WatTruyen.Top

தொடுவானம்

❤ 20 ❤

jamunaguru

மித்ரா வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். ஆதி இன்னும் கிளம்பி வரவில்லை..

டீயை கொடுத்துவிட்டு வரலாம் என மித்ரா ஆதியின் அறைக்கு சென்றாள்.

ஆதியின் அறைக்கதவு பூட்டாமல் தான் இருந்தது.. மித்ரா கையால் தள்ளவும் திறந்துவிட்டது.

ஆதி இன்னும் எழும்பாமல் தூங்கிக் கொண்டிருந்தான். மித்ரா அவனை எழுப்பினாள்.

ஆதியோ மித்ராவையும் சேர்த்து அணைத்தபடி.. "இன்னும் கொஞ்ச நேரம்.. தூங்கிக்கிறேன்.. ப்ளீஸ்.."என்றான்.

"ஆதி எழுந்திருங்க.."என்றாள் மித்ரா.

ஆதி மித்ராவின் பேச்சை காதில் வாங்காமல் அவளை மேலும் இறுக்கி அணைத்தான்.

"மித்ரா.."

"ம்.."

"தினமும் வந்து இப்டியே எழுப்பிவிடேன்.."என்றான் ஆதி.

"சரி.. இப்ப எழுந்திருங்க.."என மித்ரா ஆதியின் அணைப்பிலிருந்து விடுபட.. முயற்சித்தாள். ஆனால் ஆதி அவளை விடுவதாயில்லை.

"வேலைக்கு போகணுமா.. வேண்டாமா.. விடுங்க ஆதி.."என மித்ரா சிணுங்க.. "ம்.. போக வேண்டாம்.."என்றான் ஆதி.

"ம்.. அப்டியா.. நான் வேலைக்கு போகணும்.. என்னை விடுங்க.."என்று ஒருவழியாக அவனிடமிருந்து விலகி எழுந்து நின்றாள் மித்ரா.

"டீ எடுத்துட்டு வந்துட்டேன்.. சீக்கிரம் குளிச்சிட்டு கீழ வாங்க.."என்றாள் மித்ரா.

சரியென தலையசைத்தபடி ஆதியும் எழுந்தான்.

ஆதி கிளம்பி கீழே வர.. மித்ரா ஆதி சாப்பிட.. சூடாக தோசை எடுத்து வைத்தாள்.

"மித்ரா.. என் போன் இங்க இருக்கா.."என்றான் ஆதி.

"இங்க இல்லையே.."என்றாள் மித்ரா.

"ஆபிஸ்ல வச்சிட்டு வந்திருப்பேனோ.. உன் போன் கொடு.. போன் பண்ணி பார்க்கிறேன்.."என ஆதி கேட்க.. மித்ரா போனை கொடுத்தாள்.

ஆதி ஆபிஸ்ல தான் போனை வச்சிட்டு வந்திருந்தான்.. சதீஷ் தான் போனை அட்டெண் பண்ணான்.

சதீஷ் சொன்ன விஷயத்தை கேட்டதும்.. "என்ன.."என அதிர்ச்சியானான்.

"சரி.. நான் டைரக்டா அங்கையே போறேன்.."என்றான் ஆதி.

மித்ரா.. ஆதியிடம்.. "என்னாச்சு.."என்றாள்.

"ஒன்னுமில்லை.. ரொம்ப முக்கியமான வேலை.. சீக்கிரம் கிளம்பணும்.."என ஆதி சொன்னான்.

அப்போது சாரு.. "அண்ணா.. எவ்ளோ முக்கியமான வேலைனாலும் சாயந்திரம் சீக்கிரம் வந்துடுங்க.."என்றாள்.

"ஏன்.. என்ன விஷயம்.."என ஆதி கேட்டான்.

"அதுக்குள்ள மறந்தாச்சா.. அடுத்த வாரம் எனக்கு கல்யாணம்.. அதாவது நியாபகம் இருக்கா.."என்றாள் சாரு.

நாக்கை கடித்தபடி.. "ஆமால்ல.. மறந்துட்டேன்.. இன்னைக்கு ஊருக்கு கிளம்புற.. அதனால நான் சீக்கிரமே வரணும்.. வழியனுப்ப.. மறக்காம வந்துடுறேன்.."என்றான் ஆதி.

"ம்.. அப்புறம் மறந்துட்டு இரண்டு பேரும் கனவுல டூயட் பாட போய்டக் கூடாது.."என ஆதி மித்ரா இருவரையும் பார்த்து சாரு சொன்னாள்.

இருவரும் அசடுவழிய சிரித்தபடி.. தலையாட்டினர்.

மித்ரா வேலைக்கு செல்ல.. ஆதி தன் வீட்டிற்கு சென்றான்.

ஆதி வீட்டிற்குள் நுழைந்ததும்.. "டேய்.. என் போனை அட்டெண் பண்ணமுடியாத அளவுக்கு அப்டி என்ன கிழிச்சிட்டு இருந்த நீ.."என யாழினி அவனை அடிக்கத் தொடங்கினாள்.

