31💕
அர்ஜூன் சக்தியோட பதிலை எதிர்பார்த்து.. அவளை பார்த்தபடி நிக்கிறான்.
சக்தி இதை எதிர்பார்க்காததால.. உறைஞ்சு போய்.. எதுவும் பேசாம நின்னுட்டு இருந்தா.
"அம்மு.."னு அர்ஜூன் கூப்பிடுறான்.
அர்ஜூன் தன்னோட பதிலுக்காக தான் காத்திருக்கான்னு அப்பதான் புரியுது.
"அ.. அ.. அர்ஜூன்.."னு சக்தி தடுமாறுறா. மனசில இருக்கிறத சொல்ல நினைக்கிறா. ஆனா சொல்ல முடியலை எதிர்பாராத நேரத்துல எதிர்பார்க்காத சந்தோஷத்துல..
அர்ஜூனுக்கு சக்தி மனசில இருக்கிறது புரிஞ்சிடுச்சு.. இருந்தாலும் சக்தி கிட்ட விளையாடுறான்.
"அம்மு.. நீ இப்பவே சொல்லணும்னு அவசியம் இல்லை.. நல்லா யோசிச்சு சொல்லு.. குட் நைட்.."னு அர்ஜூன் சொல்லிட்டு போய் படுத்துக்கிறான்.
"அச்சோ.. அர்ஜூன் கிட்ட சொல்லு சக்தி.. இப்பவே சொல்லு.. உன் மனசில இருக்கிறத சொல்லு.. போ சக்தி.."னு சக்தி தனக்குள்ளே பேசிட்டு இருக்கா.
சக்தி அர்ஜூன் கிட்ட போய் பார்க்கிறா. அர்ஜூன் தூங்கிட்ட மாதிரி படுத்திருக்கான்.
"அதுக்குள்ள தூங்கிட்டானா.. இப்ப தான படுத்தான்.."னு யோசிச்சபடி சக்தி அவன் பக்கத்தில உட்கார்ந்து அவனையே பார்த்துட்டு இருக்கா.
கொஞ்ச நேரங் கழிச்சு.. அர்ஜூன் தூங்கிட்டான்னு நினைச்சு.. சக்தி புலம்ப ஆரம்பிக்கிறா.
"உனக்கு அதுக்குள்ள என்ன தூக்கம் வேண்டியிருக்கு.. நானும் சொல்லிருப்பேன்ல.. ஐ லவ் யூ..னு.. திடீர்னு நீ ஐ லவ் யூ சொல்லுவனு எனக்கெப்படி தெரியும்.."னு எங்கையோ பார்த்து பேசிட்டு இருக்கா சக்தி.
"ஆமா எப்டி தெரியும்.. பாவம்.. ப்ச்ச்.."னு அர்ஜூன் சொல்றான்.
சக்தி திரும்பி பார்த்து.. "நீ இன்னும் தூங்கலையா.."னு சொல்லிட்டு.. அவனை அடிக்க வர்றா.
அர்ஜூன் அவளை இழுத்து தன் மேலே சாய்த்து.. "ஐ லவ் யூ அம்மு.."னு சொல்றான்.
சக்தியும்.. "ஐ.. ஐ.. லவ் யூ டூ.."னு சொல்றா.
இரண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷமான நாளா அது அமைந்தது.
அடுத்த நாள் காலையில அர்ஜூன் கண் விழிக்கும் போது.. சக்தி அவன் நெஞ்சில தலை வச்சு படுத்திருக்கா.
அர்ஜூன் அவ தலையை தடவியபடி.. "அம்மு.. எழுந்திரு.."னு சொல்றான்.
"இன்னும் கொஞ்ச நேரம்.. ப்ளீஸ்.."னு சக்தி சொல்றா.
"அம்மு.. எழுந்திரு.. இன்னைக்கு ஒரு முக்கியமான இடத்துக்கு போணும்.."னு அர்ஜூன் சொல்றான்.
"எங்கையும் போக வேண்டாம்.. இப்டியே இருக்கலாம்.."னு சக்தி சொல்றா.
"சோம்பேறி.. எழுந்திரு.."னு அவளை அர்ஜூன் எழுப்பிட்டு தானும் எழுந்திருக்கிறான்.
அர்ஜூன் குளிக்கப் போறான்.. சக்தி திரும்பவும் படுத்துக்கிறா.
"அம்மு.. என்ன இது.."னு சக்தி திரும்பவும் படுக்கிறத பார்த்துட்டு அர்ஜூன் கேட்கிறான்.
"நீ குளிச்சிட்டு வர்ற வரைக்கும் தூங்குறேன்.."னு சொல்லிட்டு சக்தி படுத்துக்கிறா.
சக்தி அர்ஜூன் கிட்ட.. அந்தப் பொண்ணு யாரு.. அவ மேல ஏன் அர்ஜூன் அவ்ளோ கோபப்பட்டான்னு கேட்கலாமானு யோசிச்சிட்டு இருக்கா.
ஆனா இப்ப கேட்கிறது சரியா வருமா.. அர்ஜூன் இதை எப்டி எடுத்துப்பான்னு யோசனையோட படுத்திருக்கா.
அர்ஜூன் குளிச்சிட்டு வந்து.. "அம்மு.. எழுந்திரு.. சீக்கிரம் ரெடியாகு.."னு சொல்றான்.
