14 சதி
14 சதி
கோட்டுச் சூட்டு அணிந்த ஓர் வாலிபன், பட்டாடோபமான காரிலிருந்து தன் வீட்டின் முன் இறங்குவதைக் கண்டார் சிவகாமி. அந்த மனிதனுடன் உமபதியைப் பார்த்து அவர் திகைப்படைந்தார். அவர் யார் என்று கண்களால் கேட்க,
"உள்ள வாங்க, சார்," என்று திவ்யமூர்த்தியை உள்ளே அழைத்துச் சென்றான் உமாபதி.
"அம்மா, இவர் தான் நான் இன்டர்வியூவுக்கு போன கம்பெனியோட மேனேஜிங் டைரக்டர்." என்று அவனை சிவகாமிக்கு அறிமுகம் செய்தான்.
"வணக்கங்க."
திவ்யமூர்த்தி புன்னகைத்தான்.
"இவரு இங்க எப்படி வந்தாரு?" என்றார் உமாதியிடம் ரகசியமாய்.
"நான் சொல்றேன், ஆன்ட்டி.
ரெண்டு நாளைக்கு முன்னாடி ஹரிதாவைப் பார்த்தேன். அவங்களைப் பார்த்ததிலிருந்து நான் அவங்களைப் பத்தி மட்டும் தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன்"
சிவகாமி திகைத்து நின்றார். என்ன கூறுவது என்று அவருக்குப் புரியவில்லை.
"ஆனா..."
அவரை மேற்கொண்டு பேச விடாமல்,
"நான் அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, உமாபதியை என் கம்பெனிக்கு மேனேஜர் ஆக்குவேன். அஞ்சு பர்சென்ட் ஷேரையும் கொடுப்பேன். என்னோட அரண்மனை மாதிரியான பங்களாவுக்கு, உங்க மகள் ராணியாவாங்க. குவியல் குவியலான பணம், உங்க பொண்ணு காலடியில் இருக்கும்."
செயலடங்கி நின்றார் சிவகாமி.
"அவங்களுக்குப் பார்வை இல்லன்னு உமாபதி சொன்னாரு. நீங்க அதைப் பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம். அவங்களுக்கு ஏ-கிளாஸ் ட்ரீட்மென்ட் அரேஞ்ச் பண்றேன்."
"அவளோட ஆப்பரேஷன் ஏற்கனவே ஏற்பாடாயிடுச்சு. அவளைக் கல்யாணம் பண்ணிக்க போறவர் தான் அதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கார். அவர் வெளிநாடு போனதே அவ ட்ரீட்மென்ட்காகத் தான். ஹரிதா அவரைக் காதலிக்கிறா" என்றார் தயக்கத்துடன்.
"அதனால என்ன, ஆன்ட்டி? ஒருத்தரைக் காதலிச்சிட்டு இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிறதெல்லாம் இன்னைக்கு சகஜமா நடக்குது..."
"இருக்கலாம். ஆனா, ஹரிதா அப்படிப்பட்ட பொண்ணு இல்ல. அவ உங்களை ஏத்துக்க மாட்டா"
"அவங்க என்னை ஏத்துக்கிட்டா, நீங்க எனக்கு அவங்களைக் கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா?"
"அதுக்கு வாய்ப்பே இல்ல. ஹரிதா நிச்சயம் மனசை மாத்திக்க மாட்டா. ஏன்னா, அவ சுதர்சனை ரொம்ப ஆழமா காதலிக்கிறா."
"திவ்யமூர்த்தியை வேணா அவங்க ஏத்துக்காம போகலாம், ஆனா சுதர்சனை ஏத்துக்குவாங்கல்ல?"
"நீங்க என்ன சொல்றீங்க?" குழம்பினார் சிவகாமி.
"என்னோட திட்டத்துக்கு நீங்க ஒத்துழைச்சா, நான் அவங்களை ஈசியா கல்யாணம் பண்ணிக்குவேன்."
"நீங்க நினைக்கிற மாதிரி அது அவ்வளவு ஈஸி இல்ல."
