💞 05 💞
அஞ்சலி தன் அப்பா அம்மாவின் நினைவாக பத்திரப்படுத்த எண்ணிய வீட்டை.. விலைக்கு கேட்டு.. ஒருவர் சம்பத்தை அணுகியிருந்தார்.
அஞ்சலி அனுப்பிய விவாகரத்து நோட்டீஸை அலட்சியப்படுத்திய சம்பத்தும் காஞ்சனாவும்.. இதை அலட்சியப்படுத்த விரும்பவில்லை.
ஏற்கனவே அந்த வீட்டை அஞ்சலியிடம் இருந்து எழுதி வாங்கி விட்டால்.. அவள் வேறு வழியின்றி தங்களிடம் அடங்கியிருப்பாள் என எண்ணினர். அது நடக்காமல் போனது கூட பெரிதாக தோன்றவில்லை அவர்களுக்கு. தொல்லை ஒழிந்தது என்ற நிம்மதி தான்.
ஆனால் மீண்டும் அந்த வீட்டை முன்னிறுத்தி ஒரு வாய்ப்பு வருகையில் அதை பயன்படுத்திக் கொள்ள விரும்பினர் காஞ்சனாவும் சம்பத்தும்.
அஞ்சலியை சமாதானம் செய்து உதயா வீட்டில் இருந்து அழைத்து வந்து விட்டால்.. அஞ்சலியின் வீட்டை விற்க ஏற்பாடு செய்துவிடலாம் என்று எண்ணினர் காஞ்சனாவும் சம்பத்தும்.
உதயா அவளுக்கு நண்பன் தானே.. எத்தனை நாள் தான் அவனும் அவன் குடும்பமும் அவளுக்கு சோறு போடுவார்கள்.. போ.. என்று அஞ்சலியை தங்களுடன் அனுப்பி வைத்து விடுவார்கள்.. அஞ்சலி தான் முரண்டு பிடிப்பாள்.. பார்த்துக் கொள்ளலாம் என எண்ணினர்.. உதயா அஞ்சலியையும் குழந்தையையும் தன் உயிராக எண்ண தொடங்கி விட்டது அறியாமல்.
“குழந்தைக்கு அப்பா நான் தான.. இல்லை..” என ஏளன சிரிப்புடன் உதயாவை பார்த்தான் சம்பத்.
அப்பா நான் நான் என ஏதோ பெரிய விஷயம் போல சம்பத் பேசுவதே அஞ்சலிக்கு எரிச்சலாக இருக்க.. அவன் ஏளன பார்வை அருவெறுப்பை தந்தது.
எரிச்சலுடன் அஞ்சலி முகத்தை திருப்பிக் கொள்ள.. “இந்த குழந்தைக்கு அப்பா நீ இல்லை..” என்றான் உதயா சாதாரணமான குரலில்.
எல்லோரும் அதிர்ச்சியுடன் உதயாவை பார்த்தனர். உதயா சொன்னது புரியவே சில நொடிகள் ஆனது சம்பத்துக்கு.
“ஏய்..” என கைகளை முறுக்கிக் கொண்டு சீறினான் சம்பத்.
“உண்மையை சொன்னா ஏன் அலறுற..” என அப்போதும் சாதாரணமாகவே கேட்டான் உதயா.
“உன்னை..” என உதயாவின் சட்டையை பிடித்தான் சம்பத். உதி.. என அஞ்சலியும் உதயாவின் அப்பா அம்மா தங்கையும் பதறினர்.
ஆனால் வெகு நிதானமாக.. சம்பத்தின் கைகளை தன் சட்டையில் இருந்து விடுவித்த உதயா.. “குழந்தைக்கு அப்பா.. அப்பா..னு கூவுறீயே.. அந்த குழந்தை பொண்ணா.. பையனா..ன்னு தெரியுமா.. இல்லை அதுவும் தெரியாதா..” என ஏளனமாக கேட்டான்.
அவனை கோபத்துடன் வெறித்த சம்பத்.. “அவ என் பொண்டாட்டி.. அது என் குழந்தை.. அதை சொன்னா உனக்கு ஏன் பொத்துக்கிட்டு வருது..” என உதயாவை பார்த்து சொன்னவன்.. அஞ்சலியையும் குழந்தையையும் நெருங்கினான்.
