❤ 26 ❤
ஆதி வீட்டை வாங்கியதை ஏன் மறைச்சான்.. என யோசித்தபடியே ஆதியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மித்ரா.
அங்கே ஸ்வேதா.. மித்ராவை பார்த்து.. என்ன என கேட்டாள்.
"யாழினி.."என மித்ரா சொல்ல.. "இதோ கூப்பிடுறேன்.."என ஸ்வேதா யாழினியை கூப்பிட சென்றாள்.
ஹாலில் மித்ரா நின்று கொண்டிருக்க.. அங்கே வந்த மாலதி மித்ராவிடம்.. "யாருமா.. நீ.. என்ன வேணும்.."என கேட்டார்.
"கவின் eventsல இருந்து வர்றேன் மேடம்.. யாழினி மேடமை பார்க்கணும்.."என மித்ரா பதிலளித்தாள்.
"ஓ.. சரி சரி.. வா.. மா.. உட்காரு.. நான் யாழினியை கூப்பிடுறேன்.."என மாலதி சொன்னார்.
அப்போது யாழினியும் ஸ்வேதாவும் வருவதை கவனித்த மாலதி.. "இதோ யாழினி வந்துட்டா.. உனக்கு காபி வேணுமா.. டீ வேணுமா.."என மித்ராவிடம் கேட்டார்.
"அதெல்லாம் எதுவும் வேண்டாம் மேடம்.."என மித்ரா மறுத்தாள்.
"அப்ப ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்.."என மாலதி மித்ராவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அங்கே வந்த யாழினி.. "அம்மா.. எனக்கும் ஜூஸ்.."என்றாள்.
"ஸ்வேதா.. உனக்கு வேணுமா.."என மாலதி கேட்க.. "ஆங்.. கொண்டு வாங்க அத்தை.."என ஸ்வேதா சொன்னாள்.
மித்ராவின் அருகில் வந்து அமர்ந்த யாழினி.. "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.."என்றாள்.
"தேங்க்ஸ்.."என புன்னகைத்தாள் மித்ரா.
அப்போது அங்கே வந்த சந்திரமதி.. "யாழினி.. இந்தப் பொண்ணு.. யாரு.."என்றார்.
"டெக்கரேஷன் பத்தி சொல்ல.. event managementல இருந்து அண்ணா வர சொல்லிருக்கான்.. அத்தை.."என்றாள் யாழினி.
சரியென தலையாட்டியபடி சந்திரமதியும் அங்கே அமர்ந்தார்.
யாழினி "அத்தை இவங்க ரொம்ப அழகா இருக்காங்கல்ல.."என மித்ராவை காட்டி சந்திரமதியிடம் சொன்னாள்.
"நம்ம ஸ்வேதா கூட தான் அழகு யாழினி.."என சந்திரமதி சொன்னார்.
"ஸ்வேதா மேக்கப் போட்டா தான் அத்தை அழகு.. ஆனா இவங்க மேக்கப்பே போடலே பாருங்க.."என மித்ராவின் கன்னத்தை வருடியபடி யாழினி சொன்னாள்.
அப்போது.. மாலதி ஜூஸ் எடுத்துவர.. மித்ராவும் யாழினியும் எடுத்துக் கொள்ள.. ஸ்வேதா.. "வேண்டாம் அத்தை.."என்று மாலதியிடம் சொன்னாள்.
"மாம்.. நான் ரூமுக்கு போறேன்.."என சந்திரமதியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ஸ்வேதா.
"இப்பத்தான்.. ஜூஸ் வேணும்னு சொன்னா.. அதுக்குள்ள வேண்டாங்குற.."என மாலதி சலித்துக் கொண்டார்.
யாழினி குழந்தைத்தனமாக நடந்து கொள்வதை கவனித்த மித்ரா.. "உங்களுக்கு தான் கல்யாணமா.. குழந்தை மாதிரி.. நடந்துக்கிறீங்க.."என்றாள்.
"அண்ணா கூட என்னை அப்டித்தான் சொல்வான்.."என யாழினி புன்னகைத்தாள்.
"கௌதம் தான் பாவம்.. உன்னை எப்டி சமாளிக்கப் போறானோ.."என மாலதி சிரிப்புடன் சொன்னார்.
யாழினி.. மித்ராவிடம் டெக்கரேஷன் எப்டி இருக்க வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்க.. சந்திரமதி அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்.
"வாங்க.. நான் உங்களுக்கு எங்க வீட்டை சுத்திக் காட்டுறேன்.."என யாழினி மித்ராவிடம் சொன்னாள்.
