❤ 03
சித்ரா தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள கீழ் உதட்டை பற்களால் அழுந்தப் பற்றிய அந்தக் காட்சி.. செழியனை கடந்த காலத்திற்கு இழுத்துச் சென்றது.
❤❤
கல்லூரியின் முதல் நாள்..
பள்ளிக் காலத்திலிருந்தே நண்பர்களான செழியன்.. ஆர்த்தி.. மற்றும் மிதுன்.. ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் மீண்டும் இணைந்திருந்தனர்.
வகுப்பில் நுழையும் போதே கண்களில் ஒரு மிரட்சியுடன் நுழைந்த சித்ரா.. ஆர்த்தியின் அருகில் அமர்ந்தாள். அவர்கள் இருவரும் சற்று இணக்கமாக பேசிக் கொண்டனர். அப்போதே செழியனின் கவனத்தையும் ஈர்த்து விட்டாள் சித்ரா.
முதல் நாள் முழுக்க அறிமுகப் படலம் தான்.. அப்போது "எல்லாரும் உங்க பேர்.. உங்க அப்பா அம்மா பேர்..அப்பா அம்மா என்ன பண்றாங்கனு கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்க.. அப்பத்தான் நேரம் போகும்.." என்றார் பேராசிரியர்.
ஒவ்வொருவராக எழுந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். சித்ராவின் முறை.. "என் பேர் சித்ரா.. அப்பா பேர் பாண்டியன்.. அம்மா பேர் கமலி.."என சொன்னாள் சித்ரா.
"அப்பா என்ன பண்றாங்க மா.."என இயல்பாக பேராசிரியர் கேட்க.. தன் இதழ்களை அழுந்த கடித்தபடி.. தலையை குனிந்து கொண்டாள் சித்ரா.
சில நொடிகள் கடந்த பின்.. "அப்பா தவறிட்டாங்க.."என்றாள் சித்ரா.
"சாரி மா.. நீ போய் உட்காரு.." என்றதும் தன் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள் சித்ரா.
அவளை சமாதானம் செய்வதாக எண்ணி.. ஆர்த்தி மெல்ல அவள் கைகளை பற்றிக் கொண்டாள். ஆர்த்தியின் முகம் நோக்கிய சித்ரா.. மெல்ல புன்னகைத்தாள்.. அதில் லேசான சோகம் வழிந்தோடியது.
அந்த சோகத்தை எப்படியாவது போக்கிவிட வேண்டும் என்ற ஏக்கம்.. செழியனுக்கு மட்டுமின்றி மிதுனுக்கும் இருந்தது.
அன்று மதிய உணவு இடைவேளையில்.. ஆர்த்தி தன் நண்பர்கள் செழியனையும் மிதுனையும் சித்ராவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
"இவன் செழியன்.. இவன் மிதுன்.. இரண்டும் சரியான அறுந்த வாலுங்க.. பார்க்கிறதுக்கு தான் அமைதியா தெரிவாங்க.." என ஆர்த்தி செழியனையும் மிதுனையும் சித்ராவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
சித்ரா அவர்கள் இருவரையும் பார்த்து நட்புடன் புன்னகைத்தாள். அப்போது மிதுன்.. "சித்ரா.. பேர் கொஞ்சம் பழைய பேர் மாதிரி இருக்குல்ல.. நான் சித்து..னு தான் கூப்பிடுவேன்.. இனி.." என்றான்.
விழிகள் லேசாக சந்தோஷத்தில் ஒளிர்ந்தது சித்ராவுக்கு.. "அப்பாவும் சித்துனு தான் கூப்பிடுவாங்க.." என்றாள்.
"அப்ப ரொம்ப நல்லதா போச்சு.." என மிதுன் சொன்னான்.
அன்று முதலே எல்லாருக்கும் சித்து ஆகிவிட்டாள் சித்ரா. மூவராக இருந்த நட்பு வட்டமும் நால்வராக மாறிப் போனது.
