WatTruyen.Top

தொடுவானம்

❤ 7 ❤

jamunaguru

மித்ராவுக்கு போன் செய்த கார்த்தி.. அழத்தொடங்கினான்.

ஏதும் புரியாத மித்ரா.. "கார்த்தி.. என்னாச்சு சொல்லு.."என பதறினாள்.

"அக்கா.. அப்..பா.. அப்பாவுக்கு நெஞ்சுவலி.. ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கேன்.. நீ வா அக்கா.. எனக்கு பயமா இருக்கு.."என கார்த்தி அழுது கொண்டிருந்தான்.

அதிர்ச்சியில் உறைந்த மித்ரா.. "கார்த்தி.. நீ பயப்படாத.. அக்கா வந்துடுறேன்.."என அவனை தேற்றினாள்.

செய்வதறியாது உறைந்து நின்றவளை கவினின் குரல் தான் உணர்வுக்கு கொண்டு வந்தது.. அங்கிருந்து உடனே கிளம்பினாள்.

பயந்து அழுது கொண்டிருந்த கார்த்தியை ஆறுதல் படுத்திய மித்ரா.. டாக்டர் வந்து.. சீனிவாசனின் உயிர் பிரிந்துவிட்டது.. என கூறியதும் உடைந்து போனாள்.

தெரிந்தவர்கள் உதவியுடன் சீனிவாசனின் இறுதிச்சடங்கை முடித்தனர் மித்ராவும் கார்த்தியும்.

நடந்ததை அறிந்து அங்கு சாரு வந்தபோது.. அழுது ஓய்ந்த கண்களோடு கார்த்தி.. மித்ராவின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தான்.

கலங்கிய கண்களோடு சாருவை அணைத்துக் கொண்டாள் மித்ரா.

சாரு தான் கார்த்தியையும் மித்ராவையும் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தாள். தெரிந்த ஒருவர் மூலமாக வீட்டை விற்க ஏற்பாடு செய்தாள் மித்ரா.

மித்ராவின் அப்பா இறந்ததை கேள்விப்பட்ட கவின் மித்ராவை காண வந்திருந்தான்.

அவனிடம் மித்ரா.. "சார்.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா.."எனக் கேட்டாள்.

"என்ன பண்ணனும்னு சொல்லுங்க.."

"எங்களுக்கு தங்குறதுக்கு ஒரு வீடு வாடகைக்கு வேணும்.. இந்த வீட்டை விற்க ஏற்பாடு பண்ணிட்டேன்.. அதான்.."என சொன்னாள் மித்ரா.

"சரி.. நான் பாத்துக்கிறேன்.."என கவின் உறுதியளித்தான்.

மித்ராவும் கார்த்தியும் வேறு வீட்டுக்கு மாறும் வரை எல்லா உதவியையும் உடனிருந்து கவின் செய்தான்.

மித்ராவுக்கு தன் வாழ்க்கையே ஒரு நொடியில் தலைகீழாக மாறியதை போல இருந்தது.

தான் அழுதால்.. கார்த்தியும் அழுவான்.. என மித்ராவுக்கு தெரியும். அதனாலே தன் கவலைகளை மனதோடு புதைத்துக் கொள்ள பழகியிருந்தாள்.

அழுகை வந்தால் கூட அதை கட்டுப்படுத்திக் கொள்வாள் மித்ரா.

தன் பலவீனம் கார்த்தியை பாதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் மித்ரா.

சில நாட்களிலே மீண்டும் வேலைக்கு செல்ல தொடங்கினாள் மித்ரா. கவினுக்கு மித்ராவின் நிலை கஷ்டமாக இருந்தது.

வழக்கமான உற்சாகம் இல்லாமல் கடமையென தான் எல்லா வேலைகளையும் செய்தபடி இருந்தாள் மித்ரா.

கவின் மித்ராவை அழைத்து.. "மித்ரா.. நீங்க தான் ஆதி group of companies event plan பண்ணது.. அதனால அந்த workலாம் நீங்களே பார்த்தா நல்லாருக்கும்.. உங்களால முடியுமா.."எஎன கேட்டான்.

"நானே பார்க்கிறேன் சார்.."என மித்ரா பதிலளித்து விட்டு ஆதியின் அலுவலகத்திற்கு தங்களது வேலையை பார்வையிடுவதற்காக சென்றாள்.

***

ஆதியின் அலுவலகத்தில்..

"என்ன சதீஷ்.. இன்னைக்கு தான டெட்லைன் சொல்லிருந்தேன்.. இன்னும் முடிக்கலைனா என்ன அர்த்தம்.."

