❤❤ 13 ❤❤
கிருபா அன்று இரவு தன்னறையில் இருந்தான். நாளை நிச்சயத்துக்காகவும் திருமணத்துக்காவும் உடைகள் எடுக்க செல்ல வேண்டும்..
முதலில் அந்த வீடியோவை அழிக்க நரேஷின் போனை எடுத்தாக வேண்டும்.
அதிதிக்கும் தனக்கும் நிச்சயம் நடக்க இருக்கும் நாளுக்கு முந்தைய தினத்தை தான் அதற்காக தேர்ந்தெடுத்தான் கிருபா.
அன்று தான் நரேஷ் பூஜாவின் திருமண வரவேற்பு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெறுவதாக இருந்தது.
பெரும்பாலும் நரேஷ் தன் போனுடனே இருக்கிறான். வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளும் போது அதை அறையில் வைத்து விடலாம்.. இல்லையென்றால் வேறு யாரிடமாவது கொடுக்க நேரிடலாம்.. அந்த நேரத்தில் தான் எடுத்தால் தான் சரியாக இருக்கும் என்பது கிருபாவின் கணிப்பு.
அந்த சமயத்தில் தன் போன் தொலைந்து போனால் அது இயல்பான நிகழ்வாகவே நரேஷ் எண்ணக்கூடும்.. அதோடு.. அடுத்த நாள் நரேஷின் திருமணம்.. அந்த பரபரப்பில் போனை தேடுவதற்கான அவகாசம் அவனுக்கு இருக்காது என்பது கிருபாவின் எண்ணம்..
ஒருவகையில் அதை எடுத்து அந்த வீடியோவை அழித்தால் தான் மனதில் முழுமையான சந்தோஷத்துடன் அதிதியை திருமணம் செய்து கொள்ள முடியும்.
ஆனாலும் கிருபாவின் மனதில் இப்போது வேறு ஒரு கலக்கம்.. தயக்கத்துடன் லேகா தன்னிடம் சொல்லிச் சென்ற விஷயம் அவன் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.
“அண்ணா.. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..”என தயக்கத்துடனே தொடங்கினாள் லேகா.
“ம்.. சொல்லுடா என்ன விஷயம்..” என்றான் கிருபா.
“அ.. அது.. அவங்க சொல்ல வேண்டாம்னு தான் சொன்னாங்க.. எனக்கு தான் மனசு கேட்கலை..” என இழுத்தாள் லேகா.
அது அதிதி பற்றி என்பதை அறியாமல்.. “சும்மா சொல்லுடா.. என்கிட்ட என்ன தயக்கம்..” என்றான் கிருபா.
“நேத்து அண்ணி வீட்டில பேசிட்டு இருக்கும் போது அண்ணி கூட வேலை பார்த்த பிரதீப் பத்தி அவங்க சொன்னாங்களே உனக்கு ஞாபகம் இருக்கா..” என கேட்டாள் லேகா.
“ம்.. அதுக்கென்ன டா..” என்ற கிருபாவுக்கு.. இவள் அதிதியை பற்றித்தான் ஏதோ பேச நினைக்கிறாள் என்பது புரிந்தது.
“அ.. அது பிரதீப் அண்ணா போன் பண்ணிருந்தாங்க.. உங்க கல்யாணத்தை பத்தி அவங்ககிட்ட பேசினோம்.. அ.. அப்ப அவங்க அண்ணி பத்தி..” தயக்கத்துடன் நிறுத்தினாள் லேகா.
கிருபாவுக்கு அவள் என்ன பேச போகிறாள் என்பது புரிந்ததால்.. அவளிடம் எப்படி சமாளிப்பது என்ற கலக்கம் எழுந்தது.
“ஹே என்ன சொல்ற.. எங்க கம்பெனில வொர்க் பண்ண அதிதியா.. அவங்களுக்கு கல்யாணமா.. அதான் அவங்க வேலையை ரிசைன் பண்ணிட்டாங்களா.. நாங்கலாம் வேற ஏதோ காரணம்னு நினைச்சோம்..” என பிரதீப் சொல்ல.. என்னவென காரணம் கேட்டார்கள் லேகாவும் ஜீவனும்.
அதற்கு அவன் சொன்னது மனதை உறுத்த.. அதைத்தான் தயங்கி தயங்கி கிருபாவிடம் சொன்னாள் லேகா.
“அதிதியும் நரேஷ்னு எங்க கொலீக்கும் ரொம்ப குளோஸ்.. நரேஷ்க்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்கு.. அந்த அப்செட்ல தான் அதிதி ஜாப்பை ரிசைன் பண்ணிட்டு.. ஒரேயடியா எல்லா காண்டாக்ட்சையும் கட் பண்ணிக்கிட்டாங்கனு நினைச்சோம்..
அவங்களுக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சா.. ஆனா ஏன் எல்லா காண்டாக்ட்சையும் கட் பண்ணாங்கனு தான் புரியலை.. நம்பர் சேஞ்ஜ்.. fbலயும் இன்ஆக்டிவ்..
