WatTruyen.Top

தொடுவானம்

❤ 03 ❤

jamunaguru

பகலில் வேலை.. சாயந்திரம் முதல் இரவு தூங்கச் செல்லும் வரை சாருவுடன் அரட்டை என நகர்ந்தது அந்த வாரம் மித்ராவுக்கு.

ஒரு நாள் வேலை முடிந்து மித்ரா அறைக்குள் நுழைய.. அவள் கையிலிருந்த கவரை பார்த்த சாரு..

"என்ன மித்ரா இது.. புதுசா இருக்கு.. snacks தான் இருக்குல்ல.. அப்புறம் எதுக்கு வாங்கிட்டு வந்த.."என சாரு மித்ராவிடம் கேட்டாள்.

"நான் வாங்கலை.. இன்னைக்கு ஒரு eventக்கு order பண்றதுக்காக கவின் சார் போன இடத்துல தந்தாங்களாம்.. நான் வேண்டாம்னு சொல்லியும் கேட்காம கவின் சார் என்கிட்ட தந்துட்டாங்க.."என மித்ரா சொன்னாள்.

"கொடு.. என்ன இருக்குன்னு பாப்போம்.."என மித்ராவின் கையிலிருந்து கவரை வாங்கினாள் சாரு.

"எல்லாம் எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கு.. நீ போய் டிரெஸ் மாத்திட்டு வா.. நான் அதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சிடுறேன்..  அப்புற..மா.. டீ குடிக்க போவோம்.."என சாரு.. சாப்பிட தொடங்க.. அவளை பார்த்து மித்ரா சிரித்தாள்.

"போ.. போய்.. டிரெஸ்.. மாத்திட்டு வா.." என வாய்க்குள் திணித்த snacks உடன் சாரு பேச.. மித்ரா அவள் தலையில் லேசாக தட்டியபடி.. "இப்போ வந்துடுறேன்.."என சிரித்தபடி மித்ரா எழுந்து சென்றாள்.

மித்ரா உடைமாற்றிவிட்டு வரவும் இருவரும் எழுந்து டீ குடிக்கச் சென்றனர்.

சாரு மித்ராவிடம்.. "மித்ரா உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.."என்றாள்.

"கேளு.."என்றபடி மித்ரா அவளை பார்த்தாள்.

"நாம ஒரு டைம் ஷாப்பிங் போனப்ப பார்த்தோமோ.. அவர் தான கவின் சார்.."

"ம்.. ஆமா.."

"அவரை பத்தி நீ என்ன நினைக்கிற.."

"நல்லவர்.. வேலைல ரொம்ப சின்சியரா இருப்பாரு.. அவர்கிட்ட வேலை பார்க்கிறவங்களும் அப்டித்தான் இருக்கணும்னு எதிர்பாப்பாரு.."என மித்ரா சொல்லிக் கொண்டிருக்க..

"மித்ரா.. நான் வேலை பத்தி கேட்கலை.. உனக்கு அவரை பிடிக்குமா.."

"ம்.. பிடிக்கும்.."

"ஆ... நிஜமாவா.. அப்ப அது லவ்வா.."

"ஹே.. லூசு அப்டி இல்லை.. அவர் ரொம்ப நல்லவர்.. ஒரு மரியாதை உண்டு அவர் மேல.. லவ் லாம் இல்லை.."

"நிச்சயமா இல்லைல."

"நிச்சயமா இல்லை.."

"ஆனா அவருக்கு உன் மேல அந்த மாதிரி எண்ணம் இருக்கிற மாதிரி எனக்கு தோணுச்சு.. அதான் நான் கேட்டேன்.."

"அவர் ஆசைப்படுற நிலைமைல இருக்கலாம்.. ஆனா நான் அப்டி இல்லை.. மரியாதை மட்டும் தான் இருக்கு எனக்கு அவர் மேல.."

"அப்டியே இரு.. மித்ரா.. உனக்காக உன் கனவில வர்ற மாதிரி ரொமாண்டிக்கா ஒரு ராஜகுமாரன் வருவான்.."என சாரு தன் கண்களை விரித்து கதை சொன்னாள்.

