WatTruyen.Top

தொடுவானம்

❤ 12 ❤

jamunaguru

மித்ராவுக்கு தான் யார் என்பதை மறைத்த கோபமா.. இல்லை யார் என்பதை அறிந்ததால் விலகிச் செல்கிறாளா.. என்பது புரியாமல் தவித்தான் ஆதி.

எங்கிருந்தோ வந்து தன் கைகளில் விழுந்த நொடியிலே.. அவள் தனக்கானவள் என மனதில் தோன்றியது ஆதிக்கு.

அடுத்து எப்போது எப்படி எங்கே  அவளை சந்திக்கப் போகிறேன் என தவித்தவன் அவளைக் கண்டதும் மகிழ்ச்சியாக இருந்தான்.

அவளை விட்டு விலக மனமில்லாதவனாக இருந்தான்.

ஆனால் அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதை எப்படி அறிவதென தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

மித்ராவை தங்கள் அலுவலகத்திற்கு எதாவாது வேலை சொல்லி வரவைக்கலாம் என எண்ணினான் ஆதி.

ஆனால் கவினின் அலுவலகத்தில் இருந்து வேறு யாராவது தான் வந்தார்கள்..

இரண்டு நாளில் மித்ராவை காண முடியாத ஏக்கத்தில் எதையோ இழந்தது போலிருந்தான் ஆதி.

கவினின் அலுவலகத்தில்..

கவின் ஆதி groupsல் இருந்து எந்த வேலை என்றாலும் அதை மித்ராவுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு.. மித்ராவும் ஆதியும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து முரளி கவினிடம் பேசியது.. கவினின் நினைவுக்கு வந்தது.

"கவின்.. அவர் தான ஆதி groups எம்.டி.."என்றான் முரளி.

ஆம் என தலையசைத்த.. கவின்.. மித்ரா ஆதியிடம் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்தான்.

"நீதான்.. மித்ரா மித்ரானு புலம்பிட்டு இருக்கிற.. அவ உன்னை விட பணக்காரன் கிடைச்சதும் அவன் கூட சுத்துறா.."என முரளி எதுவும் தெரியாமல் மித்ராவை வெறுப்புடன் நோக்கினான்.

அவன் சொல்வது சரிதானோ என எண்ணிக் கொண்டிருந்தான் கவின்.

மித்ரா எப்போதும் போல தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மித்ராவுக்கு கவின் அவளிடம் ஆதி groupsல் இருந்து வந்த வேலைகளை மறைப்பது தெரியவில்லை.

சில நாட்கள் கடந்திருந்த நிலையில்.. மித்ராவை பார்க்க எண்ணி.. அவள் செல்லும் வழியில் காத்திருந்தான் ஆதி.

மித்ரா வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் ஆதி நிற்பதை பார்த்தாள்.

ஆதியை பார்த்த மித்ரா புன்னகையோடு கையசைத்தாள்.

"அப்ப இவளுக்கு நம்ம மேல கோபம் இல்லையா.."என எண்ணியபடியே ஆதியும் கையசைத்தான்.

"உங்க பாஸ் அன்னைக்கு உங்களை எதுவும் சொல்லலையா.."என்றாள் மித்ரா ஆதியை பார்த்து.

"அப்ப அன்னைக்கு நீங்க பாஸை பார்க்கலையா.."என கேட்டான் ஆதி.

இல்லையென தலையசைத்தாள் மித்ரா.

உள்ளுக்குள் ஏதோ சந்தோஷம் பரவ.. "ஏன்.."என கேட்டான் ஆதி.

"அன்னைக்கு கார்த்திக்கு feverனு ஹவுஸ் ஓனர் போன் பண்ணாங்களா.. அதான் உடனே கிளம்பிட்டேன்.."என்றாள் மித்ரா.

"பக்கத்தில தான் வீடு.. வாங்க.."என அழைத்தாள் மித்ரா.

"இல்லை.. இன்னொரு நாள் வர்றேன்.. கண்டிப்பா வர்றேன்.."என்றபடி அவளிடம் இருந்து விடைபெற்றான் ஆதி.

அடுத்த நாள்.. ஆதி தன் அலுவலக அறைக்குள் நுழைந்த சதீஷிடம்..

"சதீஷ்.. நான் கேட்ட details எங்க.."என்றான் ஆதி.

"பாஸ்.. நீங்க ரொம்ப லக்கி.."என்றான் சதீஷ்.

ஆதி இவன் என்ன சொல்ல வருகிறான் என்பது போல சதீஷை பார்த்தான்.