“இத்தனை நாளா.. இவன் வீட்டில வந்து தங்கியிருக்க இவனுக்கும் உனக்கும் அப்டி என்ன சம்பந்தம்.. எத்தனை நாளா இந்த பழக்கம்.. கட்டின புருஷன் எனக்கே துரோகம் பண்றீயா..” என வக்கிரத்துடன் பேசியபடியே அஞ்சலியை நோக்கி கையை ஓங்கினான்.
சம்பத் அஞ்சலியை நோக்கி மேலும் ஓர் அடி முன்னேறும் முன்னரே.. அவன் கையை வளைத்து பிடித்தான் உதயா.
உதயா கையை வளைத்து பிடித்தது வலித்தது.. உதயாவின் பிடியிலிருந்து கையை விடுவிக்க முடியாமல் அலற தொடங்கினான் சம்பத்.
“அய்யோ.. அய்யோ.. என் பிள்ளைய அடிக்கிறானே.. யாராவது வாங்களேன்.. காப்பாத்துங்களேன்..”என அலறிய காஞ்சனா.. அஞ்சலியை பார்த்து.. “அடியே.. பார்த்துட்டு சும்மா நிக்கிறீயே.. அவன் உன் புருஷன் டீ.. காப்பாத்து அவனை.. அடிக்க வேணாம்னு சொல்லு..” என்றார்.
அடுத்தவர்களின் வலியை.. துன்பத்தை கண்டு மகிழ்வது தவறு என புரிந்தாலும்.. அஞ்சலியால் தன் மனதில் தோன்றிய மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.
எங்க கால்ல வந்து விழுவ என தன்னை பார்த்து சொன்ன காஞ்சனா தன்னிடமே கெஞ்சுவதை பார்க்கும் போது அஞ்சலிக்கு லேசாக புன்னகை துளிர்த்தது.
“ஷ்..” என சிறு குழந்தைக்கு சொல்வது போல உதட்டில் விரல் வைத்து காஞ்சனாவை பார்த்து சொன்ன உதயா.. “இது என் வீடு.. இங்க தேவை இல்லாம சத்தம் போடக்கூடாது.. வந்ததே தெரியாம அமைதியா கிளம்பணும்..” என்றவன் சம்பத்தின் கையை விடுவித்தான்.
வலியில் துடித்த தன் மகனை கவனிக்க வேண்டிய நிலையில் இருந்த காஞ்சனா தாங்கள் வந்த வேலையை மறந்து.. பயந்து.. உதயாவின் வீட்டில் இருந்து வெளியேறினார்.
காஞ்சனாவும் சம்பத்தும் வெளியேறிய பின்னரே மனதில் நிம்மதியை உணர்ந்தாள் அஞ்சலி. விபு பசியில் அழ.. பசியாற்றுவதற்காக.. அறைக்குள் சென்றாள் அஞ்சலி.
சம்பத்திடம் நிதானமாக நடந்து கொண்ட போதிலும்.. உதயாவின் மனம் கோபத்தில் எரிமலையாக குமுறிக் கொண்டிருந்தது.
அஞ்சுவின் அருமை தெரியாத ஜென்மங்கள்.. இத்தனை கஷ்டத்தை கொடுத்த பின்னும்.. அடங்காமல்..இன்னும் அவளை துன்புறுத்த நினைக்கிறார்களே.. என உதயாவின் மனதில் எண்ணங்கள் எழுந்தன.
தன்னறைக்குள் சென்று தன் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போதும்.. உதயாவால் முடியவில்லை.
“அண்ணா.. நீ அஞ்சலி அக்காவை லவ் பண்ற தான..” என மகிழ்ச்சியுடன் மானசி அலற.. பதற்றத்துடன் அவளை பார்த்தான் உதயா.
சாரதாவும் ரவிச்சந்திரனும் அந்த அறையில் நின்றிருக்க.. தன் மனதை இவர்கள் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பது புரியாமல் விழித்தான் உதயா.
