❤ 22 ❤
ஆதி தன் அலுவலகத்தில் வேலல பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது சதீஷ் அங்கே வந்தான்..
"பாஸ்.. நீங்க கேட்ட detailsலாம் கலெக்ட் பண்ணிட்டேன்.."என சதீஷ் சொன்னான்.
அதையெல்லாம் பார்த்து விட்டு.. ஆதி சதீஷிடம்.. "சதீஷ் இது நிஜம் தானா.. எந்த ப்ராப்பர்ட்டியுமே இப்ப அவங்க பேர்ல இல்லையா.."என கேட்டான்.
"கன்பார்ம் நியூஸ் தான் பாஸ்.. நான் வேற source மூலமாவும் செக் பண்ணிட்டேன்.." என சதீஷ் உறுதியளித்தான்.
ஆதி பதில் எதுவும் பேசாமல் ஏதோ யோசனையில் இருந்தான்.
"பாஸ்.. என்ன யோசிக்கிறீங்க.. இதபத்தி அவங்ககிட்ட நீங்களே பேசலாமே.."என்றான் சதீஷ்.
"அது சரியா வருமான்னு தெரியலை.. நான் இப்ப யோசிக்கிறது.. கௌதமுக்கு இது தெரியுமான்னு தான்.. அவன்கிட்ட டைரக்டா பேசமுடியாது.. அதான் யோசிச்சிட்டு இருக்கேன்.."என்றான் ஆதி.
சதீஷ் அங்கிருந்து கிளம்ப ஆதி அவனை அழைத்தான்.
"சதீஷ்.. ஒரு நிமிஷம்.. கவின் eventsக்கு தானே நம்ம worksலாம் கொடுக்கிறோம்.."என கேட்டான் ஆதி.
"ஆமா பாஸ்.. ஆனா நம்ம 25th anniversary தவிர வேற எதுவுமே மித்ரா மேடமோட work இல்லை.."என பதிலளித்தான் சதீஷ்.
"ம்.. மித்ராவுக்கு எதுவுமே தெரியலை.. ஏதோ தப்பா இருக்கிற மாதிரி இருக்கு.."என்றான் ஆதி.
"பாஸ்.. ஆனா அதுவும் உங்களுக்கு ஒருவகையில ப்ளஸ் தானே.."என்றான் சதீஷ்.
"ம்.. ஆனா நம்மளோட works மட்டும் மித்ராவுக்கு தெரியாம இருக்கிறது.. சரியா படலை.."என்றான் ஆதி.
"அங்க இருக்கிற யார் மூலமாவது அதை விசாரிக்க ட்ரை பண்றேன் பாஸ்.."என்றான் சதீஷ்.
"பாஸ்.. எப்ப மித்ரா மேடம்கிட்ட நீங்க யாருன்னு சொல்லப்போறீங்க.."என கேட்டான் சதீஷ்.
"தெரியலை.. சீக்கிரமா சொல்லணும்.."என்றான் ஆதி.
ஆதி அன்று தன் வீட்டிற்கு சென்றான்.
"ஆதி ஏன் வீட்டுக்கே வர்றதில்லை.. இன்னும் நடந்ததையே நினைச்சிட்டு இருக்கீயா.."என வருத்தமாக கேட்டார் மாலதி.
"அதெல்லாம் இல்லை.. சித்தி.. இது வேற விஷயம்.."என ஆதி சொன்னான்.
"என்ன ஆதி.. அன்னைக்கு நாங்க வரும்போது டல்லா இருந்த.. அதுக்கு அப்புறம் நல்லா இருக்கிற.. எங்க முன்னாடி காட்டிக்க கூடாதுன்னு இப்டி நடந்துக்கிறீயா.."என ரவிச்சந்திரன் கேட்டார்.
"அப்டிலாம் இல்லை சித்தப்பா.."என ஆதி சொன்னான்.
அவர்களிடம் மித்ரா பற்றி சொல்லலாம்னு ஆதி நினைச்சான்.
"சித்தப்பா.. நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.."என ஆதி பேச்சை ஆரம்பித்த வேளை.. யாழினி.. பதற்றத்தோடு அங்கே வந்தாள்.
"அப்பா.. மாமாவுக்கு heart attackஆம்.. அத்தை போன் பண்ணாங்க.."என பதற்றமாக யாழினி சொன்னாள்.
"ஆதி.. நீயும் வா.. எல்லாரும் போகலாம்.."என மாலதி சொன்னார்.
"ம்.. சரி சித்தி.."என ஆதியும் அவர்களோடு கிளம்பினான்.
ரவிச்சந்திரன், மாலதி, ஆதி, யாழினி எல்லோரும் மகாதேவனை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு சென்றனர்.
அங்கே இருந்த கௌதமை கண்டதும்.. "கௌதம்.. மாமாவுக்கு என்னாச்சு.."என யாழினி அவனிடம் கேட்டாள்.
"Mild attack தான் யாழினி.. இப்ப நல்லா இருக்காங்க.. எதும் ப்ராப்ளம் இல்லை.."என கௌதம் சொன்னான்.
எல்லாரும் மகாதேவன் இருந்த அறைக்கு சென்றனர். அங்கே அவரோடு சந்திரமதியும் இருந்தார்.
அவர்களை கண்டதும்.. "ரவி.. சீக்கிரமா கௌதம் கல்யாணத்தை சீக்கிரமா பார்க்கணும்னு ஆசைப்படுறேன்.. நீ என்ன சொல்ற.."என மகாதேவன் ரவிச்சந்திரனிடம் கேட்டார்.
அப்போது.. கௌதம்.. "என்னப்பா.. இப்ப என்ன அவசரம்.."என சொன்னான்.
