WatTruyen.Top

தொடுவானம்

❤ 37 ❤

jamunaguru

தன் மகள் நினைத்ததை சாதித்து விடுவாள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார் சந்திரமதி.

ஆனால் ஆதியின் செய்கையால் எரிச்சலுற்று வீட்டுக்கு திரும்பி வந்தாள் ஸ்வேதா.

சந்திரமதி உற்சாகமாக.. "ஸ்வேதா என்ன நடந்துச்சு.. சொல்லு.."என கேட்டார்.

"மாம்.. நானே செம கடுப்புல இருக்கேன்.. பேசாம போயிடு.."என்றாள் ஸ்வேதா எரிச்சலுடன்.

"அங்கேயும் அந்த மித்ரா தான் இருக்கா.. என்னால அத்தான நெருங்க கூட முடியலை.."என சலிப்புடன் சொன்னாள் ஸ்வேதா.

"என்னாச்சு ஸ்வேதா.."என பரிவுடன் சந்திரமதி கேட்டார்.

அங்கே நடந்தவற்றை அவரிடம் சொன்ன ஸ்வேதா.. "எனக்கென்னமோ.. அத்தான் வேணும்னே.. இப்டி பண்ற மாதிரி தோணுது.."என்றாள்.

"அப்டிலாம் இருக்காது ஸ்வேதா.."என சமாதானம் சொன்னார் சந்திரமதி.

அன்று இரவு உணவை முடித்துவிட்டு.. தங்கள் அறையில் இருந்தனர் ஸ்வேதா சந்திரமதி மகாதேவன் மூவரும்..

"ஸ்வேதா.. என்ன முடிவு பண்ணிருக்க.. திரும்பவும் ஆதியோட ஆபிஸ்க்கு போகப்போறீயா.."என கேட்டார் மகாதேவன்.

"என்னால முடியாது dad.. அவங்கள பார்த்தாலே எரிச்சலா வருது எனக்கு.."என ஸ்வேதா சொன்னாள்.

"யோசிச்சு முடிவு பண்ணு ஸ்வேதா.."என சந்திரமதி சொல்லிக் கொண்டிருக்க.. அங்கே ஆதி வந்தான்.

"என்ன அத்தை.. ஸ்வேதா என்ன சொல்றா.. வேலைலாம் அவளுக்கு பிடிச்சிருக்கா.."என்றான் ஆதி சந்திரமதியை பார்த்து.

அந்த நேரத்தில் அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை மூவரும்.. இருந்தாலும் சமாளிக்க எண்ணி.. "உன் கூட வேலை பார்க்க அவளுக்கு பிடிக்காம இருக்குமா.."என்றார் சந்திரமதி.

ஆனால் ஸ்வேதாவோ ஆதியை முறைத்தபடி ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தாள்.

"இந்தாங்க அத்தை.."என சில பேப்பர்களை நீட்டினான் ஆதி.

"என்னது.."என கேள்வியோடு அதை கையில் வாங்கினார் சந்திரமதி.

அது கடனில் இருந்த அவர்களின் வீட்டு பத்திரம்.. அதை பார்த்த சந்திரமதியும் மகாதேவனும் அப்ப கடனை அடைச்சாச்சா.. என சந்தோஷப்பட்டனர்.

அடுத்த நொடியே.. இது ஆதிக்கு எப்படி தெரிந்தது என தயக்கமாக.. "ஆ.. ஆதி.. இது உனக்கு.."என தடுமாறியபடி கேட்டார் சந்திரமதி.

"எல்லாம் எனக்கு தெரியும் அத்தை.."என்றான் ஆதி.

அப்படியானால் ஆதி தங்களை மன்னித்து விட்டதாக தவறாக எண்ணிக்கொண்டு.. மகிழ்ச்சி அடைந்தனர்.. சந்திரமதியும் மகாதேவனும்.

அவர்கள் கையிலிருந்த பத்திரத்தை வாங்கி பார்த்த ஸ்வேதா.. "மாம்.. நாளைக்கே நாம மும்பை கிளம்பலாம்.."என்றாள்.

அவள் சொன்னதை கேட்ட ஆதி சிரித்தான். அவன் சிரிப்பிற்கு காரணம் புரியாமல்.. மூவரும் அவனை பார்த்தனர்.