"போனை ஆபிஸ்ல மறந்து வச்சிட்டேன்.. குட்டிமா.."என்றான் ஆதி.

ஆனாலும் யாழினி ஆதியை அடிப்பதை நிறுத்தவில்லை.. "வீட்டுக்கு வராம.. எங்க போன.. சொல்லு.. சொல்லு.."என யாழினி கேட்டுக் கொண்டே ஆதியை அடித்தாள்.

"நீ எப்ப வந்த.."என ஆதி கேட்டான்.

"நான் வந்ததெல்லாம் இருக்கட்டும்.. நீ எங்க போன.. அதுக்கு பதில் சொல்லு.. முதல்ல.."என்று கேட்டவாறு ஆதியின் தலைமுடியை பிடித்து இழுத்தாள் யாழினி.

"ஹே.. குட்டி சாத்தான்.. விடு.. வலிக்குது.."என பாவமாக சொன்னான் ஆதி.

ஆதியின் சித்தி மாலதியும் அங்கே வர.. "யாழினி.. அவனை விடு.. இப்டியா பண்ணுவ.."என ஒருவழியாக யாழினியிடம் இருந்து ஆதியை காப்பாற்றினார்.

"நீங்க சும்மா இருங்க மா.. நேத்து நைட்ல இருந்து போன் பண்றேன்.. இப்ப வந்து கூலா.. போனை ஆபிஸ்ல வச்சிட்டேனு சொல்றான்.. ஆபிஸ்லயும் இல்லாம வீட்டுக்கும் வராம எங்க போனானு கேளுங்க.. இவன் டல்லா இருக்கான்னு சொன்னீங்கனு நான் கிளம்பி வந்தா.. அவன் எப்டி பல்லை காட்டிட்டு இருக்கான்னு பாருங்க.."என்றாள் யாழினி தன் அம்மாவிடம்.

"அதுக்கு இப்டியா அடிப்ப.. போ.."என மாலதி யாழினியிடம் சொன்னார்.

"உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்.."என ஆதியை எச்சரித்து விட்டு யாழினி அங்கிருந்து சென்றாள்.

"போடி.. குட்டி சாத்தான்.."என ஆதியும் பதிலுக்கு சொன்னான்.

"ஆதி.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.."என்றார் மாலதி.

"ஆங்.. சொல்லுங்க சித்தி.."என்றான் ஆதி.

"நம்ம யாழினிக்கும் கௌதமுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறோம்.. நீ என்னப்பா சொல்ற.."என மாலதி கேட்டார்.

"அதுக்குள்ள என்ன அவசரம் சித்தி.. இப்பதான படிப்பை முடிச்சிருக்கா.. கொஞ்ச நாள் ஆகட்டும்.."என ஆதி சொன்னான்.

"நாங்களும் அப்டித்தான் நினைக்கிறோம்.. ஆனா அக்கா தான் சீக்கிரமா கல்யாணம் பண்ணணும்னு சொல்றாங்க.."என்றார் ஆதியின் சித்தப்பா ரவிச்சந்திரன்.

"கௌதம் என்ன சொல்றான் சித்தப்பா.."என ஆதி கேட்டான்.

"அவனும் இப்பதான் பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணிருக்கேன்.. கொஞ்ச நாள் போகட்டும்னு தான் சொன்னான்.."என ரவிச்சந்திரன் சொன்னார்.

"ஆனா உங்க அத்தை தான் யாழினி கிட்ட கல்யாணத்தை பத்தியே பேசிட்டு இருந்தாங்க.. எங்ககிட்ட கேட்டப்ப.. நாங்க உன்கிட்ட கலந்து பேசிட்டு சொல்றோம்னு சொல்லிட்டோம்.."என மாலதி சொன்னார்.

"கௌதம் யாழினி இரண்டு பேர்கிட்டயும் நான் ஒரு டைம் பேசிட்டு சொல்றேன்.."என ஆதி சொன்னான்.

சரியென தலையசைத்தனர் மாலதியும் ரவிச்சந்திரனும்..

கௌதமும் யாழினியும் ஒருத்தரை ஒருத்தர் மனதார விரும்புவது தெரிந்தது தான் என்றாலும்.. ஏனோ சீக்கிரமாக கல்யாணத்தை நடத்துவதில் ஆதிக்கு உடன்பாடு இல்லை..

அதே நேரம் ஆதியின் அத்தை சந்திரமதியின் வீட்டில்..

"யாருங்க போன்ல.."என்றார் சந்திரமதி அவர் கணவர் மகாதேவனிடம்..

"அந்த சேட்டு தான்.. கடனை திருப்பி கேட்கிறான்.. அடுத்த மாசம் வரைக்கும் டைம் கேட்ருக்கேன்.."என்றார் மகாதேவன்.

