❤ 27 ❤
ஆதியின் புகைப்படத்துடன் அலைபேசி ஒளிர.. மித்ரா அதை வெறித்தபடி மேலும் அழத் தொடங்கினாள்.
"அக்கா.. என்ன பண்ற.. போன் அடிக்குது பாரு.."என கார்த்தி கதவை தட்டினான்..
எதையும் காதில் வாங்கும் நிலையில் மித்ரா இல்லை.
ஷவரை திறந்துவிட்டு.. அதில் நனைந்தபடி அழுது கொண்டேயிருந்தாள் மித்ரா.
***
எல்லாரும் வீட்டில் இருப்பதால்.. அங்கே செல்ல நினைத்த ஆதி.. மித்ராவிடம்.. வீட்டுக்கு வரமாட்டேன் என சொல்ல நினைத்து போன் செய்தான்.
சில முறை மீண்டும் மீண்டும் அழைத்தும் மித்ரா போனை எடுக்காததால்.. சரி வேலையா இருப்பா.. அப்புறம் சொல்லிக்கலாம் என நினைத்து விட்டுவிட்டான் ஆதி.
ஆதி வீட்டுக்கு செல்ல.. நெடுநாளைக்கு பிறகு ஹாலில் மாட்டியிருந்த போட்டோவை.. பார்த்தபடி நின்றிருந்தான்.
அப்போது அங்கே வந்த யாழினி.. ஆதியின் தோள் சாய்ந்தபடி.. "அண்ணா.. சூப்பரா இருக்குல்ல.. போட்டோ மாட்டின பிறகு.."என்றாள்.
"ம்.."என்றான் ஆதி.
மித்ரா ஏன் போனை எடுக்கலை.. கார்த்திக்கு போன் பண்ணலாமா.. என ஆதி யோசித்த வேளை.. சந்திரமதி ஸ்வேதாவுடன் அங்கே வந்தார்.
"ஆதி.. ஸ்வேதா.. டின்னர் வெளியே சாப்பிடணும்னு சொல்றா.. நீ கூட்டிட்டுப் போறீயா.."என ஆதியிடம் கேட்டார்.
"ஆங்.. சரி அத்தை.."என ஆதி சொன்னான்.
யாழினி.. "என்ன ஸ்வேதா.. முன்னாடியே சொல்லிருந்தா.. நானும் வந்திருப்பேன்ல.."என்றாள்.
"வந்துருவனு தான் சொல்லலை.."என வாய்க்குள்ளே முணுமுணுத்தாள் ஸ்வேதா.
"ஏன் குட்டிமா.. நீ வரலையா.."என ஆதி கேட்டான்.
"இல்லை ணா.. வரலை.."என்றாள் யாழினி.
அப்போது.. ஆதிக்கு போன் வர.. "ஹலோ.."என்றவன்.. பதற்றத்துடன்.. "சரி.. நான் உடனே வர்றேன்.."என்றான்.
"ஆதி.. டின்னர்.."என சந்திரமதி தொடங்க..
"இன்னொரு நாள் கூட்டிட்டுப் போறேன் அத்தை.. நான் இப்ப உடனே போகணும்.."என ஆதி அங்கிருந்து கிளம்பினான்.
தான் நினைத்தது நடக்காத வருத்தத்தில் சந்திரமதி ஆதியை பார்க்க. ஸ்வேதா.. ஆதியை முறைத்தபடி நின்று கொண்டிருந்தாள்.
போனில் கார்த்தி சொன்ன "அக்கா வேலைக்கு போய்ட்டு வந்து ரூமுக்குள்ள போய் கதவை பூட்டினா.. நான் கூப்டிட்டே இருக்கேன்.. அக்கா எதுவும் பேசவும் மாட்டிக்குறா.. கதவையும் திறக்க மாட்டிக்குறா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.."என்ற வார்த்தைகள் மட்டும் மனதில் இருக்க காரை வேகமாக செலுத்தினான் ஆதி.
"அக்கா.. அக்கா.."என அழைத்தபடி.. கதவை தட்டிக் கொண்டிருந்தான் கார்த்தி.
ஆதியும்.. பதற்றத்துடன் வந்து.. "மித்ரா.. மித்ரா.."என அழைத்தான்.
எந்த பதிலும் வராததால் கதவை உடைக்கலாம் என ஆதி நினைத்த வேளை.. கதவை திறந்தாள் மித்ரா.
"எதுக்கு இப்டி பண்ணிட்டு இருக்க.. என்னாச்சு.. உனக்கு.."என ஆதி கோபத்துடன் கேட்க.. சோர்வாக.. சிவந்து போயிருந்த கண்களுடன்.. மித்ரா.. ஆதியை பார்த்தாள்.