சித்ராவின் அப்பா தவறி சில மாதங்கள் தான் ஆகிறது. அவளுடைய அம்மா தற்போது மாமா வீட்டில் இருக்கிறார்கள்.. சித்ராவுக்கு கல்லூரி முடியும் வரை விடுதி வாசம்.. என்பது ஆர்த்தி மூலம் செழியனும் மிதுனும் அறிந்த சேதி
செழியன் நன்றாக படிப்பான்.. அவனுடன் பிறந்தது அக்கா மட்டும்.. மிதுனுக்கு பண வசதியில் எந்தக் குறையுமில்லை.. ஆனால் அவன் மட்டும் தனியாக வசிக்கிறான்.. அவனுடைய அப்பா அம்மா பிரிந்து வாழ்கிறார்கள் என்பது ஆர்த்தி வாயிலாக சித்ரா அறிந்த சேதி.
அப்பா அம்மா இருந்தும் அன்பிற்கு ஏங்கும் வாழ்க்கை மிதுனுக்கு என அவன் மீது சற்று இரக்கம் தோன்றியது சித்ராவுக்கு.
"மிதுன் வீட்டில தான் நாங்க எல்லாரும் எப்பவும் ஒன்னா உட்கார்ந்து படிப்போம்.. செழியன் நல்லா படிப்பாங்கிறதால.. எதுவும் டவுட்னா அவன் சொல்லிக் கொடுப்பான்.. மிதுன் விளையாடிட்டே இருக்கிற மாதிரி தான் இருக்கும்.. ஆனா அவனும் நல்லா தான் படிப்பான்.. நான் லாம் கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் எல்லாத்தையும் மண்டையில ஏத்திக்குவேன்.. அவங்க இரண்டு பேரும் ரொம்ப அசால்ட்டா எல்லாத்தையும் படிச்சிடுவாங்க.." என சித்ரா கேட்காமலே செழியன் மிதுன் பற்றிய எல்லா விவரங்களையும் ஆர்த்தி சொல்லி விட்டாள்.
அடுத்த நாள் முதல் மதியம் சித்ராவுக்கு விடுதி சாப்பாடு இல்லை.. மிதுன் தன் வீட்டில் இருந்து கொண்டு வந்தான்.
"பொன்னம்மா சமைச்சது தான்.. தைரியமா சாப்பிடு.."என சித்ராவிடம் சாப்பாடை நீட்டினான் மிதுன்.
சித்ராவும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். அப்போது ஆர்த்தி.. "எங்களுக்கு லாம் என்னைக்காவது இப்டி சாப்பாடு கொண்டு வந்துருக்கீயா.." என கேட்டாள் மிதுனிடம்.
"உனக்கு என்ன.. நீ வீட்டில அம்மா சமைச்சது தான சாப்பிடுற.. அவ ஹாஸ்டல்ல இருக்கா.. அதான் பொன்னம்மா கிட்ட அவளுக்கும் சேர்த்து சமைக்க சொன்னேன்.." என்றான் மிதுன் விளக்கமாக.
"இருந்தாலும்.."என ஆர்த்தி இழுக்க.. மிதுன் பேச்சை மாற்றி விட்டான்.
செழியனும் ஆர்த்தியும் மிதுன் சித்ரா மீது காட்டும் நேசம் நட்பென்று எண்ணினர். ஆனால் நட்பை தாண்டியதோர் பந்தம் துளிர் விடுவதை மிதுனும் சித்ராவுமே அறிந்திருக்க வில்லை.
❤❤
பழைய நினைவுகளில் இருந்து தன்னை ஒருவழியாக மீட்டுக் கொண்ட செழியன் சித்ராவிடமும் கமலியிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
மகள் திருமணத்தை பற்றி பேசுவதை தவிர்ப்பது நன்றாகவே புரிந்தது கமலிக்கு. ஆனால் இன்னும் எவ்வளவு காலம் இப்படியே அவள் இருக்க முடியும் என எண்ணிக் கொண்டார் கமலி.
