WatTruyen.Top

தொடுவானம்

❤ 10 ❤

jamunaguru

மித்ராவின் விழிகள் விரிவதை ரசித்தபடி அவள் எதிரில் அமர்ந்தான் ஆதி.

"இவ்ளோ நேரம் நல்லாத்தான இருந்தா.. திடீர்னு ஏன் இப்டி முழிக்கிறா.. ஆனா அவ இப்டி முழிக்கிறது கூட அழகாத்தான் இருக்கு.."என்று எண்ணினான் ஆதி.

ஆதி எதிரில் வந்து அமர.. தன் கனவை நினைத்துக் கொண்டிருந்த மித்ராவுக்கு.. அவனை பார்க்கவே தயக்கமாக இருந்தது. சாப்பிடாமல் எழுந்து நின்றாள் மித்ரா.

ஆதி.. "என்னாச்சு.."என்றான்.

"அது.. அது.. போதும்.."என மித்ரா சமாளிக்க நினைத்தாள்.

"என்ன போதுமா.. சாப்பாட்டை பார்த்தாலே வயிறு நிறைஞ்சிடுமா.. உங்களுக்கு.."என்றான் ஆதி.

"அது.. அது.."என தடுமாறினாள் மித்ரா.

"ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடுங்க.."என ஆதி சொல்லவும் மறுக்க முடியாமல் சாப்பிட உட்கார்ந்தாள்.

மித்ராவிடம் ஏதோ மாற்றம் தெரிவதை கவனித்தாலும்.. அதை கண்டுகொள்ளாமல் இருந்தான் ஆதி.

எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மித்ரா.

ஆதி.. "ரூல்ஸ் லாம் ரொம்ப strictஆ follow பண்ணுவீங்களா.."என கேட்டான்.

மித்ரா புரியாமல் விழிக்க.. "எதுவுமே பேசாம சாப்பிடுறீங்க.. அதான்.. யாரும் சாப்பிடும் போது பேசக்கூடாதுனு ரூல்ஸ் போட்டிருக்காங்களோனு நினைச்சேன்.."என ஆதி சொன்னான்.

"ஆங்.. அப்டிலாம் எதுவுமில்லை.. எப்பவும் சாரு தான் பேசிட்டு இருப்பா.. உங்ககிட்ட என்ன பேசுறதுன்னு தெரியலை.. அதான்.."என மித்ரா சொன்னாள்.

"சாரு யாரு.."என எதுவுமே தெரியாதவன் போல ஆதி கேட்டான்.

அன்னைக்கு கடையில மித்ராவோட பார்த்தது தான் சாருவான்னு கேட்க நினைத்த ஆதி.. இப்பத்தான் கொஞ்சமாவது பேசுறா.. அதை நியாபகப்படுத்தினா பேசாம போயிடப்போறா.. என எண்ணி தன் ஆர்வத்தை அடக்கிக் கொண்டான்.

"சாரு.. என் ப்ரெண்ட்.."என்றாள் மித்ரா.

ஆதி இயல்பாக பேச.. மித்ராவும் சற்று இயல்பானாள்.

ஏதோ நெடுநாளுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள் போல மித்ராவும் ஆதியும் பேசிக் கொண்டிருந்தனர்.

சாப்பிட சென்றவர்கள் எல்லாம் திரும்பி வந்து தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மித்ராவும் தன் வேலையை பார்த்தபடி இருந்தாள். ஆனால் ஆதி.. மித்ராவை விட்டு விலக மனமில்லாது அங்கே அமர்ந்திருந்தான்.

மித்ராவை ரசித்தபடி.. அவ்வப்போது போனிலே தன் வேலைகளை முடித்தபடி இருந்தான் ஆதி.

மித்ராவும் ஆதி அங்கேயே இருப்பதை கவனித்தாள். மித்ரா தன் வேலைகளை முடித்துவிட்டு அங்கே வந்து அமர்ந்தாள்.

ஆதி புன்னகைத்தபடி இருந்தான். மித்ரா.. "நீங்க ஏன் இங்கே இருக்கீங்க.. உங்க பாஸ் எதாவது சொல்லப் போறாரு.."என்றாள் ஆதியிடம்.

ஆதி சிரித்தபடி.. "எங்க பாஸ் என்னை எதுவும் சொல்லமாட்டாரு.."என்றான் கண்களை சிமிட்டினான்.

"நீங்க நல்லா திட்டு வாங்கப்போறீங்க.. உங்க பாஸ் கிட்ட.."என்றாள் மித்ரா.

"உங்களோட இந்த வேலை லாம் எப்ப முடியும்.."என ஆதி கேட்டான்.

"நாளைக்கு afternoonல முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.. ஏன்.."என மித்ரா கேட்டாள்.

"நாளைக்கு வரைக்கும் நான் இங்கதான் இருப்பேன்.. ஆனா எங்க பாஸ் எதுவுமே சொல்லமாட்டாரு.."என்றான் ஆதி.

"பாவம்.. நீங்க.. வேற வேலை தேட ரெடியாகிக்கோங்க.."என்றாள் மித்ரா.