"யாழினி.. ஏற்கனவே நீ இதை சொல்றதுக்கே ரொம்ப லேட் பண்ணிட்ட.. அவங்களுக்கு வேற எதுவும் வேலை இருக்கப் போகுது.."என மாலதி சொன்னார்.
"வீட்டுக்கு வந்தவங்க.. நம்ம வீட்டை சுத்தி பாக்க வேண்டாமா.. நான் சொன்னா அவங்க இருப்பாங்க.. இருப்பீங்கல்ல.."என மித்ராவிடம் யாழினி கேட்டாள்.
"இல்லை இன்னொரு நாள் வர்றேன்.."என மித்ரா சொன்னாள்.
"நான் சொன்னா கேட்க மாட்டீங்களா.."என யாழினி மித்ராவிடம் பேசிக்கொண்டிருக்க.. ஹாலில் மாட்டுவதற்காக ஆதி போட்டோவையும் பேமிலி போட்டோவையும் வேலை பார்ப்பவர்கள் எடுத்து வந்தனர்.
அவர்களை கவனித்த யாழினி.. "அண்ணா.. போட்டோவை நல்லா துடைச்சிட்டீங்களா.. பத்திரமா மாட்டுங்க.."என்றாள்.
"வாங்க எங்க பேமிலி போட்டோவை காட்டுறேன்.."என மித்ராவின் கைபிடித்து இழுத்துச் சென்றாள்.
பேமிலி போட்டோவை மாட்டிவிட்டு.. ஆதியின் போட்டோவை மாட்டிக் கொண்டிருந்தனர்.
யாழினி மித்ராவை அழைத்துச் சென்று.. "இதான் எங்க பெரியம்மா.. இது எங்க பெரியப்பா.. இது எங்க அம்மா.. இது எங்க அப்பா.. அத்தை மாமா.."என யாழினி பேசிக் கொண்டிருக்க.. எதையுமே காதில் வாங்காமல் உறைந்து போயிருந்தாள் மித்ரா.
ஆதியின் புகைப்படத்தை பிடித்திருந்தவர்.. போட்டோவை சற்று நழுவவிட.. யாழினி.. "அண்ணா.. பாத்து மாட்டுங்க.. இது பெரியப்பாவுக்கும் பெரியம்மாவுக்கும் ரொம்ப பிடிச்ச போட்டோ.."என சொல்லியபடி அவர்கள் ஆதியின் போட்டோவை மாற்றும்வரை.. அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
மித்ராவோ.. ஆதியின் ஆளுயர புகைப்படத்தை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
மித்ரா ஆதியின் போட்டோவை பார்ப்பதை கவனித்த யாழினி.. "என்ன அப்டி பார்க்கிறீங்க.. அதான் என்னோட அண்ணன் ஆதி.. ஆதி குரூப்ஸ் எம்.டி.."என சொன்னாள்.
மித்ராவோ எதுவும் பேசும் நிலையில் இல்லை..
அப்போது அங்கே வந்த மாலதி.. "யாழினி இந்தா கௌதம் போன் பண்ணிருக்கான்.."என போனை யாழினியிடம் கொடுத்தார்.
போன் பேசியபடி யாழினி அங்கிருந்து சென்றாள்.
மித்ரா ஒருமாதிரியாக இருப்பதை கவனித்த மாலதி.. "என்னமா.. என்னாச்சு.. உடம்பு எதுவும் சரியில்லையா.."என அக்கறையுடன் விசாரித்தார்.
"அ.. அதெல்லாம்.. ஒன்னுமில்லை.. நான் வர்றேன்.."என மித்ரா கிளம்பினாள்.
"என்னாச்சு.. இந்தப் பொண்ணுக்கு.."என தனக்குள்ளே பேசிக்கொண்ட மாலதி.. நெடுநாளைக்கு பிறகு ஹாலில் மாட்டிய குடும்ப போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன்.. "இந்த போட்டோவை மாட்டின பிறகு தான் நம்ம வீடே நல்லாருக்கு.. ஏதோ தொலைஞ்ச சந்தோஷம் திரும்ப வர்ற மாதிரி இருக்கு.."என்றார்.
அவர் சொல்வதை சரியென்பது போல் மாலதியும் தலையசைத்தார்.
***
ஆதியை பார்த்த நாளிலிருந்து நடந்தவற்றை நினைத்து பார்த்தாள் மித்ரா.
மனமெல்லாம் பாரமாக இருக்க.. ஆதி வீட்டில் பார்த்த புகைப்படம்.. மித்ராவின் கண்முன் வந்தது..
