WatTruyen.Top

தொடுவானம்

❤ 21 ❤

jamunaguru

ஆதி யாழினி கௌதம் கல்யாணத்தை பற்றிய யோசனையோடு ஆபிஸிற்கு சென்றான்.

அங்கே.. "நிஜமாவே எனக்கு எதுவும் தெரியாது.."என்றான் சதீஷ் யாழினியிடம்..

"உனக்கு தெரியாம இருக்க சான்ஸே இல்லை.. ஆதி அண்ணன் வீட்டுக்கு கூட வராம எங்க போறான்னு ஒழுங்கா சொல்லிடு.."என யாழினி சதீஷிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"அது.. அது.."என இழுத்தான் சதீஷ்.

"நீ இப்ப சொல்லலை.. உன் காதை கடிச்சு வச்சிருவேன்.. ஒழுங்கா சொல்லு.."என யாழினி சொன்னாள்.

காதை பொத்திக் கொண்ட சதீஷ்.. "கடிச்சு வச்சாலும் வச்சிருவாங்க.. இப்ப என்ன பண்றது.."என தனக்குள்ளே பேசியபடி யோசிக்க..

அதற்குள் ஆதி அங்கு வந்து சேர்ந்தான்.. ஆதியை பார்த்த சதீஷ்.. "பாஸ்.. என் காதை காப்பாத்துங்க பாஸ்.."என ஓடினான்.

என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்து கொண்ட ஆதி.. சதீஷை வெளியே போகுமாறு சைகை செய்தான்.

"பாத்து பாஸ்.. எல்லா கோபமும் உங்க மேல தான்.."என்று ஆதியின் காதில் சொல்லிவிட்டு.. அங்கிருந்து தப்பித்தான் சதீஷ்.

"யாழினி.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.."என்றான் ஆதி.

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு நீ பேசு என்கிட்ட.. அதுவரைக்கும் பேசாத.."என்றாள் யாழினி.

"குட்டிமா.. நான் சொல்றேன்.. முதல்ல நீ சொல்லு.. உனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க சம்மதமா.."என்றான் ஆதி.

"எப்பனாலும் நான் கௌதம தான கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. அப்புறம் என்ன ண்ணா.."என்றாள் யாழினி.

"அதெல்லாம் சரிதான் குட்டிமா.. ஆனா இப்பத்தான் காலேஜ் முடிச்சிருக்க.. உடனே கல்யாணம் பண்ணிக்கணுமா.."

"ஆமால்ல.. அப்ப வேண்டாம் ணா.."என்ற யாழினி.. சில நொடிகளில்.. "ஆனா அண்ணா.."என இழுத்தாள்.

ஆதி அவளை முறைத்தான்.

"உனக்கு இஷ்டம் இல்லையா.. ணா.."என கேட்டாள் யாழினி.

"அப்டி இல்லைடா.. ஆனா.. ரொம்ப சீக்கிரமா பண்றதுல விருப்பம் இல்லை.."என ஆதி சொன்னான்.

"நான் உன்னை விட்டு மும்பை போயிடுவேன்னு யோசிக்கிறீயா.. நீ ஒரு போன் பண்ணா போதும் ண்ணா.. நான் பறந்து வந்துடுவேன்.."என்றாள் யாழினி.

அவள் சொன்னதை கேட்டு ஆதி சிரித்தான்.

"சரி.. குட்டிமா.. நீ வீட்டுக்கு போ.."என்றான் ஆதி.

"நீ வீட்டுக்கு வராம எங்க போன.. அத முதல்ல சொல்லு.."என்றாள் யாழினி.

"உனக்கு உன் அண்ணியை பார்க்கணுமா.."என யாழினியிடம் கேட்டான் ஆதி.

"அண்ணியா.. எந்த அண்ணி.."என யோசித்த யாழினி.. "டேய் அண்ணா.. அந்த பென் வாங்கும் போது பார்த்தீயே.. அவங்களா.."என கேட்டாள் யாழினி.

ஆமாம் என தலையசைத்தான் ஆதி.

"நீ அப்புறம் அவங்கள எப்ப பாத்த.. ஏன் என்கிட்ட சொல்லலை.. எங்க பாத்த.. பேசினீயா அவங்கட்ட.. அவங்க பேர் என்ன.. சொல்லு ணா.."என கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தாள் யாழினி.

"இதெல்லாம் நீ தெரிஞ்சுக்கணும்னா.. நான் வீட்டுக்கு வராம எங்க போறேன்னு கேட்க கூடாது.."என்றான் ஆதி.

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. சொல்லு ணா ப்ளீஸ்.."என சிணுங்கினாள் யாழினி.