"ஈஸி தான்... நான் தான் சுதர்சன்னு நீங்க அவங்ககிட்ட சொன்னா..."
"என்ன்னனது?" என்றார் சிவகாமி, அவன் கூறியதைப் புரிந்து கொள்ள முடியாமல்.
"ஆமாம், ஹரிதாவுக்கு பார்வை திரும்ப கிடைக்கும் போது, அவங்க முன்னாடி சுதர்சனா நான் இருப்பேன்!"
சிவகாமி, ஆற்றல் இழந்து நின்ற உமாபதியைப் பார்த்தார்.
"உங்க திட்டத்துல இருக்குற பெரிய ஓட்டையை நீங்க கவனிக்கல. அவ பார்வை இல்லாதவளா இருக்கலாம், ஆனா, அவளோட உணர்வு ரொம்ப கூர்மையானது. அவளுக்கு சுதர்சனோட குரல் நல்லாத் தெரியும். அவனோட ஸ்மெல், அவனோட தொடுதல், எல்லாம் தெரியும்"
"அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்."
"எப்படி?"
தனது திட்டம் என்ன என்பதை அவன் கூறவும், அம்மாவும் பிள்ளையும் பொறிக்கலங்கி நின்றார்கள்.
"ஹரிதா ரொம்ப கோவக்காரி. அவளுக்கு உண்மை தெரிஞ்சா, எல்லாரையும் உண்டு இல்லைன்னு செஞ்சிடுவா."
"அவங்களுக்கு உண்மை, கல்யாணத்துக்குப் பிறகு தெரிஞ்சா என்ன செய்வாங்க?"
அவள் என்ன செய்வாள் என்று அவர்களால் கணிக்க முடியவில்லை.
"அவங்க ரொம்ப நல்ல பொண்ணு. அதனால தான் அவங்க பாய் ஃபிரண்டை விட மாட்டாங்கன்னு நீங்க சொல்றீங்க. அப்படி இருக்கும் போது, கல்யாணத்துக்குப் பிறகு, தன்னோட பாய் ஃப்ரெண்டுக்காக, அவங்க ஹஸ்பண்டை விட்டுடுவாங்களா?"
அவர்கள் அமைதியாய் நின்றார்கள்.
"உங்களால நிச்சயமா சொல்ல முடியலன்னு புரியுது. உங்க சந்தேகத்தை நான் எனக்கு சாதகமா எடுத்துக்கிறேன்."
"ஆனா, அவ எங்களை மன்னிக்கவே மாட்டா."
"ஏன் மன்னிக்க மாட்டாங்க? அவங்களுக்கு தான் பெஸ்ட் லைஃப் கிடைக்கப் போகுதே!"
"இந்த விஷயத்தை சுதர்சன் அவ்வளவு சுலபமா விட்டுட மாட்டான்."
"அவர் எப்ப திரும்பி வரார்?"
"இன்னும் ஒன்றரை மாசத்துல."
"அவர் திரும்பி வரதுக்கு முன்னாடி, நம்ம கல்யாணத்தை முடிச்சிடலாம். அப்போ அவரால என்ன செய்ய முடியும்? என் வீட்டுக்குள்ள அவர் கால் வைக்கக் கூட முடியாது"
உமாபதி கையைப் பிசைந்தான். அவனுக்கு சுதர்சனைப் பற்றி நன்றாகத் தெரியும். ஹரிதாவைப் பற்றிய உண்மையை மறைத்ததற்காகவே அவன் மீது கடும் கோபம் கொண்டவன் அவன். அவனை ஏமாற்றிவிட்டது தெரிந்தால், அவன் மிருகமாய் மாறுவான். அவன் ஹரிதாவையும் அவனையும் கொல்லக்கூட வாய்ப்பிருக்கிறது.
"உங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர், அண்ட், ஷேர் டாக்குமென்ட்ஸோட நாளைக்கு வரேன்." என்று எழுந்து நின்ற அவன்,
"அந்த ஃபைவ் பர்சன்ட் ஷேரோட மதிப்பு என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?" என்றான்.
அவர்கள் அமைதியாய் நின்றார்கள். ஏனென்றால், அவர்களுக்கு அதன் மதிப்பு தெரியாது.
