💞 12 💞
அஞ்சலியிடம் தன் நேசத்தை வெளிப்படுத்தி விட்டதால் மனதில் இருந்து பெரும் பாரத்தை இறக்கி வைத்தது போல உணர்ந்தான் உதயா.
இனி அஞ்சலி என்ன முடிவெடுத்தாலும் சரி என நினைத்தான் உதயா. அஞ்சலி வீட்டை விட்டு செல்வது என முடிவெடுத்தால்.. அதை எப்படி தடுப்பது என மட்டும் தீவிரமாக யோசித்தான் உதயா.
அஞ்சலி நிச்சயம் இன்னொரு திருமணம் குறித்து எண்ணியிருக்க மாட்டாள்.. திடீரென தான் சொல்லியது அவளுக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடும்.. அவள் தனிமையில் நன்றாக யோசித்து விட்டு அவள் முடிவை சொல்லட்டும் என நினைத்தான் உதயா.
இரவு வெகுநேரம் ஆகியும் அஞ்சலி சாப்பிட கூட வராமல் யோசனையில் ஆழ்ந்திருக்க.. அவளை சாப்பிட அழைக்க வந்தான் உதயா.
“அஞ்சு..” என உதயா அழைக்க திரும்பி பார்த்தாள் அஞ்சலி. “நீயே விபுவுக்கு அப்பாவா இருந்திருக்கலாம் உதி..” என அஞ்சலியின் மனம் சொல்ல.. ஏன் அப்படி நடக்கவில்லை என்ற ஏக்கத்தில் கலங்கிய கண்களுடன் உதயாவை பார்த்தாள்.
அஞ்சலியால் தன் காதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என எண்ணினான் உதயா.
“சாப்பிட வா அஞ்சு..” என உதயா அழைக்க.. சில நொடிகள் விழித்த அஞ்சலி.. “வே.. வேண்டாம் உதி..” என்றாள்.
எதுவும் பேசாமல் அறையில் இருந்து வெளியேறினான் உதயா. விபுவுக்கு தன்னால் அப்பாவாக பாசத்தை கொடுக்க முடியாமல் போகலாம்.. ஆனால் விபுவுக்கு தாத்தா பாட்டி அத்தை என தன் குடும்பம் எப்போதும் இருக்கும் என்பதை அஞ்சுவுக்கு புரிய வைக்க வேண்டும் என எண்ணியபடியே அஞ்சலிக்கு சாப்பாடு எடுத்து வந்தான்.
அவளருகில் அமர்ந்த உதயா.. “சாப்பிடு அஞ்சு..” என சொல்ல.. வேண்டாம் என தலையசைத்தாள் அஞ்சலி.
“அஞ்சு.. நீ என்ன யோசிக்கிறனு எனக்கு புரியுது.. உன்னால நான் சொன்னதை ஏத்துக்க முடியலை.. அப்டித்தான..” என சொன்ன உதயா சாப்பாடை ஊட்ட.. மறுக்க முடியாமல் சாப்பிட்டாள் அஞ்சலி.
“அதுக்காக இந்த வீட்டை விட்டு போகணும்னு லாம் நினைக்காத அஞ்சு.. நீ எப்பவும் போல என் ப்ரெண்ட்டா இந்த வீட்டில இரு..” என புன்னகையோடு சொன்னான் உதயா.
“வே.. வேண்டாம் உதி.. நா.. நான்..” என அஞ்சலி தடுமாறினாள்.
“தேவை இல்லாம வேற எதையும் யோசிக்காத அஞ்சு.. விபுவுக்கு அப்பான்ற உறவா நான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.. உனக்கு விருப்பமில்லைனா விட்டுடு.. தாத்தா பாட்டி அத்தைனு விபுவுக்கு இருக்கிற உறவை.. என்னால.. நான் பிரிச்சதா இருக்க வேண்டாம் அஞ்சு..” என அழுத்தமாக தொடங்கி கெஞ்சலாக முடித்தான் உதயா.
உதயா அஞ்சலிக்கு சாப்பாடு ஊட்டி முடித்திருக்க.. “நீ சாப்டீயா உதி..” என கேட்டாள் அஞ்சலி.
“இல்லை.. சாப்பிடுறேன்..” என்றவன் அறையில் இருந்து வெளியேறினான்.
ஏனோ அஞ்சலியிடம் இருந்து எதிர்மறையான பதில் தான் கிடைக்கும் என உறுதியாக தோன்றியது உதயாவுக்கு. எதிர்பார்த்தது தான் என்றாலும்.. அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை உதயாவால்.
சாப்பிட எண்ணி அமர்ந்தாலும் மனமின்றி தண்ணீரை மட்டும் அருந்திவிட்டு அறைக்கு செல்ல நகர்ந்தான். அஞ்சலி அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்..
“ஏன் உதி இப்டி பண்ற..” என கேட்ட அஞ்சலியால் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
“அஞ்சு ப்ளீஸ்.. அழாத.. நீ எடுத்த முடிவு நான் எதிர்பார்த்தது தான்.. ஆனாலும் கஷ்டமா இருக்கு அவ்ளோதான் அஞ்சு..” என தன் வலியை மறைத்து சாதாரணமாக பேச முயன்றான் உதயா.
