💞 04 💞
அஞ்சலி ஏதும் கோபத்தில் விவாகரத்து முடிவுக்கு வந்திருக்க கூடுமோ என்ற எண்ணத்தில் சாரதா அவளிடம் கேட்க.. நடந்த எதையும் மறைக்காமல் சொன்னாள் அஞ்சலி.
அஞ்சலி எடுத்த முடிவில் எந்த தவறும் இல்லை என்பது சாரதாவுக்கு தெளிவாக புரிந்தது. ஆனால் இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து விட்டாளே என எண்ணி கவலையாக இருந்தது சாரதாவுக்கு.
அதே நேரம் உதயாவோ.. இனி அஞ்சலியும் குட்டிப் பையனும் தான் தன் வாழ்க்கை என உறுதியாக முடிவெடுத்தான்.
“எல்லா விவரமும் விசாரிச்சிட்டு.. நான் வக்கீல் கிட்ட கூட்டிட்டு போறேன் அஞ்சு..” என சொன்னான் உதயா.
ம்.. சரி என்றாள் அஞ்சலியும்.
நினைத்து பார்க்கையில் ஆழ்ந்து யோசிக்கையில் அஞ்சலி மீது தனக்கிருப்பது வெறும் ஈர்ப்பு மட்டுமல்ல.. நட்பு மட்டுமல்ல.. காதல் என தோன்றியது உதயாவுக்கு.
அம்மாவை தவிர வேறு யாரையும் உதி என அழைக்க அனுமதிக்காத நான் எப்படி.. அஞ்சுவை மட்டும் அனுமதித்தேன்.. என யோசித்தான் உதயா.
அஞ்சலி மீதிருப்பது நட்பா.. காதலா.. என எவ்வளவு யோசித்தாலும் அஞ்சலி மீதிருப்பது காதல் என மட்டுமே பதில் கிடைத்தது உதயாவுக்கு.
ஆனால் இப்போதிருக்கும் மனநிலையில் அஞ்சலி தன்னை.. தன் காதலை சொன்னால்.. அது அவளுக்கு செய்யும் உதவிக்கு கைமாறாக எதிர்பார்ப்பது போல தோன்றும்.. என எண்ணினான் உதயா.
தன் காதலை.. தன் அன்பை வெளிப்படுத்த இது சரியான தருணம் அல்ல என தோன்றியது உதயாவுக்கு.
அஞ்சலியின் மனநிலை கடந்த கால கசப்புகளில் இருந்து வெளிவந்த பின்.. தன் நேசத்தை முழுமையாக வெளிப்படுத்துவது குறித்து முடிவு செய்யலாம் என எண்ணினான் உதயா.
அன்று குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்த மானசி.. “அம்மா.. குட்டி பையனுக்கு பேர் எப்ப வைக்க போறோம்.. என்ன பேர் வைக்கலாம்..” என கேட்டாள்.
அப்போது தான் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்ற விவாதம் எழுந்தது.
ரவிச்சந்திரன்.. “அகிலன்.. இல்லைனா முகிலன்னு வைக்கலாமா..” என கேட்டார்.
சாரதா.. “மயூரன்..னு வைக்கலாம்..” என்றார்.
மானசி.. “சந்தோஷ்னு வைக்கலாம்.. எனக்கு பிடிச்ச சீரியல் ஹீரோ பேர்..” என்றவள்.. அத்துடன் நிறுத்தாமல்.. “அக்கா நீங்க அந்த சீரியல் பார்த்திருக்கீங்கல்ல.. சந்தோஷ் ஜனனி pair சூப்பரா இருப்பாங்கல்ல..” என அஞ்சலியுடன் பேச்சை தொடங்கினாள்.
அஞ்சலியும் சிரிப்புடன் அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருக்க.. “சரியான சீரியல் பைத்தியம்..” என அவள் தலையில் கொட்டினான் உதயா.
தன் தலையை தடவியபடியே.. “அண்ணா.. நீ இன்னும் எந்த பேரும் சொல்லலை..” என்றாள் மானசி.
