WatTruyen.Top

தொடுவானம்

❤ 11 ❤

jamunaguru

மித்ரா அடுத்த நாள் தன் வேலைகளை பார்ப்பதற்காக.. ஆதியின் அலுவலகத்திற்கு சென்றாள்.

ஆதியும் மித்ரா வேலை செய்த இடத்திலே அவளோடு எதையாவது பேசிக்கொண்டு இருந்தான்.

மித்ராவுக்கு அவன் செய்கை ஆச்சர்யமாக இருந்தது..

"நிஜமாவே உங்க பாஸ் உங்களை எதுவும் சொல்லமாட்டாரா.."என்றாள் மித்ரா ஆதியிடம்.

"எதுவுமே சொல்ல மாட்டாரு.."என்றான் ஆதி.

"என்னால நம்பமுடியலை.."என்றாள் மித்ரா.

"இன்னைக்கு நைட் என்கூட டின்னர் சாப்பிட ரெடியாகிடுங்க.."என ஆதி புன்னகைத்தான்.

மித்ரா எதுவும் புரியாமல் குழப்பத்தோடு இருந்தாள்.

மித்ரா தன் வேலையெல்லாம் முடித்திருந்தாள்.. "உங்க வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா.."என ஆதி கேட்டான்.

ம்.. என தலையாட்டினாள் மித்ரா.

"இப்ப நான் கிளம்புறேன்.. நைட் டின்னருக்கு ரெடியா வாங்க.."என சிரித்துக் கொண்டே ஆதி அங்கிருந்து கிளம்பினான்.

வேலைகளை பார்வையிடுவதற்காக வந்த கவினிடம்.. மித்ரா.. "இங்க staffsக்கு டின்னர் அரேஞ்ச்மென்ட்ஸ் மட்டும் செக் பண்ணணும்.. மத்த workலாம் முடிஞ்சுது சார்.."என்றாள்.

கவினும்.. "சரி.. மித்ரா.. நீங்க இப்ப கிளம்புங்க.. ஈவினிங் வந்துடுங்க.."என்றான்.

"சரி சார்.. நான் கிளம்புறேன்.."என மித்ரா அங்கிருந்து கிளம்பினாள்.

தன் அலுவலக அறையில் மித்ராவோடு இருந்த நிமிடங்களை எண்ணி சந்தோஷமாக இருந்தான் ஆதி.

"பாஸ்.. கூப்டீங்களா.."என்றபடி சதீஷ் அங்கு வந்து சேர்ந்தான்.

"ஆங்.. சதீஷ் டின்னருக்கு டேபிள் புக் பண்ண சொன்னேன்ல.. புக் பண்ணிட்டீயா.."என கேட்டான் ஆதி.

"ஆங்.. பண்ணிட்டேன் பாஸ்.."என்றான் சதீஷ்.

சரி.. நீ போ.. என்பது போல தலையசைத்த ஆதி.. தன் கையிலிருந்த பேனாவை பார்த்தபடி மெலிதான புன்னகையோடு இருந்தான்.

"பாஸ் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா.."என்றான் சதீஷ்.

என்ன என்பது போல் சதீஷை பார்த்தான் ஆதி.

"மித்ரா மேடம் கூட டின்னர் போறீங்க.. propose பண்ணப்போறீங்களா.."எனக் கேட்டான் சதீஷ்.

"தெரியலை.."என்றான் ஆதி.

"என்ன பாஸ்.. இப்டி சொல்றீங்க.. எப்பவும் எல்லாத்தையும் ப்ளான் பண்ணிதானே பண்ணுவீங்க.. இதை ப்ளான் பண்ணலையா.."என சதீஷ் கேட்க ஆதி சிரித்தான்.

"வாழ்க்கையும் வேலையும் ஒன்னு இல்லை சதீஷ்.. வாழ்க்கையில நாம என்னதான் ப்ளான் பண்ணாலும் சில விஷயங்கள் நாம நினைக்கிற மாதிரி நடக்காது.. சில விஷயங்கள் தானா நடக்கணும் அதான் அதோட அழகு.."என்றான் ஆதி.

"பாஸ்.. நீங்க ஆசைப்படுற மாதிரி எல்லாம் நடக்கும் பாஸ்.."என்ற சதீஷின் வார்த்தைகளை கேட்ட ஆதி புன்னகைத்தான்.

"மித்ரா என்னோட பாஸ் யாருங்கிறத பார்த்தா.. எப்டி ரியாக்ட் பண்ணுவா.. அந்த நிமிஷம் அவளோட முகம் எப்டி மாறும்.. அதை அப்டியே மனசில பதிய வைச்சிக்கணும்.."என ஆதி கனவு கண்டு கொண்டிருந்தான்.

