❤ 36 ❤
ஸ்வேதா.. உற்சாகமாக ஆதியின் அலுவலகத்திற்கு கிளம்பினாள்.
சந்திரமதியிடம்.. "மா.. இனி அந்த மித்ரா அத்தானோட லைப்ல இருக்க மாட்டா.. நான் தான் அத்தான கல்யாணம் பண்ணிக்குவேன்.."என சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.
"நீ கண்டிப்பா பண்ணுவ ஸ்வேதா.."என்றார் சந்திரமதி பூரிப்புடன்.
"மாம்.. நான் கிளம்புறேன்.. bye.."என சந்திரமதியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் ஸ்வேதா.
ஆதி வாசலில் நின்று கொண்டிருந்தான்.. ஸ்வேதா.. "அத்தான்.. நான் ரெடி.."என அவனருகில் சென்று சொன்னாள்.
"ஆங்.. கார்ல உட்காரு ஸ்வேதா.. two minutes.."என்றான் ஆதி.
ஸ்வேதா சரியென தலையசைத்து விட்டு காரின் முன்புறமாக ஏறச் செல்ல.. ஆதி.. "ஸ்வேதா.. பின்னால ஏறு.."என்றதும் ஸ்வேதாவின் முகம் வாடியது.
இருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் காரில் பின்னால் அமர்ந்தாள் ஸ்வேதா.
ஆதி வீட்டினுள்ளே திரும்பி திரும்பி பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த மித்ரா.. "சாரி.. சாரி.. லேட் பண்ணிட்டேனா.."என்றாள் ஆதியிடம்.
ஆதி.. "இல்லை.. வா.. கிளம்பலாம்.."என்றான் புன்னகையுடன்.
ஆதி காரை ஓட்ட.. மித்ரா அவனருகில் உட்கார.. "இவள் எதற்கு இப்போது கூடவே வருகிறாள்.."என்ற யோசனையில் இருந்தாள் ஸ்வேதா.
ஆதியின் அலுவலகத்திற்கு சென்றதும்.. "ஒரு நிமிஷம் ஸ்வேதா.."என்ற ஆதி மித்ராவிடமும் சதீஷிடமும் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
சில நிமிடங்கள் கழித்து வந்த ஆதி.. "வா.. ஸ்வேதா.. போகலாம்.."என்றான்.
"அத்தான்.. மித்ரா அக்கா.. எதுக்கு வந்திருக்காங்க.."என ஆதியிடம் கேட்டாள் ஸ்வேதா.
"இன்னைக்கு ஒரு முக்கியமான க்ளைண்ட் மீட்டிங்.. அந்த அரேஞ்ச்மென்ட்ஸ் லாம் மித்ரா தான் பாத்துக்க போறா.."என்றான் ஆதி.
"ஓ.."என்ற ஸ்வேதா மனதிற்குள்.. "அவ வேலை பார்ப்பா.. நான் அத்தான நெருங்க.. என்னோட வேலையை பார்ப்பேன்.."என நினைத்து சந்தோஷம் கொண்டாள்.
"ஸ்வேதா.. இதான் உன் கேபின்.."என்றான் ஆதி.
அந்த அறையை பார்த்த ஸ்வேதா.. "அத்தான்.. ரொம்ப தேங்க்ஸ்.."என்றாள் ஆதியை அணைத்தபடி.
மெல்லிய புன்னகையுடன் அவளிடம் இருந்து விலகிய ஆதி.. "சதீஷ் வருவான்.. நீ பார்க்க வேண்டிய வேலைலாம் சொல்லுவான்.. எதுவும் டவுட்னா அவன்கிட்ட கேளு.. பக்கத்தில தான் என் கேபின்.. நானும் இங்கே தான் இருப்பேன்.. be comfortable.."என சொல்லிச் சென்றான் ஆதி.
"இன்னைக்கு காலையிலே தான் ஆபிஸ்க்கு வர்றேன்னு சொன்னேன்.. அதுக்குள்ள எனக்காக அத்தான் ஒரு கேபின் ரெடி பண்ணிட்டாங்க.. அப்ப நான் லவ் பண்றேனு தெரிஞ்சும் அத்தான் எனக்காக எல்லாம் பண்றாங்கனா என்ன அர்த்தம்.. நான் ஈசியா அத்தான் மனசில இடம்பிடிச்சு.. அத்தானை கல்யாணம் பண்ணிப்பேன்.. அந்த மித்ரா அத்தானோட லைப்ல இருக்கமாட்டா.."என நடக்காததை கனவு கண்டு கொண்டிருந்தாள் ஸ்வேதா.