“அஞ்சலி நீயும் இன்னும் சொல்லலையே டா.. என்ன பேர் வைக்கலாம்.. சொல்லு..” என அஞ்சலியை பார்த்து சொன்னார் ரவிச்சந்திரன்.
“விபு..” என ஒரே நேரத்தில் ஒலித்தது அஞ்சலி உதயா இருவரின் குரலும்.
அஞ்சலியும் உதயாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைக்க மற்றவர்களும் அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டனர்.
“இரண்டு பேரும் ஏற்கனவே பேசி வச்சிட்டீங்களோ..” என கேட்டாள் மானசி. எதுவும் பதில் சொல்லாமல் புன்னகைத்தனர் அஞ்சலியும் உதயாவும்.
இருவரின் மனமும் ஒன்றே என எண்ணிய உதயாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
குழந்தைக்கு பெயர் சூட்ட நல்ல நாள் ஒன்றை தேர்வு செய்தனர் சாரதாவும் ரவிச்சந்திரனும்.
அதற்கிடையில் ஒருநாள் உதயா அஞ்சலியை வக்கீலிடம் அழைத்துச் சென்றிருந்தான் சம்பத்துக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவதற்காக.
விவாகரத்து நோட்டீஸ் கையில் கிடைத்த பின்னரே அஞ்சலி பற்றி யோசித்தனர் காஞ்சனாவும் சம்பத்தும்.
“இந்த அளவுக்கு போயிருக்கான்னா.. அவளுக்கு ஹெல்ப் பண்றதுக்கு யார் இருக்கான்னு தெரிஞ்சுக்கணும் டா..” என்றார் காஞ்சனா சம்பத்திடம்.
“ம்..” என்ற சம்பத்தும் அஞ்சலி எங்கிருக்கிறாள்.. அவளுக்கு யார் உதவி செய்வது என்பதையெல்லாம் விசாரித்தான்.
“உதயா.. அவன் பேரு.. அவன் தான்.. அவளுக்கு ஹெல்ப் பண்றான்.. ஹாஸ்பிட்டல்ல இருந்து அவளை கூட்டிட்டு போனதும் அவன் தான்.. இப்ப அவன் வீட்டில தான் அவ தங்கியிருக்கா..” என காஞ்சனாவிடம் சொன்னான் சம்பத்.
“அவன் யாருடா.. அவளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்.. எதுவும் தூரத்து சொந்தமா..” என கேட்டார் காஞ்சனா.
“அதெல்லாம் ஒன்னுமில்லை.. ஸ்கூல்ல ஒன்னா படிச்சவனாம்..” என இளக்காரமாக சொன்னான் சம்பத்.
“ஏதோ சரியில்லை டா.. அவன் எதுக்கு அவளுக்கு ஹெல்ப் பண்ணனும்..” என கேள்வி எழுப்பினார் காஞ்சனா.
அஞ்சலியின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா.. எந்தக் குறையும் இன்றி வீட்டில் எளிமையாக நடந்தது.
வேறு யாரையும் அழைக்கவில்லை.. அஞ்சலியின் கடந்த காலம் குறித்து எதுவும் அறியாமல் அவள் மனம் நோகும்படி யாரும் எதுவும் சொல்லிவிடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையும் கூட.
பலூன்களும் கலர் பேப்பருமாக வீட்டில் அலங்காரம் செய்திருந்தான் உதயா.. அஞ்சலியும் மானசியும் அவனுக்கு உதவினர்.
குழந்தைக்கு பெயர் சூட்டி முடித்ததும் குழந்தையுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர் எல்லோரும். உதயா தான் எல்லோரையும் தன் போனில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான்.
சாரதாவும் ராமச்சந்திரனும் வேறு ஏதோ வேலையில் மூழ்கிவிட.. “அண்ணா.. நீ போ.. நான் உன்னை விபு கூட போட்டோ எடுக்கிறேன்..” என்றாள் மானசி.
