WatTruyen.Top

தொடுவானம்

❤ 38 ❤

jamunaguru

அடுத்த நாள்.. ஹாலில்..

சந்திரமதி மகாதேவன் ஸ்வேதா மூவரும் தாங்கள் நினைத்தது நடக்காதது மட்டுமல்லாமல்.. ஆதி சொன்னதை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதை எண்ணி நொந்தபடி இருந்தனர்.

அப்போது அங்கே கௌதமும் யாழினியும் வந்தனர்.

சந்திரமதி மகாதேவன் ஸ்வேதாவை பார்த்து சிரித்தபடி.. கௌதம் யாழினியிடம்.. "யாழினி.. உன்கிட்ட ஒன்னு கேட்கவா.."என கேட்டான்.

"ம்.. கேளு.."என்றாள் யாழினி.

"நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேன்.. இல்ல பொய் சொல்லிட்டேன்னா என்ன பண்ணுவ.."என கௌதம் கேட்டான்.

"என்னது.."என யாழினி அவனை முறைத்தவாறே கேட்டாள்.

"உன்கிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன்னா.. என்ன பண்ணுவ.."என கேட்டான் கௌதம்.

"என்கிட்ட பொய் சொல்லுவியா.. இந்த யாழினி கிட்ட பொய் சொல்லுவியா.."என கேட்டவாறே.. அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினாள்.

யாழினி முடியை பிடித்து இழுப்பது வலித்தாலும்.. கௌதம் தன் அப்பா அம்மாவையும் ஸ்வேதாவையும் திரும்பி பார்த்தான்.

அவர்கள் யாழினியை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க.. அதில் அவள் அடித்த வலி மறந்து சிரித்தான் கௌதம்.

அவன் முதுகில் இரண்டு குத்து குத்தினாள் யாழினி.

அப்போது அங்கே வந்த மாலதி.. "யாழினி.. என்ன பண்ற.. அவனை விடு.. கல்யாணம் ஆகிடுச்சே தவிர.. இன்னும் குழந்தை மாதிரி நடந்துக்கிற.."என சலித்துக் கொண்டார்.

"என்கிட்ட பொய் சொல்லுவேன்னு சொல்றான்.. அவனை சும்மா விடச் சொல்றீங்களா.."என யாழினி கேட்டாள்.

"அவன் சும்மா தான கேட்டான்.."என அவளிடம் சலித்துக் கொண்டவர்.. "பாவம் டா.. நீ.. இவளை எப்டி சமாளிக்கப் போறீயோ.."என கௌதமிடம் சொன்னார்.

"அதெல்லாம் எங்க அம்மா பார்த்துப்பாங்க.. இல்லை மா.."என்றான் கௌதம் சந்திரமதியை பார்த்து.

அவரும் ஆம் என்பதை போல தலையசைத்தார்.

மாலதி சந்திரமதியிடம்.. "அண்ணி.. நீங்க தான் அவளை பார்த்துக்கணும்.."என்றார்.

"என்னை எப்டி பாத்துக்கன்னே தெரியலை.. இதில நான் அவளை பார்த்துக்கவா.."என மனதுக்குள் நினைத்தவர்.. மாலதியை பார்த்து வெறுமனே புன்னகைத்தார்.

அன்று சாயந்திரம்.. யாழினியும் கௌதமும் மும்பைக்கு கிளம்ப தயாராகினர்.

மாலதியும் ரவிச்சந்திரனும் கண்கலங்க.. யாழினியோ.. "என்னை பார்க்கணும்னு தோணுச்சுனா.. ஒரு போன் மட்டும் பண்ணுங்க.. உடனே வந்துடுவேன்.."என உற்சாகமாக கிளம்பினாள் கௌதமோடு.

ஆதி கௌதமிடம்.. "யாழினியை நல்லா பாத்துக்கோ..டா.."என்றான். ஆனால் கௌதமோ.. சந்திரமதியை பார்த்தபடி.. "நல்லா பாத்துக்கிறேன் அத்தான்.."என்று சொல்ல.. அவன் சொல்வது புரிந்து சிரித்தான் ஆதி.

"அண்ணா.. அண்ணியை நல்லா பாத்துக்கோ.."என ஆதியிடம் சொன்னாள் யாழினி. "சரி குட்டிமா.."என்றான் ஆதியும் சிரிப்புடன்.

"அண்ணி.. நான் போய்ட்டு வர்றேன்.. டாக்டர் சார்.. நான் வர்றேன்.."என மித்ராவிடமும் கார்த்தியிடமும் விடைபெற்றுக் கொண்டு.. கிளம்பினர் யாழினியும் கௌதமும்.

சந்திரமதி மட்டும் அவர்களோடு கிளம்ப.. மகாதேவன் தன் நண்பரை பார்க்க செல்வதாக சொல்லிவிட்டு.. ஆதி சொன்ன வேலையில் சேருவதற்காக சென்றார்.

ஸ்வேதா ஆதியின் கம்பெனில வேலை பார்ப்பதற்காக அங்கேயே தங்கினாள்.

ஒரு நாள் ஆதியின் அலுவலகத்தில் நடந்ததை நினைத்து பார்த்த ஸ்வேதா.. இனிமே தினம் தினம் இதேதானா.. எப்டி சமாளிக்கப் போறேனோ.. என தவித்துக் கொண்டிருந்தாள்.

