❤ 25 ❤
ஊரிலிருந்து எல்லோரும் வந்துவிட்டதால்.. ஆதி வேலை இருப்பதாக மித்ராவிடம் சொல்லிவிட்டு.. சீக்கிரமாக கிளம்பினான்.
மித்ராவும் வேலைக்கு அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்த வேளை.. "மித்ரா.."என அழைத்தபடி ஹவுஸ் ஓனர் கோமதி அங்கே வந்தார்.
"ஆங்.. வாங்க ஆண்ட்டி.."என மித்ரா அழைத்தாள்.
"இந்தா மா.."என மித்ரா கையில் ஒரு கவரை கொடுத்தவர்.. "அன்னைக்கே கொடுக்கணும்னு நினைச்சேன் மா.. ஆனா மறந்துட்டேன்.. நான் என் பொண்ணு வீட்டுக்கு போறேன்.. எப்ப வருவேன்னு சொல்ல முடியாது.. அதான் உன்கிட்ட கொடுத்திடலாம்னு வந்தேன்.."என்றார்.
எதைப்பற்றி பேசுகிறார் என மித்ராவுக்கு புரியவில்லை.. இருந்தாலும் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் மித்ரா அதை பெற்றுக் கொண்டாள்.
"ஆதி தம்பி வற்புறுத்தி கேட்டதால தான்.. நான் இதை கொடுத்தேன்.."என அவர் பேசத் தொடங்கிய வேளை.. அவரின் அலைபேசி ஒலிக்க..
"சரி மித்ரா.. லேட்டாகுது.. நான் வர்றேன்.."என அங்கிருந்து கிளம்பினார்.
அது என்ன கவர் என பிரிக்க நினைத்த மித்ரா.. அப்புறம் பார்த்துக்கலாம் என அதையும் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
***
ஆதி வீட்டிற்கு சென்ற நேரம்.. எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
ஆதியும் எல்லோரிடமும் பேசிவிட்டு அங்கேயே அமர்ந்தான்.
அப்போது ரவிச்சந்திரன்.. "ஆதி வர்ற ஞாயிற்றுக்கிழமை நல்ல நாள்.. அன்னைக்கே யாழினி கௌதம் கல்யாணத்தை வச்சுக்கலாமா.."என கேட்டார்.
"ஆம்.. சரி சித்தப்பா.."என்றான் ஆதி.
"ஆதி.. டைம் ரொம்ப கம்மியா இருக்கு.. எல்லா அரேஞ்ச்மென்ட்ஸ் ம் முடிச்சிடலாமா.."என கேட்டார் மாலதி.
"அதெல்லாம் பாத்துக்கலாம் சித்தி.. கௌதம் எப்ப வர்றான்.."என ஆதி கேட்டான்.
"இரண்டு நாள்ல வந்துடுவான்.."என சந்திரமதி சொன்னார்.
அப்போது யாழினி ஆதியிடம்.. "அண்ணா.. wedding plannerட்ட பேசிட்டீயா.."என கேட்டாள்.
"இல்லை.. குட்டிமா.. இனிமே தான்.."என்றான் ஆதி.
"நான் கொஞ்சம் ஐடியா வச்சிருக்கேன்.. அந்த மாதிரி தான் டெக்கரேஷன் பண்ணனும்.."என்றாள் யாழினி.
"சரிடா.. நான் வரச்சொல்றேன்.. நீயே அவங்ககிட்ட உனக்கு எப்டி டெக்கரேஷன் வேணும்னு சொல்லு.."என்றான் ஆதி.
"ம்.. உன் கல்யாணத்துக்கும் என் இஷ்டப்படி தான் டெக்கரேஷன் இருக்கணும்.."என்றாள் யாழினி.
ஆதி சிரித்தபடி தலையாட்டினான். தன் கையிலிருந்த மோதிரத்தை பார்த்தபடி மித்ராவின் நினைவில் மூழ்கினான் ஆதி.
"ஆதி ஸ்வேதா கல்யாணமும்.. எங்க அண்ணன் ஆசையா கட்டின இதே வீட்டில நடக்கணும்.."என்றார் சந்திரமதி.
அவர் சொல்ல வருவதை சரியாக புரிந்து கொள்ளாமல்.. யாழினி.. "ஸ்வேதா கல்யாணத்தை மும்பை வீட்டில வச்சுக்கலாம் அத்தை.."என்றாள்.