அன்று சாயந்திரம்.. மித்ரா மீண்டும் வந்து தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆதியின் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் அங்கே கூடியிருந்தனர்.

உள்ளே நுழைந்த ஆதி மித்ராவை தேடினான்.

மித்ரா கவினிடம்.. "சார்.. எல்லா அரேஞ்ச்மென்ட்ஸ் ம் செக் பண்ணிட்டேன்.."என கூறினாள்.

"ஆம்.. ஓகே.. மித்ரா.. பங்ஷன் ஸ்டார்ட் ஆகப்போகுது.. நீங்களும் இங்கே இருங்க.."என கவின் கூறினான்.

ஆதி மித்ராவை கண்டதும் கையசைத்தான். மித்ராவும் பதிலுக்கு கையசைத்தாள்.

ஆதி மித்ராவை தன்னருகே வருமாறு அழைத்தான். மித்ரா கவினிடம் அங்கே இருப்பதாக சொல்லிவிட்டு ஆதியின் அருகில் வந்தாள்.

"இந்த saree உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு.."என்றான் ஆதி.

"தேங்க்ஸ்.."என புன்னகைத்தாள் மித்ரா.

"டின்னருக்கு ரெடியா.."என்றான் ஆதி.

"உங்க பாஸை மீட் பண்ணதுக்கப்புறம்.."என்றாள் மித்ரா.

"ம்.. ஓகே.."என்றான் ஆதி புன்னகையோடு.

நிகழ்ச்சி தொடங்கியது.. சதீஷும். இன்னொரு பெண்ணும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

"என்னடா இன்னைக்கும் இவனே வந்து நிக்கிறான்னு எல்லாரும் பார்க்கிறீங்க.. எனக்கு புரியுது.. ஆனா வேற வழியில்லை.. இன்னைக்கும் என்னை நீங்க சகிச்சுக்கிட்டு தான் ஆகணும்.."என சதீஷ் பேசத் தொடங்கினான்.

"இவர் எப்பவுமே இப்படித்தான் பேசுவாரா.."என மித்ரா ஆதியிடம் புன்னகையோடு கேட்டாள்.

ஆதியும் சிரித்தபடி தலையாட்டினான்.

மேடையில் சதீஷ்.. "இது நம்ம கம்பெனி ஆரம்பிச்சு.. 25 வருஷம் ஆனதை செலிப்ரேட் பண்ற பங்ஷன்.. இது இங்க வேலை பார்க்கிற ஒவ்வொருத்தருக்கான விழாவா இருக்கணும்னு நம்ம பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டதால.."என பேசிக் கொண்டிருந்தான்.

மித்ரா ஆதியிடம்.. "உங்க பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா.."என ஆதி அவன் பாஸிடம் திட்டு வாங்கப் போகிறான் என்கிற எண்ணத்தில் சிரிப்புடன் கேட்டாள்.

அவனும்.. "ஆமா.. ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. ஆனா எனக்கில்லை.."என்றான்.

மித்ராவுக்கு அவன் இன்னும் எப்படி இவ்ளோ உறுதியா பேசுறான் என்பது குழப்பமாக இருந்தது.

"நம்ம பாஸ் ஒவ்வொரு employeeம் எவ்ளோ முக்கியமா நினைப்பாருங்கிறது நம்ம எல்லாருக்கும் தெரியும்.. இப்ப நம்ம கம்பெனியோட முக்கியமான எல்லாரையும் மேடைக்கு கூப்பிடப் போறோம்.."என்றான் சதீஷ்.

"பர்ஸ்ட்டா யாரை கூப்பிடப் போறோம் சதீஷ்.."என அந்தப் பெண் கேட்டாள்.

"ப்ரியா.. நம்ம ஆபிஸோட ஸ்ட்ரிக்ட் ஆபிஸரைத் தான் கூப்பிடப் போறோம்.."என்றான் சதீஷ்.

"யாரைச் சொல்ற சதீஷ்.. நம்ம பாஸையா.."என்றாள் ப்ரியா.

"ப்ரியா.. என்னைக்காவது.. நீ ஐடி கார்டு இல்லாம ஆபிஸ்க்கு வந்துருக்கீயா.."என்றான் சதீஷ்.

"இல்லை.." என்றாள் ப்ரியா.

"அதான் உனக்கு தெரியலை.. ராமு அண்ணா.. நம்ம கம்பெனியோட செக்யூரிட்டி ஆபிஸர்.. ஐடி கார்டு.. அந்த ஒத்தை கார்டு இல்லைனு என்னை.. இந்த சதீஷை.. உள்ளே விடமாட்டேன்னுட்டாரு.. தெரியுமா.."என்றான் சதீஷ்.

