WatTruyen.Top

நெஞ்சில் மாமழை..

❤❤ 01 ❤❤

jamunaguru

நா.. நான்.. எ.. என்னோட சாவுக்கு காரணம் நரேஷ்..

மனதுக்குள் வார்த்தைகளை வரிசை படுத்தியபடியே தன் தற்கொலை கடிதத்தை எழுத தொடங்கினாள் அதிதி.

அப்பா அம்மா என்னை மன்னிச்சிடுங்க.. ஒரே பொண்ணுனு நீங்க எனக்கு செல்லம் கொடுத்தாலும்.. ஒழுக்கத்தையும் கத்து கொடுத்தீங்க.. ஆனா அந்த ஒழுக்கத்தை தொலைச்சதுக்கு தண்டனையா தான் நான் இந்த முடிவு எடுத்துருக்கேன்.

நான் வேலை பார்த்த இடத்தில தான்.. நரேஷை பார்த்தேன்.. பிடிச்சிருந்துச்சு.. லவ் பண்ணோம்.. அவன் மேல இருந்த காதல்ல.. கண்முடித்தனமான நம்பிக்கைல.. என்னையே அவனுக்கு கொடுக்கிற அளவுக்கு போய்ட்டேன்.

அவன் எனக்குத்தான்ற நம்பிக்கை இருந்ததுனால எனக்கு அது பெரிய விஷயமா தோணலை. அது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்பத்தான் புரியுது.

வீட்டில கல்யாண பேச்சை எடுத்ததுமே நான் அவன்கிட்ட வீட்டில வந்து பேச சொன்னேன். ஆனா அவன்..

அவனுக்கு ஏற்கனவே மேரேஜ் பிக்ஸ் ஆனது அப்பத்தான் தெரிஞ்சுது.. அவனுக்கு நான் வெறும் டைம்பாஸ்.. என் காதல் நம்பிக்கை எல்லாம் பொய்யாகிடுச்சு..

அப்பக்கூட ஏதோ ஒரு நம்பிக்கை.. எல்லாம் சரியாகிடும்னு.. ஆனா..

ஆனா அவன் தெளிவா தான் இருந்துருக்கான். அவன் மேல இருந்த காதல்ல நம்பிக்கைல நான் அவனுக்கு மட்டுமே காட்டின என்னோட அந்தரங்கத்தை..

வீடியோ எடுத்து வச்சிருந்தான்.. அதுவும் அவன் தான் அதுனு ப்ரூவ் பண்ணவே முடியாத மாதிரி.. அவனோட கழுத்துல இருந்த பெண்டன்ட்ல கேமரா பிக்ஸ் பண்ணி..

நான் நான் சாகுறத தவிர வேற வழியில்லை.. அந்த வீடியோ வெளியே தெரிஞ்சா.. வேண்டாம்.. ஆனா என்னோட சாவிலயாவது அவனுக்கு தண்டனை கிடைக்கணும்.. அதுக்காக தான் இதை எழுதுறேன்.

தன் தற்கொலை கடிதத்தை எழுதி முடித்த அதிதி பேனாவை அதே பக்கத்தில் வைத்து நோட்டை மூடினாள்.

தான் செய்வது சரிதானா.. அப்பாவும் அம்மாவும் இதெல்லாம் தெரிஞ்சா தாங்க மாட்டாங்களே.. கண்ணீர் வடித்தாள் அதிதி. மனமெல்லாம் குழப்பம்.. கவலை.. ஏதேதோ எண்ணங்கள்..

இது மட்டும் தான் நான் பண்ணின தப்புக்கு தண்டனை.. அவனை காதலிச்ச பாவத்துக்கு இதை தவிர வேற வழியில்லை.. இன்னைக்கு நைட்டே இந்த தூக்க மாத்திரையை சாப்பிடணும்.. என முடிவு செய்தாள் அதிதி.

இன்று ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் மட்டும் தான் எனக்கு மிச்சமிருக்கு.. இன்னைக்கு நைட்டே இந்த உலகத்தை விட்டு.. ப்ச்.. அப்பா அம்மாவோட என் நேரத்தை செலவழிக்கணும் என முடிவு செய்தவள்.. தன் மனதில் இருந்த பாரத்தை உள்ளுக்குள்ளே மறைத்து முகத்தில் புன்னகையை பூசிக் கொண்டாள்.

அந்த நேரத்தில் அவள் அலைபேசி அதிர்ந்து அவள் வரவழைத்துக் கொண்ட புன்னகையையும் பறித்தது.

நரேஷ் தான்..

அவன் அழைப்பை ஏற்க மனமின்றி அலைபேசியை வெறித்துக் கொண்டிருந்தாள் அதிதி.

அவனும் விடுவதாக இல்லை.. மீண்டும் மீண்டும் அழைத்தான். எரிச்சலுடன் போனை அட்டெண் செய்தாள்.

“என்ன டார்லிங் பயந்துட்டீயா.. ஆபிஸ்க்கு லீவு சொல்லிருக்க.. பயத்துல காய்ச்சல் வந்துடுச்சா..” ஏளனமாக ஒலித்தது நரேஷின் குரல்.

பதில் பேச மனமின்றி மௌனமாக இருந்தாள் அதிதி.

“ஒரு வீடியோ தான பார்த்த.. அதுக்கே இப்டியா..” என நரேஷ் கேட்க.. அப்படியானால்.. “அ.. அப்டினா எ.. என்ன சொல்ற..” என பயத்துடன் தடுமாறிய குரலில் கேட்டாள் அதிதி.