"நீ அப்டி ஈசியா இங்கிருந்து கிளம்ப முடியாது ஸ்வேதா.."என்ற ஆதி அவளிடம் ஒரு பேப்பரை நீட்டினான்.

அதை கையில் வாங்கிப் பார்த்த ஸ்வேதா அதிர்ச்சியானாள்.. அதை பார்த்த சந்திரமதி.. "என்ன ஸ்வேதா.. அது.."என கேட்டார்.

"நா.. நான் இதை ஒத்துக்க மாட்டேன்.."என அந்த பேப்பரை கிழித்தெறிந்தாள் ஸ்வேதா.

"நீட்டின உடனே என்ன இருக்குன்னு கூட பார்க்காம சைன் பண்ணிட்டு.. இப்டி சொன்னா எப்டி.."என கிண்டலாக கேட்டான் ஆதி.

ஸ்வேதா அவனை முறைக்க.. சந்திரமதி.. "என்ன ஸ்வேதா.."என கேட்டார்.

"நானே சொல்றேன் அத்தை.."என்றான் ஆதி.

சந்திரமதியும் மகாதேவனும் ஆதியை பார்க்க.."அது.. உங்க பொண்ணு ஸ்வேதா என்னோட கம்பெனில இரண்டு வருஷம் வேலை பார்க்கிறதுக்கான agreement..

முடியாது.. அப்டினு அவ வேலையை விட்டு போறதா இருந்தால்..

நான் உங்க வீட்டை மீட்க.. கொடுத்த இருபது லட்சத்தை திருப்பிக் கொடுக்கணும்..னு அப்டினு அந்த agreementல இருக்கு.."என்றான் ஆதி.

ஆதி சொன்னதை கேட்டு.. சந்திரமதியும் மகாதேவனும் அதிர்ச்சி அடைந்தனர்.

"அப்புறம் நீ கிழிச்சு போட்டது ஒரிஜினல் இல்லை.. so you dont worry.."என்றான் ஆதி ஸ்வேதாவை பார்த்து.

"மாமா.. இந்தாங்க.."என மகாதேவனிடம் ஒரு கவரை நீட்டினான் ஆதி.

அவரோ அதிர்ச்சியுடன்.. "நா.. நான் எதிலயும் சைன் பண்ணலை.."என்றார்.

ஆதி சிரிப்புடன்.. "நீங்க எதிலயும் சைன் பண்ணலை.. ஆனா நீங்க இதை அக்சப்ட் பண்ணிட்டு தான் ஆகணும்.."என்றான்.

அவர் பயத்துடன் அதை வாங்கி பிரித்து பார்க்க.. பெங்களூரில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணை இருந்தது.

"நீங்க ரொம்ப யோசிக்க வேண்டாம்.. அது என் ப்ரண்டோட கம்பெனி தான்.."என்றான் ஆதி.

"ஆ.. ஆனா.. நான் ஏன் வேலைக்கு போகணும்.."என தடுமாறியபடி கேட்டார் மகாதேவன்.

"அப்ப நீங்க போகலையா.."என ஆதி கேட்டான்.

"அ.. அது.."என அவர் தடுமாறினார்.

"இந்த வீடியோவை பார்த்துட்டு டிசைட் பண்ணுங்க.."என்ற ஆதி தன் போனில் ஒரு வீடியோவை ப்ளே செய்து அவர்கள் முன்னால் நீட்டினான்.

அது மகாதேவனுக்கு அட்டாக் வரவில்லை.. அவர்கள் தான் பணம் கொடுத்து அப்படி சொல்லச் சொன்னார்கள் என்பதை அந்த டாக்டரே ஒப்புக் கொண்டிருந்த வீடியோ.

அதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றனர் மூவரும்.

அப்போது அங்கே கௌதம் வர.. அவனை பார்த்த சந்திரமதி.. "கௌதம்.. பாருடா.. அப்பாவை வேலைக்கு போகச்சொல்றான்.. ஸ்வேதாவையும்.. நீ.. நீ ஆதிகிட்ட பேசு டா.."என பதற்றமாக சொன்னார்.

"நான் சொன்னா அத்தான் எங்கமா கேட்கிறாரு.."என்றான் கௌதம் சலிப்பாக..

"நீ.. நீ.. சொன்னா ஆதி கேட்பான்.. நீ பேசு.."என்றார் சந்திரமதி.