நிற்க பலமில்லாமல் மித்ரா மயங்கி விழுந்தாள். ஆதி நடப்பது அறியாது உறைந்து நிற்க.. கார்த்தி.. "அக்கா.. அக்கா.." என பதறியபடி மித்ராவை தொட.. அவள் உடம்பெல்லாம் நெருப்பாக கொதித்தது.
"அக்காவுக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது.."என்றான் கார்த்தி.
சில நொடிகளில் சுதாரித்துக் கொண்ட ஆதி.. மித்ராவை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிச் சென்றான்.
கார்த்தி அழுது கொண்டேயிருக்க.. அவனுக்கு சமாதானம் சொன்னான் ஆதி.
சில நிமிடங்களுக்கு பிறகு டாக்டர் வர.. "டாக்டர் மித்ரா எப்டி இருக்கா.."என ஆதி கேட்டான்..
"Fever ரொம்ப அதிகமா இருக்கு.. ரொம்ப நேரம் குளிந்த தண்ணியில இருந்தாங்களா.."என டாக்டர் கேட்டார்.
"ரொம்ப நேரமா ஷவர் சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு.."என கார்த்தி பதற்றத்துடன் சொன்னான்.
"அதனால கூட இருக்கலாம்.. இன்ஜெக்சன் போட்ருக்கேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு டெம்பரேச்சர் குறைஞ்சிருக்கானு பார்க்கலாம்.."என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்றார்.
சிறிது நேரம் கழித்து.. ஆதி கார்த்தியிடம்.. "நீ போய் சாப்டு வா.. ஹாஸ்பிட்டல்ல கேண்டீன் இருக்கும்.."என்றான்.
"இல்லை வேண்டாம்.. நான் அக்கா கூடவே இருக்கேன்.."என்றான் கார்த்தி அழுதபடியே.
"அக்காவுக்கு ஒன்னுமில்லை.. fever தானே சரியாகிடும்.. நீ அழாத.. போய் சாப்டு வா.. நான் இங்கே இருக்கேன்.."என்றான்.
"உங்களுக்கு சாப்பிட.."என கார்த்தி கேட்க.. "நீ சாப்பிட்டு.. எனக்கு ஒரு டீ மட்டும் வாங்கிட்டு வா.."என்றான் ஆதி.
மித்ராவுக்கு காய்ச்சல் சற்று குறையத் தொடங்கியிருந்தது.
மித்ராவின் அருகிலே அமர்ந்திருந்தான் ஆதி. மித்ராவின் கையை தன் கைகளுக்குள் வைத்தபடி.. அப்படியே உறங்கிவிட்டான்.
காலையில் கண்விழித்த மித்ரா.. தன் கைகளை பிடித்தபடியே உறங்கிக் கொண்டிருந்த ஆதியை பார்த்தாள்.
அப்போது.. ஆதியும் கண்விழிக்க.. "மித்ரா.. எழுந்துட்டீயா.. fever இல்லைல.."என்றபடி மித்ராவின் நெற்றியில் கைவைத்து பார்த்தான்.
மித்ரா எதுவும் பேசாமல் அவனை பார்த்தாள்.
மித்ரா கண்விழித்ததை பார்த்த கார்த்தி.. "அக்கா.. எழுந்துட்டியா.. நான் எவ்ளோ பயந்துட்டேன்.. தெரியுமா.."என கண்ணீர் சிந்தினான்.
மித்ரா எழும்ப முயற்சித்தாள்.. ஆனால் மிகவும் சோர்வாக இருந்தது.. மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள்.
ஆதி கார்த்தியிடம்.. "கார்த்தி.. அழாத.."என்றான்.
"மித்ரா.. நீ refresh ஆகிடு.. நான் சாப்பிட எதாவது வாங்கிட்டு வர்றேன்.."என்ற ஆதி.. கார்த்தியிடம்.. "கார்த்தி.. நீ வா.. நீயும் சாப்பிடு முதல்ல.."என்றபடி அவனையும் அழைத்துச் சென்றான்.
சிறிது நேரத்தில் ஆதி மட்டும் திரும்பி வந்தான். வாங்கி வந்த இட்லியை மித்ராவுக்கு ஊட்டிவிட்டான்.
மித்ரா ஆதியின் முகத்தை பார்த்தாள். அதை கவனித்த ஆதி.. "கார்த்தி சாப்பிட்டு இருக்கான்.. இப்ப வந்துடுவான்.."என்றான்.