"அஞ்சு கோடி... என் பிசினஸ் வொர்த் நூறு கோடி..." என்றான் மிடுக்காய்.
அது அம்மா பிள்ளை இருவரையும் அடியோடு அடித்துப் போட்டது. அவர்களது முகங்கள் பேராசை புன்னகையை பூண்டது. ஐந்து கோடி என்பது அவர்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத தொகை. அதை அடைய அவர்கள் எதையும் செய்ய தயாரானார்கள்.
தேர்வு முடிந்த பிறகு, ஹரிதாவை வீட்டிற்கு அழைத்து வந்தான் உமாபதி. அப்போது அவள் கைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அதை ஏற்ற ஹரிதாவின் முகம் ஒளிர்ந்தது, அந்த அழைப்பு சுதர்சனிடம் இருந்து வந்ததால்.
"சுதா, இந்த நேரத்துல எப்படி எனக்குக் கால் பண்றீங்க?"
உமாபதியும் சிவகாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவனிடம் பேசியபடி தன் அறைக்குச் சென்றாள் ஹரிதா.
"நீ எக்ஸாம் எப்படி பண்ணன்னு கேக்கத் தான் ஃபோன் பண்ணேன்"
"ரொம்ப ஈசியா இருந்தது. என்னோட பாடத்தை எல்லாம் ரெக்கார்ட் பண்ணி கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்."
"ரொம்ப ஃபார்மலா இருக்காத. நான் உன்னை மாதிரி இருக்க மாட்டேன்..."
"அப்படின்னா?"
"எனக்கு காபி போட்டு கொடுக்குறதுக்கும், சமைச்சு கொடுக்கறதுக்கும், உனக்கு தேங்க்ஸ் சொல்லிகிட்டு இருக்க மாட்டேன்..."
அதைக் கேட்டுச் சிரித்தாள் ஹரிதா.
"நீங்க என் தேங்க்ஸை ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கலனாலும், என் வாழ்க்கை முழுக்க நான் உங்களுக்கு நன்றியோட தான் இருப்பேன். ஏன்னா, உங்களை மாதிரி யாருமே இல்ல."
சிவகாமியும் உமாபதியும் ஒருவரை ஒருவர் பார்த்து மென்று விழுங்கினார்கள்.
"சரி, உன்னோட தேங்க்ஸை எல்லாம் சேர்த்து வச்சுக்கோ. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கிக்கிறேன்."
"அப்படின்னா, கல்யாணத்துக்குப் பிறகு நான் உங்களுக்கு தேங்க்ஸ் மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்கணும்னு நினைக்கிறீங்களா?" என்றாள் கிண்டலாய்.
"நிச்சயமா இல்ல. உன்னை தேங்க்ஸ் சொல்ல விடாம எப்படித் தடுக்கணும்னு எனக்குத் தெரியும்?"
"அப்படியா? எப்படி?"
"நான் அந்நியனான்னு கேட்பேன்."
"நீங்க அந்நியனா இருக்க முடியாது..."
"அப்படின்னா எனக்கு தேங்க்ஸ் சொல்றதை நிறுத்து. என்கிட்ட எது வேணும்னாலும் கேட்டு வாங்க உனக்கு உரிமை இருக்கு."
"சரி, நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல மாட்டேன். என்னோட உரிமையை கேட்டு வாங்கணும் தானே? அப்படின்னா என்னோட ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க."
"அப்படியே ஆகட்டும், மேடம்."
ஹரிதா சிரித்தாள்.
"ஒன் மினிட்."
"ம்ம்..."
அந்தப் பக்கம் அமைதியாய் போனது.
"முடிஞ்சிடுச்சு." என்றான்.
"என்னது?"
"உன்னோட ஆபரேஷன்க்கு தேவையான பணத்தை, உமாவுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டேன்."
உமாபதியின் கைபேசி சப்தமிடுவதைக் கேட்டாள் ஹரிதா. அந்தக் குறுந்தகவலைப் பார்த்த உமாபதி வாயடைத்துப் போனான்.