தன் அறைக்கு வந்த ஆதி.. சதீஷை அழைத்தான்.. அவனிடம் ஒரு பைலை கொடுத்த ஆதி.. "நான் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குல்ல.."என்றான்.
"இருக்கு பாஸ்.."என்றான் சதீஷ்.
"ம்.. be careful.."என்றான் ஆதி.
"ம்.. ஓகே பாஸ்.."என்ற சதீஷ் ஸ்வேதாவுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் அவள் அனுமதி கேட்டுவிட்டு உள்ளே சென்றான்.
அங்கே ஸ்வேதா.. ஆதியிடம் கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கி.. ஆதியை தன் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டிவைப்பது போல கனவு கண்டு கொண்டிருந்தாள்.
"பாஸ் உங்ககிட்ட இதில சைன் வாங்கிட்டு வரச்சொன்னாங்க.."என்றான் சதீஷ்..
ஏதோ தான் பெரிய பதவியில் இருப்பதாக கனவில் மிதந்தாள் ஸ்வேதா.
"எதுக்கு.."என கேட்டாள் ஸ்வேதா.
"usual joining formality.."என்றான் சதீஷ்.
"ஓ.. ஓகே.."என்ற ஸ்வேதா.. என்ன இருக்கிறது என்பதை பார்க்காமலே அதில் கையெழுத்திட்டாள்.
"என்ன.. ஏதோ இவங்க ஆட்டோகிராப் கேட்ட மாதிரி ரொம்ப பில்டப்பா தான் சைன் பண்றாங்க.. அதில என்ன இருக்குன்னு தெரியாம.."என மனதிற்குள் சிரித்துக் கொண்டான் சதீஷ்.
"நீங்க பார்க்க வேண்டிய பைல்ஸை நான் எடுத்துட்டு வர்றேன் மேம்.."என்ற சதீஷ் அங்கிருந்து சென்றான்.
ஸ்வேதாவிடம் கையெழுத்து வாங்கிய பைலை ஆதியிடம் கொண்டு வந்து கொடுத்தான் சதீஷ்.
"எதுவும் டவுட்டா பார்த்தாளா.."என ஆதி கேட்டான்.
"இல்லை பாஸ்.. அவங்க ஏதோ ஆட்டோகிராப் நோட்ல சைன் பண்ற மாதிரி எதையுமே பார்க்காம சைன் பண்ணாங்க.."என்று சதீஷ் சொல்ல ஆதியும் சிரித்தான்.
"பாஸ்.. எந்த பைல்ஸ் லாம் அவங்ககிட்ட கொடுக்கணும்.."என சதீஷ் ஆதியிடம் கேட்டான்.
"சும்மா எதாவது ஒன்னு ரெண்டு பைல்ஸை மட்டும் கொடு.. இன்னைக்கு ரொம்ப கண்டுக்காம விட்டுடலாம்.."என்றான் ஆதி.
சரியென தலையசைத்துவிட்டு சதீஷ் அங்கிருந்து சென்றான்.
சில நிமிடங்கள் கழித்து ஸ்வேதாவின் கேபினுக்கு வந்த சதீஷ்.. சில பைல்களை அவளிடம் கொடுத்துவிட்டு சென்றான்.
பேருக்கு பைல்ஸை திருப்பிக் கொண்டிருந்த ஸ்வேதா.. "ஆதி அத்தான போய் பார்க்கலாம்.. எப்டியும் அந்த மித்ரா இங்க இருக்க மாட்டா.."என நினைத்துக் கொண்டு கையில் ஒரு பைலை எடுத்துக் கொண்டு ஆதியின் அறைக்கு சென்றாள்.
ஆனால் ஆதி அங்கே இல்லை. அப்போது அந்தப் பக்கமாக வந்த சதீஷிடம்.. "சதீஷ்.. அத்தான எங்க.."என கேட்டாள் ஸ்வேதா.
