❤❤ 03 ❤❤
ஜானகியிடம் எவ்வளவோ கெஞ்சியும் பலனின்றி போக.. பெண் பார்க்கும் நிகழ்வுக்கு தயாரானாள் அதிதி.
தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் தனக்கு இதெல்லாம் அவசியம் தானா.. என்ற கேள்வி அதிதி மனதில் எழுந்த போதும்.. எதுவும் செய்ய இயலாதவளாக இருந்தாள்.
நடப்பது நடக்கட்டும்.. அப்பா அம்மாவுக்கு இதில் சிறு சந்தோஷம்.. தன் கடைசி நாளில் இந்த சந்தோஷத்தையாவது கொடுத்த நிம்மதியோடு சாகலாம் என நினைத்துக் கொண்டாள் அதிதி.
ஆனாலும் மனம் தெளிவற்று இருந்தது. இந்த கல்யாணம் நடக்காது.. தான் சாகப் போகிறோம் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.
அவள் அப்பா அம்மாவுக்கும் அவளை பெண் பார்க்க வருபவர்களுக்கும் அது தெரியாதே.. அவர்களை பொறுத்தவரையில் இது சுபகாரியம்.
அதை நினைக்கையில் குற்ற உணர்வு.. வருபவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ என்ற பயம் ஒருபுறம் என தவித்துக் கொண்டிருந்தாள் அதிதி.
மோகன் அபிராமியுடன் கிருபாவும் வந்துவிட்டதை அறைக்குள் இருந்தே அவர்களின் குரல் கேட்டு உணர்ந்து கொண்டாள் அதிதி.
அதிதியின் மனம் மேலும் பயத்தில் நடுங்க தொடங்கியது.
கிருபா குடும்பத்தினர் ஆனந்தன் ஜானகி இருவருக்குமே ஓரளவுக்கு பழக்கம் தான்.. ஆனால் சந்தித்தே பல வருடங்கள் கடந்து விட்டதால்.. அவர்களின் பேச்சில் விட்டுப்போன உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
கிருபா மகதியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.. விளையாடுவதாக.. இயல்பாக இருப்பதாக காட்டிக் கொண்டான்.
அவன் மனம் முழுதும் பல வருடங்கள் கடந்து சந்திக்கப் போகும் தன்னவளை சந்திக்கும் ஆவல் நிரம்பியிருந்தது.
தன்னவளா.. மனம் கவர்ந்தவள் எப்போது அவனவளாக மாறிப் போனாள்.. அவனுக்கே தெரியவில்லை.
ஆனந்தன் ஜானகியுடன் மோகன் அபிராமியும் பேசிக் கொள்வதை கேட்க நேர்கையில் எல்லோருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு புரிய தன்னால் அதெல்லாம் கெடப்போகிறது என்ற எண்ணத்தில் தவித்துக் கொண்டிருந்தாள் அதிதி.
மகதி கலைத்த தன் தலையை மீண்டும் சரிசெய்ய.. அவள் மீண்டும் அதை கலைக்க.. என அவளுடன் விளையாடுவதே கவனம் போல காட்டிக் கொண்டிருந்தான் கிருபா.
ஆனால் அவன் மனமோ.. “ஊர் கதையெல்லாம் அப்புறம் பேசுங்க.. என் செல்லம் அதிதியை கூப்பிடுங்க முதல்ல..” என தவித்துக் கொண்டிருந்தது.
அவன் தவிப்பு புரிந்தோ புரியாமலோ.. “அதிதி எங்க.. அவளை கூப்பிடுங்க..” என்றார் அபிராமி.
“அப்பாடா.. ரொம்ப தேங்க்ஸ் ம்மா..” என மனதில் எண்ணிக் கொண்டான் கிருபா.
“பேசிக்கிட்டே இருந்துட்டேன் பாருங்க..” என புலம்பிக் கொண்டே.. அதிதியை அழைக்க அறைக்குள் சென்றார் ஜானகி.
அறை வாயிலில் தன் பார்வையை பதித்தபடி ஆவலுடன் காத்திருந்தான் கிருபா.
தன்னை அழைக்கிறார்கள் என்றதுமே இதயம் படபடக்க.. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள் அதிதி.
அவள் படபடப்பை.. கெஞ்சல் பார்வையை.. புரிந்து கொள்ளாத ஜானகி.. அவள் அலங்காரத்தை சரிபார்த்தபடி.. “வாடா..” என அழைத்துச் சென்றார்.
அன்று தன் மனதை பறித்தவள்.. அன்று தாவணியில்.. இன்று அதே மெரூன் கலர் புடவையில்.. முகத்தில் வயதுக்கேற்ற சற்று முதிர்ச்சி.. குழந்தைத்தனம் தொலைந்து விட்டிருந்தது..
கிருபாவின் மனம் பல வருடங்களாக தன் மனதில் பதிந்திருந்த அவள் உருவத்துக்கும்.. தன் கண்முன் நிற்பவளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை ஆராய தொடங்கியது.
கிருபாவின் பார்வை தானாக.. அதிதியின் இடுப்புக்கு செல்ல.. புடவை தன் வேலையை சரியாக செய்து அதை மறைத்திருந்தது.
அதைக் கண்ட கிருபாவின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது.
