❤ 13 ❤
சாரு அதிர்ச்சியில் உறைந்தது.. "ஹலோ.."என்று அழைத்தபடி வந்து நின்ற ஆதியை பார்த்து தான்.
ஆதியும் மித்ராவும் சந்தித்தது சாருவுக்கு தெரியாது என்பதால்.. ஆதி வந்து நின்றதும்.. ஆதி மித்ராவை தேடி.. வீட்டுக்கே வந்துவிட்டதாக சாரு நினைத்தாள்.
"மித்ரா.. மித்ரா.."என கூப்பிட்டாள் சாரு.
"சாரு.. நான் சமைக்கவா.. வேண்டாமா.." என்றபடி மித்ரா கிச்சனிலிருந்து வெளியே வந்தாள்.
ஆதியை பார்த்த மித்ரா.. "வாங்க.. உள்ள வாங்க.."என்றாள் மித்ரா.
"மித்ரா.. நீங்களா.."என எதுவுமே தெரியாதவன் போல கேட்டான் ஆதி.
"நான் இன்னைக்கு தான் மாடியில குடிவந்தேன்.. இங்க இருக்கிறவங்களோட இன்ட்ரோ ஆகிக்கலாம்னு வந்தா.. நீங்க இருக்கீங்க.."என்றான் ஆதி.
"ஓ.. நீங்க தான் மாடி போர்ஷனுக்கு வந்திருக்கீங்களா.. நேத்து தான் ஹவுஸ் ஓனர் சொன்னாங்க.. ஆள் வர்றாங்கனு.."என்றாள் மித்ரா.
ஆதியும் மித்ராவும் பேசிக் கொள்ள.. இங்க என்ன நடக்குது என்பது போல்.. இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் சாரு.
"சரி.. நான் வர்றேன்.. இப்டி தெரிஞ்சவங்களே இருப்பீங்கனு நினைக்கவேயில்லை.."என்றபடி கிளம்பினான் ஆதி தன் அறைக்கு.
மித்ரா காரத்தியிடம்.. "காரத்தி.. சாப்பிடு.. நான் சட்னி வச்சுட்டேன்.."என சொன்னாள்.
"சரி க்கா.. அவர் உனக்கு தெரிஞ்சவரா.."என்றான் கார்த்தி.
"ஆமா.. நீ சாப்பிடு.."என்று மித்ரா சொல்லிக் கொண்டிருக்க.. "என்ன தெரிஞ்சவரா.. இங்க வா.. நீ.."என்றபடி மித்ராவை தனியாக இழுத்துச் சென்றாள் சாரு.
"அவரை எப்டி தெரியும்.. உனக்கு.. அவரை பார்த்ததை என்கிட்ட ஏன் சொல்லலை.. வர வர என்கிட்ட எதையும் சொல்றதே இல்லை.."என சாரு பேசிக்கொண்டே போனாள்.
"சாரு.. அன்னைக்கு ஒரு eventக்காக போனேன்னு சொன்னேன்ல.. அங்கதான் அவரை பார்த்தேன். அன்னைக்கு தான் நீ ஊருக்கு கிளம்புன.. அதான் சொல்ல மறந்துட்டேன்.."என மித்ரா சொன்னாள்.
"சரி.. அவர் பேர் என்ன.. நீங்க என்னலாம் பேசுனீங்க.. சொல்லு.. சொல்லு.."என சாரு கேட்டாள்.
அப்போது தான் மித்ரா யோசித்தாள்.. இரண்டு நாட்கள் அவகூட தான் பேசிக் கொண்டிருந்தான்.. ஆனால் அவன் பேரை கேட்கவேயில்லையே என..
"மித்ரா.. சொல்லு.. சொல்லு.."என சாரு மித்ராவை உலுக்கிக் கொண்டிருந்தாள்.
"அவர் பேரு.."என மித்ரா இழுக்க..
"என் பேர் ஆதி.."என்றபடி படிக்கட்டில் நின்று கொண்டிருந்தான் ஆதி.
மித்ராவும் சாருவும் திரும்பி பார்த்தனர்.
ஆதி.. "மித்ரா.. ஒரு சின்ன ஹெல்ப்.. கொஞ்சம் வர முடியுமா.."என்றான்.
"ஆங்.. இதோ வர்றேன்.."என்றாள் மித்ரா ஆதியிடம்.
ஆதி அங்கிருந்து நகர.. சாரு மித்ராவிடம்.. "ஆதி.. மித்ரா.. பேர் பொருத்தம் சூப்பரா இருக்குல்ல.."என்றாள்.
"சாரு.. அவருக்கு கேட்டா என்ன நினைப்பாரு.."என அவள் வாயை மூடினாள் மித்ரா.
சாருவோ.. மித்ராவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு.. "போ.. மித்ரா.. உன் ராஜகுமாரன்.. காத்திட்டு இருப்பாரு.."என்றாள்.
