WatTruyen.Top

தேவதை போலொருத்தி..

01 ❤

jamunaguru

ஜன்னல் வழி அறையுள் நுழைந்த நிலவொளியில் நனைந்தபடி.. தன் டைரியை எழுதத் தொடங்கினாள் மிதுனா..

தன் மனதுக்கு நெருக்கமான சிலவற்றை.. டைரியில் எழுதும் வழக்கம் மிதுனாவுக்கு உண்டு..

இன்று ஏனோ டைரி எழுத எடுத்து உட்கார்ந்தாள் மிதுனா.

❤❤

காலேஜ் முடிஞ்சு கொஞ்ச நாளாச்சு.. வீட்டில கல்யாண பேச்சு எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.. கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடமாட்டிக்குறாங்க.. என்ன பண்றது..

அத்தை பையன் மாமா பையன்னு இருந்தா அப்பா அம்மா கவலைப்பட மாட்டாங்க.. ஆனா அத்தை பையன் என்னைவிட சின்னவன் இப்ப தான் டென்த் படிக்கிறான். மாமாவுக்கு இரண்டு பொண்ணுங்க.

அதனால ஒரே பொண்ணான என்னை நல்ல பையனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு இப்பவே கவலைப்படுறாங்க.. சரி அவங்க கவலை அவங்களுக்கு.. என் கவலை எனக்கு..

அப்பாவுக்கு நல்லா தெரிஞ்சவர்.. எங்களுக்கு தூரத்து சொந்தம் அந்த மாமா.. அவர் அன்னைக்கு வீட்டுக்கு வந்தார்.. ஒரு பையன் போட்டோ அப்பா கிட்ட கொடுத்தார்.

"முன்னாடி கொஞ்சம் கஷ்டப்பட்டாங்க.. இப்ப பையன் நல்ல வேலைல இருக்கான்.. சம்பாதிச்சு வீட்டை கட்டிட்டான்.. ஒரு பொண்ணு.. அவளுக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டான்..

சென்னைல வேலை.. நல்லா சம்பாதிக்கிறான்.. நம்ம மிதுனாவுக்கு பொருத்தமா இருப்பான்.. பையன் ஜாதகமும் இதில இருக்கு.. பொருத்தம் பாக்கணும்னா பாத்துக்கோங்க..

நல்ல பையன்.. அதான் நானே உங்ககிட்ட பேசுறேன்.. நல்ல முடிவா சொல்லுங்க.."னு அந்த மாமா அப்பா கிட்ட சொல்லிட்டு போய்ட்டாங்க..

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பையனை பிடிச்சிருந்துச்சு.. என்கிட்ட போட்டோ கொடுத்தாங்க.. ஆனா நான் பார்க்கலை..

ஒரு வேளை பார்த்து மனசுக்கு பிடிச்சு.. அப்புறம் அவங்க வீட்டில உள்ளவங்களுக்கோ.. இல்லை அவருக்கோ பிடிக்கலைனா அது கஷ்டமா இருக்கும்.. அதான்..

ஜாதகம் பொருத்தம் லாம் நல்லபடியா இருந்ததால.. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷம்.. அவங்க வீட்டில இருந்து பொண்ணு பார்க்க வந்தாங்க..

அவங்க அப்பா அம்மா தங்கச்சி.. அப்புறம் ஒரு குட்டிப் பாப்பா..

எல்லாருக்கும் என்னை ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னாங்க.. எனக்கும் ஏனோ அவங்கள ரொம்ப பிடிச்சிருந்துச்சு.. ஏதோ மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க மாதிரி ஒரு பீல்..

அந்த குட்டிப் பாப்பா பேரு ஶ்ரீமதி.. அவங்க தங்கச்சி குழந்தை.. ஆறு மாச பாப்பா.. அவங்க வந்ததுல இருந்து பாப்பா என்கிட்டே தான் இருந்தா.

பாப்பாவுக்கும் என்னை பிடிச்சிடுச்சு போல.. அவர் அடுத்த வாரம் ஊருக்கு வந்ததும் வரச்சொல்றோம்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க..

என் ப்ரெண்டு சீதாவுக்கு நிச்சயம் வரைக்கும் போய்.. அது நடக்காம போயிடுச்சு.. அப்டிலாம் என் லைப்ல எதுவும் நடந்துடக் கூடாது.. இந்த சம்பந்தமே.. நல்லபடியா நடந்துடணும்..

அவர் பேர் வினய்.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அவர் போட்டோவை பார்க்க போறேன்.. அவர் பேர் எனக்கு பிடிச்ச மாதிரி.. அவரையும் எனக்கு பிடிக்கணும்.. அதே மாதிரி அவருக்கும் என்னை பிடிக்கணும்..