"அதே சிரிப்பு.. நான் பார்த்து ரசித்த அந்த சிரிப்பு.. அவ்ளோ பெரிய வீட்டை.. அரண்மனை மாதிரி இருக்கிற அந்த வீட்டை விட்டுட்டு எதுக்காக ஆதி வந்து சின்ன வீட்டில எந்த வசதியும் இல்லாம தங்கணும்.."என மித்ரா குழப்பத்தோடு அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள்.
மித்ரா.. கவனிடம் யாழினி சொன்ன தகவல்கள் பற்றி சொன்னாள்.
"இந்த ப்ளான் ஒர்க் இன்னைக்கு ஸ்டார்ட் பண்ணிடுங்க மித்ரா.. டைம் ரொம்ப கம்மியா இருக்கு.."என்றான் கவின்.
"சார்.. நா.. நான்.. வீட்டுக்கு கிளம்பவா.. நாளைக்கு வந்து இந்த வொர்க் பார்க்கிறேன்.."என தடுமாற்றத்துடன் மித்ரா சொன்னாள்.
"ம்.. சரி கிளம்புங்க.."என்றான் கவின்.
ஏதோ நினைவு வந்தவளாக.. மித்ரா கவினிடம்.. "சார் ஆதி groups 25th anniversary video நான் பார்க்கலாமா.."என கேட்டாள்.
"ம்.. பாருங்க.."என்றான் கவின்.
மித்ரா வீடியோவை ப்ளே செய்துவிட்டு.. forward செய்ய.. அதில்.. சதீஷ்.. "பாஸ்.. வாங்க.."என அழைக்க.. ஆதி மேடையேறினான்.
மேடைக்கு வந்த ஆதி.. "எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நீங்க எல்லாரும் அப்பா அம்மா மேல எவ்ளோ மரியாதை வச்சிருக்கீங்கனு நான் இன்னைக்கு தெரிஞ்சுக்கிட்டேன்.. அப்பாவும் அம்மாவும் எனக்கு இவ்ளோ பெரிய குடும்பத்தை சம்பாதிச்சு கொடுத்திருக்காங்கனு நினைக்கவே சந்தோஷமா இருக்கு.."என பேச அதை மித்ரா பார்த்தாள்.
"மித்ரா என்னாச்சு.."என கவின் கேட்க.. "ஒ.. ஒன்னுமில்லை.."என தடுமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பினாள்.
"எங்க பாஸ் என்னை எதுவுமே சொல்லமாட்டாரு.."என சொல்லியபடி ஆதி கண்சிமிட்டியது..
"எங்க பாஸ் என்னை எதுவும் சொல்லலைனா உங்களை நாளைக்கு டின்னர் கூட்டிட்டுப் போறேன்.. ஓகே வா.."என ஆதி கேட்டது..
"இவ்ளோ காஸ்ட்லி கார் யாரோடது.."என்ற மித்ராவின் கேள்விக்கு.. "என்னோடது.."என பதிலளித்து விட்டு.. "i mean எங்க பாஸோடது.. ஸோ என்னோடது.."என ஆதி சொன்னது..
எல்லாம் மித்ராவின் மனதில் ஓடியது.
"அப்ப என்னோட ஆதி.. தான் ஆதி groups MDஆ.. இவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்ட இருந்து ஆதி மறைச்சிட்டாரா..
அவ்ளோ பெரிய வீட்டை விட்டுட்டு ஆதி எனக்காக தான் இந்த சின்ன வீட்டில வந்து இருக்காரா..
இந்த வீட்டை வாங்குற அளவுக்கு.. இல்லை இதைப்போல பல வீடு கட்டவே ஆதியால முடியும்.. ஆனா.." என தனக்குள்ளே யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தாள் மித்ரா.
"இல்லை.. நான் ஆதிக்கு தகுதியானவ.. இல்லை.. அவருக்கு நான் தகுதியானவ இல்லை.. அ.. அவர் எனக்கு இல்லை.. நான் அவரோட இருக்கிறது சரியில்லை.."என மனதிற்குள் புலம்பத் தொடங்கினாள் மித்ரா.
"அக்கா என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட.."என கார்த்தி கேட்க.. மித்ரா பதில் எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்று கதவை தாழிட்டாள்..
"ஆதி.. எனக்கு சொந்தம் இல்லையா.. என் ஆதி எனக்கு இல்லையா.."என மித்ரா நினைத்து கண்ணீர் விடத் தொடங்கினாள்.
அப்போது மித்ராவின் அலைபேசி ஒலித்தது.. ஆதியின் புகைப்படத்துடன்..
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top