"இப்பவேவா?"
"நீ தானே உன்னோட ஆபரேஷனுக்கு அரேஞ்ச் பண்ண சொன்ன? நீ உரிமையோட கேட்ட முதல் விஷயத்தை நான் எப்படி செய்யாம போக முடியும்?"
"ஆனா நான்..."
"ஆபரேஷனை முடி."
"ஆனா, அதை இப்பவே செஞ்சா, உங்களைப் பார்க்காம நான் ஒன்றரை மாசம் காத்திருக்கணுமே..."
"நானும் தானே காத்திருக்க போறேன்?"
அவளது முகம் வாடிப்போனது.
"சரி, நான் போகணும். பை."
"உடம்பைப் பார்த்துக்கோங்க."
"நிச்சயமா பாத்துக்குவேன், உன் முன்னாடி வந்து நிக்க..." என்று கைபேசியை முத்தமிட்டான்.
புன்னகையோடு தன் அறையை விட்டு வெளியே வந்த அவள்,
"உமா, ஆப்ரேஷனுக்கு தேவையான பணத்தை, சுதா உன் அக்கவுண்டுக்கு அனுப்பியிருக்கார்." என்றாள்.
"இப்ப தான் பார்த்தேன்."
"அவர் ஆப்ரேஷனை லேட் பண்ண வேண்டாம்னு நினைக்கிறார்."
"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நாளைக்கு டாக்டரைப் போய் பார்த்துட்டு வரேன். ஐபேங்க்ல கண்ணு கெடச்ச உடனே பண்ணிடலாம்."
"சரி," என்று தலையசைத்த ஹரிதா, சந்தோஷமாய் தன் அறைக்குச் சென்றாள்.
உமாபதியின் கையைப் பிடித்த சிவகாமி, அவனை வெளியே இழுத்துச் சென்று,
"ஹரி சுதாவை மறப்பாள்னு எனக்குத் தோணல. அவன் கூட எவ்வளவு சந்தோஷமா பேசினான்னு பாத்தியா?"
ஆமாம் என்று யோசனையோடு தலையசைத்தான்.
"திவ்யமூர்த்தி சார் தான் அவ்வளவு நம்பிக்கையோட சொல்றாரே..."
"எனக்கு பயமா இருக்கு, உமா,"
"அம்மா, அஞ்சு கோடி... கொஞ்சம் யோசிச்சு பாருங்க. அந்த மாதிரி பணத்தை நம்ம வாழ்க்கையில பார்க்கவே முடியாது."
"அவரோட திட்டம் சரி வரும்னு நினைக்கிறியா?"
"ஈசி இல்ல தான். ஆனா நம்மலால முடியும். திவ்யமூர்த்தி சார் தான் சுதர்சன்னு நம்ம அவளை நம்ப வைக்கணும். அப்படி மட்டும் செஞ்சிட்டா, எல்லாம் சரியா வந்துடும்."
"ஆனா, அவர் அவளைத் தொட்டா அவ கண்டுபிடிச்சிடுவா."
"கல்யாணம் வரைக்கும் அவர் அவளைத் தொட மாட்டார். அவகிட்டயிருந்து விலகி இருக்க சொல்றேன். சுதா யூஸ் பண்ற அதே பர்ஃபியூமையும் அவரை யூஸ் பண்ண சொல்றேன். சுதாவுக்கும் ஹரிக்கும் நடுவுல நடந்த எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லிடுறேன். நம்மால இதை செய்ய முடியும்னு நான் நம்புறேன்."
சிவகாமி பதற்றம் அடைந்தார்... உமாபதியும் தான்! அவர்கள் ஹரிதாவை ஏமாற்றி விட திட்டம் வகுத்தார்கள். ஆனால், அவர்களுக்குத் தெரியாமல் பல விஷயங்கள் சுதர்சனுக்கும் ஹரிதாவுக்கும் இடையில் நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது.
ஒரு பூனையைப் பிடித்து, அது தான் சிங்கம் என்று அவளை நம்ப வைத்து விட முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாது, அவள் ஒரு பெண் சிங்கம் என்று...!
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top