அவன் வலி மனதை வாட்ட.. “நா.. நான்.. உனக்கு.. வே.. வேண்டாம் உதி.. நா.. நான் இங்க இருந்து போயிடுறேன்..” என்றாள் அஞ்சலி கண்ணீருடன்.
“ப்ளீஸ் அஞ்சு.. அப்டி சொல்லாத.. எங்கையோ போய் நீயும் விபுவும் கஷ்டப்பட வேண்டாம்.. ப்ளீஸ் இங்க இருந்து போய்டாத.. உன்னையும் விபுவையும் நான் போக விடமாட்டேன்.. நீங்க இரண்டு பேரும் கஷ்டப்பட வேண்டாம்..
உ.. உனக்கு.. நா.. நான் அப்டி கேட்டது தான பிரச்சனை.. நா.. நான் வேணா.. வேற எங்கையாவது போயிடுறேன் அஞ்சு.. நீ.. நீயும் விபுவும் போக வேண்டாம் அஞ்சு ப்ளீஸ்..” என உதயா தவிப்புடன் சொல்ல.. அவனை அணைத்து அழத்தொடங்கினாள் அஞ்சலி.
“ஏ.. ஏன் உதி.. ஏன் இப்டிலாம் நடந்துச்சு.. நீ.. நீயே விபுவுக்கு அப்பாவா இருந்திருக்கலாம்ல உதி..” என கண்ணீருடன் அஞ்சலி சொல்ல.. “இப்பவும் விபுவோட அப்பா நான் தான் அஞ்சு..” என சொன்னான் உதயா.
அப்போதுதான்.. அஞ்சலி என்ன சொன்னாள் தான் என்ன சொன்னோம் என்பதையே உணர்ந்த உதயா.. “அஞ்சு.. அ.. அப்ப உ.. உனக்கு சம்மதம் தானா..” என கேட்டான்.
“ம்.. ஆனா..” என்ற அஞ்சலி உதயாவை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டாள். “ஆ.. ஆனா.. நா.. நான்.. டைவர்ஸ் ஆனவ உதி.. எல்லாரும் என்ன பேசுவாங்க..” என தடுமாறி சொல்ல.. அவள் முகத்தை பார்த்தான் உதயா.
“உனக்கு சம்மதம் தான..” என அழுத்தமாக உதயா கேட்க.. ஆம் என தலலயசைத்த அஞ்சலி.. “ஆ.. ஆனா..” என மீண்டும் தொடங்க.. “வேற எதையும் யோசிக்காத அஞ்சு.. நீயும் விபுவும் தான் என் வாழ்க்கை.. அதில எந்த மாற்றமும் இல்லை..” உறுதியாக சொன்னவன் அவள் கன்னத்தில் மென்மையாக தன் இதழ் பதித்தான்.
இருவர் விழிகளும் நிம்மதியுடன் கலந்திருக்க.. அவர்களின் கவனத்தை தன் அழுகையால் ஈர்த்தான் விபு.புன்னகையோடு இருவரும் விலகிக் கொண்டனர்.
அஞ்சலிக்கு உறக்கம் கண்களை தழுவ.. விபுவோ அவளை தூங்கவிடாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
“விபு குட்டி.. நீ பகலெல்லாம் தூங்கிட்டு.. இப்டி அம்மாவை ராத்திரில தூங்க விடாம பண்றீயே.. உனக்கே இது நல்லா இருக்கா..” என பாவமாக அஞ்சலி கேட்க.. மேலும் புன்னகைத்தான் விபு.
புன்னகையோடு விபுவை தன் கரங்களில் ஏந்திய உதயா.. “நீ தூங்கு அஞ்சு.. விபுவை நான் பார்த்துக்கிறேன்..” என்றான்.
“அம்மாவுக்கு தூக்கம் வருதாம்.. நம்ம இரண்டு பேரும் பேசிட்டே..ஏஏஏ தூங்காம இருப்போம் சரியா..” என விபுவுடன் பேசியபடியே அறையில் இருந்து வெளியேற நகர்ந்த உதயாவின் கரத்தை பற்றினாள் அஞ்சலி.
என்ன என்பது போல திரும்பி அவள் முகம் நோக்கினான் உதயா. “இங்கையே இரு உதி ப்ளீஸ்..” என கெஞ்சலாக அஞ்சலி கேட்டாள்.
அவளருகிலே அமர்ந்த உதயா.. “தூங்கு அஞ்சு.. ரொம்ப டயர்டா இருக்கல்ல..” என சொல்ல.. ம்.. என்ற அஞ்சலி அவன் தோளிலே சாய்ந்து கொண்டாள்.
அந்த இனிமையான நேரத்தில் அஞ்சலிக்கு ஏன் அந்த கேள்வி மனதில் எழுந்ததோ தெரியவில்லை.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top