ஆதியின் இந்த அன்பும் அரவணைப்பும் எனக்கு வேண்டும் என மித்ராவின் மனம் சொன்னது..
இல்லை.. உன்னால தான் ஆதி இந்த சின்ன வீட்டில.. எல்லோரையும் விட்டுட்டு வந்து இருக்கான்.. நீ திரும்பவும் தப்பு பண்ணாத.. என மித்ராவின் மூளை சொன்னது.
மித்ரா என்ன முடிவெடுப்பது என புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்க.. அங்கே வந்த கார்த்தி.. "அக்கா.. நேத்து ஏன் அப்டி நடந்துகிட்ட.. உனக்கு என்னாச்சு.."என கேட்டான்.
ஆதியும் மித்ராவை பார்க்க.. மித்ரா எதுவும் சொல்லாமல் ஆதியை பார்த்தாள்.
ஏதோ பிரச்சனை என புரிந்து கொண்ட ஆதி.. "கார்த்தி.. வீட்டில போய் பேசிக்கலாம்.. நான் போய் டாக்டர் கிட்ட பேசிட்டு வர்றேன்.."என்று அங்கிருந்து நகர்ந்தான்.
கார்த்தி மித்ராவை முறைத்துக் கொண்டிருக்க.. மித்ராவோ அவனை கவனிக்கும் மனநிலையில் இல்லை.
சில நிமிடங்கள் கழித்து வந்த ஆதி.. "டாக்டரை பார்த்துட்டு கிளம்பிடலாம்.. வாங்க.."என மித்ராவை அழைத்துச் சென்றான்.
மித்ராவை பரிசோதித்து விட்டு.. "fever குறைஞ்சிருக்கு.. வீட்டுக்கு கிளம்பலாம்.. ரொம்ப நேரம் தண்ணீயில நனையாதீங்க.."என டாக்டர் சொன்னார்.
என்னென்ன மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட பின்.. ஆதி மித்ராவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.
ஆதி தன் காரை எடுத்து வர.. கார்த்தியும் மித்ராவும் காரில் ஏறிக் கொண்டனர்.
"நேத்து நான் போன் பண்ணதும் உங்க பாஸோட காரை எடுத்துட்டு வந்துட்டீங்களா.."என கார்த்தி கேட்க.. ஆதி பதில் எதுவும் சொல்லாமல் மெலிதாய் புன்னகைத்தான்.
மித்ரா ஆதியின் முகத்தையே பார்த்தபடி.. மனதுக்குள் என்ன முடிவெடுப்பது என யோசித்தாள்.
வீட்டிற்கு வந்ததும் மித்ராவும் கார்த்தியும் இறங்கி வீட்டுக்குள் செல்ல.. ஆதி காரை சற்று தள்ளி நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தான்.
ஆதி வீட்டுக்குள் வந்ததும்.. "மித்ரா.. என்ன பிரச்சனை.."என்றான்.
"நீ.. நீங்க தான்.."என்றாள் மித்ரா.
"நானா.. நான் என்ன பண்ணேன்.."என ஆதி கேட்டான்.
"அது உங்களுக்கே தெரியும்.."என்றாள் மித்ரா.
"மித்ரா எதைப்பத்தி பேசுற.."என புரியாமல் கேட்டான் ஆதி.
"நான் எதைப்பத்தியும் பேச விரும்பலை.. நீங்க போயிடுங்க.. என்னை விட்டுப் போயிடுங்க.."என சற்று உரக்கச் சொன்னாள் மித்ரா.
"அக்கா.. உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. நேத்துல இருந்து சாப்பிடாம உன்கூடவே இருந்து உன்னை பார்த்துட்டு இருக்காரு.. அவர்கிட்ட எதுக்காக இப்டி பேசுற.."என கார்த்தி கோபமாக மித்ராவிடம் கேட்டான்.
"கார்த்தி.. நீ எதுவும் பேசாத.."என்ற ஆதி மித்ராவை பார்க்க.. மித்ராவின் கண்களில் நீர் துளிர்த்தது.
"மித்ரா.. என்னாச்சு.. சொல்லு.."என மித்ராவின் கைகளை பிடித்தான் ஆதி.
கண்ணீர் வழிய.. மித்ரா அவன் கைகளை உதறிவிட்டு.. "போயிடுங்க.. ப்ளீஸ் போயிடுங்க.."என மண்டியிட்டு அழத் தொடங்கினாள்.
அவள் கண்ணீருக்கு தான் காரணமாக வேண்டாமென நினைத்த ஆதி.. அங்கிருந்து கிளம்பினான்.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top