❤❤

மிதுனா போட்டோவை பார்த்தா.. "இனி என் வாழ்நாளை நான் இவனுடன்.. இல்லை.. இவரோட தான் வாழணுமா.."என மனதில் நினைக்கையிலே.. சந்தோஷம் பரவியது..

அவன் மிதுனாவின் மனமெல்லாம் நிறைந்திருந்தான் அந்த இரவில்..

❤❤

அதே நேரம்.. மாடியில் அமர்ந்து நிலவை ரசித்துக் கொண்டிருந்தான் வினய்.. இல்லை அவன் பார்வை தான் நிலவின் மேல் இருந்தது..

மனதில் பல்வேறு எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தது.

தன் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் வேறு எவனோ ஒருவனின் பெயர் இருக்க.. அந்த திருமண அழைப்பிதழை.. என்னவள் இவள் என எண்ணிக் கொண்டிருந்தவளே கொண்டு வந்து நீட்டிய போது உடைந்து போனான் வினய்.

"என்ன இது.. உன் விருப்பம் இல்லாம வீட்டில முடிவு பண்ணிட்டாங்களா.. நான் வேணா.. உங்க அப்பா அம்மா கிட்ட பேசவா.."என கேட்டான் வினய்.

"பேசி.."என்ற அவளின் அலட்சியமான கேள்விக்கு அவன் பதில் சொல்வதறியாது உறைந்து நின்றான்.

தன்னை திடப்படுத்திக் கொண்டு.. "பேசி.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.."என்றான் வினய்.

அவளோ அலட்சியமாக புன்னகைத்தாள்.

"சொந்தமா வீடு கிடையாது.. இனிமே தான் நீ சம்பாதிச்சு கட்டணும்.. இதில உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆயிரெத்தெட்டு கமிட்மெண்ட் உனக்கு..

இதில நானும் உன்னை கல்யாணம் பண்ணிட்டு நீ சம்பாதிக்கிற பதினைஞ்சு ஆயிரத்துக்குள்ள குடும்பம் நடத்தணுமா.. என்னால முடியாது.."

"இது எல்லாம் உனக்கு முன்னாடியே தெரியும் தான.. நான் எதையும் உன்கிட்ட மறைச்சு உன்னை லவ் பண்ணலையே.."என்றான் வினய்.

"நானும் நீ மறைச்சனு சொல்லலை.. ஆனா உன்னை விட பெட்டரான சாய்ஸ் எனக்கு வரும் போது.. நான் அதை choose பண்றேன்.. அதில என்ன தப்பு.."

"அப்ப நம்ம லவ்.."

"dont speak foolish.. வினய்.. its my life..  நான் ஆசைப்படுற சந்தோஷமான வாழ்க்கையை உன்னால கொடுக்க முடியாது.. அதனால.."என்றவள் ஐந்து வருட காதலை.. ஐந்து நிமிட உரையாடலில் உடைத்து நொறுக்கி விட்டு கடந்து சென்றாள்.

மூன்று வருடங்கள் கடந்து விட்டது.. இன்னும் வினய்.. அவள் விட்டுச் சென்ற வலியிலிருந்து மீளவில்லை.

கடந்த வாரம் போன் செய்த வினயின் அம்மா.. "வீடு கட்டி முடிச்சாச்சு.. தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு பண்ணிக்கிறேன்னு சொன்ன..

அவளுக்கும் கல்யாணம் முடிஞ்சு ஒன்றரை வருஷம் ஆகிடுச்சு.. இப்பவாது நாங்க உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கட்டுமா.."என கேட்ட போது மறுக்க காரணம் கிடைக்கவில்லை வினய்க்கு..

அம்மாவிடம் சரி என சொன்னாலும்.. தான் இன்னொரு பெண்ணை தன் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்பது வினய்க்கு நன்றாகவே தெரியும்.

நாளைக்கேவா பொண்ணை பார்த்து முன்னால நிறுத்தப் போறாங்க என நினைத்தான் வினய்.

ஒரு வாரத்திலே போன் பண்ணி.. "பொண்ணை பார்த்துட்டு வந்துட்டோம்.. எங்களுக்கு பிடிச்சிருக்கு.. விஜி உன் போனுக்கு போட்டோ அனுப்புறேனு சொன்னா.. பார்த்துட்டு சொல்லு.."என அம்மா சொல்ல தடுமாறித்தான் போனான் வினய்.

whatsapp message வந்தது.. அந்த சத்தம் கேட்டதும் தன்னிச்சையாக போனை கையில் எடுத்து பார்த்தான்.

மிதுனாவின் புகைப்படம்..

❤❤ வினயின் முடிவு என்னவாக இருக்கும்..

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top