அதிதியை தன்னருகில் அமர சொல்லிய அபிராமி அவளின் படிப்பு வேலை சம்பந்தமாக கேட்டுக் கொண்டிருந்தார். அதிதியும் தன் படபடப்பை மறைத்து முடிந்தவரை இயல்பாக பதிலளித்தாள்.
கிருபாவின் பார்வை அதிதியை விட்டு அகல மறுத்தது. கிருபாவின் பார்வை தன் மீதிருப்பதை உணர்ந்தாலும்...அவன் பார்வையை நேருக்கு நேராக சந்திக்கும் மனபலம் இல்லை அதிதிக்கு.
“பொண்ணு கிட்ட ஏதாவது பேசணும்னா பேசு ப்பா..” என கிருபாவிடம் மோகன் சொல்ல சரியென தலையசைத்தான் கிருபா.
அதிதிக்கு தன் நிலைமையை வெளியே சொல்ல முடியாமல் அவன் பார்வையை ஏற்கவும் முடியாமல் தவிப்பாக இருந்தது.
அதிதியின் முகத்தில் ஏதோ தவிப்பு.. படபடப்பு.. பயம்.. இருப்பதை கிருபா உணர்ந்து கொண்டான்.
திடீர்னு பொண்ணு பார்க்கனு வந்ததால இருக்கும்.. என அவள் பயத்துக்கு தனக்கு சாதகமான ஒரு காரணத்தை கற்பித்துக் கொண்டான் கிருபா.
பெரியவர்கள் பேச அனுமதித்த பிறகும் எதுவும் பேச தோன்றாமல் அமைதியாக அவளை ரசித்துக் கொண்டிருந்தான் கிருபா.
தன் பெற்றோரும் அவள் பெற்றோரும் அருகில் தான் இருக்கிறார்கள் என்பதோ.. தன் மடியில் இருக்கும் மகதி தன் பாக்கெட்டில் இருந்து போனையும் பேனாவையும் எடுத்ததோ அவன் கவனத்துக்கு வந்தால் தானே..
தான் பேச நினைத்ததை எல்லாம் அவளை கண்டது முதலே மறந்து போய்.. அவள் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருந்த சின்ன பொட்டு.. அதற்கு மேலாக சிறு கீற்றாய் திருநீறு..
காதில் தொங்கும் ஜிமிக்கி.. காதருகில் சுருண்டிருந்த முடி.. தோளில் உரசிக் கொண்டிருந்த மல்லிகைப்பூ.. மெல்லிய தங்க வளையல்.. சீராக வெட்டப்பட்ட விரல் நகங்கள்.. அதில் தீட்டப்பட்டிருந்த நகச்சாயம்.. என அவளை அணு அணுவாக ரசித்துக் கொண்டல்லவா இருந்தான் கிருபா.
கிருபாவின் போனில் மகதி பேனாவால் கிறுக்க தொடங்க.. கிருபாவின் பார்வையை சந்திக்க பலமற்று.. மகதியை பார்த்துக் கொண்டிருந்த அதிதி.. “ஸ்ஸ்..” என லேசாக சத்தம் எழுப்பி அவளை அழைத்தாள்.
மகதியும் கிருபாவின் மடியிலிருந்து இறங்கி அதிதியின் அருகில் ஓடிவந்தாள்.
அவளை தூக்கிக் கொண்ட அதிதி.. “உன் பேர் என்ன..” என கேட்டவாறே.. கிருபாவின் போனை அவளறியாமலே மெல்ல வாங்கினாள்.
“அவ பேரு மகதி டா..” என அபிராமி பதிலளிக்க.. கிருபாவின் போனை அங்கே வைத்துவிட்டு.. லேசான சிரிப்புடன் அங்கிருந்து தன்னறைக்கு நகர்ந்தாள் அதிதி.
அதிதியிடம் ஒட்டிக் கொண்டாலும்.. தன் எழுத்து திறமையை எங்கே காட்டுவது என புரியாமல்.. தன் மழலை மொழியில்.. “ஆனா.. ஆனா..” என்றாள் மகதி.
கிருபாவின் பார்வையில் இருந்து தப்பித்தோம் என்ற நிம்மதி அதிதியின் மனதுக்குள் பரவியிருந்தது..
மகதி சொல்ல வருவது புரியாமல்.. “என்னடா.. என்ன வேணும்..” என அதிதி கேட்க.. “ஆனா.. ஆனா..”என பேனாவை நீட்டியபடி.. எழுத பேப்பரை கேட்டாள் மகதி.
“பேனா கையில கிடைச்சிட்டா போதுமே.. மேடமுக்கு.. அ..னா.. ஆவன்னானுட்டு..” என கிண்டல் செய்தபடியே அறைக்குள் வந்த கிருபா.. அதிதியின் கைகளில் இருந்து மகதியை வாங்கிக் கொண்டான்.
அந்த சில நொடி நெருக்கம் கிருபாவின் மனதுக்கு இதம் தந்தது.
“இவன்கிட்ட இருந்து தப்பிக்க இங்க வந்தா இங்கையும் வந்து நிக்கிறானே..” என மனதுக்குள் புலம்பினாள் அதிதி.
“அட.. நோட்டு இந்தா இருக்கு.. இதில எழுது ஆனா..” என மகதிக்கு நோட்டை திறந்து கொடுத்தான் கிருபா.. அது அதிதி தன் தற்கொலை கடிதம் எழுதி வைத்தது என அறியாமலே.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top