"உன் பெருமையெல்லாம் போதும்.. ராமு அண்ணா, கணபதி அண்ணா, மிக்கேல் அண்ணா.. வாங்க எல்லோரும்.."என அழைத்தாள் ப்ரியா.

எல்லாரும் வந்ததும்.. "நான் தான் ராமு அண்ணாகிட்ட கேள்வி கேட்பேன்.."என சதீஷ் முன்னால் வந்தான்.

சதீஷ் பேசுவது.. நடந்து கொள்வதையெல்லாம் பார்த்து மித்ரா சிரித்துக் கொண்டிருக்க.. ஆதி அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

"ராமு அண்ணா.. நீங்க சொல்லுங்க.. எவ்ளோ நாளா இங்க வேலை பார்க்கிறீங்க.. நம்ம கம்பெனி பத்தி.. நம்ம பாஸ் பத்தி எதாவது சொல்லுங்க.."என்றான் சதீஷ்.

"நான் இங்க பத்து வருஷமா வேலை பார்க்கிறேன் தம்பி.. சேகர் சாரும் அம்மாவும் எங்களை எப்டி மரியாதையா நடத்துவாங்களோ.. அதே மாதிரி தான் தம்பியும் எங்களை நடத்துது.."என்றார் அவர்.

"அப்புறம் அண்ணா.. ஒரு பாட்டு பாடுங்க.."என சதீஷ் அவரிடம் பேசிக் கொண்டிருக்க.. மித்ரா யாரையோ தேடினாள்.

"யாரை தேடுறீங்க.."என்றான் ஆதி.

"உங்க பாஸை தான்.."என்றாள் மித்ரா.

"உன் பக்கத்துல தான்.. இருக்கேன் மித்ரா.."என மனதில் நினைத்தபடி சிரித்தான் ஆதி.

"எதுக்கு சிரிக்கிறீங்க.. உங்க பாஸ் எங்க இருக்காரு..னு சொல்லுங்க.."என்றாள் மித்ரா.

"பார்க்க தானே போறீங்க.. வெயிட் பண்ணுங்க.."என்றான் ஆதி.

கம்பெனியின் எல்லாவிதமான பதவிகளில் இருப்பவர்களும்.. தங்களுக்கும் கம்பெனிக்குமான உறவை பற்றி சொல்லிக் கொண்டிருந்தனர். சதீஷ் போட்டுக் கொண்டிருந்த மொக்கையையும் எல்லாரும் ரசிக்கவே செய்தனர்.

மித்ரா சிரித்துக் கொண்டேயிருந்தாள். அவளின் சிரிப்பை ரசித்த ஆதி.. "உன்னை எப்பவும் இப்டியே சந்தோஷமா பார்த்துக்கணும்.. அது தான் என்னோட ஆசை மித்ரா.."என மனதில் எண்ணிக்கொண்டான்.

ஆதியை பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசுகையில்.. "எனக்கே உங்க பாஸை பார்க்கணும் போல இருக்கு.."என மித்ரா ஆதியிடம் கூறினாள்.

"ம்.. கண்டிப்பா பார்க்கலாம்.."என சிரித்து சமாளித்தான்.

சந்தோஷமாக இருந்த ஆதியையும் மித்ராவையும் பொறாமையுடனும் வெறுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்த இருவரை மித்ராவும் ஆதியும்.. ஏன் யாருமே கவனிக்கவில்லை.

சில நிமிடங்களில் வந்துவிடுவதாக மித்ராவிடம் சொல்லிச் சென்றான் ஆதி.

ஆதி திரும்பி வருகையில் மித்ரா அங்கே இல்லை.. எங்கே என விழிகளாலே தேடிக் கொண்டிருக்க.. சதீஷ் ஆதியை மேடைக்கு பேச அழைத்தான்.

மேடைக்கு வந்த ஆதி.. "எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நீங்க எல்லாரும் அப்பா அம்மா மேல எவ்ளோ மரியாதை வச்சிருக்கீங்கனு நான் இன்னைக்கு தெரிஞ்சுக்கிட்டேன்.. அப்பாவும் அம்மாவும் எனக்கு இவ்ளோ பெரிய குடும்பத்தை சம்பாதிச்சு கொடுத்திருக்காங்கனு நினைக்கவே சந்தோஷமா இருக்கு.."என பேசினான்.

எல்லாரும் கலைந்து செல்ல.. ஆதி சதீஷை அழைத்து.. மித்ரா எங்கே.. என பார்க்குமாறு கூறினான்.

மித்ரா இங்கே இல்லை என்பதே பதிலாக வந்தது.

டின்னர் கேன்சல்😔😔

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top