சக்தியும் எழுந்து குளிச்சிட்டு வர்றா. எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுறாங்க. சக்தி மனசில.. அர்ஜூன் கிட்ட எப்படியும் இதை பேசியாகணும்.. ஆனா எப்டி பேசுறதுனு நினைப்பு ஓடிட்டு இருக்கா.
சாப்பிட்டு முடிச்சதும்.. அர்ஜூன்.. "ம்மா.. நாங்க இரண்டு பேரும் வெளியே போய்ட்டு வர்றோம்.."னு சொல்லிட்டு சக்தியை கூட்டிட்டுப் போறான்.
"அர்ஜூன் எங்க போறோம்.."னு சக்தி கேட்கிறா.
"அம்மு.. நான் இதுவரைக்கும் யார்கிட்டயும் மனசு விட்டு பேசாத சில விஷயங்களை உன்கிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன்.."
"எதை பத்தி.."
"நீ என் வாழ்க்கைல வரும் முன்னாடி நான் எப்டி இருந்தேங்கிற பத்தி.."
"ஏன்.. எப்டி இருந்த.."னு சக்தி கேட்கிறா.
அர்ஜூன் காரை நிறுத்திட்டு.. "இங்க தான்.. வா.."னு சொல்றான்.
அது அர்ஜூன் படிச்ச ஸ்கூல்..
"அம்மு.. இதான் படிச்ச ஸ்கூல்.. இதே ஊர்ல இருந்தாலும் அம்மாவும் அப்பாவும் என்கூட அதிகம் டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாத situation.. அதான் நான் இங்க உள்ள ஹாஸ்டல்ல தான் தங்கியிருந்தேன்.. வா முக்கியமான ஒருத்தரை பார்த்துட்டு வரலாம்.."னு அர்ஜூன் சொல்றான்.
சக்தியும் அவன் கூட போறா. அர்ஜூன் அங்க உள்ள ஹாஸ்டலுக்கு சக்தியை கூட்டிட்டுப் போறான்.
"இதான் நான் தங்கியிருந்த ஹாஸ்டல்.. எங்க ரூமுக்கு கூட்டிட்டுப் போறேன்.. சார்கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்.."னு அர்ஜூன் சொல்லிட்டு வார்டன் ரூமுக்கு போறான்.
சக்தி அர்ஜூன் முகத்தில ஒரு சந்தோஷம் இருக்கிறத கவனிக்கிறா. ஒரு வேளை திரும்பவும் இங்க வந்ததால இருக்கிற சந்தோஷம் போல..னு நினைச்சிக்கிறா.
அர்ஜூன்.. ஒரு பெரியவரோடு பேசி சிரிச்சபடி வர்றான்.
அவர் வந்து.. சக்தி கிட்ட.. "நீதான் அர்ஜூனோட wifeஆ மா.."னு கேட்கிறார்.
சக்தி ஆமானு தலையாட்டுறா.
"உனக்கு பெரிய வேலையே இவனை சமாளிக்கிறதா தான் இருக்கும்.. நான் இருபது வருஷமா இந்த ஹாஸ்டல்ல வார்டனா இருக்கேன்.. என்னால சமாளிக்கவே முடியாத இரண்டு பேர்ல இவனும் ஒருத்தன்.. இவங்க இரண்டு பேரும் சேர்ந்து பண்ண வேலையெல்லாம் சொன்னா.. நாளெல்லாம் சொல்லிட்டே இருக்கலாம்.. அவ்ளோ பண்ணுவாங்க இரண்டு பேரும்.. ஆனாலும் இவங்கள பிரிஞ்ச போதுதான் நான் வருத்தப்படவும் செஞ்சேன்.."னு அவர் பேசிட்டு இருக்கார்.
சக்தி.. "அர்ஜூன் இவ்ளோ சேட்டை லாம் பண்ணுவானா.. நல்லா பேசி சிரிச்சே நான் இப்ப தான் பார்த்திருக்கேன்.."னு நினைக்கிறா.
அர்ஜூன்.. "சார்.. நான் எங்க ரூம பார்த்துட்டு வர்றேன்.. கீ தாங்க.."னு கேட்கிறான்.
"ஆங்.. இதோ எடுத்து தர்றேன்.."னு சொல்லிட்டு அவர் ரூமுக்கு போறார்.
அர்ஜூன் கீ வாங்கிட்டு வந்து அந்த ரூமுக்கு சக்தியை கூட்டிட்டுப் போறான்.
"இந்த ரூம் தான் அம்மு.. நாங்க இரண்டு பேரும் 9th ல இருந்து 12th வரைக்கும் இருந்தோம்.. சார் சொன்ன மாதிரி எங்க இரண்டு பேரையும் சமாளிக்கவே முடியாது அவரால.. அவரையே ரூமுக்குள்ள வச்சு பூட்டிருக்கோம்.. ஒரு தடவை.."னு அர்ஜூன் சிரிச்சிட்டே சொல்றான்.
சக்தி.. "அர்ஜூன் நீயும் கார்த்தியும் இவ்ளோ சேட்டை பண்ணுவீங்களா.."னு கேட்கிறா.
"நானும் கார்த்தியும் இல்லை.. நானும் உதய்யும்.."னு சொல்லி அர்ஜூன் உதய் போட்டோவை காட்டுறான் தன் போன்ல..
அதை பார்த்ததும் சக்தி அதிர்ச்சி ஆகுறா.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top