💞 03 💞
உதயா.. காலையில் அலுவலகத்திற்கு கிளம்பி வந்தான்.. இரவில் உறங்காததால் கண்கள் சிவந்து.
அவனை பார்க்கவே அஞ்சலிக்கு பாவமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த நாட்களிலும் எவ்வளவு மறுத்தும் கேளாமல் அஞ்சலியின் குழந்தையை இரவில் முழுக்க உதயாவே கவனித்துக் கொண்டான்.
உதயாவும் சரி.. மற்றவர்களும் சரி.. அஞ்சலியிடம் என்ன பிரச்சனை என்பது குறித்து எதுவும் கேட்கவில்லை.. ஆனால் அவளையும் குழந்தையையும் அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொண்டனர்.
தன் அப்பா அம்மா உயிரோடு இருந்திருந்தால் இவ்வளவு சந்தோஷமாக இருந்திருப்போமோ.. என தோன்றியது அஞ்சலிக்கு.
என்னதான் சம்பத்திடம் இருந்து விலகியிருந்தாலும்.. சட்டப்பூர்வமாக அவனை பிரிவது குறித்து அன்றுதான் எண்ணிப் பார்த்தாள் அஞ்சலி.
உதயா அன்று அலுவலகம் செல்லவில்லை என்பதால் வீட்டில் இருந்தான். அதுகுறித்து பேச எண்ணி உதயாவிடம் வந்தாள் அஞ்சலி.
“உதி.. அது.. அது..” என தயங்கினாள் அஞ்சலி.
“என்ன அஞ்சு.. சொல்லு..” என்றான் உதயா.
“அது.. டைவர்ஸ் பண்ணனும்.. அவனால திரும்பவும் எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாது எனக்கும் என் குழந்தைக்கும்..” என்றாள் அஞ்சலி.
இதைப்பற்றி யோசிக்கவில்லை என்பதால் என்ன பேசுவது என புரியாமல் அமைதியாக நின்றிருந்தான் உதயா.
அஞ்சலியின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த சாரதா.. “அஞ்சலி.. இந்த முடிவு நீ தெளிவா யோசிச்சு எடுத்தது தானா..” என கேட்டார்.
“என்மேல தப்பு இருக்கும்னு நினைக்கிறீங்களா ம்மா..” என கலங்கிய கண்களுடன் கேட்டாள் அஞ்சலி.
“அப்டி இல்லைடா.. இந்த மாதிரி விஷயத்துல அவசரப்பட்டுடக் கூடாதுல்ல.. அதான் கேட்கிறேன்..” என்றார் சாரதா.
அஞ்சலியும் நடந்தவைகளை மறைக்காமல் சொல்ல தொடங்கினாள்.
அப்பாவும் அம்மாவும் இறந்து ஆறு மாசம் ஆகிருந்துச்சு.. அக்காவுக்கு பாரீன்ல படிக்கணும்னு ஆசை இருந்துச்சு.. அப்பா அம்மா இருந்த வரைக்கும் அவளை போகவிடலை..
அப்பா அம்மா இறந்த பிறகு.. அக்கா இருந்த இடத்தையெல்லாம் வித்துட்டு.. பாரீன் கிளம்ப போறேன்னு சொன்னா.. என்னால அவளை தடுக்க முடியலை..
அதில கொஞ்சம் பணத்தை என் அக்கவுண்ட்ல போட்டுட்டு அவ கிளம்புறதா இருந்தா.. அப்பத்தான் சம்பத் வீட்டில இருந்து வந்து கல்யாணத்தை பத்தி பேசுனாங்க..
அக்கா விருப்பம் இல்லைனு சொல்லிட்டதால என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாங்க.. அப்ப அவங்களோட எண்ணம் முழுசா தெரியாது. எனக்குமே சம்பத்தை பிடிச்சிருந்துச்சா இல்லையானு லாம் சொல்ல தெரியலை.
சித்தி.. மாமா.. அத்தைனு எந்த சொந்தமும் இல்லாம தனியா இருக்கிற மாதிரி இருந்துச்சு.. எல்லாரும் பணத்துக்காக மட்டும் வேணா ஒட்டிக்கிற மாதிரி இருந்தாங்க.. அதனால.. கல்யாணம் ஆகிட்டா.. குடும்பம் குழந்தைனு சந்தோஷமா இருக்கலாம்னு தோணுச்சு.. அவங்க தூரத்து சொந்தம் தான்.. அதனால சரினு சொல்லிட்டேன்.
எல்லாமே நல்லபடியா தான் நடந்துச்சு.. அப்பா அம்மா என்கூட இல்லைன்றத தவிர.. அக்கா பாரீன் போய்ட்டா.. எப்பவாச்சு அதிசயமா போன் பண்ணுவா அவ்ளோதான்..
சம்பத் வீட்டில வேலை பார்க்கிறதுக்கு பங்கஜம் னு ஒரு அம்மா இருந்தாங்க.. எங்க கல்யாணம் நடந்த கொஞ்ச நாள்லயே.. அவங்கள வேலையை விட்டு நிறுத்திட்டு.. அவங்க ஏதோ ஊருக்கு போய்ட்டதா சொல்லி.. எல்லா வேலையையும் என்னை பார்க்க சொன்னாங்க..
ஒருநாள் மார்க்கெட் போகும் போது பங்கஜம் அம்மாவை பார்த்தப்ப.. அவங்களோட எண்ணம் புரிஞ்சாலும்.. நான் அதை பெருசா எடுத்துக்கலை.. நம்ம வீட்டில தான வேலை பார்க்கிறோம்னு நினைச்சுக்கிட்டேன்.
