WatTruyen.Top

தொடுவானம்

❤ 19 ❤

jamunaguru

முதல் முத்தத்தின் அதிர்ச்சியில்.. சந்தோஷத்தில்.. மித்ரா அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே இருந்தாள்.

அப்போது வந்த சாரு.. மித்ராவின் நிலையை கண்டு பதறியபடி.. "மித்ரா.. என்னாச்சு.. ஏன் இப்டி இருக்க.."என்றாள்.

சாரு மித்ராவை பிடித்து உலுக்க.. "சாரு.. சாரு.."என்றபடி அவளை அணைத்துக் கொண்டாள் மித்ரா.

சாருவோ எதுவும் புரியாமல்.. "ஏய்.. லூசு.. என்னாச்சு.."என கேட்டாள்.

"நான்.. நான்.."என மித்ரா தடுமாறினாள்.

"சொல்லு மித்ரா.. என்ன.."என்றாள் சாரு.

"நான்.. நான்.. உடனே.. அவரை பார்க்கணும்.." என்றபடி மித்ரா எழுந்து மாடிக்கு ஓடினாள்.

"அடிப்பாவி.. இதுக்கு ஏன் அப்டி உட்கார்ந்து இருந்தா.."என நடப்பது புரியாமல் சாரு.. தனக்குள்ளே பேசிக் கொண்டாள்.

அங்கே.. ஆதியோ.. "ச்சே.. நான் ஏன் இப்டி நடந்துக்கிட்டேன்.. மித்ரா என்ன பத்தி என்ன நினைப்பா.. ச்சே.."என புலம்பிக் கொண்டிருந்தான்.

மித்ராவின் காலடி ஓசை கேட்டு.. அங்கே திரும்பிய ஆதி.. தான் நடந்து கொண்டதற்கு அவள் என்ன நினைக்கிறாளோ என அவளை பார்க்கவே தயங்கினான்.

அவனை பார்க்க வேண்டுமென வேகமாக வந்த மித்ரா.. அவனைக் கண்டதும் பேச்சு வராமல்.. தயங்கி நின்றாள்.

ஆதி.. "மித்ரா.. ஐ.. ஐயம்.."என தடுமாற..

மித்ரா.. "ஐ லவ் யூ ஆதி.."என்றபடி அவன் இதழ்களில் தன் இதழ்களை பதித்தாள்.

சில நொடிகள் கடந்த பின்னரே.. ஆதி.. மித்ராவின் செயலை உணர்ந்தான்.

ஆதி மித்ராவின் கண்களைக் காண.. அதிலிருந்த காதல்.. "ஐ லவ் யூ மித்ரா.."என்றான் ஆதி.

மித்ராவும் ஆதியின் கண்களை பார்த்தபடி.. "ஐ லவ் யூ ஆதி.."என்றாள்.

ஆதி மித்ராவை அணைத்துக் கொள்ள .. நேரம் கடப்பது தெரியாமல் இருவரும் இருந்தனர்.

"ஆதி.. நான் போகவா.."என்றாள் மித்ரா.

"கொஞ்ச நேரம் இங்கையே இரு.."என சுவரில் சாய்ந்தபடி.. தரையில் ஆதி உட்கார.. அவனருகில் உட்கார்ந்தாள் மித்ரா.

ஆதி தன் விரல்களை மித்ராவின் விரல்களோடு கோர்த்துக் கொண்டான்.

மித்ரா புன்னகையோடு ஆதியின் தோளில் சாய்ந்திருந்தாள்.

நிலவொளியில்.. எதுவும் பேசாமல் அமைதியாக.. சந்தோஷமாக இருந்தனர் மித்ராவும் ஆதியும்.

சில நிமிடங்கள் கடந்தபின்.. "ஆதி.. நான் போகவா.." என்றாள் மித்ரா.

செல்லமாக அவளை முறைத்தான் ஆதி..
"சாரு தேடுவா.."என கெஞ்சலாக மித்ரா சொன்னாள்.

"இரண்டு நாளா என்னை தூங்கவிடாம பண்ணதுக்கு.. பனிஷ்மென்ட்.. என்கூடவே இரு.."என்றான் ஆதி.

"ஆதி.."என சிணுங்கினாள் மித்ரா.

"நான் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்.. செல்லம்ல.."என அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு.. மித்ரா மடியிலே படுத்துக் கொண்டான் ஆதி.

மித்ராவும் ஆதியின் செய்கையை கண்டு சிரித்தபடி இருந்தாள்.

நெடுநேரமாக மித்ரா வராததால்.. என்னதான் பண்றா.. என மாடிக்கு வந்தாள் சாரு.

சாரு வந்ததை கவனிக்காமல் மித்ராவும் ஆதியும் பேசிக்கொண்டிருந்தனர்.

"ஆதி.."என்றாள் மித்ரா.

ஆதி மித்ராவின் மடியில் கண்களை மூடி படுத்திருந்த படியே.. "ம்.."என்றான்.

"நான் உங்களை பர்ஸ்ட் டைம்.. கடையில பார்த்தேன்ல.."

"ம்.."

"அதுக்கப்புறம் ஒரு நாள் எனக்கு ஒரு கனவு வந்துச்சு.."என மித்ரா சொல்லவும் ஆர்வமாக.. "என்ன கனவு.."என்றான் ஆதி.

"அது.. அது.. நீங்க இதே மாதிரி என் மடியில படுத்திருக்கிற மாதிரி.."என மித்ரா சொன்னாள்.

"ம்.. கனவு நிஜமாயிடுச்சுல்ல.."என்றான் ஆதி புன்னகையோடு..

அப்போது சாரு.. "கனவே எனக்கு இன்னும் தெரியாது.. அதுக்குள்ள அது நனவாயிடுச்சா.."என சொல்ல.. அவள் வந்ததையே ஆதியும் மித்ராவும் அப்போது தான் கவனித்தனர்.

அவள் சத்தம் கேட்டதும் தான் ஆதியும் மித்ராவும் தங்கள் உலகத்திலிருந்து மீண்டு வந்தனர்.

ஆதியும் மித்ராவும் எழுந்திருக்க.. "மித்ரா நீ இங்க.. வா.. எப்ப வந்துச்சு இந்த கனவு.. இதை ஏன் என்கிட்ட சொல்லலை.."என்றாள்.

"அது.. அது.."என மித்ரா திணற..

"அவரை பார்க்கணும்னு வந்த.. இங்க வந்து பார்த்தா.. மடியில படுக்க வச்சு கொஞ்சிட்டு இருக்க.. உன்னை என்ன பண்றேன் பாரு.."என சாரு சொன்னாள்.

மித்ரா ஆதியின் கைகளை பிடித்தபடி.. அவன் பின்னால் நகர.. "ஆங்.. அண்ணா பின்னாடி ஒளிஞ்சா மட்டும் விட்ருவேனா.. அண்ணா நீங்க நகருங்க.."என சாரு மித்ராவோடு விளையாட.. ஆதி அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

சந்தோஷத்திலே நெடுநேரம் தூக்கம் தொலைத்தனர் மித்ராவும் ஆதியும்..

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top