WatTruyen.Top

தொடுவானம்

❤ 05 ❤

jamunaguru

மித்ரா ஆபிஸில் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது மஞ்சு மித்ராவிடம்.. "மித்ரா.. கவின் சார் உன்னை கூப்பிடுறாங்க.."என்றாள்.

"சரி.. நான் போய் பார்க்கிறேன்.."என மஞ்சுவிடம் பதிலளித்து விட்டு.. மித்ரா கவினின் அறைக்கு சென்றாள்.

"உட்காருங்க மித்ரா.."என்றான் கவின்.

"தேங்க் யூ சார்.."என்றபடி உட்கார்ந்தாள் மித்ரா.

"மித்ரா.. ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட் இது.. இதோட பொறுப்பை நான் உங்ககிட்ட ஒப்படைக்கலாம்னு நினைக்கிறேன்.." என கவின் சொல்ல எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள் மித்ரா.

"ஆதி group of industries அவங்களோட 25th year செலிப்ரேட் பண்ற eventக்கான proposal கேட்ருக்காங்க. அது அவங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு வருஷத்துக்கான அவங்களோட events எல்லாம் நாமளே மேனேஜ் பண்ணலாம்.."என கவின் சொன்னான்.

"Oh.. its a great offer sir.. but.. நான் எப்டி.."என மித்ரா இழுத்தாள்.

"நீங்க betterஆ பண்ணுவீங்கனு நம்புறேன்.. அதான் நான் இதை உன்கிட்ட ஒப்படைக்கிறேன்.."என கவின் சொன்னதைக் கேட்டதும் மித்ரா சரியென ஒப்புக்கொண்டாள்.

கவினிடம் தனக்கு தேவையான விவரங்களை கேட்டுக் கொண்டு மித்ரா தன் வேலையை பார்க்கலானாள்.

பத்து நாட்களுக்கும் மேலாக கடந்திருந்தது.

மித்ரா தன் வேலையை சிறப்பாக செய்து முடித்திருந்தாள். கவின் ஆதி group of industriesல் இருந்து வரும் பதிலுக்காக காத்திருந்தான்.

மித்ராவின் சந்தோஷத்தை பார்த்த சாரு.. "என்ன மித்ரா.. திரும்பவும் உன் ராஜகுமாரன பார்த்தீயா.."எனக் கேட்டாள்.

"அதெல்லாம் ஒன்னுமில்லை.. கார்த்திக்கு போன் பண்ணிருந்தேன்.. அவனுக்கு எக்ஸாம் ஆரம்பிச்ச பிறகு அப்பா குடிக்கலைனு சொன்னான்.. அதான் சந்தோஷமா இருக்கேன்.."னு மித்ரா சொன்னாள்.

"ஹே.. சூப்பர்ல.. அப்டியே உன் ராஜகுமாரனும் வந்து சேர்ந்துடணும்.."என சொன்ன சாருவின் குழந்தைத்தனத்தை எண்ணி சிரிப்பு தான் வந்தது மித்ராவுக்கு.

"நல்ல விஷயம்லாம் நடந்துருக்கு.. எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடு மித்ரா.."என சாரு கேட்டாள்.

"சரி நாளைக்கு வெளியே போகலாம்.." என சொன்னாள் மித்ரா.

"ஹை.. சூப்பர்.. அச்சோ அப்ப நான் இன்னும் துணி துவைக்கலை.. துவைச்சிட்டு வந்துடுறேன் மித்ரா.."என்றபடி சாரு இடத்தைக் காலி செய்தாள்.

பால்கனியில் வந்து நின்ற மித்ராவின் மீது சூரியனின் பொன்னிற கதிர்கள் விழுந்து கொண்டிருந்தன.

மித்ராவின் மனம் நிம்மதியாக இருந்தது. கார்த்தி கண்டிப்பாக நல்ல மதிப்பெண் வாங்கிவிடுவான்.. எப்படியாவது அவனை டாக்டராக்கி விடவேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தாள் மித்ரா.

***

ஆதி group of companies..

குளிரூட்டப்பட்ட அந்த அறையில் அதன் MD ஆதி தன் கையிலிருந்த பேனாவை ரசித்துக் கொண்டிருந்தான்.