"பாஸ்.. மித்ரா மேடம் தங்கியிருக்கிற வீட்டோட மாடி போர்ஷன் வாடகைக்கு இருக்கு.."என்று சதீஷ் சொன்னதும் ஆதி மிகவும் மகிழ்ச்சியானான்.

"உடனே ஹவுஸ் ஓனர் கிட்ட பேசிடு.. நான் அங்க தங்குறதுக்கான ஏற்பாடெல்லாம் பண்ணிடு.."என்றான் ஆதி.

"இன்னொரு விஷயம்.. ரூம்ல ஏசிலாம் வேண்டாம்.. எல்லாம் சிம்பிளா இருக்கணும்.."என்றான் ஆதி.

"பாஸ்.. ஆனா.."என இழுத்தான் சதீஷ்.

"இன்னும் என்ன சதீஷ்.."என்றான் ஆதி.

"பாஸ்.. அவ்ளோ பெரிய வீட்டில.. எல்லா வசதியோட வாழ்ந்துட்டு.. நீங்க.."என இழுத்தான் சதீஷ்.

"சந்தோஷம் இருக்கிற இடத்துல வசதி பிரச்சனை இல்லை சதீஷ்.."என்றான் ஆதி.

சதீஷும் ஆதி சொன்னபடி.. மித்ரா இருக்கும் வீட்டின் மாடியில் ஆதி தங்குதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினான்.

ஊருக்கு போயிருந்த சாரு திரும்பி வந்திருந்தாள்.

"மித்ரா.. பாரேன்.. இந்த அம்மாவை.."என இழுத்தபடி ஆரம்பித்தாள்.

என்ன என்பது போல் மித்ராவும் கார்த்தியும் அவளை பார்த்தனர்.

"நல்லா எனக்கு பிடிச்சது.. நான் கேட்டதா.. சமைச்சு போட்டாங்க.. நானும் பொண்ணு மேல எவ்ளோ அக்கறைனு.. சந்தோஷப்பட்டேன்.. ஆனா.. திடீர்னு பொண்ணு பார்க்க ஆளை கூட்டிட்டு வந்துட்டாங்க.."என சாரு சொல்ல மித்ராவும் கார்த்தியும் சிரித்தனர்.

"அவர் பேர் சந்துரு.. எனக்கும் அவரை பிடிச்சிருக்கு.. கல்யாணத்துக்கு அப்புறமும் நான் வேலைக்கு போகலாம்னு சொல்லிட்டாரு.. நானும் ஓகே சொல்லிட்டேன்.."என சொல்லி முடித்தபடி மித்ராவை பார்த்தாள் சாரு.

"அதுக்கேன்.. மூஞ்சை இப்டி வச்சிருக்க.. சந்தோஷமா இரு.."என்றாள் மித்ரா.

"சரினு சொல்லிட்டேன்.. ஆனா.."என இழுத்தாள் சாரு.

"ஆனா என்ன.."

"எனக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தரை எங்க அம்மா இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவாங்கனு.. நான் நினைக்கலையே.."என்றாள் சாரு.

"சாரு.. எல்லாம் உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கு.. அப்புறம் என்ன.. இவ்ளோ சீக்கிரமா..னு லாம் யோசிக்காத.. சிரி.."என்றாள் மித்ரா.

"அக்கா.. நீங்க சமைக்கப் போறதை சாப்பிட்டு அவர் என்ன ஆகப்போறாரோ.. நீங்க ஏன் பீல் பண்றீங்க.. நீங்க டார்ச்சர் பண்ண ஒரு ஆள் கிடைச்சிட்டுனு சந்தோஷமா இருங்க.."என கார்த்தி சொன்னான்.

"டேய்.. போடா.. நான் டார்ச்சர் லாம் பண்ணமாட்டேன்.. இவ்ளோ.. இவ்ளோ லவ் பண்ணுவோம் நாங்க.."என்றாள் சாரு..

"ஆனா.. மித்ரா.."என மீண்டும் சிணுங்கினாள்.

"நீ உதைபடுவ.. போ.. போய் வேலைக்கு கிளம்பு.. நான் லஞ்ச் வேற பண்ணலை இன்னும்.." என்றபடி கிச்சனுக்குள் சென்றாள் மித்ரா.

கார்த்தியும் அங்கிருந்து சென்றுவிட சாரு மட்டும் ஹாலில் அமர்ந்தபடி.. மித்ரா.. மித்ரா.. என சொல்லிக் கொண்டு சிணுங்கியபடி இருந்தாள்.

"ஹலோ.."என்றபடி கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு.. திரும்பி பார்த்தாள் சாரு.

அதிர்ச்சியில் உறைந்து போனாள் சாரு.

❤❤ சாரு அதிர்ச்சியானது யாரைக் கண்டு.. ❤❤

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top