கௌதமின் வீட்டில்..

சந்திரமதி.. வீட்டை துடைத்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த யாழினி.. "அத்தை.. கொடுங்க நான் துடைக்கிறேன்.."என்றபடி அவள் வேலையை பார்த்தாள்.

சந்திரமதியும் அப்பாடா.. இப்பவாது உட்கார நேரம் கிடைச்சுதே.. என்றவாறு அமர்ந்திருக்க அவர் முன்வந்து நின்றான் கௌதம்.

கௌதம்.. கண்ணாலே.. யாழினியை காட்டி என்ன என்பது போல கேட்டான்.

சந்திரமதி.. "அவ தான்டா நான் பார்க்கிறேன்னு சொன்னா.."என்றார்.

"அவ அப்டித்தான் சொல்லுவா.. சரி நீங்க வாங்க.."என்றான் கௌதம்.

என்ன சொல்லப்போகிறானோ.. என பயந்தவாறு அவன் பின்னால் சென்றார் சந்திரமதி.

அழுக்கு துணிகளை எடுத்து அவர் கையில் கொடுத்த கௌதம்.. "எல்லாத்தையும் துவைச்சிடுங்க.."என்றான்.

சந்திரமதியும் தலையசைத்தபடி.. வாஷிங்மெஷின் அருகே செல்ல.. "அம்மா.."என்றான் கௌதம்.

சந்திரமதி.. "என்ன.."என கேட்க.. "எல்லாத்தையும் நீங்க உங்க கையாலே துவைச்சிடுங்க.."என்றான் கௌதம்.

"டேய் என்னை பார்த்தா.. உனக்கு பாவமா இல்லையா.."என்றார் சந்திரமதி.

"இல்லையே.. மா.. எல்லா வேலையும் முடிச்சிடுங்க.."என்றவாறு கௌதம் அங்கிருந்து நகர்ந்தான்.

வேறுவழியின்றி.. சந்திரமதியும் எதுவும் பேசாமல் எல்லா வேலைகளையும் சலிப்புடன் செய்து முடித்தார்.

சந்திரமதி சோர்வாக அமர்ந்திருக்க.. அவரை பார்த்த யாழினி கௌதமிடம்.. "கௌதம்.. அத்தையே எல்லா வேலையும் பார்க்கிறாங்க.. என்னையும் பார்க்க விடமாட்டிக்குறாங்க.. வேலைக்கு ஆள் வைக்கலாம் கௌதம்.."என்றாள்.

"வேண்டாம் யாழினி.. அம்மாவுக்கு எல்லா வேலையும் அவங்களே செஞ்சா தான் திருப்தி.. பாரு வாஷிங்மெஷின் இருந்தும் அவங்களே கையால துணி துவைக்கிறாங்க..

வேலைக்கு ஆள் வச்சிட்டு அவங்களே வேலை பார்ப்பாங்க.. அது எதுக்கு வேண்டாம்.."என கௌதம் சொன்னான்.

"எல்லாம் என் நேரம் டா.."என மனதுக்குள் நினைத்தார் சந்திரமதி.

"நான் பெத்தது என்னை இப்டி பாடாபடுத்துது.. இன்னொன்னு என்ன பாடு படுதோ.."என நினைத்துக் கொண்டார் சந்திரமதி.

இதற்கு முன்பு போல ஆதி அதிகமாக வேலை கொடுக்க மாட்டான்.. என நினைத்து சென்ற ஸ்வேதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஸ்வேதா வேறு எதையும் யோசிக்க கூட நேரம் இல்லாதபடி வேலைகள் கொடுத்தான் ஆதி.

அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த ஆதி.. மித்ராவை அழைக்க.. "நான் வரலை.."என்றாள் மித்ரா.

"ஏன்.. என்னாச்சு.. உடம்பு சரியில்லையா.."என ஆதி பதற்றமாக..

மித்ரா.. "அதெல்லாம் ஒன்னுமில்லை.."என்றாள்.

"அப்புறமென்ன.."என ஆதி கேள்வியாய் மித்ராவை பார்த்தான்.

"நீங்க எனக்கு எந்த வேலையும் கொடுக்க மாட்டிக்கிறீங்க.."என சலிப்பாய் சொன்னாள் மித்ரா.

அவள் சொன்னதை கேட்டு ஆதி சிரிக்க.. அங்கே நின்று கொண்டிருந்த ஸ்வேதா.. "அதான் எல்லா வேலையும் பார்க்க நான் இருக்கேனே.."என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

"எதுக்கு சிரிக்கிறீங்க.."என மித்ரா ஆதியிடம் கேட்க.. "எந்த வேலையும் பார்க்கிறதுக்காக நான் உன்னை கூட்டிட்டு போகலை.. நீ எப்பவும் என்கூடவே இருக்கணும்.. அதான்.."என்றான் ஆதி.

மித்ராவும் புன்னகையோடு அவனுடன் சென்றாள்.

எப்போதும் மற்றவர்களிடம் வேலை வாங்கும் நிலையில் இருந்த மகாதேவன்.. அங்கே மற்றவர்களுக்கு கீழ் வேலை செய்து கொண்டிருந்தார் வேறுவழியின்றி.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top