பேனாவில் ரசிக்க என்ன இருக்கிறது.. இப்படி அந்தப் பேனாவை பார்த்துக் கொண்டிருக்கிறான் இவன்.. என தான் அவனை பார்க்கும் எல்லோருக்கும் தோன்றும்.

ஆதியின் கண்களுக்கோ அந்தப் பேனாவில் தெரிந்தது மித்ராவின் முகம்.

அவளை தன் கைகளில் தாங்கிய நொடியிலிருந்து ஆதி தன்னையே தொலைத்திருந்தான்.

அவள் தோழி அவளைக் கிண்டல் செய்த போது அவள் முகம் எப்படி சிவந்தது.. அச்சோ அவள் எவ்வளவு அழகாக இருந்தாள்.. அவளை ஓரக்கண்ணால் ரசித்த ஆதி அந்த அழகை அறியாமல் இருப்பானா..

அவள் தோழி.. அவர் தான் உன் ராஜகுமாரன் என்று சொன்னதும் இல்லையென மறுத்து அவள் தோழியை அங்கிருந்து இழுத்துச் சென்றாள்.

அவளுக்கு நான் ராஜகுமாரனாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் என் வாழ்வின் வசந்தம் அவள்.. அவள் என்னவள்.. அவளை இனி எப்போது சந்திக்கப் போகிறேனோ.. என மனதிற்குள் தவித்துக் கொண்டிருந்தான் ஆதி.

ஆதியை கனவுலகிலிருந்து கலைத்தான் சதீஷ்..

"பாஸ்.. eventக்கான proposalலாம் இந்த fileல இருக்கு.. நீங்க பார்த்து எது okனு சொல்லிட்டீங்கன்னா.."என சதீஷ் பேசிக் கொண்டிருக்க.. அந்த பைலை வாங்கினான் ஆதி.

எல்லாவற்றையும் தன் பார்வையாலே அலசிமுடித்த ஆதி.. "சதீஷ்.. இந்த கவின் events proposalஐ final பண்ணிக்கலாம்.. அவங்களோட ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணிடு நாளைக்கு.."என தன் முடிவை அறிவித்தான்.

"ஓகே பாஸ்.. நான் பாத்துக்கிறேன்.."என சொல்லிச் சென்றான் சதீஷ்.

"உன்னை எப்ப மறுபடி பார்க்கப் போறேனோ.. சீக்கிரமா என்கிட்ட வந்துடு.."என பேனாவை பார்த்தபடி.. தன் மனதிற்குள் பேசத் தொடங்கினான் ஆதி.

***

கவின் முரளியிடம்.. "முரளி நான் சொன்னேன்ல.. கண்டிப்பா மித்ரா prepare பண்ற proposal ok ஆகிடும்னு.."என சந்தோஷமாக சொன்னான்.

"அதெல்லாம் இருக்கட்டும் டா.. நீ முதல்ல உன் லவ்வ மித்ரா கிட்ட சொல்லு.."என முரளி சொன்னான்.

"நான் இப்ப சொன்னா அவ கண்டிப்பா அக்சப்ட் பண்ணிக்க மாட்டா.. அப்புறம் அவளுக்கு இங்க வேலை பார்க்கிறது கஷ்டமா இருக்கும்.. அதான் நான் யோசிக்கிறேன்.."என கவின் சொன்னான்.

"சரி டா உன் இஷ்டம்.. ஆனா ரொம்ப தள்ளிப்போடாத.."என முரளி சொல்ல.. சரியென தலையாட்டினான் கவின்.

மித்ராவை அழைத்து.. அவளுடைய திறமையால் ஆதி group of industriesன் 25வது ஆண்டு celebration event தங்களுக்கே கிடைத்திருப்பதை சொன்னான் கவின்.

"மித்ரா.. நாளைக்கு அவங்களோட ஒரு மீட்டிங் இருக்கு.. நீங்களும் வர வேண்டி இருக்கும்.."

"ம்.. ஓகே சார்.."என மித்ரா அங்கிருந்து நகர்ந்தாள்.

#மித்ராவும் ஆதியும் சந்திக்க நேர்ந்தால்.. ❤❤

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top