கௌதம் ஆதியை பார்த்து.. "அத்தான்.. நான் அப்பவே உங்ககிட்ட சொன்னேன்.. இவங்க இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டாங்க..

நீங்க அத்தை மாமா யாழினி முன்னால அந்த வீடியோவை காட்டுங்க.. அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லுங்க.."என்றான் கௌதம்.

"கௌதம்.."என அதிர்ச்சியாக மூவரும் அவனை பார்த்தனர்.

ஆதியும் கௌதமும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

"அம்மா.. நீங்க என்ன பண்ணனும்னு அத்தான் சொல்லிட்டாரா.." என கௌதம் அப்பாவியாக கேட்டான்.

சந்திரமதி தன்னை என்ன செய்யச் சொல்லப் போகிறானோ என பயத்துடன் இல்லையென தலையசைத்தார்.

"ம்.. சூப்பர்ல.. நான் தான் இதை உங்ககிட்ட சொல்லுவேன்.."என கொஞ்சலாய் சொன்னான் கௌதம்..

"நீங்க எப்பவும் யாழினி கிட்ட என்ன சொல்லுவீங்க.."என கேட்டான் கௌதம்.

பயத்திலும் அதிர்ச்சியிலும்.. யோசிக்க முடியாமல் தடுமாறிய சந்திரமதி.. "என்ன.."என அவனிடமே கேட்டார்.

"என்ன மா.. இதைக்கூட மறந்துட்டீங்களா.. சரி நானே சொல்றேன்..

யாழினி நீ என் செல்லம் டா.. நீ மட்டும் கௌதம கல்யாணம் பண்ணிட்டு என் வீட்டுக்கு வா.. உன் கால் தரையில படாம நான் உன்னை பார்த்துக்கிறேன்.. அப்படினு சொல்லுவீங்கல்ல.."என கேள்வியாய் அவரை பார்க்க.. அவரும் ஆம் என தலையசைத்தார்.

"அதைத்தான் பண்ணப் போறீங்க.."என்றான் கௌதம்.

சந்திரமதி புரியாமல் அவனை பார்க்க.. "இன்னுமா புரியலை.. நீங்க மட்டும் தான் நாளைக்கு எங்ககூட மும்பைக்கு வரப்போறீங்க.. அங்க வந்து யாழினியை எந்த வேலையும் செய்யவிடாம நீங்க தான் எல்லா வேலையும் பார்க்க போறீங்க.."என்றான் கௌதம்.

"டேய்.. நான் உன் அம்மா.."என சந்திரமதி சொல்ல.. "அப்பாவுக்கு அட்டாக்னு பையன்கிட்டயே நீங்க நாடகம் ஆடும் போது.. நான் பண்றது தப்பில்லை.."என்றான் கௌதம்.

"உங்களுக்கு நான் சொல்றத அக்சப்ட் பண்ணிக்கிறத தவிர வேற வழி இல்லை.. இதை உங்களால ஏத்துக்க முடியாதுன்னா.. சித்தி சித்தப்பா யாழினி எல்லாரும் நீங்க பண்ணத பத்தி தெரிஞ்சுப்பாங்க.."என்றான் ஆதி.

"நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை.. உங்க விருப்பம் போல இருந்துக்கோங்க.. திங்கட்கிழமை ல இருந்து.. உங்க வேலையை பார்க்க தயாரா இருங்க.."என்ற கௌதம் சந்திரமதியின் கையிலிருந்த வீட்டு பத்திரத்தை வாங்கிக் கொண்டு.. "இது என்கிட்டயே இருக்கட்டும்.."என்றான்.

அங்கிருந்து கிளம்பும் முன் ஆதி.. "அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.."என்றான்.

இன்னுமா என்பது போல மூவரும் அவனை பார்த்தனர்.

"இந்த நெக்லஸை எடுத்து கார்த்தி பாக்கெட்ல போடுறது.. மித்ராவையும் என்னையும் பிரிக்க நினைக்கிறது.. இப்டி எதாவது பண்ணீங்கனு தெரிஞ்சா..

இப்ப வரைக்கும் உங்க எல்லாரையும் இந்தக் குடும்பம்னு நான் நினைக்கிறத மாத்திக்க வேண்டி வரும்.."என உறுதியான குரலில் சொல்லிவிட்டு சென்றான் ஆதி.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top