அவங்கள பார்த்தா லவ்வர்ஸ்னு தான் எல்லோருக்கும் தோணும்.. இரண்டு பேரோட குளோஸ்நெஸ் அப்டி.. இப்ப இரண்டு பேரும் வேற வேற ஆளை கல்யாணம் பண்ணிக்க போறாங்க.. இந்த காலத்துல இதெல்லாம் ரொம்பவே சகஜமாகிடுச்சு..” இவைதான் பிரதீப்பின் வார்த்தைகள்.
பிரதீப் சொன்னதை கேட்டதில் இருந்து லேகாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதிதி வீட்டுக்கு போகும் போது அவள் முகத்தில் இருந்த உற்சாகம்.. பிரதீப் பற்றிய பேச்சு வந்த பிறகு தான் குறைந்து போனது.. என்பது இப்போது அவளுக்கு உறுத்தலாக தோன்றியது.
கிருபாவுக்கும் அவளுக்கும் ஏதோ பிரச்சனையோ என தாங்கள் எண்ணியது தவறோ என்ற எண்ணம் வந்தது லேகாவுக்கும் ஜீவனுக்கும்.
ஜீவன் பிரதீப்பின் பேச்சை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறியும்.. தன் அண்ணனின் வருங்கால மனைவி குறித்து கேள்விப்பட்டதை சரியோ தவறோ அதை தன் அண்ணனிடம் மறைக்க மனமின்றி லேகா தயங்கி தயங்கி சொல்லி முடித்தாள்.
“அண்ணா.. அண்ணி ஒருவேளை அவனை லவ் ஏதாவது.. ச்சே.. ச்சே.. அப்டிலாம் இருக்காது ண்ணா.. அவங்ககிட்ட இல்லைனா.. எதுக்கும் நல்லா விசாரிச்சுக்கலாமா ண்ணா.. எனக்கு மனசே கேட்கலை ண்ணா..
நல்லது நடக்கும் போது அதை தடுக்கிற மாதிரி இதெல்லாம் போய் சொல்லிட்டு இருக்காதனு அவங்க சொன்னாங்க.. ஆனா நான் தான்..
மனசுக்குள்ள அதே ஓடிட்டு இருக்கு ண்ணா.. நேத்து கூட அந்த பேச்சு வந்தப்ப தான் அண்ணி டல்லாகிட்டாங்க இல்ல ண்ணா..” என லேகா தன் மனதில் அதிதி குறித்து தோன்றிய கலக்கத்தை எல்லாம் வெளிப்படுத்தினாள்.
சில நொடிகள் மௌனம் காத்தான் கிருபா.
“அப்டிலாம் ஒன்னுமில்லை டா.. அவங்க ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் தான்.. நாங்க ஏற்கனவே இதை பத்தி பேசிருக்கோம்..” என சமாளிக்க நினைத்தான் கிருபா.
“ஆனா.. ஏன் ண்ணா.. அண்ணி திடீர்னு நம்பர் மாத்தணும்.. அது..” என தயங்கினாள் லேகா.
“நான் தான் புது போனோட சிம்மும் சேர்த்தே கிப்ட் பண்ணேன்.. இந்த நம்பர் இப்ப யூஸ் பண்றதால பழைய காண்டாக்ட்ஸ் லாம் விட்ருக்கலாம்..
கல்யாணம் பிக்ஸ் ஆனப்ப உனக்கு கூட தான் சுத்தி இருக்கிற வேற யாரும் கண்ணுக்கே தெரியலை.. கனவுல டூயட் பாடிட்டு தான் சுத்திட்டு இருந்த.. அந்த மாதிரி தான் அதிதியும்..” என்றான் கிருபா.
சமாளிப்பு தான்.. லேகா ஏற்றுக் கொள்வாளா மாட்டாளா என தவிப்பாக தான் இருந்தது கிருபாவுக்கு.
கிருபா சொல்வது சரிதான்.. தனக்கு திருமணம் நிச்சயம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து திருமணம்.. அதுவரையில் கனவுலகில் தானே இருந்தோம்.. என எண்ணினாள் லேகா.
“போ.. ண்ணா.. என்னை கிண்டல் பண்ணலைனா உனக்கு தூக்கம் வராதே..” என சொன்னவள் மகதி அழைக்கும் சத்தம் கேட்டு.. அங்கிருந்து நகர்ந்தாள்.
எப்படியோ சமாளிச்சாச்சு.. என பெருமூச்சு விட்டான் கிருபா. இன்னும் எதையெல்லாம் சமாளிக்க வேண்டுமோ என்ற கலக்கமும் மனதில் எழுந்தது. அதுகுறித்த யோசனையில் தான் இருந்தான் கிருபா.
அதிதியின் கவலைகள் பயம் எல்லாம் புரிகிறது.. இருந்தாலும் அந்த தவிப்பை வெளிக்காட்டாமல் தான் நடந்து கொண்டாக வேண்டும்.. அவள் அதில் இனி கவனமாக இருக்க வேண்டும்..
அதை அதிதியிடம் முந்தைய தினமே சொல்லி இருந்தாலும் மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டும்.. என்ற எண்ணத்துடன் அதிதிக்கு போன் பண்ணினான் கிருபா.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top