WatTruyen.Top

நெஞ்சில் மாமழை..

❤❤ 14 ❤❤

jamunaguru

அதிதியின் அறை மெல்லிசையால் நிரம்பியிருந்தது.. ஆனால் அவள் மனமெல்லாம் கிருபா தான் இருந்தான்.

கிருபாவை சந்தித்த நாள் முதல் நடந்த விஷயங்கள் தான் அவள் மனதை ஆக்கிரமித்திருந்தது.

அன்று கிருபாவை சந்திக்காமல் இருந்திருந்தால்.. நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்..

தற்கொலைக்கான காரணத்தை தன் கடிதமே உலகுக்கு அறிவிக்கும்.. அதன்பின்.. அப்பா அம்மா..

உலகமே நான் தான் என வாழும் அவர்களும் அதே முடிவை தானே எடுப்பார்கள்.. அதை தடுத்து நிறுத்தியது கிருபா தானே..

எல்லாம் அறிந்த பின்னும் தன்னை திருமணம் செய்ய கிருபா சம்மதம் சொன்னதே பெரிய விஷயம்.. இதில் மேலும் மேலும் அவருக்கு கஷ்டம் கொடுக்க கூடாது.

நரேஷை பற்றிய நினைவுகள் முழுதாக தொலைந்து விட்டதாக தான் எண்ணினாள் அதிதி. ஆனால் ஜீவன் அறியாமல் அவனை நினைவூட்டும் வண்ணம் பேசிவிட.. அந்த நினைவு.. பயம்.. தவிப்பு.. குற்றவுணர்வு.. அதிலிருந்து அதிதியால் மீள முடியவில்லை.

ஜீவனும் லேகாவும் கிருபாவுக்கும் அதிதிக்கும் இடையில் ஏதோ பிரச்சனையோ என எண்ணிக் கொண்டதை கிருபா சுட்டிக்காட்டிய பின்னரே அவள் உணர்ந்தாள்.

தவறான ஒருவனை நம்பி இழந்து போனதை எண்ணி வருந்துவதும் அதன் விளைவுகளை எண்ணி வருத்தம் கொள்வதும் என அதிதியின் மனநிலையை எல்லாம் அறிந்த கிருபா புரிந்து கொள்ளலாம்.. ஆனால் மற்றவர்கள்..

அதையெல்லாம் யோசிக்காமல் தன் நினைவுகளிலே ஆழ்ந்து போன அதிதிக்கு.. கிருபா அதுகுறித்து முந்தைய தினம் பேசிய பின்னரே அதை உணர முடிந்தது.

ரெஸ்டாரெண்டில் “சமாதானம் பண்ணிட்டீங்களா.. எப்டி.. என்னை மாதிரி ரைடக்ட்டா கால்லே விழுந்துட்டீங்களா..” என ஜீவன் கிருபாவை கிண்டல் செய்ய.. லேகா லேசாக முறைத்தபடி அவனை கிள்ளினாள்.

அவர்களின் கேலி காதில் கேட்டும் கேளாதவள் போல நடந்து கொண்டாள் அதிதி உள்ளுக்குள் உறுத்தலுடன்.

கிருபா அதிதியை வீட்டில் கொண்டு வந்து விட்டுச்சென்ற பின்னர்.. “அதிதி.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும் டா..” என்றார் ஜானகி.

“என்ன ம்மா..”

“உ.. உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் தானடா..” என கேட்டார் ஜானகி.

திடீரென அவர் கேட்க.. என்ன பதில் சொல்வதென புரியவில்லை அதிதிக்கு.

“எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு இப்ப வந்து அம்மா இப்டி கேட்கிறாளேனு தோணுதாடா..”

“அ.. அப்டிலாம் இல்லலமா..”

“பொண்ணை பெத்த எல்லா அப்பா அம்மாவையும் மாதிரி நல்ல இடத்துல பொண்ணை கட்டிக் கொடுக்கணுமேனு கவலை இருந்துச்சு..

மோகன் அண்ணா குடும்பம் நல்லா தெரிஞ்சவங்க.. அபிராமி அண்ணியும் உன்னை நல்லா பார்த்துப்பாங்கன்ற நம்பிக்கை..

மாப்பிள்ளை உனக்கு பொருத்தமா இருக்கணுமே.. உன்னை அவருக்கு பிடிக்கணுமேனு மட்டும்தான் கவலை.. அதுவும் மாப்பிள்ளையை பார்த்த உடனே போயிடுச்சு..

உனக்கும் மாப்பிள்ளையை பிடிச்சிருக்குன்ற நம்பிக்கைல எல்லா ஏற்பாடும் பண்ண ஆரம்பிச்சிட்டோம்..

இப்பலாம் அடிக்கடி முகம் வாடிப்போய் இருக்க.. உன்கிட்ட பேசாம முடிவு பண்ணிட்டோமோ.. அவசரப்படுறோமோனு இருக்கு.. உன் மனசுல என்ன இருந்தாலும் சொல்லுடா.. உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்..”

