இனியும் அவங்க செலவு பண்றது எனக்கு பிடிக்கலை..
கார்டு தொலைஞ்சு போச்சுனு சொல்லி ப்ளாக் பண்ணிட்டா.. அவன் யூஸ் பண்ண முடியாதுல்ல..” என்றாள் அஞ்சலி.
“அதுக்கு ஏன் அஞ்சு கார்டை ப்ளாக் பண்ணனும்.. அவன்கிட்டயே திருப்பி வாங்கலாமே..” என்றான் உதயா.
“வேண்டாம் உதி.. எனக்கு அவனை பார்க்கவே பிடிக்கலை.. தேவையில்லாத பிரச்சனை வரும்.. என் நிம்மதி தான் போகுது..” என அஞ்சலி சொல்ல.. அதன்பின் உதயா மறுக்கவில்லை.
“அஞ்சு.. அந்த வீட்டில இருந்து உன்னோட பொருள் எதையுமே எடுத்துட்டு வரலையே.. முக்கியமான பொருள் எதுவும் இருக்கா.. இருந்தா சொல்லு நாம போய் எடுத்துட்டு வரலாம்..” என்றான் உதயா.
சில நொடிகள் யோசித்த அஞ்சலி.. “வேண்டாம் உதி.. அங்க அப்டி முக்கியமானது எதுவும் இல்லை..” என சொன்னவள்.. உதயாவின் கார்டை அவனிடமே திருப்பி கொடுத்தாள்.
உதயா அஞ்சலியுடன் பேங்கிற்கு சென்று திரும்பி வருகையில்.. “உதி.. ஒரு நிமிஷம் பைக்கை நிறுத்து..” என்றாள் அஞ்சலி.
“என்ன அஞ்சு..” என புரியாமல் கேட்டான் உதயா.
“அந்த கடைக்கு போகணும்..” என்றாள் அஞ்சலி.
சரியென்ற உதயாவும் அஞ்சலி சொன்ன கடைக்கு அழைத்துச் சென்றான்.
உல்லன் நூல், ஊசி, சில்க் த்ரெட், பாசி, கற்கள், ஜிமிக்கி.. என அஞ்சலி வாங்கிய பொருள்களை பார்த்து விட்டு.. “இதெல்லாம் எதுக்கு அஞ்சு..” என கேட்டான்.
அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்.. “என்ன கேட்டாலும் வாங்கி தர்றேன்னு சொன்ன..” என கேலியாக கேட்டாள் அஞ்சலி.
“நான் எதுவுமே கேட்கலை போதுமா..” என சொன்ன உதயா.. “இது மட்டும் போதுமா.. இன்னும் வேணுமா..” என கேட்க.. அஞ்சலி புன்னகைத்தாள்.
“வீட்டில ரொம்ப போர் அடிக்குது உதி.. நீ வேலைக்கும் போக வேண்டாம்னு சொல்லிட்ட.. அதான்.. ஏதாவது பண்ணலாம்னு..” என்றாள் அஞ்சலி.
இருவரும் இயல்பாக பேசி சிரித்தபடி தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு.. கடையில் இருந்து வெளியேறினர். அவர்களை வன்மத்துடன் நோக்கிக் கொண்டிருந்தார் காஞ்சனா.
உதயாவுக்கு ஏதோ போன் வர அவன் சற்று தள்ளி நின்று பேசிக் கொண்டிருக்க.. அஞ்சலி பைக் அருகில் நின்றிருந்தாள். அதுதான் சமயம் என அஞ்சலியின் அருகில் வந்தார் காஞ்சனா.
காஞ்சனாவை கண்டதும் அலட்சியமாக முகத்தை திருப்பிக் கொண்டாள் அஞ்சலி.
“கண்டவன் வீட்டில போய் தங்கியிருக்கீயே மா.. இதெல்லாம் நல்லா இல்லை.. ஊரில எல்லாரும் உன்னை தான் நடத்தை கெட்டவனு பேசுவாங்க..
அவங்க யார் என்ன எப்படிப்பட்டவங்கனு தெரியுமா உனக்கு.. எல்லாம் உன் பேரில இருக்க வீட்டுக்காகவும்.. பேங்க்ல நீ வச்சிருக்க பணத்துக்காகவும் தான் உன்னை நல்லா பார்த்துக்கிற மாதிரி நடிக்கிறாங்க.. ஏமாந்துடாத மா.. நீ நம்ம வீட்டுக்கு வந்துடு..” என நயமாக பேசுவது போல பேசி அஞ்சலியின் மனதை மாற்றி விடலாம் என எண்ணி பேசினார் காஞ்சனா.