மித்ரா அவள் பேசியதைக் கேட்டு சிரித்தாலும்.. மித்ராவின் மனதில் அந்தக் கனவும் கனவில் வரும் ராஜகுமாரனும் கலைந்து போகும் மேகம் போலத்தான் என உறுதியாக தன் மனதில் பதித்துக் கொண்டாள்.

"சாரு நாளைக்கு evening வெளியே போகணும்.. கார்த்திக்கு pen வாங்கித்தர்றேனு சொல்லிருக்கேன்.. எங்க போகலாம்.."என மித்ரா கேட்டாள்.

"ஓ.. இரு அந்த 201 ல சித்ரா இருப்பா.. அவகிட்ட எங்க வாங்கலாம்னு ஐடியா கேட்டுட்டு வர்றேன்.."என சொல்லியபடி சாரு எழுந்து சென்றாள்.

அடுத்த நாள் வேலை முடிந்து வந்ததும் கார்த்திக்கு கொடுப்பதற்கு பேனா வாங்குவதற்காக மித்ராவும் சாருவும் சென்றனர்.

மித்ரா எதை வாங்கலாம்னு பார்த்துக் கொண்டிருக்க.. சாரு.. "மித்ரா நான் அந்தக் கடைக்கு போய்ட்டு வந்துடுறேன்.. நீ பார்த்து செலக்ட் பண்ணு.."என சொல்லிச் சென்றாள்.

மித்ரா நெடுநேரமாக பார்த்து.. கடைசியில் பேனா ஒன்றை தேர்வு செய்தாள்.

தனக்கென தேர்வு செய்வதானால் உடனே தேர்ந்தெடுத்து இருப்பாள் மித்ரா.

தன் தம்பிக்கென தேர்வு செய்வதால்.. நெடுநேரமாக அலசி ஆராய்ந்து ஒரு வழியாக தேர்வு செய்து முடிந்தாள்.

அதன் பின்னரே நேரம் கடந்ததை உணர்ந்தாள் மித்ரா.

வேகமாக பில் போடும் இடத்திற்கு நகர்ந்தாள் மித்ரா. தரை வழுக்க.. கால் இடறி கீழே விழப்போனவளை தாங்கிப் பிடித்தது  அவனின் கரம்.

அந்த முகத்தில்.. அந்த கண்களில்.. அந்த வசீகரத்தில்.. தன்னையே தொலைத்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

"ஆ.. "என்ற சாருவின் குரல் மித்ராவையும் அவளை தாங்கிப் பிடித்திருந்த அவனையும் நிகழ்வுக்கு கொணர்ந்தது.

மித்ரா செய்வதறியாது.. அவனிடம் இருந்து விலகி நிற்க.. அவனும் அங்கிருந்து நகர்ந்தான்.

பில் போடும் நேரத்தில்.. சாரு மித்ராவின் காதில்.. "மித்ரா.. அவர் சூப்பரா இருக்கார்ல.. கண்டிப்பா உன் கனவில வர்ற ராஜகுமாரன் மாதிரி இருக்காரு.. ஆ.. எவ்ளோ அழகு.. அங்க பாரு.. பாரு.."என சொல்லிக் கொண்டிருக்க.. மித்ரா அவளை.. "உஷ்.. சும்மா இரு.. சாரு.."என அமைதிப்படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.

கடையிலிருந்து வெளியே வந்த பின் தான் சற்று இயல்பானது போலிருந்தது மித்ராவுக்கு.

ஆனால் சாருவோ.. "மித்ரா.. சொல்லு.. சொல்லு.. உன் கனவில வர்ற மாதிரியே நடந்த மாதிரி இருக்குல்ல.. அப்ப அவர் தானே உன் ராஜகுமாரன்.."என சொல்லிக் கொண்டிருந்தாள்.

"சும்மா இரு.. சாரு.. அதெல்லாம் ஒன்னுமில்லை.. வா போகலாம்.."என மித்ரா சாருவை அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்றாள்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்தவனின் இதழ்கள் மலர்ந்தன..

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top