அதிதியால் எதுவும் பேச முடியவில்லை. வழிய துடித்த கண்ணீரை அடக்க சிரமபட்டாள்.

“என்னடா.. உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதாவது பிரச்சனையா..

அப்டி எதுவும் இருந்தா.. உங்களுக்குள்ள பேசி சரி பண்ணிக்கணும் டா.. மத்தவங்க முன்னாடி அதை காட்டிக்க கூடாது.. பேசிட்டு இருக்கும் போது டல்லாகிட்ட..

லேகா உன்னையும் மாப்பிள்ளையையும் கவனிச்சிட்டே இருந்தா.. அதான் சொல்றேன்.. இனிமே இப்டி நடந்துக்க கூடாது..” என ஜானகி சில நிமிடங்கள் மேலும் அறிவுரைகளை வாரி வழங்க.. எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டாள் அதிதி.

தன்னை சுற்றி இருப்பவர்களும் தன்னை கவனிக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டாள் அதிதி.

“அதிதி உன்னோட மனசுல என்ன பயம் இருக்குனு என்னால புரிஞ்சுக்க முடியுது.. ஆனா நம்மள தவிர வேற யாருக்கும் இதை பத்தி தெரியாது..

அவங்க எல்லோருக்கும் நீ கல்யாண பொண்ணு.. இப்டி சின்ன விஷயத்துக்கும் முகம் வாடிப்போனா.. மத்தவங்க உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைனு தான் நினைப்பாங்க..

அதனால மத்தவங்க முன்னாடி கொஞ்சம் இயல்பா இரு.. கண்டதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காத..”

கிருபாவின் வார்த்தைகளை யோசித்து பார்த்தாள் அதிதி. நரேஷ் நீ வேணும்னு நினைக்கிறான்.. அதனால அந்த வீடியோவை அவன் வெளியே விடமாட்டான்.. அதுவும் குறிப்பா.. அவனுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் அவன் எதுவும் பண்ண மாட்டான்.

யோசித்து பார்க்கையில் அது சரியானதாகவே தோன்றியது. கிருபாவின் வார்த்தைகள் அதிதியின் மனதுக்கு சற்று பலம் தந்தது.

எவ்வளவு தெளிவாக

யோசிக்கிறான்.. இந்த தெளிவு தனக்கு இருந்திருந்தால்.. நரேஷிடம்.. ப்ச்.. அதையே யோசித்து யோசித்து எதுவும் மாற போறதில்லை.

அந்த பிரச்சனையை யோசிக்க கூடாது. எதுவும் தப்பாக நடக்காது. நிச்சயம் நடக்காது.. என தனக்குள்ளே சொல்லிக் கொண்டு மனதை திடப்படுத்திக் கொண்டாள் அதிதி.

நாளை திருமண உடைகள் எடுக்க செல்ல வேண்டும். அங்கே கிருபாவின் குடும்பத்தினரும் இருப்பார்கள்.. அவர்கள் முன்னிலையில் மனதில் இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.. முடிந்தவரையில் கல்யாண பொண்ணாக சந்தோஷமாக நடந்து கொள்ள வேண்டும்.. என தன்னை மனதளவில் தயார் செய்து கொண்டாள் அதிதி.

அதே நேரம் கிருபா போன் செய்தான்.

“ஹலோ..”

“அதிதி.. சாரி.. எல்லாம் தெரிஞ்சாலும்.. உன் மனசு புரிஞ்சாலும்.. நான் இதை பத்தி பேச வேண்டியிருக்கு.. நீ தப்பா எடுத்துக்காத..” என தொடங்கினான் கிருபா.

நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஆனால்.. என மனதில் எண்ணியபடியே கிருபாவின் பேச்சுக்கு செவிமடுத்தாள் அதிதி.

“நாளைக்கு அப்பா அம்மா எல்லாரும் இருப்பாங்க.. அவங்க முன்னாடி.. கண்டதையும் நினைச்சு கவலைப்படாம.. கொஞ்சம் சந்தோஷமா இருக்க ட்ரை பண்ணு..” என்றான் கிருபா.. ஏற்கனவே கவலையில் இருக்கும் அவளை மேலும் மேலும் துன்பப்படுத்துகிறோமோ என்ற உறுத்தலுடன்.

“நா.. நான் தான் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கிறேன்.. என்னை மன்னிச்சிடுங்க.. நேத்து.. நடந்த மாதிரி நாளைக்கு தப்பா எதுவும் நடக்காது.. நான் கவனமா நடந்துக்கிறேன்..” என உறுதியளித்தாள் அதிதி.

அவள் வார்த்தைகள் கிருபாவுக்கும் நிம்மதி தந்தது.

அதிதியின் மனதில் இருக்கும் உறுதியை குலைக்கும் வண்ணம்.. அவள் பிரச்சனைகளுக்கு காரணமானவே நேரில் வந்து நிற்பான் என அவள் நினைக்கவில்லை.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top