அதற்கு சந்திரமதி.. "என்ன கௌதம்.. நீ.. அப்பாவே இப்பதான் செத்துப் பிழைச்சிருக்காங்க.. இப்பவாது அப்பா பேச்சை கேளு டா.."என்றார்.
ரவிச்சந்திரனும் மாலதியும் ஆதியை பார்த்தனர்.
ஆதி.. "மாமா.. discharge ஆகி வீட்டுக்கு வரட்டும் அத்தை.. அப்புறமா கல்யாணத்துக்கான ஏற்பாடெல்லாம் பார்க்கலாம்.."என சொன்னான்.
சந்திரமதியும் மகாதேவனும் சந்தோஷப்பட்டனர்.
ஆதி ரவிச்சந்திரனிடம்.. "சித்தப்பா.. நீங்க அத்தை கூட இருந்து பார்த்துக்கோங்க.. நான் கிளம்புறேன்.."என்றான்.
மாலதி.. "சரிப்பா.. நீ கிளம்பு.. நாங்க பாத்துக்கிறோம்.."என்றார் ஆதியிடம்.
"ஆதி.. ஸ்வேதா வந்திடுவா.. அவளையும் பாத்துட்டு கிளம்பலாம்ல.."என சந்திரமதி சொன்னார்.
"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அத்தை.. அடுத்த வாரத்துல எல்லாரும் அங்க வந்துடுவீங்கல்ல.. அப்ப பாத்துக்கிறேன்.. வர்றேன் அத்தை.."என ஆதி சொல்ல.. சந்திரமதியும் தலையாட்டினார்.
கௌதமும் யாழினியும் பேசிக்கொண்டிருக்க.. அவர்களிடமும் சொல்லிவிட்டு ஆதி அங்கிருந்து கிளம்பினான்.
சந்திரமதி கௌதமிடம்.. "கௌதம்.. எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போ.. நான் அப்பா கூட இருக்கிறேன்.."என்றார்.
மாலதி அவரிடம்.. "நான் உங்க கூட இருக்கேன் அண்ணி.. அவங்கல்லாம் கிளம்பட்டும்.."என்றார்.
"இல்லை மாலதி.. ஸ்வேதா இப்ப வந்துருவா.. நீயும் கிளம்பு.."என்றார் சந்திரமதி.
சிறிது நேரம் கழித்து..
ஸ்வேதா.. "Mom.. dadக்கு என்னாச்சு.."என்றபடி அங்கே வந்தாள்.
"ஒன்னுமில்லை டா.."என்றார் சந்திரமதி.
"என்ன மா.. கௌதம்.. அப்பாவுக்கு attackனு சொன்னான்.."என்றாள் ஸ்வேதா.
"Attack இல்ல ஸ்வேதா.. எல்லாம் செட்டப்.."என்றார் மகாதேவன்.
"Dad என்ன சொல்றீங்க.."என்றாள் ஸ்வேதா.
"அப்பாவோட business loss ஆகிடுச்சு ஸ்வேதா.. அதுமட்டுமில்ல.. கடனும் அதிகமாகிடுச்சு.. என்ன பண்றதுனு தெரியலை டா.."என்றார் சந்திரமதி.
"மா.. கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு.."என்றாள் ஸ்வேதா.
"நாம எப்பவும் போல வசதியோட வாழணும்னா இப்ப நமக்கு இருக்கிற ஒரே வழி கௌதமோட கல்யாணம் தான்.. ஆனா கௌதம் பத்தி தான் உனக்கு தெரியுமே.. பிஸினஸ் பிஸினஸ்னு சொல்லிட்டு இருக்கான்.."என்றார் மகாதேவன்.
"நீங்க அத்தை மாமாகிட்ட பேசவேண்டியது தானே.."என்றாள் ஸ்வேதா.
"பேசினோம் டா.. ஆனா அவங்க ஆதிகிட்ட பேசிட்டு சொல்றோம்னு சொல்லிட்டாங்க.."என்றார் சந்திரமதி.
"பெரியத்தையும் மாமாவும் இருக்கும் போது தான்.. எல்லாத்துக்கும் அவனை தான் தலையில தூக்கி வச்சிட்டு இருப்பாங்க.. சின்ன மாமாவும் அத்தையும் கூட அப்டித்தானா.."என சலித்தாள் ஸ்வேதா.
"அதான் கௌதமையும் ஆதியும் ஒத்துக்க வைக்கிறதுக்காக இப்டி ப்ளான் பண்ணோம்.."என்றார் சந்திரமதி.
"சக்ஸஸ் தானே மா.."என கேட்டாள் ஸ்வேதா.
ம்.. என சிரித்தபடி தலையாட்டினர் மகாதேவனும் சந்திரமதியும்.
"ஸ்வேதா.. நாங்க இன்னொரு ப்ளானும் வச்சிருக்கோம்.. அதுமட்டும் நடந்துட்டா.. மொத்த சொத்தையும் நாமளே அனுபவிக்கலாம்.."என்றார் மகாதேவன்.
"என்ன ப்ளான் dad.."என கேட்டாள் ஸ்வேதா.
"நீ ஆதியை கல்யாணம் பண்ணிக்கணும்.."என சந்திரமதி சொன்னதும் அதிர்ச்சியாக அவர்களை பார்த்தாள் ஸ்வேதா.
சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் ஸ்வேதா.
"ஸ்வேதா.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சா.. மாமாவோட மொத்த சொத்தும் நமக்கு தான்.."என சந்திரமதி சொல்ல.. ஸ்வேதா அவரை பார்த்தாள்.
"You are right mom.. நாம சீக்கிரமா மாமா வீட்டுக்கு போகலாம்.."என்றாள் ஸ்வேதா.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top