ஆதி எதுவும் சொல்ல மாட்டான் என தெரிந்ததும்.. "சரி.. நீ எங்க போறன்னு நான் கேட்கலை.. இப்ப சொல்லு.."என்றாள் யாழினி.

"நம்ம ஆபிஸ் வாசல்ல தான் திரும்ப மீட் பண்ணேன்.."என்றான் ஆதி.

"நம்ம ஆபிஸ்ல யா.. அப்ப இங்க வேலை பார்க்கிறாங்களா.."என யாழினி உற்சாகமாக கேட்டாள்.

ஆதி மறுப்பாய் தலையசைத்தான்.

"இல்லையா.. அண்ணியும் இங்கே வேலை பார்த்தா.. சூப்பரா இருக்கும்ல.. நீ நல்லா சைட் அடிக்கலாம்.."என்றாள் யாழினி.

ஆதி அவளின் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டிருக்க.. அப்போது ஆதியின் போன் ரிங் ஆனது..

"குட்டிமா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நீ வீட்டுக்கு போ.. நான் அப்புறம் போன் பண்றேன் உனக்கு.."என ஆதி சொன்னான்.

"யாரு போன்ல.. அந்த சதீஷா.. நீ அப்புறம் பேசு அவன்கிட்ட.."என யாழினி சொன்னாள்.

"இல்லை குட்டிமா.. பிஸினஸ் கால்.. நான் உனக்கு அப்புறமா போன் பண்றேன்.."என ஆதி சொன்னான்.

"போடா.."என சிணுங்கியபடி யாழினி அங்கிருந்து கிளம்ப.. ஆதி சிரித்தபடி.. போனை அட்டெண் செய்து பேசிவிட்டு தன் வேலைகளை பார்க்கலானான்.

சிறிது நேரத்திற்கு பின்..

ஆதிக்கு கௌதம் போன் செய்தான்.

"சொல்லுங்க.. சார்.. இப்ப தான் உங்களுக்கு நேரம் கிடைச்சுதா.."என்றான் ஆதி.

"அப்டிலாம் இல்லை மச்சான்.. பிஸினஸ் இப்பத்தான் ஸ்டார்ட் பண்ணிருக்கேன்.. அதான்.."என்றான் கௌதம்.

"சரிடா.. பிஸினஸ் எப்டி போகுது.."என கேட்டான் ஆதி.

"ம்.. ஏதோ.."என சற்று சலித்துக் கொண்ட கௌதம்.. "யாழினி வந்து ஒருவழி பண்ணிருப்பாளே உங்களை.."என்றான்.

"எனக்கும் ஒரு காலம் வரும் டா.. அப்ப கவனிச்சுக்கிறேன் உன்னை.."என்றான் ஆதி.

"அம்மாவும் அப்பாவும் தான் கல்யாணம் கல்யாணம்னு பேசிட்டு இருந்தாங்க.. இப்ப யாழினியும் ஆரம்பிச்சிட்டா.."என்றான் கௌதம்.

"எல்லாம் அதுக்கான நேரம் வரும் போது நடக்கும் டா.. விடு.. நீ பிஸினஸ்ல concentrate பண்ணு.. எதும் ஹெல்ப் வேணும்னா கேளு.." என்றான் ஆதி.

"ம்.. சரி.. நான் அப்புறம் பேசுறேன்.."என போனை கட் செய்தான் கௌதம்.

கௌதமிடம் பேசி முடித்ததும் ஆதி சதீஷை அழைத்தான்.

"சொல்லுங்க பாஸ்.."என்றான் சதீஷ்.

ஆதி சதீஷிடம்.. கௌதமின் பிஸினஸ் பத்தின detailsம் வேறு சில விவரங்களும் கலெக்ட் பண்ண சொன்னான்..

"சதீஷ்.. இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது.. முக்கியமா யாழினிக்கு தெரியக்கூடாது.."என்றான் ஆதி.

"ம்.. ஓகே பாஸ்.."என்றபடி அங்கிருந்து சென்றான் சதீஷ்.

வேலை காரணமாக.. அன்றைய நாள் சென்றதே தெரியவில்லை ஆதிக்கு..

சாயந்திரம் மித்ரா போன் செய்தாள்.. மித்ராவின் அழைப்பைக் கண்டதும்.. உற்சாகம் ஆனான் ஆதி.

"சொல்லு மித்ரா.."என்றான் ஆதி.

"வேலைலாம் முடிச்சிட்டீங்களா.."என கேட்டாள் மித்ரா.