"இங்கே மாப்பிள்ளை பார்த்து இந்த வீட்டில வைக்கணும்னு தான் எனக்கு ஆசை.."என்றார் சந்திரமதி.
"மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா அத்தை.."என அப்பாவியாக யாழினி கேட்க.. சந்திரமதி சற்று எரிச்சலுடன்.. "இனிமேதான்.."என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
"அண்ணா.. ஹால்ல.. நம்ம பேமிலி போட்டோவை வைக்கலாமா.."என யாழினி ஆதியிடம் கேட்டாள்.
ஆதியின் அம்மா அப்பா தவறியபின்.. ஆதி வருத்தப்படுவான் என ஹாலில் இருந்த.. போட்டோவை அகற்றியிருந்தனர்.
"ம்.."என ஆதி சொல்ல.. யாழினி உற்சாகமாக.. "நான் போட்டோவை எடுத்து வைக்கச் சொல்றேன்.."என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்.
மாலதி.. "ஆதி டிபன் எடுத்து வைக்கவா.."என கேட்டார்.
"வேணாம் சித்தி.. நான் சாப்டேன்.."என ஆதி சொன்னான்.
"சரி.. சித்தி.. நான் ஆபிஸ்க்கு போகணும்.. நான் வர்றேன்.."என ஆதி அங்கிருந்து கிளம்பினான்.
தனது அலுவலகத்திற்கு வந்த ஆதி.. சதீஷை அழைத்து.. யாழினி கௌதம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை யாரிடம் ஒப்படைக்கலாம் என ஆலோசித்தான்.
கவினிடமே ஒப்படைக்கலாம் என முடிவெடுத்த ஆதி.. கவினுடன் மீட்டிங் அரேஞ்ச் செய்யுமாறு சதீஷிடம் கூறினான்.
சில மணி நேரம் கடந்தபின்..
கவின் ஆதியை சந்திப்பதற்காக வந்தான்.
"ஹலோ கவின்.."என்றான் ஆதி.
கவினிற்கு ஆதியை பார்த்ததும்.. மித்ராவுடன் ஆதியை பார்க்கில் பார்த்தது நினைவுக்கு வர.. அதை உதறிவிட்டு.. "ஹலோ சார்.."என ஆதியிடம் இயல்பாக பேசினான்.
"எங்களோட 25th anniversaryல இருந்து நீங்க பண்ண மீட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு.. அந்த நம்பிக்கைல தான் எங்க பேமிலி பங்ஷனோட அரேஞ்ச்மென்ட்ஸ நான் உங்ககிட்டயே கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.."என்றான் ஆதி.
"Its our pleasure.. thanks sir.."என்றான் கவின்.
"இது எங்க வீட்ல நடக்கிற முத கல்யாணம்.. அதனால grandஆ இருக்கணும்.."என்றான் ஆதி.
ஒருவேளை ஆதிக்கும் மித்ராவுக்கும் தான் கல்யாணமோ.. என மனதில் எண்ணினான் கவின்.
"யாரோட கல்யாணம் சார்.."என கவின் கேட்க.. "என் தங்கச்சியோட கல்யாணம்.."என ஆதி புன்னகையுடன் பதிலளித்தான்.
"ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. அவ டெக்கரேஷன் லாம் எப்டி வேணும்னு ஐடியா வச்சிருக்கா.. அதனால ப்ளான் பண்ணுறதுக்கு முன்னால அவகிட்ட பேசிடுங்க.."என்றான் ஆதி.
"ஆங்.. ஓகே சார்.."என்ற கவின் வேறு சில விவரங்களையும் கேட்டு விட்டு ஆதியிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டான்.
***
மித்ரா அலுவலகத்தில்.. தன் வேலைகளை முடித்துவிட்டு.. பைலை கவினிடம் ஒப்படைப்பதற்காக.. அவனது அறைக்கு சென்றாள்.
ஆனால் அங்கே முரளி தான் இருந்தான்.
"சார்.. கவின் சார் இல்லையா.."என மித்ரா கேட்டாள்.
"ஒரு மீட்டிங் அட்டெண் பண்ண போனான்.. என்ன விஷயம்.."என முரளி கேட்டான்.