"சாரி பாஸ்.. அந்த டீம்ல.."

"Dont give any reasons.. evening complete பண்ணிருக்கணும் அந்த work.."என கோபமாக ஆதி பேசிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பினான்.

தன் காரை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே வந்த ஆதி.. சரியான நேரத்தில் காரை நிறுத்தவில்லை என்றால் மித்ரா மீது மோதியிருப்பான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த ஆதி.. கோபமாக காரை விட்டு வெளியேற.. யாரை மீண்டும் பார்க்க ஆசை கொண்டிருந்தானோ.. அதே மித்ரா அவன் எதிரில்..

தன் கோபமெல்லாம் எங்கே போனதென ஆதிக்கே புரியவில்லை.

மித்ராவோ.. கவனமில்லாமல் வந்தது தன் தவறுதான்.. என பதற்றமாக காரில் இருந்து இறங்கியவனை பார்க்க..

யாரை தன் வாழ்வில் இனி பார்க்க நேராது என நம்பிக் கொண்டிருந்தாளோ.. அதே ஆதி..

"கொஞ்சம் கவனமா வந்திருக்கலாம் இல்லையா.."என அன்பொழுக ஆதி கேட்க.. கனவிலும் அவன் குரல் இதுபோலத் தானே இருந்தது.. என எண்ணினாள் மித்ரா.

அது எப்படி கனவில் குரல் கூட அப்படியே இருக்கும்.. இனி இவனை சந்திக்கவே மாட்டேன் என நினைத்துக் கொண்டிருந்தால்.. இப்படி கண்முன்னால் வந்து நிற்கிறானே.. என மனதுக்குள் எண்ணிக் கொண்டிருந்தாள் மித்ரா.

ஆதியோ.. "உன்னை திரும்ப எப்ப பார்ப்பேனோனு எவ்ளோ காத்திருந்தேன்.. இப்டி நீயே என்னை தேடி வந்துட்டீயா.."என மனதுக்குள் சந்தோஷம் கொண்டான்.

"ஹலோ.."என ஆதி அழைக்க.. "சா.. சாரி.. நான் தான் கவனிக்காம வந்துட்டேன்.. iam sorry.."என மித்ரா பதறினாள்.

"பரவாயில்லை.. இனிமே கவனமா இருங்க.."என ஆதி சொன்னான்.

சரியென தலையை ஆட்டியபடி அலுவலகத்திற்குள் சென்றாள் மித்ரா.

ஆதி.. "இங்க எதுக்காக என் தேவதை வந்திருக்கா.. ஒரு வேளை என்னை பார்க்கத்தானோ.."என மனதில் எண்ணியபடி.. அலுவலகத்திற்குள் நுழைந்தான் ஆதி.

அலுவலகத்திற்குள் நுழைந்த மித்ரா.. சதீஷிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

"ஹலோ மேடம்.. நீங்க அன்னைக்கு கவின் சார் கூட வந்தீங்கல்ல.."என சதீஷ் கேட்டான்.

ஆம் என தலையசைத்தாள் மித்ரா.

"அன்னைக்கு என்ன எங்க பாஸோட மீட்டிங் அட்டெண் பண்ணாம போய்ட்டீங்க.."என சதீஷ் கேட்டான்.

"அது.. அது.. ஒரு பெர்சனல் ப்ராப்ளம் அதான்.."என பதிலளித்தாள் மித்ரா.

"நான் eventsக்கான workலாம் பார்க்க போகலாமா.."என கேட்டாள் மித்ரா.

"ஆம்.. sure.. நீங்க போய் பாருங்க.. பாஸ் தான் கோபமா கிளம்புனாரு.. கோபம் வந்தா காரை எடுத்துட்டு எங்கையாவது  போய்டுவாரு.. நான் போய் அவரை தேடுறேன்.. நீங்க போங்க.."என சதீஷ் சொல்ல.. மித்ரா அங்கிருந்து அகன்றாள்.

அப்போது தான் சதீஷ் அங்கே நின்றிருந்த ஆதியை கவனித்தான்.

"அச்சோ.. இவர் வேற எல்லாத்தையும் கேட்ருப்பாரோ.. இப்ப எப்டி சமாளிக்கிறது.."என மனதிற்குள் யோசித்தான் சதீஷ்.

"சதீஷ்.. come to my room.."என சொல்லிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான் ஆதி.

"அச்சோ.. இன்னைக்கு என் வேலை காலி போலயே.."என புலம்பியபடி ஆதியின் அறைக்குள் நுழைந்தான் சதீஷ்.

அங்கு அவனுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top