30💕
இந்திராவும் சரவணனும் அர்ஜூன் கொடுத்த டிரெஸ்ஸை மாத்திட்டு வர்றாங்க.
அர்ஜூன் அவங்க இரண்டு பேர் கையிலயும் மாலையை கொடுத்து.. "மாலை மாத்திக்கோங்க.."னு சொல்றான்.
"அர்ஜூன்.. எதுக்கு இதெல்லாம் வேண்டாம்.."னு இரண்டு பேரும் சொல்றாங்க.
அர்ஜூனும் சக்தியும் சொல்ல.. சரினு சொல்லி மாலை மாத்திக்கிறாங்க.
அவங்க மாலை மாத்திக்கிட்டதும்.. அர்ஜூன்.. "ம்.. பொண்ணும் மாப்பிள்ளையும் மாலை மாத்தியாச்சு.. பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க.."னு சொல்றான்.
"டேய்.. உதை படுவ.."னு இந்திரா சொல்றாங்க.
"ம்மா.. நான் எங்களை சொல்லலை.. அங்க பாருங்க.."னு அர்ஜூன் சொல்றான்.
அர்ஜூன் கைகாட்டினதும் இந்திராவும் சரவணனும் திரும்பி பார்க்கிறாங்க.
இந்திராவோட அப்பா ரத்தினம் அங்க நின்னுட்டு இருக்கார். அவரை பார்த்ததும் இந்திராவும் சரவணனும் கண் கலங்கிடுறாங்க.
அவர்கிட்ட இந்திராவும் சரவணனும் ஆசிர்வாதம் வாங்குறாங்க. அவரும் அவங்கள பார்த்த சந்தோஷத்தில கண்கலங்கிடுறார்.
"போதும்.. எல்லாரும் கண்ணீர் விடாதீங்க.. கஷ்டமா இருக்கு.."னு வராத கண்ணீரை துடைக்கிறா சக்தி.
அர்ஜூனும் சக்தியும் அவங்களை கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு நிக்கிறாங்க.
ரத்தினம்.. சக்தியை பார்த்து.. "என் பேரனுக்கேத்த பொண்ணு தான் நீ.."னு சொல்றார்.
இந்திரா.. "அப்பா.. எங்கள மன்னிச்சிட்டீங்களா.."னு கேட்கிறாங்க.
"மன்னிக்கலைனா என் பேரன் சும்மா விடமாட்டானே.."னு சொல்றார் அர்ஜூனை பார்த்தபடி.
இந்திராவும் சரவணனும் அர்ஜூன் கொடுத்த சர்ப்ரைஸால சந்தோஷமா இருக்காங்க.
சக்தியும் அர்ஜூனும் சேர்ந்து அவங்கள கிண்டல் பண்ணிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.
அர்ஜூன் இவ்ளோ சந்தோஷமா எல்லோரோடயும் பேசி சிரிச்சு இருக்கிறத சக்தி இப்பதான் பார்க்கிறா.
டின்னருக்கு அர்ஜூன் ரொம்ப முக்கியமான ஒரு சிலரை மட்டும் கூப்பிட்டு இருந்தான்..
சுந்தரமும் கீதாவும் வர்றாங்க. கீதா சக்தி கிட்ட.. "என் பொண்ணுக்கு இதே ஊர்ல இருக்க அவ பிறந்த வீட்டுக்கு பாதை மறந்துடுச்சு போல.."னு சொல்றாங்க.
"கீதா.. அதான் உன்கிட்ட தினமும் போன்ல பேசுறேன்ல.. அடுத்த வாரம் வர்றேன்னு சொல்லிட்டேன்.. அப்புறம் என்ன.."னு சக்தி சொல்றா.
"சரிடா.."னு கீதா சொல்றாங்க.
அர்ஜூன் ரூம்ல இருந்து.. "அம்மு.."னு கூப்பிடுறான்.
சக்தியும் கீதாகிட்ட சொல்லிட்டு ரூமுக்கு போறா.