"அண்ணன் அண்ணி இருந்தவரைக்கும் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஆதி பொறுப்புக்கு வந்த பிறகு.. அவன்கிட்ட பணம்னு போய் நிக்க முடியலை.. கௌதமோட பிஸினசும் இன்னும் செட்டாகலை.. என்ன தான் பண்றது.."என புலம்பினார் சந்திரமதி.

"அதான்.. ரவிகிட்ட.. யாழினி கௌதம் கல்யாணத்தை பத்தி பேசிருக்கோம்ல.. அது நடந்துட்டா.. யாழினிக்கு வர்ற சொத்து இருக்குல்ல.."என்றார் மகாதேவன்.

"அப்டி நினைச்சு தான் நாம பேசினோம்.. ஆனா அவங்க தான் ஆதிகிட்ட பேசிட்டு சொல்றதா சொல்லிட்டாங்களே.."

"நீதான் யாழினி கிட்ட கல்யாணத்தை பத்தி பேசி.. அவ மனசுல ஆசலயை வளத்துட்ட ல்ல.. இனி ஆதி எப்படியும் சம்மதிச்சிடுவான்.."

"ஆனா அவங்களுக்கு இங்க உள்ள ப்ராப்ளம் லாம் தெரியாம பாத்துக்கணும்.."

"கௌதமுக்கும் இதெல்லாம் தெரியாத வரைக்கும் பிரச்சனை இல்லை.."

"அடுத்த வாரம் ஸ்வேதா இந்தியா வந்துருவா.. அவகிட்ட பேசி ஆதியை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வாங்கிட்டா.. மொத்த சொத்தும் நமக்கு தான்.. அப்புறம் எந்தக் கவலையும் இல்லை நமக்கு.."

"ஸ்வேதாவை சம்மதிக்க வச்சிடலாம்.. ஆனா ஆதி.."என இழுத்தார் மகாதேவன்.

"அதெல்லாம் ஸ்வேதா பாத்துப்பா.. அவகிட்ட நாம பேசுவோம்.."என்றார் சந்திரமதி.

ஆதியின் அப்பா சந்திரசேகர்.. அம்மா மதிவதனி.. சித்தப்பா ரவிச்சந்திரன் சித்தி மாலதி என எல்லோரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்திருந்தினர்.

ஆதியின் அத்தை சந்திரமதி.. எப்போதும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ விரும்பினார். ஆனால் மகாதேவனின் பிஸினஸில் அவ்வப்போது சில பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது.

ஆதியின் அப்பா சந்திரசேகர்.. தன் தங்கை மீது கொண்டிருந்த பாசத்தால் அவருக்கு உதவி வந்தார்.

அவர் செய்யும் உதவி.. மதிவதனியை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

கௌதம் ஆதி யாழினி மூன்று பேரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தனர்.

கௌதமின் தங்கை ஸ்வேதா எப்போதுமே இவர்கள் மூவருடன் சேரமாட்டாள்..

ஆதி குடும்பத்தின் மூத்த பிள்ளை என்பதால் அவன் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை..

ஆதிக்கு கிடைக்கும் முக்கியத்துவம் தனக்கு கிடைப்பதில்லை என எண்ணிக்கொண்ட ஸ்வேதாவுக்கு.. ஆதியை சுத்தமாக பிடிக்காது.

கௌதமும் யாழினியும் காதலை தங்கள் வீட்டில் சொன்ன போது எல்லாரும் சந்தோஷப்பட்டனர்..

ரவிச்சந்திரனும் மாலதியும் ஆதியை தங்கள் பிள்ளையாகவே பார்த்துக் கொண்டாலும்.. ஆக்சிடெண்ட்ல தன் கண் முன்னால.. தன் அப்பாவும் அம்மாவும் இறந்த அதிர்ச்சியில வெளியே வர முடியாம ஆதி ரொம்ப கஷ்டப்பட்டான்.

ரவிச்சந்திரனும் மாலதியும் ஆதிக்கு ஆறுதல் சொல்லி.. கொஞ்சம் கொஞ்சமா அவனை மாத்தினாங்க.

அதுக்கு பிறகு அவங்க ஆதியை விட்டு எங்கையும் போகாம இருந்தாங்க..

யாழினியோட படிப்பு முடிஞ்சதும்.. அவ ஆசைப்பட்டதால சந்திரமதியோட வீட்டுக்கு எல்லாரும் போயிருந்தாங்க.

கௌதம் தன் பிஸினஸில் கொஞ்சமாவது சாதித்த பின்னர் திருமணம் பற்றி யோசிக்க வேண்டும் என நினைத்தான்.

ஆனால் தங்கள் கடனை அடைக்கவும் ஆடம்பரமான வாழ்க்கைக்குமான வழி.. யாழினி மூலம் கிடைக்கும் சொத்து என எண்ணிய சந்திரமதியும் மகாதேவனும் வேறுவிதமாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top