அப்பா அம்மாவை இழந்த பின் தனியாக நின்ற போது.. அன்பு கிடைக்கும்.. என எண்ணியே சம்பத்தை திருமணம் செய்து கொண்டாள் அஞ்சலி. காஞ்சனாவின் கொடுமையெல்லாம் சகித்துக் கொண்டதும் சம்பத்தின் அன்பாவது இருக்கிறதே என்ற நம்பிக்கையில் தான்.
ஆனால் அஞ்சலி எப்போது அந்த வீட்டில் உண்மையான அன்பு ஒருபோதும் கிடைக்க போவதில்லை என்பதை உணர்ந்தாளோ.. அப்போதே அவர்களுக்கு தன் வாழ்வில் இடமில்லை என்பதில் உறுதியாக இருந்தாள் அஞ்சலி.
மீண்டும் மீண்டும் இவர்கள் ஏன் தன்னிடம் வருகிறார்கள் என்பது புரியாமல் இருந்த அஞ்சலிக்கு.. காஞ்சனாவின் பேச்சில் இருந்து புரிய தொடங்கியது.
மிச்சமிருக்கும் பேங்க் பேலன்சும்.. வீடும் அவர்கள் கண்ணை உறுத்துகிறது.. அதற்காகவே இன்னும் தன்னிடம் வருகிறார்கள் என்பது அஞ்சலிக்கு தெளிவாக புரிந்தது.
அவங்க எப்படிப்பட்டவங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு எனக்கு நல்லாவே தெரியும்.. என மனதுக்குள் நினைத்த அஞ்சலி.. “உதி.. கிளம்பலாமா..” என உதயாவிடம் கேட்டாள். அப்போதுதான் காஞ்சனா நிற்பதையே கவனித்தான் உதயா. உடனே பேச்சை முடித்துக்கொண்டு அஞ்சலியின் அருகில் வந்தான்.
தன் வீட்டில் இருக்கும் வரை அன்புக்கு ஏங்கி தான் தன் கொடுமையெல்லாம் அஞ்சலி பொறுத்துக் கொண்டாள் என்பது புரியாத காஞ்சனா.. “திமிர் பிடிச்சவ.. எல்லாம் இவன் கூட இருக்கிற திமிரு..” என மனதுக்குள் அஞ்சலியையும் உதயாவையும் திட்டினார்.
தன்னை அஞ்சலி அலட்சியப்படுத்தியது கோபமூட்ட.. “கட்டின புருஷனுக்கு துரோகம் பண்ணிட்டு.. கண்டவன் கூட ஊர் சுத்துறீயா.. நீயெல்லாம்..” என பேசிய காஞ்சனாவை வெறித்து பார்த்தாள் அஞ்சலி.
உதயா ஏதோ சொல்லத் தொடங்க.. வேண்டாம் என கண்ணசைத்த அஞ்சலி.. “கட்டின பொண்டாட்டி வீட்டில இருக்கும் போதே கண்டவளையும் வீட்டுக்கு உங்க பிள்ளை கூட்டிட்டு வரும்போது அவளுக்கு சேவகம் பண்ணின நீங்கலாம் என்னை பத்தி பேசுறீங்க..” என அலட்சியமாக சொன்னாள்.
மேலும் அஞ்சலியை காயப்படுத்தும் எண்ணத்துடன் பேச எண்ணினாலும் உதயாவின் பார்வை.. பயத்தை ஏற்படுத்தியது காஞ்சனாவுக்கு.
“கிளம்பலாம் உதி..” என அஞ்சலி உதயாவிடம் சொல்ல.. காஞ்சனாவை கண்டுகொள்ளாமல் கிளம்பினர் இருவரும்.
அஞ்சலியையும் உதயாவையும் திட்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்த காஞ்சனாவிடம் அஞ்சலி கார்டை ப்ளாக் செய்துவிட்டதால் மாயாவிடம் அவமானப்படும்படி நேர்ந்ததை சொன்னான் சம்பத். இருவரும் இனி அஞ்சலியை தங்கள் விருப்பம் போல வளைப்பது எளிதல்ல என்பதை உணர்ந்தனர்.
மானசி கல்லூரி விழாவுக்கு புடவை கட்டப்போவதாக சொல்லி இருந்தாள். வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் தான் வாங்கி வந்த சில்க் திரெட் கொண்டு மானசியின் புடவைக்கு பொருத்தமாக வளையல் ஜிமிக்கி.. என அழகாக செய்தாள் அஞ்சலி.
மானசி வந்ததும் அவளுக்கென செய்ததை அவளிடம் கொடுத்து ஆச்சரியப்படுத்தினாள் அஞ்சலி.
“வாவ்.. அண்ணி.. சூப்பரா இருக்கு..”என சந்தோஷத்தில் குதித்தாள் மானசி. அவளின் உற்சாகம் அஞ்சலிக்கும் தொற்றிக் கொண்டாலும் அப்போது தான் அஞ்சலி கவனித்தாள் மானசியின் அண்ணி என்ற அழைப்பை.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top