அர்ஜூன் சக்தி கிட்ட.. ஒரு டிசைனர் சேரியை கொடுக்கிறான். அதுக்கு மேட்ச்சா நகை எல்லாம் சேர்ந்து இருக்கு.
"இன்னைக்கு டின்னருக்கு இத கட்டிக்கோ.."னு அர்ஜூன் சொல்றான்.
சக்தியும் சரினு சொல்றா. சக்திக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு.. "அழகா இருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.."னு சக்தி சொல்றா.
"ம்.."னு அர்ஜூன் சிரிச்சிட்டே தலையாட்டுறான்.
சக்தி.. "நான் ரெடியாகிட்டு வர்றேன்.."னு சொல்றா.
"அம்மு.."னு அர்ஜூன் கூப்பிடுறான்.
சக்தி.. அர்ஜூனை திரும்பி பார்க்கிறா.
அர்ஜூன்.. "இன்னைக்கு டின்னர் முடிஞ்ச பிறகு உனக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இருக்கு.."ன்னு சொல்றான்.
"எனக்கா.. எனக்கு என்ன சர்ப்ரைஸ்.."னு சக்தி ஆர்வமா கேட்கிறா.
"டின்னர் முடியுறவரைக்கும் டைம் இருக்கு.. யோசி.."னு அர்ஜூன் சொல்லிட்டு ரூம்ல இருந்து போயிடுறான்.
சக்தி.. என்ன சர்ப்ரைஸா இருக்கும்னு யோசிச்சு யோசிச்சு பார்க்கிறா.
எதுவுமே தோணலை சக்திக்கு.
அதையே யோசிச்சிட்டு இருக்கா சக்தி.. அர்ஜூன் கிட்ட கேட்கலாம்னு போறா.. ஆனா அர்ஜூன் கிட்ட தனியா பேசவே முடியலை..
சக்தி அர்ஜூன் கிட்ட கேட்கலாம்னு போகும் போதெல்லாம் யாராவது வந்துடுறாங்க.
அர்ஜூன் எல்லோரோடயும் பேசிட்டு இருந்தாலும் சக்தியை தான் கவனிச்சிட்டே.. இல்லை ரசிச்சிட்டே இருக்கான்.
டின்னர் முடிஞ்சு எப்படா எல்லாரும் கிளம்புவாங்கனு காத்திருந்து சக்தி ரூமுக்கு வர்றா.
ரூம் முழுக்க ரோஸ், பலூன் வச்சு டெக்கரேட் பண்ணிருக்கு.
எல்லாம் சக்திக்கு பிடிச்ச மாதிரி இருக்கு.. அர்ஜூன் பால்கனில நின்னுட்டு இருக்கான்.
"அம்மு.. உனக்கு இது பிடிச்சிருக்கா.."னு அர்ஜூன் கேட்கிறான்.
"ம்.. ஆனா.. எதுக்கு இதெல்லாம்.."னு சக்தி கேட்கிறா.
அர்ஜூன் சக்தியை பார்த்து.."அம்மா ஏன் உன்னை அம்முன்னு கூப்பிடுறாங்கனு சொன்னேன்.. நான் ஏன் உன்னை அம்முன்னு கூப்பிடுறேன்னு தெரியுமா.."னு கேட்கிறான்.
அப்பதான் சக்திக்கு தோணுது.. இதை கேட்கவேயில்லை னு.. சக்தி அர்ஜூனை பார்க்கிறா.
"அம்மாவுக்கு பிடிச்ச பேர்.. எனக்கு வரப்போற மனைவி எப்படிலாம் இருக்கணும்னு கற்பனை பண்ணுனோ.. அவளுக்கு வச்ச செல்லப்பேர் அம்மு..
விருப்பம் இல்லாம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. ஆனா அதுக்காக இல்லாம.. எந்த கட்டாயமும் இல்லாம..
நீ முழுசா என் மனசுக்குள்ள வந்துட்ட.. ஐ லவ் யூ அம்மு.."னு முடிக்கிறான்.
அர்ஜூன் சக்தியோட பதிலுக்காக அவ முகத்தை பார்த்தபடி நிக்கிறான்.
Bạn đang đọc truyện trên: WatTruyen.Top