"தெரியலை.. மேடம்.. மீட்டிங் ஹால்ல இருப்பாங்கனு நினைக்கிறேன்.."என்றான் சதீஷ்.
ஸ்வேதா மீட்டிங் ஹாலுக்கு செல்ல.. சதீஷ் சிரித்துக் கொண்டான்.
அங்கே சென்ற ஸ்வேதா.. ஆதியும் மித்ராவும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை தான் பார்த்தாள்.
ஸ்வேதா வந்ததை கவனித்து விட்ட ஆதி.. அவளை கவனிக்காதவன் போல.. மித்ராவை இழுத்து அணைத்துக் கொண்டான்.
"என்ன பண்றீங்க.. விடுங்க.."என மித்ரா சிணுங்க.. ஆதி அவளை விடுவதாய் இல்லை.
அங்கே ஒரு சிலர் வேலை பார்த்துக் கொண்டிருக்க.. மித்ரா அவர்களை காட்டி.. ஆதியிடம் இருந்து விலக முற்பட்டாள்.
ஆனால் ஆதியோ.. "அப்ப வா.. கேபினுக்கு போகலாம்.."என்றபடி அவளை மேலும் இறுக்கி அணைத்தான்.
மித்ரா வெட்கத்தில் முகம் சிவந்து கொண்டிருந்தாள். ஸ்வேதா அங்கிருந்து எரிச்சலுடன் நகர்ந்தாள்.
தன் அறைக்கு வந்தவள்.. "ச்சே.. வீட்டில தான் இவ தொல்லை தாங்க முடியலைனு இங்க வந்தா.. இங்கையும் வந்து என்னை அத்தான் கிட்ட நெருங்கவே விட மாட்டிக்குறா.."என புலம்பிக் கொண்டிருந்தாள்.
தன் அறைக்கு செல்லும் போது ஆதி.. ஸ்வேதாவின் நிலை கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டான். ஆதி செல்வதை ஸ்வேதாவும் கவனித்தாள்.
சில நிமிடங்கள் கடந்தபின்.. "சரி இன்னும் அந்த மித்ரா வரலை.. நாம இப்ப போய் பேசலாம் அத்தான் கிட்ட.."என நினைத்த ஸ்வேதா ஆதியின் அறைக்கு வந்தாள்.
அங்கே ஆதி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான். ஸ்வேதாவை கவனித்தவன்.. "என்ன.."என பார்வையாலே கேட்டான்.
கையில் எடுத்து வந்திருந்த பைலை காட்டினாள் ஸ்வேதா..
"இப்ப முடியாது.. போ.."என சைகையால் தெரிவித்தான் ஆதி போனில் பேசியபடி.
சலிப்புடன் ஸ்வேதா அங்கிருந்து நகர்ந்தாள்.. என்ன செய்வதென தெரியாமல்..
ஆதி மீட்டிங் அட்டெண் பண்ண கிளம்பிவிட.. ஸ்வேதாவோ தான் நினைத்த எதுவும் நடக்காத விரக்தியில் இருந்தாள்.
மதிய உணவுக்கான நேரம் வந்தது. ஸ்வேதாவின் அறைக்கு சாப்பாடு எடுத்து வந்து தந்தார் வேலை பார்க்கும் ஒருவர்.
"அத்தானோட.. சாப்பிடலாம்.. ஆனா அந்த மித்ரா இருப்பாளே.." போகலாமா வேண்டாமா.. என குழம்பிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.
சரி போகலாம் என முடிவெடுத்து.. ஆதியின் அறைக்கு சென்றாள். அங்கே.. ஆதி தன் மடியில் மித்ராவை அமர்த்தியபடி.. ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
ஸ்வேதாவை கண்டதும்.. மித்ரா ஆதியின் மடியிலிருந்து எழும்ப முயற்சித்தாள். ஆனால் ஆதியோ.. என்ன என்பது போல் மித்ராவை பார்த்தான்.
மித்ரா ஸ்வேதாவை தயக்கமாக பார்க்க.. "நம்ம ஸ்வேதா தான.. அவளுக்கு தெரியாதா.. நாம எவ்ளோ லவ் பண்றோம்னு.."என சிரிப்புடன் மித்ராவிடம் சொன்னான் ஆதி.