உதயாவும் மானசியிடம் போனை கொடுத்து விட்டு.. குழந்தையுடன் நின்றிருந்த அஞ்சலியின் அருகில் நின்றான்.
மானசிக்கு ஏனோ அஞ்சலியையும் உதயாவையும் அருகருகே அதுவும் விபுவுடன் காணும் போது.. அழகான குடும்பமாக தோன்றியது.
ஏனோ வெளிப்படையாக சொல்லாமல்.. மகிழ்ச்சியுடன் அவர்களை போட்டோ எடுத்தாள். அப்போது அழைப்பு மணி ஒலிக்க எல்லோருடைய பார்வையும் வாயிலை நோக்கி திரும்பியது.
விபுவுடன் நின்றிருந்த அஞ்சலியையும் அவளருகில் நின்றிருந்த உதயாவையும் எரிச்சலுடன் பார்த்தபடி நின்றிருந்தனர் காஞ்சனாவும் சம்பத்தும்.
இவர்கள் எப்படி இங்கே.. என அஞ்சலி திகைப்புடன் பார்க்க.. தங்கள் எரிச்சல் பார்வையை மறைத்து இயல்பாக்கிக் கொண்டனர் காஞ்சனாவும் சம்பத்தும்.
“அஞ்சலி கண்ணு.. நீ இங்க தான் இருக்கீயா.. வீடுனா அப்டி இப்டி பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.. அதுக்குனு கோபப்பட்டு இப்டி அடுத்தவங்க வீட்டில வந்து தங்கலாமா.. வா.. நம்ம வீட்டுக்கு போகலாம்..” என குழைவான குரலில் அழைத்தார் காஞ்சனா.
“ஆமா அஞ்சலி.. வா.. நம்ம வீட்டுக்கு போகலாம்..” என்றான் சம்பத்.
கோபமாக சண்டை இட்டிருந்தால் கூட.. அடித்து விரட்டியிருக்கலாம்.. கொஞ்சி குழைவாக பேசுகையில்.. வீணாக சத்தமிட விரும்பாத மற்றவர்கள் என்ன பேசுவது என புரியாமல் தயக்கத்துடன் நின்றிருந்தனர்.
“நான் அனுப்பின டைவர்ஸ் நோட்டீஸ் கிடைக்கலையா மிஸ்டர் சம்பத்..” என இயல்பாக.. உறுதியான குரலில் கேட்டாள் அஞ்சலி.
வீட்டில் தன் அம்மா காஞ்சனா சொல்லிக் கொடுத்த பொறுமை எல்லாம் மறைந்து.. கோபத்துடன் அவளை பார்த்தான் சம்பத்.
விபு அழத்தொடங்க.. அஞ்சலி அவனை சமானதப்படுத்த.. “நீ டைவர்ஸ் பண்றதுல உறுதியா இருந்தா.. நான் இந்த குழந்தை என்கிட்ட தான் இருக்கணும்னு கேட்பேன்..” என்றான் சம்பத்.
லேசாக தடுமாறிய அஞ்சலி.. “இல்லை நா.. நான் கொடுக்க மாட்டேன்.. விபு என் குழந்தை..” என குழந்தையை இறுக பற்றினாள்.
அஞ்சலியின் பதற்றம் மேலும் பலம் தர.. சம்பத் காஞ்சனாவை பார்த்து புன்னகைத்தான். அவரும் பெருமிதமாக தன் மகனை பார்த்து புன்னகைத்தார்.
“உன் குழந்தையா..” என சிரித்த சம்பத்.. “நான் தான அந்த குழந்தைக்கு அப்பா.. இல்லை..” என இழுத்த சம்பத்.. உதயாவையை பார்த்தான் ஏளன சிரிப்புடன்.
“ச்சீ..” என அவன் பேச்சிலும் பார்வையிலும் அருவெறுப்பு தோன்ற.. முகத்தை திருப்பினாள் அஞ்சலி.
அதுவரை அமைதியாக நின்றிருந்த உதயா.. “இந்த குழந்தைக்கு அப்பா நீ இல்லை..” என்றான் சாதாரணமான குரலில்.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top