"ம்.. இப்ப முடிஞ்சிடும்.."என்றான் ஆதி.

"சாரு ஊருக்கு கிளம்புறால்ல.. அதை நியாபகப்படுத்த தான் போன் பண்ணேன்.."என்றாள் மித்ரா.

"நியாபகம் இருக்கு.. சீக்கிரம் வந்துடுறேன்.."என்றான் ஆதி.

"ம்.. சரி.."என புன்னகையோடு போனை கட் செய்தாள் மித்ரா.

சாரு மித்ராவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"திடீர்னு எல்லாம் மாறிட்ட மாதிரி இருக்கு மித்ரா.."என்றாள் சாரு.

"என்னமோ தெரியலை.. மித்ரா.. ஒருமாதிரியா.. இருக்கு.."என சாரு பேசினாள்..

"என்ன நீ சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்தில எதையாவது பேசிட்டு இருக்க.. சரி உனக்கு என்ன gift வேணும்.."என பேச்சை மாற்றினாள் மித்ரா..

"உதைபடுவ நீ.. gift லாம் வேண்டாம்.. ஆனா நீ ஒன்னு செய்யணும்.."என்றாள் சாரு.

"என்ன.."என ஆர்வமாக கேட்டாள் மித்ரா.

"நீயும் ஆதி அண்ணாவும் ஜோடியா வாங்க என் கல்யாணத்துக்கு.."என்ற சாருவின் வார்த்தைகளை கேட்ட மித்ரா வெட்க புன்னகை பூத்தாள்.

ஆதியும் வேலை முடித்துவிட்டு வர.. சாரு இருவரிடமும் விடைபெற்றுவிட்டு கிளம்பினாள்.

"அண்ணா.. நீங்க இரண்டு பேரும் ஒன்னா வரணும்.. மறந்துடாதீங்க.."என சாரு சொல்ல..

"அதெல்லாம் மறக்காது.. நாங்க வந்துடுறோம்.."என்றான் ஆதி மித்ராவை புன்னகையோடு பார்த்தபடி.

"மித்ரா.. கார்த்தியையும் கூட்டிட்டு வா.."என மித்ராவிடமும் சொல்லிவிட்டு சாரு கிளம்பினாள்.

சாரு கிளம்பியதும் மித்ராவும் ஆதியும் வீட்டுக்குள் வந்தனர்.

ஆதியின் தோள் சாய்ந்து அமர்ந்தாள் மித்ரா. ஆதியும் புன்னகையோடு அவள் தலையை வருடினான்.

"ரொம்ப டயர்டா இருக்கு.."என்றாள் மித்ரா.

"ஏன்.. வேலை அதிகமா.."என கேட்டான் ஆதி.

"ம்.."என பதிலளித்தாள் மித்ரா.

"மித்ரா.. ஏன் இப்பலாம் நீ எங்க ஆபிஸுக்கு வர்றதில்லை.."என ஆதி கேட்டான்.

"உங்க கம்பெனில இருந்து அதுக்கு பிறகு வேலை வந்துச்சா.."என மித்ரா பதில் கேள்வி கேட்டாள்.

மித்ராவை வரவைக்க எண்ணியே சில வேலைகள் அளித்ததை எண்ணி பார்த்தான் ஆதி.. ஆனா ஏன் எதுவுமே மித்ராவுக்கு தெரியலை.. மித்ராவுக்கு தெரியாததும் ஒருவகையில நல்லது தான்.. என ஆதி யோசனையில் மூழ்கினான்.

"என்ன யோசிக்கிறீங்க.. அதுக்கு அப்புறம் எதும் வேலை வந்துச்சா.."என கேட்டாள் மித்ரா.

"ஆங்.. அது.. தெரியலை.. சதீஷ் கிட்ட கேட்டா தெரியும்.."என ஆதி சமாளித்தான்.

"கார்த்தி.. எப்ப ஊர்ல இருந்து வர்றான்.."என ஆதி கேட்டான்.

"இன்னும் இரண்டு நாள்னு சொன்னான் இன்னைக்கு.. அநேகமாக சாரு கல்யாணத்துக்கு கிளம்பும் போது தான் வருவான்னு நினைக்கிறேன்.."என மித்ரா சொன்னாள்.

சில நிமிடங்கள் கடந்தபின்..

"நைட்டுக்கு சப்பாத்தி பண்ணவா..."என கேட்டாள் மித்ரா.

"வேண்டாம்.. டயர்டா இருக்குன்னு சொன்னல்ல.. வெளியே போய் சாப்பிடலாம்.."என்றான் ஆதி.

சரியென மித்ராவும் தலையசைத்தாள்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top