பலமாக சிரித்துக் கொண்டவன்.. “நிறைய எடுத்து வச்சிருக்கலாம்.. ஆனா உன்னை கழட்டி விடுறதுனு முடிவு பண்ணின பிறகு ஒரு டைம் தான் அவுட்டிங் போனோம்..” என சோகம் போல சொல்ல.. பற்றிக் கொண்டு வந்தது அதிதிக்கு.

“உ.. உன்னை ரொம்ப நம்புனேன் டா..” என உரைத்தவளின் கண்ணீர் தகுதியற்றவனுக்காக வழிந்தது.

“ப்ச்.. வாட்டர் பால்ஸா..” என முணுமுணுத்தவன்.. “டார்லிங்.. இப்பவும் நீ என்னை நம்பலாம்.. எனக்கும் பூஜாவுக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆனது தெரிஞ்சு நீயா விலகியிருந்தா.. நான் இதை உன்கிட்ட காட்டிருக்கவே மாட்டேன்..

நீதான் காதல் கத்தரிக்கானு டயலாக் லாம் பேசுன.. அதான் உன்னை ஆப் பண்றதுக்கு அதை காட்ட வேண்டியதா போச்சு..

இப்பவும் எப்பவும் அந்த வீடியோ என்கிட்டே பத்திரமா இருக்கும். தேவையில்லாம நான் அதை யூஸ் பண்ண மாட்டேன்.. நீ தைரியமா ஆபிஸ் வா டார்லிங்..” என்றவன் போனை கட் செய்தான்.

மீண்டும் மனமெல்லாம் பாரமாக இருக்க.. தன் முடிவு இன்று இரவே நெருங்கப்போவதை எண்ணியபடியே.. தூக்க மாத்திரை பாட்டிலை எடுத்து பார்த்தாள். அதை அப்படியே மேஜை மேல் வைத்தாள்.

தன் அப்பா அம்மாவுடன் தன் வாழ்வின் கடைசி நாளை செலவழிக்க எண்ணியவள்.. தன் மனதில் இருந்த கவலையெல்லாம் தனக்குள்ளே புதைத்துக் கொண்டு தன் அறையில் இருந்து வெளியேறினாள்.

பேப்பர் படித்துக் கொண்டிருந்த தந்தை ஆனந்தனின் தோளில் சாய்ந்து கொண்டாள் அதிதி.

“என்னடா இன்னைக்கு வேலைக்கு கிளம்பலையா..” என அவள் தலை வருடியபடி கேட்டார் ஆனந்தன்.

“இல்லைப்பா போர் அடிக்குது அதான்..லீவு சொல்லிட்டேன்..” என இயல்பாக காட்டிக் கொள்ள முயன்றாள்.

அதிதியின் தாய் ஜானகி.. தந்தை மகளின் உரையாடலை கேட்டபடியே அவர்களுக்கு காபியுடன் அங்கே வந்தார்.

“ஏங்க நீங்களும் லீவு சொல்லுங்க.. எங்கையாவது வெளியே போய்ட்டு வரலாம்..” என்றார் ஜானகி.

தான் கேட்க நினைத்தது என அதிதி மனதுக்குள் எண்ணினாள்.

“இல்லைமா.. இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் முடிஞ்சவரைக்கும் சீக்கிரம் வந்துடுறேன்..” என்றார் ஆனந்தன்.

“ம்க்கும்.. இப்டி சொன்னா வழக்கமான அஞ்சு மணியையும் தாண்டித்தான வருவீங்க..” என ஜானகி பொய்யாக சலித்துக் கொண்டார்.

தாய் தந்தையின் செல்ல சண்டையில் புகுந்து தானும் கலகலக்கும் அதிதி.. அமைதியாக அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனந்தன் வேலைக்கு கிளம்ப.. ஜானகி காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தார்.

“ஜானு..” என கொஞ்சல் குரலில் அழைத்தபடி அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு வம்பிழுக்க மனம் துடித்தாலும்.. எதையும் செய்ய முடியாமல் அறைக்குள் முடங்கினாள் அதிதி.

தன் முடிவில் உறுதியாக இருந்ததால் கண்ணீரை மட்டும் கட்டுப்படுத்திக் கொண்டாள் அதிதி.

காதலின் பெயரில் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி தவிப்புடன் அதிதியின் அந்த கடைசி நாள் மெல்ல.. ரொம்பவே மெல்லமாக கடந்தது.

தாய் தந்தையுடன் காலை உணவை உண்டவள்.. ஹாலில் இருந்த சோபாவில் தலை சாய்த்தபடி இருந்தாள்.

உறக்கம் கூட வரமறுத்தது. அதான் நிரந்தரமாக உறங்க போகிறோமே என எண்ணிக் கொண்டிருந்தாள் அதிதி.

அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்ற சில நிமிடங்களிலே.. ஒருவித சந்தோஷ பரபரப்புடன் வீட்டுக்கு திரும்பினார் ஆனந்தன்.

என்னவென புரியாமல் விழித்தனர் தாயும் மகளும்.

ஆனந்தன் சொன்ன விஷயத்தை கேட்டதும் அவரின் பரபரப்பு ஜானகியையும் தொற்றிக்கொண்டது.

அதிதிக்கு தான் இதை எப்படி எடுத்துக் கொள்வதென்றே புரியவில்லை.

இதுதான் தன் வாழ்வின் கடைசி நாள் என முடிவெடுத்தவளிடம்.. இன்று உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் என்னதான் செய்வாள்..

அதிதியின் வாழ்வின் கடைசி நாளா அல்லது.. வாழ்வில் திருப்பம் ஏற்படுத்தப் போகும் நாளா..

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top