ஸ்வேதாவை பார்த்து.. "என்ன ஸ்வேதா.. எதுவும் வேணுமா.."என கேட்டான்.
"அ.. அது.. சாப்பாடு.."என திணறினாள் ஸ்வேதா.
"இன்னும் வரலையா.. நான் அப்பவே கொடுக்க சொன்னேனே.. இரு.. நான் போன் பண்ணி கேட்கிறேன்.."என்றான் ஆதி.
"இ.. இல்லை.. வந்துடுச்சுனு சொல்ல வந்தேன்.."என சமாளித்த ஸ்வேதா அங்கிருந்து சென்றாள்.
"அவளையும் இங்கே சாப்பிட சொல்லலாம்ல.."என மித்ரா ஆதியிடம் கேட்டாள்.
"அவளும் இங்க இருந்தா.. நாம எப்டி ரொமான்ஸ் பண்றது.."என அவள் கழுத்தில் முகம் புதைத்தான் ஆதி.
வெட்கத்தில் நெளிந்தவாறு.. "இப்பலாம் எப்பவும் ரொமான்ஸ் தான்.. சுத்தி யார் இருக்கா.. எங்க இருக்கோம்னு லாம் யோசிக்கிறது லாம் இல்லை.."என்றாள் மித்ரா.
அவள் முகம் பார்த்த ஆதி.. "யார் இருந்தா.. எனக்கென்ன.."என்றான்
"அதான.. உங்களுக்கு என்ன.. எனக்கு தான் கூச்சமா இருக்கு.. விடுங்க.."என அவனிடமிருந்து விலகினாள் மித்ரா.
ஸ்வேதா ஆதியை நெருங்க நினைத்து அவனருகே செல்லும் போதெல்லாம் அவன் மித்ராவோடு நெருக்கமாக இருந்தான்.
ஒருவேளை அவன் தன்னை வெறுப்பேற்ற தான் இப்படி நடந்து கொள்கிறானோ.. என எண்ணிய ஸ்வேதா தன் பொறுமையிழந்தாள்.
எரிச்சலுடன் இதற்கு மேல் இங்கிருக்க வேண்டாம்.. என எண்ணியவள்.. ஆதியின் அறைக்கு சென்றாள்.
அப்போதும் அங்கே மித்ரா இருந்தாள்.. இருந்தும் அவளை கண்டுகொள்ளாமல்.. "அத்தான் நான் வீட்டுக்கு கிளம்புறேன்.."என்றாள் ஸ்வேதா.
"என்ன அவசரம் ஸ்வேதா..எல்லாரும் ஒன்னாவே போகலாம்.."என்றான் ஆதி.
மனதிற்குள் எரிச்சலுற்ற ஸ்வேதா.. என்ன சொல்வதென தெரியாமல் நின்று கொண்டிருந்தாள்.
"அவளுக்கு எந்த வேலையும் சொல்லாம.. இங்கே இருக்க சொன்னா.. அவளுக்கு போர் அடிக்காதா.."என்றாள் மித்ரா ஆதியிடம்..
"வேலை கொடுக்கலைனு யார் சொன்னா.. அதெல்லாம் அவ சீக்கிரமா முடிச்சுட்டா.."என ஆதி சொல்ல.. "நிஜமாவா.."என ஆச்சரியத்துடன் மித்ரா ஸ்வேதாவை பார்த்தாள்.
அவன் எதைப்பற்றி சொல்கிறான் என புரியாமல் நின்றிருந்தாள் ஸ்வேதா.
"அதான் வேலை முடிச்சிட்டால்ல.. அவ கிளம்பட்டும்.."என்றாள் மித்ரா.
புன்னகையுடன்.. "நீங்க சொன்ன பிறகு மறுத்து பேச முடியுமா.. பாஸ்.."என கிண்டலாக மித்ராவிடம் சொன்ன ஆதி.. "நீ கிளம்பு ஸ்வேதா.."என்றான் ஸ்வேதாவை பார்த்து.
ஆதி நக்கலாக சிரிக்க.. எரிச்சலுடன் வீட்டுக்கு கிளம்பினாள் ஸ்வேதா.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top