அடுத்த நாள் வழக்கம் போல வேலைக்கு கிளம்பினாள் சித்ரா. அவசரத்தில் கையில் கிடைத்த ஏதோ ஓர் புடவையை வேகமாக கட்டிக் கொண்டு கிளம்பினாள் கல்லூரி பேருந்தில்.
இ.. இது அவன் கொடுத்த புடவை.. என எண்ணும் போது கண்களில் வழிய துடித்த நீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள் சித்ரா.
அன்றைய நாள் முழுக்க அவன் நினைவில் தவித்தாள் சித்ரா.
"சித்துமா நான் உனக்காக தேடித் தேடி வாங்கின புடவை இது.. பர்ஸ்ட் டைம் உனக்காக கொடுக்கிறேன்.. அது உனக்கு பொருத்தமா இருக்கணும்.. இந்த சேரியை கட்டி.. அதுக்கு மேட்ச்சா இந்த நெக்லஸையும் உன் கழுத்தில போட்டுக்கோ.." என மெல்ல அவள் கழுத்தை வருடிய அவன் விரல்களின் அந்த தீண்டல்..
இன்னும் வேண்டும்.. இப்போதும் கூட வேண்டும் அந்த விரல்களின் மெல்லிய தீண்டல்.. என ஏக்கமாக இருந்தது சித்ராவுக்கு.
வகுப்புகள் முடிந்து எல்லோரும் கிளம்பினாலும் நகர பலமின்றி தன் இடத்தில் இருந்த மேஜையில் தலைவைத்து படுத்திருந்த சித்ராவின் நினைவு பின்னோக்கி சென்றது.
❤❤
விடுதி வாசம்.. பழகி விட்டிருந்தது.. நல்ல நட்பு.. ஆர்த்தி செழியன் மிதுன் எல்லாரும் சித்ராவிடம் நட்புடன் பழகிய விதம் அவள் மனதை ஈர்த்தது.
அப்பாவின் இழப்பின் வலி கூட சற்று மறக்கத் தொடங்கி இருந்தாள் சித்ரா. படித்து முடித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தவிர்த்து வேறெந்த ஆசையும் அவளுக்கு பெரிதாக தோன்றியதில்லை..
என்னதான் மாமா நன்றாக பார்த்துக் கொண்டாலும்.. அத்தையின் கடுகடுப்புக்கு பயந்தோ.. இல்லை.. தன் சுய சம்பாத்தியம் இருக்க வேண்டும் என்று எண்ணியோ கமலி.. தனக்கு தெரிந்த டெய்லரிங் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஏக்கம் எப்போதும் சித்ராவுக்கு இருந்தது.
ஏன் என சித்ராவுக்கு புரியவில்லை.. அன்று காலை எழுந்தது முதலே அப்பாவின் நினைவு வாட்டி வதைத்தது. வேறு எதிலும் கவனத்தை திருப்ப இயலவில்லை.
விடுதியில் அரைகுறையான காலை உணவோடு.. வகுப்புக்கு வந்தாள்.. வகுப்பிலும் முழு கவனம் இருக்கவில்லை.
மதிய உணவு இடைவேளை.. சாப்பிடக் கூட தோன்றாமல் பெஞ்சில் தலைவைத்து படுத்தாள் சித்ரா.
என்னவாயிற்று என மற்ற மூவருக்கும் புரியவில்லை.. சித்ரா ஏதோ இனம்புரியா கவலையில் தவித்துக் கொண்டிருந்தாள்.
செழியன் ஆர்த்தியை அழைத்து சித்ராவை காட்டி என்னவாயிற்று என கேட்டான். அதற்கு ஆர்த்தி தெரியவில்லை என்றாள்.
படுத்திருந்த சித்ராவின் தலையை மென்மையாக வருடியது ஒரு கை.. "சித்து மா.."என்ற அழைப்பு அவள் உயிரை ஊடுருவிச் சென்றது.
படபடப்புடன் மெல்ல விழிகளை திறந்த சித்ராவின் எதிரில் நின்றிருந்தான்.. ❤❤
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top