“எனக்கு தெரியும்.. உன்னை பார்த்தாலே தெரியுது..” என மானசி துள்ள.. இருந்த கோபமெல்லாம் காணாமல் போயிருக்க.. மெலிதாக புன்னகைத்தான் உதயா.
அப்போதுதான் சாரதாவும் ரவிச்சந்திரனும் நிற்பதை கவனித்தாள் மானசி. “அவசரப்பட்டு உளறிட்டோமோ..” என தோன்றியது மானசிக்கு.
அப்பா அம்மாவிடம் மாட்டி விட்டதுமில்லாமல்.. தன் அண்ணனே அவர்களை சமாளிக்கட்டும்.. என்ற உயர்ந்த எண்ணத்துடன் அறையில் இருந்து வெளியேறினாள் மானசி.
“உதய் மானசி கேட்டது..” என கேள்வியாய் ரவிச்சந்திரன் அவனை பார்க்க.. ஆம் என தலையசைத்தான் உதயா.
“எப்ப இருந்து டா..” என கேட்டார் ரவிச்சந்திரன்.
“தெரியலை ப்பா.. அஞ்சுவை எனக்கு பிடிக்கும்.. அவ்ளோதான்.. அதை தாண்டி நான் வேற எதுவும் யோசிச்சது இல்லை.. ஆனா.. அவ அன்னைக்கு அவங்க பண்ண டார்ச்சரை சொன்னப்ப.. இனி அவளும் குழந்தையும் என் பொறுப்பு.. நான் தான் அவங்களுக்கு எல்லாம்னு முடிவு பண்ணிட்டேன்..
இப்பலாம் எவ்ளோ யோசிச்சாலும் என் வாழ்க்கை அஞ்சு மட்டும் தான்னு தோணுது..” என்றான் உதயா தன் மனதை மறைக்காமல்.
உதயா சொன்னதை கேட்டு.. ரவிச்சந்திரன் மெலிதாக புன்னகைக்க.. சாரதா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
“அம்மா..” என உதயா அழைக்க.. மெல்ல அவனை பார்த்தவர்.. “உதி.. எ.. என்னால விபுவை உன்னோட குழந்தையா.. என்னோட பேரனா பார்க்க முடியுமானு எனக்கு தெரியலை..” என்றார்.
“நீங்களா ம்மா.. இப்டி பேசுறது.. நீங்க பெறாத என்னையே நீங்க மகனா ஏத்துக்கலையா..” என உதயா கேட்க.. சாரதாவின் கண்கள் கலங்கின.
உதயா பிறந்து ஆறு மாதங்களில் அவனை பெற்ற தாய் இறந்துவிட.. அதன்பின் ரவிச்சந்திரனை மணந்து கொண்டு.. இன்றுவரை உதயாவுக்கு தாயாக.. தோழியாக.. எல்லாமுமாக இருக்கும் சாரதாவிடம் இருந்து இது போலொரு வார்த்தையை உதயா எதிர்பார்க்கவில்லை.
“உதி.. அப்ப நீ இன்னும் என்னை யாரோவா தான் பார்க்கிறல்ல..” என கலங்கிய கண்களுடன் கேட்டார் சாரதா.
“அய்யோ அம்மா அப்டி இல்லை..” என உதயா பதற..”சாரதா.. இதென்ன பேச்சு..” என செல்லமாக கண்டித்தார் ரவிச்சந்திரன்.
“அம்மா.. அஞ்சுவோட வாழ்க்கையில நடந்த எல்லாம் தெரிஞ்சும்.. நீங்க இப்டி சொல்றதை தான் என்னால தாங்கிக்க முடியலை..”
“நா.. நான் முன்னாடி கேட்டப்ப நீ லவ்வானு லாம் தெரியலைனு சொன்னல்ல.. அதான் இப்ப நீ திடீர்னு இப்டி சொன்னதும்.. ஆனா ஏத்துக்க மாட்டேன்னு சொல்லலை டா..” என சாரதா விளக்கம் கொடுக்க.. அவர் கரம் பற்றி முத்தமிட்டான் உதயா.
சாரதாவும் உதயாவின் தலையை புன்னகையோடு வருடினார். அப்போது தான் உதயா அறை வாயிலில் நின்றிருந்த அஞ்சலியை கவனித்தான்.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top