"நாளைக்கு நைட் event முடியுறவரைக்கும் இங்க தானே இருப்பீங்க.. எங்க பாஸ் என்னை எதுவும் சொல்லலைனா.. நான் உங்களை டின்னருக்கு கூட்டிட்டுப் போறேன்.. ஓகே வா.."என்றான் ஆதி.

"ம்.. ஆனா உங்க பாஸ் உங்களை எதுவும் சொல்லலைனு நான் எப்டி தெரிஞ்சுக்கிறது.."என கேட்டாள் மித்ரா.

"நாளைக்கு எங்க பாஸை மீட் பண்ணும் போது நீங்களே தெரிஞ்சுப்பீங்க.. டவுட்னா பாஸ் கிட்டே கேளுங்க.."என்றான் ஆதி.

சரியென தலையசைத்தாள் மித்ரா. ஆனால் அவன் எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறான் என்பது தான் மித்ராவுக்கு புரியவில்லை.

"கிளம்பலையா பா..ஸ்.. பாஸ்.. கிளம்பச் சொல்லிட்டாங்க.."என சதீஷ் வந்து உளறிக் கொட்டினான்.

மித்ரா சதீஷிடம்.. "உங்க பாஸ் எப்படி.."என்றாள்.

"எப்டினா.. என்ன சொல்றது.."என திருதிருவென முழித்தான் சதீஷ்.. ஆதியையும் மித்ராவையும் பார்த்து..

"ரொம்ப strictஆ னு கேட்கிறேன்.."என்றாள் மித்ரா.

"ஆமாம்.. ரொம்ப.. ரொம்ப strict.."என்றான் சதீஷ்.

மித்ரா ஆதியை பார்த்து சிரித்தபடி.. "அப்ப நாளைக்கு டின்னர் கேன்சல்.."என்றாள்.

"அதை நாளைக்கு நைட் பார்க்கலாம்.."என ஆதியும் புன்னகைத்தான்.

மித்ரா அங்கிருந்து கிளம்பியதும்.. ஆதி சதீஷிடம்.. "சதீஷ்.. நாளைக்கு என்ன மீட்டிங் லாம் இருக்கு.."என்றான்.

"அது வந்து பாஸ்.."என்றபடி சதீஷ் சொல்ல.. ஆதி.. "எது இருந்தாலும்.. எல்லாத்தையும் கேன்சல் பண்ணிடு.."என்றபடி.. அங்கிருந்து சென்றான்.

"பாஸ்.. பாஸ்.. என்ன சொல்றீங்க.."என சதீஷ் பதற.. ஆதி அவன் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பினான்.

மித்ரா தன் கவலைகளை மறந்து இயல்பாக மாறத் தொடங்கினாள்.

இன்று முழுக்க ஆதியோடு இருந்தவற்றை நினைத்தபடியே மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்த மித்ராவை முறைத்தபடி.. சாரு நின்று கொண்டிருந்தாள்.

"என்ன.."என எதுவுமே தெரியாதவள் போல அப்பாவியாக கேட்டாள் மித்ரா.

"மதியம் சாப்டீயா.."என்றாள் சாரு.

"ம்.. சாப்டேன்.."என்றாள் மித்ரா.

"நிஜமா சாப்டேன் சாரு.."என மீண்டும் மித்ரா சொல்ல.. சரியென தலையாட்டினாள் சாரு.

"சரி.. வா.. டீ போடுறேன்.."என சாரு சொன்னாள்.

"நானே போடுறேன்.."என மித்ரா டீ போடச் சென்றாள்.

"அப்பாடா.. ரொம்ப நாளைக்கு பிறகு.. நல்ல டீ குடிக்கலாம் இன்னைக்கு.."என்றான் கார்த்தி..

"ஆமால்ல.."என்ற சாரு.. அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்து.. "டேய்.. என்ன கொழுப்பா.."என அதட்டினாள்.

"அக்கா.. உண்மையும் நீங்க போடுற டீயும் ஒன்னு தான்.. இரண்டுமே கசக்கும்.."என கார்த்தி மேலும் கிண்டல் செய்ய.. சாரு அவனை அடிக்க துரத்தினாள்..

இருவரும் மித்ராவை சுற்றிவர.. மூவரும் சந்தோஷமாக இருந்தனர்.

"சாரு.. இன்னைக்கு ஊருக்கு போகணும்னு சொன்ன.."என மித்ரா கேட்டாள்.

"ஆமா.. போறேன்.. நைட் எட்டரைக்கு தான் பஸ்.. சாப்பிட்டு மெதுவா தான் கிளம்புவேன்.."என்றாள் சாரு.

"சாரு அக்கா.. எதை பத்தி பேசினாலும் சாப்பாடை மட்டும் மறக்க மாட்டிக்கிறீங்களே.. எப்படி.."என கார்த்தி கேட்டான்.

"பாரு மித்ரா இவனை.."என்றபடி அவனை முறைத்தாள் சாரு.

மித்ராவும் கார்த்தியும் அவளின் செய்கையை கண்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.

சாரு ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்ததால்.. ஆதியை பற்றி சாருவிடம் சொல்ல மறந்தே போனாள் மித்ரா.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top