"வொர்க் முடிச்சிட்டேன்.. இந்த பைலை சார் கிட்ட கொடுக்கணும்.."என்றாள் மித்ரா.
"நான் கொடுத்துடுறேன்.. நீங்க போங்க.."என்ற முரளி மித்ராவிடம் இருந்து அந்த பைலை வாங்கிக் கொண்டான்.
பைலை கொடுத்துவிட்டு வந்த மித்ரா.. அப்போது தான் காலையில் கோமதி கொடுத்த கவரை பிரித்தாள்.
அதில்.. மித்ரா தங்கியிக்கும் வீட்டு பத்திரம் இருந்தது.. அதுவும் மித்ராவின் பேரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
காலையில் கோமதி சொல்லும் போது.. ஆதி வற்புறுத்தி கேட்டதால் தான் தந்ததாக சொன்னார் என்பதை நினைத்து பார்த்தாள் மித்ரா.
"அப்ப ஆதி வீட்டை என் பேர்ல வாங்கிருக்காரா.. ஏன் என்கிட்ட எதுவுமே சொல்லலை.."என யோசித்தாள் மித்ரா.
"வீடு வாங்குற அளவு காசு இருந்தா ஏன் ஆதி வாடகை வீட்டில வந்து தங்கியிருக்கார்.. வேற எதுவும் காரணம் இருக்குமா.."என மித்ரா குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கே வந்த கவின் மித்ராவை அழைத்து.. ஆதியின் வீட்டு முகவரியை கொடுத்து யாழினியை சந்தித்து வருமாறு கூறினான்.
"அவங்க வீட்ல நடக்கிற முத கல்யாணம்.. grandஆ இருக்கணும்னு சொன்னாங்க.. டெக்கரேஷன் எப்டி வேணும்னு அவங்களுக்கு சில requirements இருக்கு.. அதெல்லாம் detailஆ கேட்டுக்கோங்க.."என கவின் மித்ராவிடம் சொன்னான்.
"ஆம்.. ஓகே சார்.."என சொல்லிவிட்டு.. மித்ரா ஆதியின் வீடு என அறியாமலே.. அங்கே கிளம்பினாள்.
முரளி கவினிடம்.. "என்ன கவின்.. ஆதி groups work எல்லாம் மித்ராவுக்கு தெரியாம மறைச்சிட்டு இருந்த.. இப்ப நீயே ஆதி வீட்டுக்கு மித்ராவை அனுப்புற.."என கேட்டான்.
"அவங்க மீட் பண்றதுக்கு நானே காரணமா இருக்கக்கூடாதுன்னு மறைச்சேன்.. ஆனா இப்ப.."
"இப்ப என்ன.."
"ஆனா அவங்க வேற எங்கையும் மீட் பண்ணிக்க முடியாதுனு நினைச்சது என்னோட முட்டாள்தனம்னு புரிஞ்சுகிட்டேன்.."என கவின் வருத்தமாக சொன்னான்.
"என்னடா சொல்ற.. அவங்க வேற எங்கையும் மீட் பண்ணிக்கிறாங்களா.."என முரளி கேட்டான்.
ஆம் என தலையசைத்தான் கவின்.
"உன் மனசில இருக்கிறத முன்னாடியே மித்ரா கிட்ட சொல்லி இருந்திருக்கலாம்ல டா.."என முரளி சொன்னான்.
"அவ மனசில நானே இல்லாதப்ப சொன்னா என்ன.. சொல்லலை னா என்ன.."என்றான் கவின்.
"பட்.. என்னை விட ஆதி தான் மித்ராவுக்கு பொருத்தமா இருப்பார்.."என கவின் சொன்னான்.
"ஏன் ஆதி உன்னைவிட வசதியா இருக்கிறதால யா.."என முரளி கேட்டான்.
"இல்லைடா.. அவரோட குணத்தை வச்சு சொல்றேன்.. மித்ராவும் ஆதியோட பணத்தை பார்த்து நேசிச்சிருக்க மாட்டா.. நிச்சயமா.."என்றான் கவின்.
முரளி பதில் எதுவும் சொல்லவில்லை..
##ஆதியின் வீடு என்பதை அறியாமல் செல்லும் மித்ரா.. ஆதி யாரென்பதை தெரிந்து கொள்வாளா..
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top