"சாரு.."என மித்ரா அவளை அடிக்க துரத்த.. சாரு வீட்டுக்குள் நுழைந்து கொண்டாள். ஆதி கூப்பிட்டது நினைவில் வர.. மித்ரா சாருவை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து நகர்ந்தாள்.
அவர்கள் பேசியது காதில் விழுந்த ஆதியோ.. ரொம்ப சந்தோஷமாக இருந்தான்.
மித்ரா வருவதை கவனித்த ஆதி.. ஏதோ யோசனையில் இருப்பவனை போல கட்டில் முன்னால் நின்று கொண்டிருந்தான்.
"எதுக்கு கூப்டீங்க.."என கேட்டாள் மித்ரா.
"ஆங்.. மித்ரா.. இந்த கட்டிலை அந்தப் பக்கம் போடலாம்னு நான் நினைக்கிறேன்.. நீங்க என்ன சொல்றீங்க.."என கேட்டான் ஆதி.
"Fan இங்க தானே மாட்டுவாங்க.. ஜன்னலுக்கும் பக்கத்தில இருக்கு.. அதனால இங்கேயே இருக்கட்டும்.."என மித்ரா சொன்னாள்.
ஆதியும் மித்ராவும் பேசிக் கொண்டிருந்ததை.. வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த சாரு.. "என்ன.. ஏதோ புதுவீட்டுக்கு குடிவந்த புருஷன் பொண்டாட்டி மாதிரி.. எந்தப் பொருளை எங்க வைக்கலாம்னு பேசிட்டு இருக்காங்க.. ஒரு வாரம் இந்த சாரு ஊர்ல இல்லை.. அதுக்குள்ள இவ்ளோ தூரம் வந்தாச்சா.."என தனக்குள்ளே பேசிக் கொண்டாள்.
மித்ரா ஆதியிடம்.. "என்ன சமையல் பண்றதுக்கு ஒன்னுமே எடுத்துட்டு வரலை.. இனிமே தான் வாங்கணுமா.."என்றாள்.
"எனக்கு தான் சமைக்கவே தெரியாதே.. அப்புறம் எதுக்கு அதெல்லாம்.. வெளியே ஆர்டர் பண்ணிக்க வேண்டியது தான்.."என்றான் ஆதி.
அந்த நேரம் உள்ளே நுழைந்த சாரு.. "வெளியே சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க.. நம்ம மித்ரா சூப்பரா சமைப்பா.. நீங்களும் எங்களோடவே சாப்பிடுங்க.."என்றாள்.
"ஆ.. எவ்ளோ நல்ல ஐடியா.. நமக்கு ஹெல்ப் பண்றதுக்குனே வந்த ஜீவன்.."என சாருவுக்கு மனதில் நன்றி சொல்லிக் கொண்டான் ஆதி.
"ஆம்.. எங்களோடவே சாப்பிடுங்க.. இனி.."என்றாள் மித்ரா.
"உங்களுக்கு எதுக்கு கஷ்டம்.."என மறுப்பது போல பேசினான் ஆதி.
"அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை.. இனி நீங்களும் எங்களோட தான் சாப்பிடணும்.. மூணு வேளையும்.."என சாரு ஸ்ட்ரிக்ட்டாக சொல்ல.. ஆதியும் சரியென ஒத்துக் கொண்டான்.
"இட்லியும் தேங்காய் சட்னியும் தான் இருக்கு.. நான் போய் எடுத்துட்டு வர்றேன்.."என மித்ரா சொன்னாள்.
"என்ன மித்ரா நீ.. எதுக்கு இங்க எடுத்துட்டு வர்ற.. அண்ணா அங்க சாப்பிட வருவாங்க.. இல்லையா அண்ணா.."என்றாள் சாரு.
"ம்.."என சந்தோஷமாக தலையாட்டினான் ஆதி.
சிறிது நேரம் கழித்து ஆதி சாப்பிட வந்தான். மித்ரா வேலைக்கு கிளம்பியிருந்தாள்.
ஆதி சாப்பிட இட்லி எடுத்து வந்து கொடுத்தாள் மித்ரா. ஆதி சாப்பிட்டு முடித்ததும் ஆதியிடம் மித்ரா லஞ்ச் பாக்ஸை கொண்டு வந்து கொடுத்தாள்.
புதிதாக இருந்தது ஆதிக்கு.. லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்வது. ஆனாலும் புன்னகையோடு மித்ராவிடம் இருந்து அதை வாங்கிக் கொண்டான் ஆதி.
அதை பார்த்துக் கொண்டிருந்த சாருவோ.. "ஆஹா.. என்ன ஒரு அழகான காட்சி.. வேலைக்கு போற ஹஸ்பண்ட் டுக்கு லஞ்ச் பேக் பண்ணி கொடுக்கிறாங்க wife.. அண்ணனோட reaction அப்டித்தான் இருக்கு.. ஆனா இந்தப் பக்கம் என்ன reactionனே புரியலையே.. எப்டி கண்டுபிடிக்கிறது.."என யோசித்துக் கொண்டிருந்தாள்.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top