❤ 6 ❤
மித்ராவின் உடலை தென்றல் இதமாக வருடியபடி இருக்க.. "ஐ லவ் யூ மித்ரா.."என்ற அந்தக் குரல் மித்ராவின் இதழ்களில் புன்னகையை தவழச்செய்தது.
தன் மடியில் படுத்திருந்த அவன் தலைகோதியபடி.. அவன் முகத்தில் தனக்கான காதலை கண்டாள் மித்ரா.
ஆதி.. மித்ராவை இழுத்து தன் இதழ்களால் அவள் இதழ்களை ருசிக்கத் தொடங்க.. பதறி எழுந்தாள் மித்ரா.
"ச்சே.. கனவா.. எனக்கு மட்டும் ஏன் இப்டிலாம் கனவு வருது.. அன்னைக்கு கடையில ஒரு இரண்டு செகண்ட் பார்த்திருப்பேனா அவனை.. கனவில.. அவன்.. ச்சே.."என மனதிற்குள் சலித்தபடி மணியை பார்த்தாள் மித்ரா.
அதிகாலை 4.30.. இனிமே படுத்தாலும் தூக்கம் வராது.. ஆனாலும் என்ன செய்ய.. சற்று நேரம் படுத்திருக்கலாம் என படுத்தாள் மித்ரா.
மீண்டும் மீண்டும் கனவில் கண்ட ஆதியின் முகம்.. அந்தக் கண்கள்.. அதில் இருந்த காதல்.. இவைதான் மித்ராவின் மனத்திரையில் நிறைந்திருந்தது..
சாரு கண்விழித்ததும் ஏதோ யோசனையில் சோர்வாக அமர்ந்திருந்த மித்ராவை கண்டாள்.
"மித்ரா என்னாச்சு.. உடம்பு சரியில்லையா.."என சாரு கேட்டதும் தான் ஆதியின் நினைவிலிருந்து மீண்டாள் மித்ரா.
"அதெல்லாம் ஒன்னுமில்லை.."என பதிலளித்தாள் மித்ரா.
"ஏன் டல்லா இருக்க.. என்னாச்சு.."என பதற்றமாக கேட்டாள் சாரு.
என்ன பதில் சொல்வதென தெரியாமல் யோசித்தாள் மித்ரா சில நொடிகள்..
"இன்னைக்கு கார்த்திக்கு கடைசி எக்ஸாம்.. அப்பா இதுநாள்வரை குடிக்கலை.. இனிமேலும் அப்டியே இருந்தா நல்லாருக்கும்.. அதான் யோசிச்சிட்டு இருந்தேன்.."என சமாளித்தாள் மித்ரா.
"அதெல்லாம் எல்லாம் நல்லபடியா நடக்கும்.. நீ சந்தோஷமா இரு.."என்ற சாருவுக்கு மெல்லிய புன்னகையை பதிலாக தந்தாள் மித்ரா.
"சரி நான் கிளம்புறேன்.. இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.."என்றபடி கிளம்பினாள் மித்ரா.
வேலையில் தன் முழு கவனத்தை செலுத்த முடியாமல் சற்று தடுமாறினாள் மித்ரா.
"எனக்கு அவன் பேர் என்னனு கூட தெரியாது. இனி அவனை சந்திக்கவும் போறதில்லை.. இந்தக் கனவு வெறும் கனவு.. இனி அதைப்பத்தி நான் யோசிக்கக் கூடாது.."என தனக்குள்ளே பேசி முடிவெடுத்தாள் மித்ரா.
கவினிடம் சென்று.. "சார்.. மீட்டிங் எத்தனை மணிக்கு.."எனக் கேட்டாள் மித்ரா.
"மதியம் இரண்டு மணிக்கு.. lunch முடிச்சிட்டு கிளம்பலாம்.. சரியா இருக்கும்.."என கவின் சொன்னான்.
"ஓகே சார்.."என சொல்லிவிட்டு வந்து மித்ரா தன் வேலைகளை தொடர்ந்து பார்க்கலானாள்.
இந்த மீட்டிங் முடிச்சதும் ஊருக்கு கிளம்பலாம்.. கார்த்தியையும் அப்பாவையும் பார்த்துட்டு வரலாம்.. என முடிவெடுத்த மித்ரா.. அந்தக் கனவையும் ஆதியின் முகத்தையும் சற்று மறந்திருந்தாள் மித்ரா.
கவினுடன் ஆதியின் அலுவலகத்திற்கு சென்றாள் மித்ரா.. தான் சந்திக்கப் போவது யாரென்பதை அறியாமல்..
"சார்.. ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்காங்க.. 10 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க.."என சொல்லிச் சென்றாள் அந்தப்பெண்.
கவினும் மித்ராவும் அங்கே காத்திருந்தனர். மித்ரா அந்த அறையை வெறுமனே வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு.. அங்கு வந்த சதீஷ்.. கவினிடம்.. "ஹலோ கவின்.. இந்த மீட்டிங் இப்ப முடிஞ்சிடும்.. சாரி லேட் ஆனதுக்கு.."என சொன்னான்.
"இட்ஸ் ஓகே.."என கவினும் புன்னகைத்தான்.
"போன் சைலண்ட்ல இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க.. மீட்டிங்ல இருக்கும் போது எதாவது டிஸ்டர்ப் ஆனா சார் கோபப்படுவாங்க.. அதான்.."என சதீஷ் சொல்லிக் கொண்டிருக்க.. மித்ராவின் போன் ரிங் ஆனது.
கவினும் சதீஷும் மித்ராவை பார்க்க.. மித்ரா பதற்றமாக.. "சாரி.."என சொன்னாள்.
"இட்ஸ் ஓகே.. நீங்க பேசுங்க.."என சதீஷ் சொன்னான்.
"சாரி சார்.."என மித்ரா கவினிடம் சொல்லிவிட்டு தன் போனை பார்த்தாள்.
கார்த்தி தான் போன் பண்ணியிருந்தான். வழக்கமாக மித்ரா தான் போன் செய்வாள்.. ஆனால் ஏன்..
சிறுபதற்றத்தோடு.. போனை அட்டெண் செய்த மித்ராவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
கவின்.. "மித்ரா.."என அழைக்க.. "சா.. சார்.. நான் உடனே போகணும்.."என சொன்னாள் மித்ரா.
"மித்ரா.. என்னாச்சு.."என அவளின் வெளிறிய முகம் கண்டு பதறியபடி கவின் கேட்டான்.
"அ.. அது.. சார்.. ப்ளீஸ்.. நான் போகணும்.. ஒரு emergency.."என பதறினாள் மித்ரா.
கவின் அவள் பதற்றத்திலே ஏதோ பிரச்சனை என புரிந்து கொண்டான். "சரி.. ஓகே.. நீங்க.. கிளம்புங்க.."என்றான் கவின்.
கவின் கிளம்பச் சொன்னதும் அங்கிருந்து உடனே கிளம்பினாள் மித்ரா.
கவினை அழைப்பதற்காக வந்த சதீஷ்.. "என்ன அவங்க கிளம்புறாங்க.."எனக் கேட்டான்.
"Emergency.. அதான்.."என பதிலளித்தான் கவின்.
அதன்பிறகு ஆதியுடனான மீட்டிங் முடிந்ததும் கவின் மித்ராவுக்கு போன் செய்தான்.
ஆனால் மித்ராவிடம் இருந்து பதிலேதும் இல்லை.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top