அப்பலாம் சம்பத்தும் என்கிட்ட பாசமா தான் இருந்தான்.. ஆனா அதெல்லாம் வெறும் நடிப்புனு அப்ப எனக்கு புரியலை.
கல்யாண செலவு அது இதுனு சொல்லி கொஞ்சம் கொஞ்சமா என்னோட பணத்தை செலவு பண்ணினாங்க.. பத்து லட்சம் மட்டும் பிக்ஸ்ட் டெப்பாசிட்ல போட்டுட்டு மத்த எல்லாத்தையும் அவங்க எப்டி வேணா செலவு பண்ணிக்கட்டும்னு கண்டுக்காம விட்டுட்டேன்..
தலை சுத்துது அடிக்கடி மயக்கமாக இருக்குன்னு ஹாஸ்பிட்டல்ல போய் செக் பண்ணிட்டு வந்தப்ப தான் இந்த குட்டிப்பையன் என் வயித்துல இருக்கிற விஷயம் தெரிஞ்சுது..
ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.. அப்பாவோ.. இல்லை அம்மாவோ.. எனக்கு குழந்தையா பிறப்பாங்கனு தோணுச்சு.. அந்த சந்தோஷத்தோட நான் வீட்டுக்கு வர்ற வழியில தான் சம்பத்தை மாயாவோட பார்த்தேன்.
அந்த மாயா அவ ப்ரண்டோட பேசிட்டு இருந்ததை கேட்டப்ப தான்.. அவளும் சம்பத்தும் எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே லவ் பண்ணதும்.. இப்பவும் அவங்க இரண்டு பேருக்கும் காண்டாக்ட் இருக்கிறதுனும் தெரிஞ்சுகிட்டேன்.
அப்பக்கூட குழந்தைனு வந்த பிறகு.. பழசை மறந்துட்டு என்கூட வாழ ஆரம்பிச்சிட மாட்டாரானு முட்டாள் மாதிரி நம்பினேன்..
மாயா பத்தி சம்பத்தே எல்லாத்தையும் என்கிட்ட சொல்ற வரைக்கும்.. நானா எதுவும் கேட்க விரும்பலை.. ஆனா சம்பத் எதையும் சொல்லாம என்கிட்டயும் கேசுவலா நடந்துக்கும் போது.. உடம்பெல்லாம் கூசும்.. அதனால விலகியே இருந்தேன்.. நானே விலகினது அவருக்கு நிம்மதியா இருந்துச்சு போல..
ஒரு தடவை கூட என்கூட செக்கப்புக்கு வந்தது இல்லை.. மசக்கையில நான் வாடிப்போய் இருந்தப்பக்கூட.. அதை பண்ணு.. இதை பண்ணுனு அத்தை வேலை சொல்லும் போது.. அம்மா அப்பா இல்லையேனு அழுகையா வரும்.. மாமா மட்டும் எப்பவாச்சும் கொஞ்சம் ஆறுதலா பேசுவாரு..
ஒரு நாள் கைநிறைய வளையல் போட்டு.. ஒரு கர்ப்பிணி பொண்ணை பார்த்தேன்.. அப்பா அம்மா இருந்திருந்தா வளைகாப்பு வச்சு எவ்ளோ ஆசையா கொண்டாடி இருப்பாங்கனு தோணுச்சு..
ஆசையா சம்பத் கிட்ட அதை பத்தி சொன்னப்ப.. உனக்கு அது ஒன்னு தான் கேடுனு பேசினான்.. தாங்கிக்க முடியாம.. இதே அந்த மாயா கேட்டிருந்தா பண்ணிருப்பல்ல..னு நானும் சண்டை போட்டேன்.
அன்னைக்கு அவனே எல்லாத்தையும் ஒத்துக்கிட்டான்.. சொத்துக்காக மட்டும் தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு..
இந்த நரகத்துல இருந்து தப்பிச்சு எங்கையாவது போயிட மாட்டோமானு.. இருக்கும்.. செத்து போலாம்னு கூட தோணும்.. வயித்துல இருந்த இந்த குழந்தைக்காக உயிர் வாழணும்னு எப்படியோ சகிச்சிட்டு இருந்தேன்.
ஒருநாள் அந்த மாயாவோட வீட்டுக்கு வந்தான் சம்பத்.. ஏதோ பெரிய மகாராணி வந்தது மாதிரி அவளை உபசரிச்சாங்க அத்தை..
அதோட நிறுத்தலை அவங்க.. அப்பா அம்மா நியாபகமா இருக்கட்டும்னு அக்காவையே நான் விற்க விடாத அந்த வீட்டை சம்பத் பேரில எழுதி தரச்சொன்னாங்க.. நான் முடியாதுனு சொன்னேன்.. இனி அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு அன்னைக்கு தான் முடிவு பண்ணேன்..
அந்த நேரம் பிரசவ வலியும் வந்திட.. என்னை ஹாஸ்பிட்டல்ல கொண்டு சேர்த்தாங்க.. இந்த குழந்தை முகத்தை பார்க்க கூட யாரும் வரலை..
இரண்டு நாள் கழிச்சு திரும்பவும் வந்து.. வீட்டை எழுதி தர சொன்னாங்க.. அவங்ககிட்ட கோபமா பேசிட்டாலும் இந்த குழந்தையை எப்டி பார்த்துக்க போறேன்னு பயம் தான்.. உதியை பார்க்கிற வரைக்கும்.. என சொல்லியபடியே அஞ்சலி உதயாவை பார்க்க.. அந்த நொடியில்.. அஞ்சலி மட்டுமல்ல.. குழந்தையும்.. இனி என் பொறுப்பு.. என் சொந்தம்.. என் உயிர்.. என முடிவெடுத்தான் உதயா.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top